கலர் பென்சில் - ௦02.12.2013

சென்னையின் சாலை வலி

கடந்த வாரத்தில் ஒரு நாள் - காலை அலுவலகத்துக்கு மிக அவசரமாகச் சென்றுகொண்டிருந்தேன். நந்தனம் நோக்கி சீறிப்பாய்ந்து கொண்டிருந்த என் காதுகளில் அந்த சத்தம் தூரத்தில் ஒலித்தது.  அது ஆம்புலன்ஸ் - வண்டியின் வேகத்தைக் குறைத்து ஓரமாகச் செல்ல ஆரம்பித்தேன், என்னைப்போலவே பலரும். யாருக்கு என்னவோ என்று மனதில் உச்சு கொட்டிக் கொண்டிருக்கும்போதே அந்த சத்தம் நெருங்கிவந்து என்னைக் கடந்துசென்றது. பரவாயில்லை, நம் மக்கள் ஆம்புலன்சுக்கு வழிவிடுகிறார்கள் எனும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது - மனித நேயம் செத்துவிடவில்லை. ஆம்புலன்ஸ் கடந்து சென்றதும் என் முன்னாலும் பின்னாலும் இரு சக்கர வாகனங்களில் வந்துகொண்டிருந்தவர்களில் சிலர் அந்த வாகனத்தை வால் பிடித்தாற்போல் பின்தொடர ஆரம்பித்தனர். ஏற்கனவே ஒரு இருபது இருபத்தைந்து டூவீலர்கள் ஆம்புலன்சைத் தொடர்ந்து கொண்டிருந்தன. அவர்களுடனான போட்டியில் இவர்களும் கலந்துகொண்டனர். அப்போது தான் என் மண்டையில் உறைத்தது. அடப்பாவிகளா, ஆம்புலன்சுக்கு வழிவிடுதல் பொது நலம், மனித நேயம் என்றெல்லாம் நினைத்திருந்தேன், சிலருக்கு முழுக்க முழுக்க சுயநலமாகவே இருக்கிறது.

எங்க குலதெய்வம்

எப்போ பாத்தாலும் ஹோட்டல், சினிமான்னு எழுதி ரொம்ப போர் அடிக்குது. எனக்கே இப்படின்னா படிக்கிற உங்களுக்கு எப்படி இருக்கும்? அதனால இன்னிக்கு ஒரு மாற்றத்துக்கு எங்க குலதெய்வ சாமி பத்தி பாக்கலாம்.

சிம்ரன்ஸ் ஆப்பக்கடை

பலமுறை வேளச்சேரி நூறு அடி ரோடு வழியாகப் போகும்போது கண்ணில் பளிச்சென்று தென்படுகிறது. என்றாவது ஒரு நாள் போயாக வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது. அந்த நாளும் வந்தது.

இரண்டாம் உலகம்

வித்தியாசமான கதைக்களம், எதிர்பார்க்க வைக்கும் டிரைலர், பாடல்களுக்கு ஒருவர், பின்னணி இசைக்கு ஒருவர் என இரண்டு இசை அமைப்பாளர்கள், உலகெங்கும் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் சேர்த்து 1200 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியீடு என எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கும் படம்.

இட்லி at The Grand Chola, Guindy

சில நாட்களுக்கு முன் கிராண்ட் சோழா ஹோட்டலில் மதியம் சாப்பிட்ட அனுபவத்தை எழுதியிருந்தேன்.  சென்ற வாரம் ஒரு மீட்டிங் (!?) இருந்ததால் இதே ஹோட்டலில் காலையில் சாப்பிடும் பாக்கியவான் ஆனேன். நமக்கு காலை உணவு என்றால் இட்லி அல்லது தோசைதான் பிடிக்கும் என்பதால் இட்லியுடன் கூடிய பிரேக்பாஸ்ட் சாப்பிடுவதென்று முடிவாயிற்று.  

TrueCaller-இல் பிரபல பதிவர்கள்

ஆண்டிராய்டு அப்ளிகேஷனான TrueCaller பற்றி ஏற்கனவே ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். அதற்கான லிங்க்.


இப்போ நம்ம பிரபல பதிவர்கள் Truecaller-இல் எந்தெந்தப் பெயர்களில் இருக்கிறார்கள்? பார்க்கலாமா.

ப்பா.. ஒரு கத சொல்லுப்பா

"ப்பா.. ஒரு கத சொல்லுப்பா..."  ரக்ஷித் என்னிடம் கேட்டுவிடக் கூடாது என்று பயப்படும் கேள்விகளில் இதுவும் ஒன்று. காரணம் அவன் விரும்பிய கதையை, அவன் எதிர்பார்த்த ஒரு கதையை இதுவரையிலும் என்னால் சொல்ல முடிந்ததில்லை. சொல்லத் தெரியவில்லை என்றும் சொல்லலாம். என்ன அப்படிச் சொல்வதில் கொஞ்சம் மானபிரச்ச்னை எனக்கு!  

அழகுராஜா

காதலிக்க நேரமில்லை என்ற பழைய படம் அறுபதுகளில் வெளிவந்து சக்கைபோடு போட்டது. அந்தப்படத்தில் ஒரு காட்சியில் நாகேஷ் சொல்வார், "நான் எடுக்குறது தான் படம், நீ நடிக்கிறது தான் நடிப்பு, இதை இந்த ஜனங்க பாத்தே தீரணும் அது அவங்க தலை எழுத்து" என்று. இந்த வரிகளை இயக்குநர் ராஜேஷ் மனப்பாடம் செய்துவிட்டார் போலும். ஓகே ஓகே கொடுத்த ஓவர் கான்பிடன்சில் தான் என்ன எடுத்தாலும் மக்கள் வந்து கைதட்டி சிரித்து ரசிப்பார்கள் என்று நினைத்துவிட்டார்.

ஆரம்பம்

ஆரம்பம் ஆரம்பித்தவுடனேயே அஜித் மும்பையின் முக்கியமான மூன்று இடங்களில் குண்டு வைக்கிறார். இன்னும் சிறிது நேரத்தில் வெடித்துவிடும் என்று போலிசுக்கு போன் செய்து சொல்கிறார். போலிஸ் வந்து மக்களை அப்புறப்படுத்தி வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கிறார்கள். அவர்களால் வெடிகுண்டை செயலிழக்கச் செய்யமுடியாததால் உயிர்ச்சேதம் எதுவும் இல்லாமல் மூன்று கட்டிடங்களும் தரைமட்டமாகின்றன.

கலர் பென்சில் - 25.10.2013

அனைவருக்கும் வணக்கம்.


அவியலா, மிக்சரா கொத்துபுரோட்டாவா என்று பதிவிட்டதில் ஒரு பரிசுப்போட்டி அறிவிக்கும் அளவுக்கு நல்ல ரெஸ்பான்ஸ், கடைசியில் கலர் பென்சில் என்று பெயர் வைத்தாயிற்று.  பலரும் பல பெயர்கள் பரிந்துரைத்திருக்க எனக்கு இரண்டு பெயர்கள் மனதில் இதுவா அதுவா என ஊசலாடிக்கொண்டிருந்தன.  ஒன்று அதிகம் பேரால் பரிந்துரைக்கப்பட்ட "ஹோம்வொர்க்ஸ்", மற்றொன்று Madhu Sridharan அவர்கள் பரிந்துரைத்த "ஸ்பெஷல் கிளாஸ்". இருந்தாலும் "கலர் பென்சில்" என்ற பெயர் நேற்று இரவு தான் முடிவு செய்தேன்.  சிம்பிளாக இருக்கிறது. என்னை மதித்து பின்னூட்டத்தில் பெயர்களைத் தேர்ந்தெடுத்து பரிந்துரைத்த அனைவருக்கும் நன்றி.

மயிலை பிரியாணி

சென்னையில் பல இடங்களில் ஒரு அண்டா நிறைய பிரியாணி வைத்து கையிலிருக்கும் சிறு தட்டு கொண்டு டங் டங் என்று தட்டிக்கொண்டே வியாபாரம் செய்யும் பல கடைகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அவற்றிலேயே தரமான, சுவையான பிரியாணி தருவதில் எனக்குத் தெரிந்து முதலிடம் "மயிலை பிரியாணி" மட்டுமே.

எதிர்பாராத இனிய சந்திப்பு

எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வழக்கமான ஞாயிறாகவே அந்த நாள் விடிந்தது.  ஜிமெயிலையும் முகநூலையும் மேய்ந்துகொண்டிருந்த எனக்கு ஒரு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.  Truecaller அது கேரளத்து எண் என அடையாளம் காட்டிற்று.  எடுத்து "ஹலோ" என்றேன், எதிர்முனையில் உடைந்த தமிழில் ஒருவர் பேச பின்னணியில் பல வாகனங்களின் அலறல்கள் கேட்டன.  அதனிடைய அவருடைய பேச்சை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை, அவர் தவறான எண்ணுக்குப் பேசுகிறார் என்று மட்டுமே புரிந்துகொண்டேன்.  "ராங் நம்பர்" என்று சொல்ல எத்தனித்தபோது "மனோஜ் சொல்லியிருக்கு இல்லையா" என்றதும் எனக்கு மண்டையில் உறைத்தது. அடடா, இவர் நாஞ்சில் மனோவின் நண்பராச்சே என்று.

அவியலா, மிக்சரா, கொத்து புரோட்டாவா? என்னது இது?

அனைவருக்கும் வணக்கம்,


மேலே காணும் படத்தை அழகாக டிசைன் செய்து தந்த திரு.பாலகணேஷ் அவர்களுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  தனிப்பட்ட முறையில் நன்றி சொல்லியிருந்தாலும் பொதுவில் சொன்னால் அதற்கு மதிப்பு இன்னும் அதிகம்.  நிறைய படங்களைப் பார்த்து தேர்ந்தெடுத்து பொறுமையாக வெட்டி ஒட்டி எனக்காக முக்கால் மணி நேரம் செலவு செய்திருக்கிறார்.  இடையில் ஆலோசனை என்ற பெயரில் என்னுடைய இம்சைகளையும் தாங்கி படத்துக்கு இறுதி வடிவம் கொடுத்திருக்கிறார்.  மீண்டும் நன்றி.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா




வேலை வெட்டி இல்லாமல் குடித்துவிட்டு சும்மா ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கு தன் எதிர்வீட்டு நந்திதா மீது ஒருதலைக் காதல்.  அதிகாலை எழுந்து பல் கூட விளக்காமல் வாசலில் கோலம் போட வரும் நந்திதாவை ரசிப்பதற்காக காத்திருக்கிறார்.  தினம் தினம் இம்சை செய்கிறார்.  இதைப் பொறுக்க முடியாத இவர் தன் தந்தையின் மூலம் சுகர் பேஷன்ட் அண்ணாச்சி பசுபதியிடம் பஞ்சாயத்து செய்கிறார்.  இது ஒரு கதை.

ராஜா ராணி

காதலனைப் பறிகொடுத்த காதலியும் காதலியைப் பறிகொடுத்த காதலனும் விருப்பமின்றி திருமணம் செய்துகொள்கிறார்கள்.  இவர்களுக்குள் என்ன நடக்கிறது, இருவரின் கடந்தகால காதல்கள் என்னென்ன என்பதை சுவாரஸ்யமாக சொல்லும் படம்தான் ராஜா ராணி.  ப வடிவ காதல் கதையாக இருந்தாலும் அதை சொன்ன விதத்தில் இயக்குநர் வெற்றி பெற்றிருக்கிறார்.  வாழ்த்துக்கள் அட்லி.

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து...

அனைவருக்கும் வணக்கம்.


நான் வலையுலகுக்கு வந்து இன்றுடன் ஒரு வருடம் முடிந்து இரண்டாம் வருடம் தொடங்குகிறது.  நேற்று தான் புதியவனாக எழுதத் தொடங்கியது போன்று இருக்கிறது, அதற்குள் ஒருவருடம் முடிந்து விட்டது எனும்போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.  ஆனால் இந்த ஒரு வருடத்தைப் பின்னோக்கிப் பார்க்கையில் எனக்குக் கிடைத்த நண்பர்கள் ஏராளம்.  நேரில் சந்தித்தும், தொலைபேசி மூலம் பேசியும், மின்னஞ்சல் மூலமாகவும், முகநூலிலும், அரட்டையிலும் பதிவர்களுடனான நட்பு தொடர்கிறது.  இத்தனைக்கும் ஒரு வருடத்துக்கு முன்னர் யாரையுமே அறிமுகம் இல்லை, ஆனால் இன்றோ ஸ்கூல் பையன் என்றால் வலையுலகில் கிட்டத்தட்ட அனைவருக்கும் தெரிந்திருக்கிறது (தெரிந்திருக்கிறதா?).

நட்பு

படக்கதை படிக்கும் காலம்
பழக்கமாயிருந்தது!
நாவல்களின்போது
நட்பாய் மலர்ந்தது!
கவிதை வாசிப்பின்போது
காதலாய்க் கனிந்தது!
ஆம்! காதலாய்க் கனிந்தது!

மூடர் கூடம்

மூடர் கூடம் என்றால் முட்டாள்கள் சங்கமிக்கும் இடம் என்று பொருள் வருகிறது.  FOOLS GATHERING என்று கேப்ஷன் வைத்திருக்கிறார்கள்.  தலைப்பே நம்மை உள்ளே ஈர்க்கும் விதத்தில் இருக்கிறதே, கண்டிப்பாக படமும் நன்றாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் ஞாயிறு மாலை காட்சிக்கு நங்கநல்லூர் வெற்றிவேல் தியேட்டருக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன்.

ஹோட்டல் - சோழா கிராண்ட், கிண்டி

வணக்கம் நண்பர்களே,




சென்னையிலேயே மிகப்பெரிய ஹோட்டல் இதுதான். ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற இது கிண்டி ஸ்பிக் வளாகத்துக்கு எதிரே அமைந்துள்ளது.  இனி வரும் காலங்களில் சோழா ஹோட்டலுக்கு எதிரே ஸ்பிக் பில்டிங் அமைந்துள்ளது என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த ஹோட்டல் திறக்கப்பட்டு ஒரு வருடமே ஆகியுள்ள நிலையில் ஒருநாள் மதியம் சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது.  இங்கே மொத்தம் 12 உணவகங்கள் உள்ளன, அதில் நாங்கள் சென்றது Madras Pavilion என்ற உணவகம்.  இங்கு தான் பபே முறையில் சாப்பாடு கிடைக்கிறது.

காணாமல் போன பதிவர் பற்றிய முக்கிய அறிவிப்பு





பெயர்: பால கணேஷ்

தளத்தின் பெயர்: மின்னல் வரிகள்

வயது: உடலுக்கு நாற்பதுக்கு மேல், மனதுக்கு இருபதுக்குக் கீழ்

ஆண்டிராய்டில் உங்கள் உடல்நலம்

நம்மில் பலர் தினமும் நடை பயிற்சி மேற்கொள்கிறோம்.  தொப்பையைக் குறைக்க, சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க, கொழுப்பைக் குறைக்க, உடல் உறுதி பெற என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம்.  ஆனால் நாம் இப்படி மாங்கு மாங்கென்று நடக்கிறோமே, நம் உடலுக்குள் என்ன நடக்கிறது என்று யாருக்குத் தெரியும்?  நாம் நடந்ததற்கு ஒரு அளவு சொல்ல முடியுமா?  முடியும் என்கிறது இந்த ஆண்டிராய்டு அப்ளிகேஷன்.

எழவு

நான் ராயப்பேட்டையில் வசித்த சமயம்.  நான் இருந்த வீடு ஒரு முட்டு சந்தின் கடைசி வீடு.  நாங்கள் இருந்தது தரை தளத்தில்.  மேல் வீட்டில் வீட்டு ஓனர் இருந்தார்.  ஓனர் என்றால் ஓனர் அம்மா.  வீடு அந்த அம்மாவின் பெயரில் இருந்ததால் அவரது கணவர் ஒரு டம்மி பீசாகவே நடத்தப்பட்டு வந்தார்.  எங்கள் வீட்டுக்கு நேர் எதிரில் எங்களைப்போன்றே தரை தளத்தில் வாடகைக்கு வசிப்பவர்களும் மேல் வீட்டில் அந்த வீட்டின் ஓனரும் வசித்துவந்தனர்.  அந்த வீட்டு ஓனரும் அம்மாதான்.  அவர்களும் எங்கள் ஓனரும் சொந்தக்காரர்கள்.  இருவரும் அவரவர் வீட்டு பால்கனியில் நின்றுகொண்டு சத்தமாக அவரவர் வீட்டுக் கதைகளைப் பேசுவது வழக்கம்.

பதிவர் திருவிழாவில் சேட்டைக்காரன் பேச்சு

வணக்கம் நண்பர்களே,

கடந்த செப்.1 ஆம் தேதி பதிவர் திருவிழாவில் மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தை வெளியிட்டு சேட்டைக்காரன் அவர்கள் பேசியதைத் தந்துள்ளேன்.

ஒரு படம், இன்னொரு படம், ரெண்டு டிரைலர்

ஒரு படம்

நேற்று மாலை காட்சிக்கு மடிப்பாக்கம் குமரன் தியேட்டரில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பார்த்தேன்.  ஆஹா ஓஹோ என்று புகழக்கூடிய அளவுக்கு இல்லை என்றாலும் ஆரம்பம் முதல் கடைசி வரை காமெடியில் கலக்கியிருக்கிறார்கள்.  வசனம் இயக்குநர் ராஜேஷ் என்பதாலோ என்னவோ.  ஒரே ஒரு சின்ன ட்விஸ்ட் மட்டும் வைத்துக்கொண்டு படம் தொடங்கியது முதல் கிளைமாக்ஸ் வரை ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நான் பாடிய பாடல்

வணக்கம் நண்பர்களே,

பதிவர் சந்திப்பில் பாடல் பாடப்போவதாக பதிவு ஒன்று எழுதியதும் அன்றிலிருந்து "பாட்டு பாடலையா, பாட்டு பாடலையா" என்றும் பதிவர் சந்திப்பு முடிந்ததிலிருந்து இன்றுவரை "ஏன் பாடலை" என்றும் பலரும் அன்போடு (!) விசாரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.  அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.  தொண்டை சரியில்லாத காரணத்தாலும் பயிற்சி எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை என்பதாலும் பாடுவது ரத்து செய்யப்பட்டது.  இருந்தும் கோவை ஆவியின் பாடலுக்கு கோரஸ் பாடியது மனதுக்கு திருப்தியாக இருந்தது.  இந்த நிகழ்வு கடந்த வருடம் நடந்த முக்கிய சம்பவத்தை நினைவுகூர்ந்தது.

பதிவர் திருவிழா 2013 - துளிகள்

பதிவர் திருவிழா 2013 - துளிகள்


இந்த வருட பதிவர் சந்திப்பில் என் கண் முன் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறேன் நண்பர்களே.  இல்லையென்றால் சிலவற்றை மறக்கக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு.

பதிவர் திருவிழா - 2013 - எனது கிளிக்ஸ்

வணக்கம் நண்பர்களே,


பதிவர் சந்திப்பில் நான் மாங்கு மாங்குன்னு போட்டோ எடுத்ததைப் பார்த்துட்டு பலரும் இப்போதுவரை போட்டோ போடு போட்டோ போடுன்னு போன்ல, மெயில்ல, சாட்லன்னு வந்துக்கிட்டே இருக்காங்க. அவங்களுக்காக....

பதிவர் திருவிழாவில் நான் பாடும் பாடல்



உங்களுக்குத் தெரியாத ஒரு விஷயம், அது ரகசியம் இல்லை.  ரகசியம் காக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை.  நான் எவ்வளவு நன்றாகப் பாடுவேன் என்று யாருக்கும் தெரியாது.

ஆதலால் காதல் செய்வீர் - விமர்சனம்






இன்றைய நவநாகரீக இளைஞர்களின் செயல்பாடுகளை உள்ளது உள்ளபடியே திரையில் தந்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.

ரத்தம் பார்க்கின் - 4 (நிறைவுப் பகுதி)




விழிப்பு வந்தபோது நான் எங்கிருக்கிருக்கிறேன் என்பதை மறந்துபோனேன்.  ஓ, குமாரின் வீடு.  கைவலி அதிகமாக இருந்தது.  மாத்திரைகளின் வீரியம் குறைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.  மணி பார்த்தேன், மாலை ஐந்து ஆகியிருந்தது.  காலை எட்டு மணிக்கு நடந்த சம்பவம்.  டி.வி.யில் செய்தி சேனலில் பார்க்கலாமா, மனம் துடித்தது.  ஹாலுக்கு வந்தேன்.  டி.வி.யை ஆன் செய்தேன்.

ரத்தம் பார்க்கின் - 3


இதன் முற்பகுதிகளைப் படித்திராதவர்கள் படித்துவிட்டு வரவும்

பாகம் 1

பாகம் 2

இனி....


எனக்கு இப்போதுதான் உறைத்தது.  நான் கொலை செய்துவிட்டேன்.  இல்லை, அவன்தான் என்னைக் கொல்லவந்தான்.  நான் அவனைக் கொன்றாலும் அவன் என்னைக் கொன்றாலும் கொலை கொலைதான்.  மனம் என்னென்னமோ பிதற்றியது.

ரத்தம் பார்க்கின் - 2

இந்தக் கதையின் முற்பகுதியைப் படித்திராதவர்கள் படித்துவிட்டு வரவும்




இனி





திரும்பி ஓட்டமெடுத்தேன்.  அவன் அரிவாளை என்மீது வீசினான்.  என் பின்னங்கழுத்தில் ஒரு கோடு விழுந்தது.  "ஆஆஆஆஆஆஆ" அலறினேன், ஓடுவதை நிறுத்தவில்லை.  சூடான என் ரத்தம் சட்டையை நனைக்கத் தொடங்கியது.  அவன் என்னை துரத்திக்கொண்டிருந்தான்.  நேற்றைய மதுரை மீட்டிங் மறந்துபோனது, இவனிடமிருந்து தப்புவதே பிரதானமாக இருந்தது.  ஓடினேன், இடது வலது என்று அடுத்தடுத்த திருப்பங்களில் தாண்டி ஓடினேன்.  நான்கு முனை சந்திப்பு வரும் அதில் ஏதாவதொன்றில் திரும்பினால் அவன் குழப்பமடையக்கூடும்.

ரத்தம் பார்க்கின் - 1

ரத்தம் பார்க்கின் - 1





அந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நன்கு மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிட்டது.  பொதுவாக ரயிலில் எனக்கு தூக்கமே வராது.  இருந்தும் நடுராத்திரி பன்னிரண்டு மணிக்கு கொஞ்சம் அயர்ந்ததில் தூங்கிப்போனேன்.


CHENNAI EXPRESS - விமர்சனம்


நூறு வயதுக்கு ஒரு நாளே இருக்கும் நிலையில் ஷாருக் கானின் தாத்தா காலமாகிவிடுகிறார். அவரது அஸ்தியைக் கரைக்க பாட்டியின் அறிவுரைப்படி ராமேஸ்வரத்துக்குப் புறப்படுகிறார்.  கல்யாணம் பிடிக்காமல் ஊரைவிட்டு ஓடிச்சென்ற தமிழ்ப்பெண்ணான தீபிகாவையும், அவரை மீண்டும் ஊருக்கே கூட்டிச்செல்லும் அடியாட்களையும் சந்திக்கிறார்.  சந்திக்கிறார் என்பதை விட அடியாட்களிடம் மாட்டிக்கொள்கிறார் என்றே சொல்லவேண்டும்.







வேறு வழியின்றி ஷாருக் கானும் தீபிகாவுடன் தீபிகாவின் கிராமத்துக்கே செல்ல நேரிடுகிறது.  தமிழ் தெரியாத ஷாருக் கானும் தானும் காதலிப்பதாக தீபிகா தன் தந்தையிடம் சொல்ல, தந்தையும் மறுப்பு தெரிவிக்க, ஏற்கனவே நிச்சயம் செய்திருந்த முறைப்பையனும் சண்டைக்கு வர, நிலவரம் கலவரமாக மாறுகிறது. ஷாருக் அங்கிருந்து தப்பிச்செல்ல, மீண்டும் போலிசாரால் அதே இடத்துக்கு வரவழைக்கப்படுகிறார்.  இந்த முறை தீபிகாவுடன் தப்பிச்செல்கிறார் ஷாருக்.  அதன் பின்னர் அவர்களுக்குள் காதல் எப்படி வந்தது, வில்லன் குரூப் என்ன செய்தார்கள், முடிவு என்ன என்பதை தியேட்டரில் போய் பாருங்கள். 

நல்ல உள்ளங்கள் இருக்கையிலே




மாணவன் தளத்துக்கு வந்திடுவீர் - தமிழ்
மணத்தில் வாக்குகள் பலவும் தந்திடுவீர்

சூடான இடுகை ஆவதினால் - ஸ்கூல்
பையன் உள்ளம் குளிர்ந்திடுமே

வாக்குகள் பலவும் பெறுவதினால் - தமிழ்
மணத்தில் மகுடம் சூடிடுவேன்

கருத்துக்கள் பலவும் சொல்லிடுவீர் - எனை
வாழ்த்தி மகிழ்ந்து மகிழ்விப்பீர்

பலவார்த்தை கருத்தைப் பதிந்திடுவீர் - ஒற்றை
வார்த்தை கருத்தை தவிர்த்திடுவீர்

தங்கள் தளத்துக்கும் தான் வந்து - பல
கருத்தைச் சொல்லிச் செல்கின்றேன்

நல்ல உள்ளங்கள் இருக்கையிலே - நான்
நித்தம் கவிதை வெளியிடுவேன்


மால்குடி ரெஸ்டாரன்ட் - ஹோட்டல் சவேரா



மால்குடி ரெஸ்டாரன்ட் - ஹோட்டல் சவேரா







சென்னைவாசிகளுக்கு கண்டிப்பாகத் தெரிந்திருக்கும்.  ஜெமினி பாலத்திலிருந்து கடற்கரை செல்லும் வழியில் சோழா தாண்டியதும் இடதுபுறத்தில் பாலத்தை ஒட்டி அமைந்துள்ளது "ஹோட்டல் சவேரா".  ஐந்து நட்சத்திர ஹோட்டலான இதில் ஒரு நாள் மதிய உணவு சாப்பிட்ட அனுபவமே இன்று.

முதல் பதிவின் சந்தோஷம் - தொடர்பதிவு

வணக்கம் நண்பர்களே....



தொடர்பதிவுகள் பதிவுலகில் மீண்டும் ஓர் உற்சாகத்தைக் கொடுத்துவருகிறது.  பல நாட்களாக எழுதாத பதிவர்கள் கூட சுறுசுறுப்பாக எழுதுகிறார்கள்.  பதிவுலகம் மீண்டும் களைகட்டியிருப்பதில் மகிழ்ச்சி.  இதன்மூலம் நட்பு வட்டங்கள் பெருகி வருகின்றன, பழைய நட்புக்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.



தொடர்பதிவு இவ்வளவு பிரபலமாக காரணம் தொடங்கி வைப்பவரின் தலைப்பு தான் என்றே நினைக்கிறேன்.  "எனது முதல் கணினி அனுபவம்" மற்றும் "முதல் பதிவின் சந்தோசம்" என்ற தலைப்புகளில் எழுதவேண்டும் என்றால் ஐந்து நிமிடங்களில் எழுதிவிடலாம், தவிர பழைய சந்தோஷத்தை அசைபோடுவது அலாதி சந்தோஷம்.



இந்த தொடர்பதிவை எழுத அளித்த சகோதரி தென்றல் சசிகலாவுக்கு என் நன்றிகள்.


நான் எழுதிய முதல் பதிவு "திருப்பதி பாத யாத்திரை".  கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று எழுதினேன்.







கீழ் திருப்பதியில் இருந்து 3550 படிகள் ஏறி மேல் திருப்பதி அடைந்து பெருமாளை தரிசனம் செய்த அனுபவத்தை எழுதியிருந்தேன்.  இதே நாளில் தான் நண்பர் மெட்ராஸ்பவன் சிவகுமார் அவர்களும் "திருப்பதி அனுபவம்லு" என்ற பதிவை எழுதியிருந்தார்.  அதைப்பர்த்தவுட்ன எனக்கு ஒரு ஆச்சரியம்.  அவருக்கு இப்படி ஒரு பின்னூட்டம் இட்டேன்.



"அண்ணா வணக்கம். நமக்குள் என்ன ஒரு ஒற்றுமை, சற்று முன்பு தான் திருப்பதி பதிவு எழுதினேன்



அப்போதெல்லாம் சிவகுமாரை எனக்கு யாரென்றே தெரியாது.



இந்தப் பதிவுக்கு முதன்முதலாக பின்னூட்டம் அளித்தவர் "Chilled Beers" என்ற பெயரில் எழுதிவரும் நண்பர்.  அவரையும் யாரென்றே தெரியாது, அவரது பதிவுகளைப் படித்ததில் அவர் பெங்களூரில் இருக்கிறார் என்று தெரிந்துகொண்டேன்.



இரண்டாம் பின்னூட்டம் அளித்தவர் நம் நண்பர், காதல் மன்னன் "திடங்கொண்டு போராடு சீனு". அவர் கீழ்க்கண்டவாறு பின்னூட்டம் எழுதியிருந்தார்.


"முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா... முதல் பதிவே திருப்பதியில் இருந்து தொடங்கி உள்ளீர்கள்.. பதிவுலக பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 

Refer this site
www.bloggernanban.com

முக்கியமான வேண்டுகோள்;
In settings -> Post comments -> Show word verification -> No
என்று மாற்றுங்கள்...இல்லையேல் பல பின்னூட்டங்களை நீங்கள் இழக்க நேரிடும்... பெரும்பாலும் பின்னூட்டம் இடுபவர்கள் இதை விரும்புவதில்லை "



சீனுவின் பின்னூட்டம் மிகவும் உற்சாகம் கொடுப்பதாக இருந்தது.  அவர் சொன்னபடி பின்னூட்ட செட்டிங்கை மாற்றிவிட்டேன்.



அதற்குப் பிறகு பின்னூட்டம் எழுதியவர்கள்


பதிவுலகின் குறும்புத் தலைவன் நம் மதுரைத் தமிழன்








முதல் பதிவு எழுதிவிட்டு உடனே நூறு பின்னூட்டங்களும் ஆயிரம் ஹிட்சும் வரும் என்று நினைத்துக்கொண்டு டாஷ்போர்டை refresh செய்து பார்த்துக்கொண்டே இருந்தேன்.  ஹா ஹா ஹா... இன்னும் நினைத்தாலே சிரிப்பாக வருகிறது.  நான் மட்டும் தான் இப்படியா, இல்லை எல்லோரும் இப்படித்தானா.





எனது கணினி அனுபவங்கள் - பெரிசா ஒரு பதிவு



இதற்கு முந்தைய கணினி அனுபவப்பதிவைப் படித்தவர்கள் பெரும்பாலானோர் ரொம்ப சுருக்கமாசொல்லியிருப்பதாக பின்னூட்டத்தில் குறைப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.  தவிர நானும் தலைப்பை "எனது கணினி அனுபவங்கள்"னு பன்மையில் வைத்துவிட்டதால் விரிவான ஒரு பதிவை எழுதியே ஆகவேண்டும் என்று அந்த இயற்கையே கட்டளையிட்டது போன்ற உணர்வு.  அதனால நீங்க கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, இன்னொரு பதிவு படிச்சே ஆகணும்.







இது 1997-1998 இல் நடந்தது.  அந்த வருடம் நான் டிப்ளமா முடித்த கையோடு திருநெல்வேலியில் உள்ள அந்த மிகப்பெரிய தொழிற்சாலையின் எச்.ஆர். டிபார்ட்மெண்டில் அப்ரண்டிஸ் ஆக வேலைக்குச் சேர்ந்தேன்.  அந்த நிறுவனம் ஒரு துறைக்கு இருவர் என்று உதவிக்காக டிப்ளமா படித்தவர்களை அப்ரண்டிஸ் ஆக வேலைக்கு வைத்துக்கொள்வது வழக்கம்.  என்னுடைய வேலை நிறுவனத்தில் புதிதாக சேருபவர்கள், விலகிச்செல்பவர்கள், ஊர் மாற்றம், துறைமாற்றம் ஆகும் தொழிலாளர்களின் தகவல்களை கணினியில் உள்ளீடு செய்யும் டேட்டா என்ட்ரி, மேலாளர்களுக்குத் தேவையான தினசரி, வாராந்திர, மாதாந்திர அறிக்கைகளைத் தயார் செய்வது என்பது போன்றவை.



இப்போதெல்லாம்  ஒரு நபருக்கு ஒரு கணினி என்று கொடுக்கிறார்கள்.   ஆனால் அப்போதைய காலகட்டத்தில் ஒரு டிபார்ட்மெண்டுக்கு ஒரு கணினி தான்.  ஒரு துறையில் பத்து பேர் இருக்கிறார்கள் என்றால் பத்து பெரும் தினமும் சண்டையிட்டுக்கொள்வார்கள். அவர்களுடைய குடுமிப்பிடி சண்டையில் நானும் சிக்கித் தவித்திருக்கிறேன்.



நிறுவனத்தின் தகவல்கள் அனைத்தும் FOXPRO என்ற சாப்ட்வேரில் டிசைன் செய்திருந்தார்கள்.  டேட்டாபேஸ் அப்டேட் செய்வது  அந்த சாப்ட்வேரில் தான். இது DOS இல் இயங்கக்கூடியது. அப்போதைய கணினி திறந்தவுடன் DOS PROMPT இல் தான் இருக்கும்.  WINDOWS பொறுத்தவரை 3.1 என்ற வெர்ஷன் தான் இருந்தது.  நாம் FOXPRO வில் வேலை செய்யும்போது நம்மால் விண்டோஸ் திறக்க முடியாது.  எல்லாவற்றையும் சேமித்துவிட்டு FOXPRO வை மூடிவிட்டு  DOS PROMPT இல் win என்று டைப் செய்தால் மட்டுமே விண்டோஸ் திறக்கும்.



MS OFFICE ஐப் பொறுத்தவரையில் word மற்றும் excel 95 மட்டுமே இருந்தன. அந்தத் துறையினர் அனுப்பும் கடிதங்கள் word பைலாகவும் ஒரு சில அறிக்கைகள் மட்டும் excel பைல்கலாகவும் சேமித்து வைக்கப்பட்டன.  நான் டிப்ளமா படித்தபோது விண்டோஸ் மற்றும் எம் எஸ் ஆபிஸ் பாடங்களாக இருந்ததில்லை.  இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த பிறகுதான் ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டேன்.  அதுவும் மிக வேகமாய்.  காரணம் நாளொன்றுக்கு ஏழு மணி நேரம் வரை கணினியில் வேலை இருந்ததே. வேலையை கச்சிதமாக செய்ய முடியும் என்றாலும் வேகமாக முடிப்பதென்பது நான் அங்கே தான் கற்றுக்கொண்டேன்.  எக்சல் மற்றும் வேர்ட் போன்றவற்றில் நிறைய ஷார்ட்கட் இருப்பதை கண்டுபிடித்து ஒவ்வொன்றாக பழகிப்பழகி ஆறே மாதங்களில் எல்லா வேலைகளையும் நன்கு கற்றுக்கொண்டேன்.



FOXPRO வில் வேலை செய்யும்போது கீ-போர்ட் மட்டுமே தேவைப்படும்.  அதுமட்டுமல்லாமல் பெரிய பெரிய புத்தகங்களை மடியில் வைத்துக்கொண்டு டேட்டா என்ட்ரி செய்யவேண்டும்.  அந்த நேரத்தில் மவுஸ் இடைஞ்சலாக இருக்கும் என்பதால் அதைத் தூக்கி  CPU மேல் வைத்துவிடுவேன்.  மீண்டும் வேர்ட் அல்லது எக்சல் போன்ற அப்ளிக்கேஷன்களில் வேலை செய்யும்போது (பெருமைக்காகத்தான்) CPU மேல் வைத்திருக்கும் மவுசை எடுக்காமலே கீபோர்ட் மட்டுமே உபயோகித்து மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவேன் (நீயெல்லாம் அவ்வளவு பெரிய அப்படக்கரா என்று கேட்கக்கூடாது).



ஒரு நாள் மவுஸ் வேலை செய்யவில்லை.  கீ போர்டிலும் என்டர் கீ மட்டும் வேலை செய்யவில்லை.  புதிய மவுஸ் மற்றும் கீபோர்ட் வாங்கலாம் என்றால் நான்கு நாட்கள் ஆகும் என்று சொல்லிவிட்டார்கள்.  (அப்போதெல்லாம் அவ்வளவு எளிதில் எதுவும் கிடைக்காது) ஆனாலும் ஒரு டாக்குமெண்டை எடிட் செய்து பிரின்ட் எடுத்துக்கொடுத்தேன்.  "எப்படிடே, இவ்வளவு விரசையா எடுத்துக்கொடுத்தே?" என்று மற்றவர்கள் வியந்தே போனார்கள்.


ஆரம்பத்தில் கணினியை பயன்படுத்துவதற்கு மற்றவர்களிடன் கேட்டுத் தெரிந்துகொண்டிருந்த எனக்கு சில நாட்களுக்குப் பின் மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு "ஞானம்" வந்துவிட்டது.  பின்னர் பல இடங்களில் பணி நிமித்தமாக அலைந்து பலவிதமான கணினிகளை பயன்படுத்தியிருக்கிறேன்.  இன்று வரை புதிய புதிய தகவல்கள், சாப்ட்வேர்கள் என கற்றுக்கொண்டே இருக்கிறேன்.  அது சரி, இந்த ப்ளாகரின் HTML பார்த்தாலே தலை சுத்துதே.  இது பத்தி தெரிந்தவர்கள் சொல்லவும்.



இதோட போதும்னு நினைக்கிறேன், அடுத்த தொடர்பதிவுக்கு தென்றல் சசிகலா அழைத்திருக்கிறார், அதுவும் ரெடி பண்ணனும்.



நன்றி




எனது கணினி அனுபவங்கள் - தொடர்பதிவு

நம்ம ராஜி அக்கா ஆரம்பிச்சு வச்சு அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில என் வரைக்கும் வந்திருச்சு.  இது எப்படின்னு பாத்தா முதல்ல அக்கா தமிழ்வாசி பிரகாஷை எழுத அழைக்க  அவர் அவரோட பதிவில நாஞ்சில் மனோவைக் கோர்த்து விட்டுட்டார்.  அவரோ கே.ஆர்.விஜயனை எழுதச்சொல்ல  விஜயன் செல்வி அக்காவை எழுதச்சொல்லிட்டார். இப்போ செல்வி அக்கா மலேசியால இருந்து சென்னைல இருக்கிற என்னை எழுதச்சொல்லி கூப்பிட்டிருக்காங்க. சரி ரொம்ப ஈசியான பதிவுதானே எழுதிட்டுப் போவோம்னு ஆரம்பிச்சிட்டேன்.



அது 1994ஆம் வருஷம்.  நான் அப்போதான் பத்தாங்கிளாஸ் முடிச்சிருந்தேன்.  (உடனே நான் எந்த வருஷம் பிறந்திருப்பேன், என் வயசு என்னன்னு கணக்கு போடுவீங்களே, உங்களுக்கு இருக்கு).  வீட்டில சும்மா இருக்கக்கூடாதுங்கிறதுக்காக டைப்ரைட்டிங் கிளாஸ் போக ஆரம்பிச்சேன்.  நான் போன இன்ஸ்டிட்யூட்ல சுமார் முப்பது டைப்ரைட்டிங் மிஷின் இருக்கும்.  இன்ஸ்டிட்யூட் ஓனர்க்கு அங்க தனி ரூம் உண்டு.  அங்கதான் அது இருந்தது.  அதுதான், அதேதான்.






மேல படத்துல பாத்தீங்களே, அதே தான்.  அந்த ரூமைக் கடக்கும்போது திரும்பிப் பாக்காம போனதில்ல.  எப்ப பாத்தாலும் ஓனர் ஏதாவது அதில தட்டிக்கிட்டு இருப்பார்.  அவர் இல்லாத நேரத்துல அதுமேல வெள்ளையா பிளாஸ்டிக் கவர் போட்டு மூடியிருக்கும்.  டைப்ரைட்டிங் சொல்லிக்கொடுக்கிற அக்கா கிட்ட நான் கம்ப்யூட்டரை ஆன் பண்ணச்சொல்லிக் கேட்டிருக்கேன்.  "அட போடா, எனக்கே எப்படி ஆப்பரேட் பண்ணனும்னு தெரியாது, சார் கிட்ட ரொம்ப நாளா சொல்லித்தரச் சொல்லிக் கேட்டிட்டிருக்கேன்" அப்படின்னு என் வாய அடைச்சிட்டாங்க.  அந்தக் கம்ப்யூட்டரை ஆப்பரேட் செய்வது கனவாவே போய்ருச்சு.



அதே வருஷம் நான் டிப்ளமா படிக்க சேர்ந்தேன்.  நான் படிச்ச கோர்ஸ்ல கடைசி வருஷம் (மூணாவது வருஷம் 1996-1997) மட்டும் கம்ப்யூட்டர் ஒரு சப்ஜெக்டா இருந்தது.  என்ன படிச்சேன்னு கேளுங்க. Wordstar, Lotus, BASIC, DBASE, COBOL.  அப்பவே வாத்தியார் சொன்னார், இந்த அஞ்சு சாப்ட்வேரும் உலகத்தையே கலக்கப்போகுது, எழுதி வச்சுக்கோங்கன்னு.  எக்சாமுக்குன்னு இதில வர்ற ஷார்ட்கட், கமான்ட் எல்லாத்தையும் மனப்பாடம் செஞ்சு வச்சதுண்டு.



அந்த வருஷம் தான், நான் முதல்முறையா கம்ப்யூட்டரை தொட்டுப்பாத்த வருஷம்.   Wordstar, Lotus, BASIC இந்த மூணும் ரொம்ப ஈசியா இருந்தது.  DBASE ரொம்ப மூளைய செலவழிக்க வேண்டியிருந்தது.  இருந்தாலும் சவாலா இருந்ததால ரொம்ப பிடிச்சிருந்தது. COBOL மட்டும் தான், ஒன்றரை மைல் நீளத்துக்கு புரோகிராம் இருக்கும். ஒன்னும் புரியாது, நாமளா புதுசா எழுதினாலும் நூறு மிஸ்டேக் சொல்லும்.  அதனால அது மட்டும் பாகக்காயா கசந்தது.



1997, நான் டிப்ளமா முடிக்கிறதுக்கு கொஞ்சம் முன்னாடி தான் Windows 95 வந்தது.  ஒரே ஒரு கம்ப்யூட்டர் வச்சு எங்க வாத்தியார் சிடி போட்டு அந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் எப்படின்னு அவருக்குத் தெரிஞ்ச வரையில் கத்துக்கொடுத்தார்.  அப்ப ஒண்ணு சொன்னார், "எதிர்காலத்தில காம்பாக்ட் டிஸ்க் ஒரு பெரிய புரட்சியே செய்யப்போகுது"ன்னு.



அவ்வளவுதாங்க, என் முதல் கணினி அனுபவம்.  நாமளும் ஒரு நாலு பேர கோர்த்துவிட்டுப் போவோம். இல்லேன்னா ஆரம்பிச்சு வச்ச அக்காவுக்கு கோவம் வந்திரும்.



வாங்க வாங்க






நன்றி.



ஹோட்டல் SAFARI

ராயப்பேட்டையின் மிக முக்கிய இடத்தில் அமைந்திருக்கும் இந்த ஹோட்டல் சட்டென்று கண்ணில் படாது.  காரணம் அந்த இடத்தின் டிராபிக்.  மயிலாப்பூரிலிருந்து ராயப்பேட்டை போகும் வழியில் ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் தாண்டியதும் வரும் சிக்னலுக்கு முன்னால் இடதுபுறத்தில் இருக்கிறது இந்த ஹோட்டல்.  நண்பர் ஒருவரின் ட்ரீட் இந்த ஹோட்டலில் ஒருநாள் அரங்கேறியது.







Ambience: கீழ்தளத்தில் Non-AC மேல் தளம் முழுவதும் ஏ.சி. செய்யப்பட்டிருக்கிறது.  கூட்டமாக வருபவர்களுக்கு மேல் தளமே சிறந்தது.  தினமும் வந்து சாப்பிடுபவர்கள் கீழ் தளத்திலேயே சாப்பிடுகிறார்கள்.  மேல் தளம் மிகவும் நீட்டாகவே இருக்கிறது.  நான்குபேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய வகையில் டேபிள் மற்றும் சோபா போட்டிருக்கிறார்கள்.  ஆனால் அதிக அளவில் உணவு வகைகள் வைக்கும்போது டேபிளில் இடம் போதவில்லை.






நாங்கள் ஆறுபேர் சென்றிருந்தோம்.  எல்லா உணவுவகைகளையும் சுவைத்துப்பார்க்கும் எண்ணத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிளேட் ஆர்டர் செய்தோம்.  பிரியாணி வகைகளில் பிஷ், மட்டன், சிக்கன் மற்றும் ப்ரான் பிரியாணியும், சைட் டிஷ்ஷாக சிக்கன் மஞ்சூரியன், செட்டிநாடு சிக்கன், சிக்கன் பக்கோடா மற்றும் சிலோன் சிக்கனும் ஆர்டர் செய்திருந்தோம்.




சிக்கன் பக்கோடா



முதன்முதலில் வந்தது சிக்கன் பக்கோடா.  நாங்கள் ஆறுபேர் என்பதாலும், அனைவரும் பயங்கர பசியுடன் இருந்ததாலும் பக்கோடாவை போட்டோ எடுத்த அடுத்த நிமிடமே காலியானது.





சிக்கன் மொகல் பிரியாணி


ப்ரான் பிரியாணி





சிக்கன் செட்டிநாடு


எல்லா உணவு வகைகளையும் சூடாகவே கொண்டுவருகிறார்கள்.  சுவையும் அருமை.  பிரியாணியில் அரிசி சரியான பதத்தில் வெந்திருக்கிறது.  எக்ஸ்ட்ரா ரைத்தா மற்றும் குழம்பு வகைகளை கேட்டால் மட்டுமே கொடுக்கிறார்கள்.


ஆறுபேர் சாப்பிட்டும் மொத்த பில் ரூ.1535/- மட்டுமே.  அதாவது ஒரு ஆளுக்கு சுமார் 250 ரூபாய் வருகிறது.  கொஞ்சம் காஸ்ட்லியாகத் தெரிந்தாலும் இந்த சுவைக்கு இது worth என்றே தோன்றுகிறது.





நன்றி...

நான் எடுக்குறேன்டா சினிமா - கட்டிப்புளி

 இந்தப் பதிவு நகைச்சுவைக்காக மட்டுமே, இதில் வரும் பெயர்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையே, யாரையும் குறிப்பிடுவன அல்ல.  இங்கு இடம்பெற்றிருக்கும் படங்களுக்கும் இந்தப் பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.


கட்டிப்புளி படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தனது அலுவலகத்தின் மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார் இயக்குனர் நடிகர் கசிக்குமார்.  அவரிடம் கதை சொல்வதற்காக மூன்று முக்கிய இயக்குனர்கள் காத்திருக்கிறார்கள்.






முதலாவதாக போட்டோகிராப் பட டைரக்டர் 'பேரன்'

"போட்டோகிராப் டைரக்டரா, அருமையா காதல் கதை சொல்லுவாரே, வரச்சொல்லு, பேசுவோம்" தன் உதவியாளரிடம் சொல்கிறார் தாடியை தடவிக்கொண்டே...


"வணக்கம் கசிக்குமார் சார்"

"வாங்க வாங்க பேரன், எப்படி இருக்கீங்க?"

"நல்லா இருக்கேன், நீங்க?"

"சூப்பரா இருக்கேன், என்ன ரொம்ப நாளா படமே எடுக்கலையா, ஆளையே காணோமே"

"இல்ல, கொஞ்சம் நடிப்புல இறங்க்கிட்டதுனால என்னால கதை எழுதுற மூடுக்கு வரமுடியல.  ஆனா ஒன்னு, உங்க கட்டிப்புளி பாத்ததிலிருந்து என்னால மனச கட்டுப்படுத்த முடியல.  சூப்பரா ஒரு கதை ரெடி பண்ணி கொண்டுவந்துட்டேன்,"

"அப்படியா, சொல்லுங்க கேப்போம்"






டைரக்டர் பேரன் தனது பாணியில் கதை சொல்ல ஆரம்பிக்கிறார்.  "அதாவது, உங்களுக்கு கல்யாணம். அதுக்கு பத்திரிக்கை கொடுக்க உங்க பழைய காதலியத் தேடி கேரளா போறிங்க"

"என்னது, என்னது, நான் கேரளாவுக்கா? ஏன்?"

"கதைப்படி கேரளாவுல நீங்க ஒரு அஞ்சு வருஷம் வேல பாக்குறிங்க.. அதனால தான்"

"கேரளா வேண்டாம், கதைய மாத்துங்க... ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் இந்தமாதிரி ஏதாவது டவுன்ல வச்சிக்கலாம்.  ம்... மேல சொல்லுங்க"

பேரன் கொஞ்சம் டென்ஷன் ஆகிறார்.  'இந்த ஆளு ராஜபாளையத்த விட்டு வரமாட்டார் போலருக்கே, ஓடோடிகள்-ல ஆரம்பிச்சு கட்டிப்புளி வரைக்கும் எடுத்தாச்சு.. இன்னுமா அங்க லொக்கேசன் இருக்கு!'

"இல்ல கசிக்குமார் சார், கதைப்படி நீங்க கேரளாவில வேலைக்கு போறிங்க, அங்க பாஷை தெரியாம முழிக்கும்போது ஹீரோயின் உங்களுக்கு ஹெல்ப் பண்றா. அப்படியே உங்களுக்குள்ள ப்ரெண்ட்ஷிப் ஆரம்பிக்குது.  அப்படியே அது லவ்வாகி அந்த எடத்துல ஒரு சூப்பர் பாட்டு வைக்கிறோம்.  நீங்க தமிழ்ல பாடுறிங்க, ஹீரோயின் மலையாளத்துல பாடுது. எப்படி?"

"ஆஹா சூப்பர் பேரன், இருந்தாலும் கேரளா வேண்டாம், ராஜபாளையமே வச்சிக்கலாம்.  ஹீரோயினா நம்ம குஷ்மி மேனனையே போட்டுரலாம்"

'ம்க்கும், இவருக்கு கேரளா வேண்டாமாம், கேரளா ஹீரோயின் மட்டும் வேணுமாம்'







"என்ன பேரன் ஒண்ணுமே பேச மாட்டங்கிறிங்களே"

"ஆங், சரி சார், இப்போ நீங்க கல்யாண பத்திரிக்கை கொடுக்கப் போறிங்க"

இடைமறித்து, "ஆ, அப்போ ஒரு பூனை குறுக்க போகுது, நான் என்ன செய்யிறேன் தெரியுமா? ஊர்ல இருக்கிற எல்லா பூனையையும் புடிச்சி கட்டிப்போட்டுடறேன். அங்க பூனைகிட்ட ஒரு பஞ்ச் டயலாக் பேசறேன். 'மனுஷங்க போகும்போது பூனை குறுக்க போச்சுன்னா அது அவங்களுக்கு மட்டும்தான் அபசகுனம், ஆனா நீ வரும்போது நான் குறுக்க வந்தா அது உன் இனத்துக்கே அபசகுனம், எப்படி?"

பேரன் நிலைகுலைந்து போகிறார்.  'அய்யய்யோ, தெரியாம இந்தாள் கிட்ட வந்து மாட்டிக்கிட்டோமே, நல்லதா ஒரு காதல் கதை சொல்லலாம்னு வந்தா பூனை கிட்ட பன்ச் டயலாக் பேசறேங்கிறாரே, இது சரிவராது, எஸ்கேப் ஆகிட வேண்டியதுதான்'

"சார், இப்போ நான் உங்களை சரியா புரிஞ்சிக்கிட்டேன், நீங்க சொல்ற கதை வேற, நான் கொண்டுவந்தது வேஸ்ட், உங்களுக்கு ஏத்த மாதிரி சூப்பரா ரெடி பண்ணிட்டு நாளைக்கே வர்றேன்" என்று சொல்லி விடைபெற்று ஓட்டம் பிடிக்கிறார்.

===============

அடுத்ததாக வருகிறார் இயக்குனர் பெங்கட் கிரபு




"மொதல்ல டைட்டிலை சொல்லுங்க" என்கிறார் கசிக்குமார்.

"கத்தி"

"என்னது, கத்தியா? எனக்கு ஏத்த டைட்டில்தான்"

"ஆமாண்ணே, டைட்டில் கத்தி, A BENKAT KIRABU மொக்கை அப்படின்னு கேப்ஷன் வைக்கிறோம்"

"ஆஹா, சூப்பர், எனக்கு ஏத்த மாதிரி டைட்டில் வச்சிருக்கீங்க, கதை சொல்லுங்க"

"அண்ணே, கதையெல்லாம் ஒண்ணுமே இல்ல, ஊர்ல நாலு தாடிக்கார ப்ரெண்ட்ஸ் சல்லித்தனம் செஞ்சிட்டு இருக்கீங்க,   உங்க நாலு பேரையும் பிரிக்கறதுக்கு ஊர்க்காரங்க சதி பண்றாங்க, இதத் தெரிஞ்சிக்கிட்ட நீங்க நாலு பேரும் சாமி நகைய திருடிட்டு கோவாவுக்கு ஓடிடறிங்க.  அதுக்கப்புறம் ஒரே தண்ணிதான், குஜால்தான்.  நீங்க பண்ற அட்டூழியத்தப் பாக்கற ஆடியன்ஸ் வயித்தெரிச்சல் படுறாங்க.  அப்புறம் அப்படி இப்படி பண்ணி கிளைமாக்சில் நீங்க நாலு பேரும் ஊருக்கு வந்து செட்டில் ஆயிடறிங்க. சரியா?"

"எல்லாம் சரி, நாலு பேரு யார் யாரு?"

"ஒண்ணு நீங்க, இன்னொருத்தர் என் தம்பி க்ரைம்ஜி, மத்த ரெண்டு பெரும் வேற யாரையாவது போட்டுக்கலாம்"

"என்னது, க்ரைம்ஜியா, அவர் கூடல்லாம் நம்மால நடிக்க முடியாதுப்பா"

"இல்லண்ணே, நான் எடுக்குற எல்லா படத்துலயும் அவனுக்கு ஒரு முக்கியமான ரோல் குடுக்குறது வழக்கம், அதனால தான்" என்று இழுக்கிறார்.

"இல்ல, இந்த காம்பினேஷன் நல்லாருக்காது, க்ரைம்ஜிக்கு பதிலா நம்ம சுமோ நாராயணனை போட்டுரலாம். அவர் கூட என் காமெடி ரொம்ப நல்லா இருக்கும்"

"அப்ப க்ரைம்ஜி?"

"நீங்க ரொம்ப சென்டிமென்ட் பாக்கிறீங்க, அவருக்கு வேனும்னா ஒரே ஒரு சீன்ல வர்ற மாதிரி காமெடி ஒண்ணு பண்ணிக்கலாம்"

"இல்லண்ணே, நான் மொண்ணை 600028 படத்துலருந்து எங்காத்தா வரைக்கும் லீட் ரோல் தான் கொடுத்திருக்கேன், இப்போ வரப்போற பெரிய ஆணி படத்துலயும் நல்லா பண்ணியிருக்கார்.  அவர என்னால இப்படி விட முடியாது"


"அப்ப வேண்டாம், நம்ம காம்பினேஷன்ல படம் வரவே வேண்டாம், நீங்க கிளம்புங்க"


விரட்டியடிக்கப்படாத குறையாய் பெங்கட் கிரபு கிளம்புகிறார்.

=====================

அடுத்ததாக வருகிறார், அருவா டைரக்டர் கரி.







"ஆஹா, நீங்க தான் எனக்கேத்த டைரக்டர். என்ன டயலாக், என்ன பஞ்ச், கலக்குறீங்க"


"ரொம்ப தேங்க்ஸ் அண்ணே, கதை சொல்லவா?"

"வேண்டாம், நானே சொல்றேன், படத்து பேரு அருவா, கதையெல்லாம் ராஜபாளையத்துல நடக்குது, தாடி வச்ச நாலு நண்பர்கள், காதல், ஏமாற்றம், சோகம், அழுகை, அம்மா செண்டிமெண்ட், நம்பிக்கை துரோகம் இப்படி எல்லாமே இருக்குது. படத்துல முதல் சீனே பக்கத்து ஊர்க்காரனை கொலை பண்றேன், காரணம் அவன் எங்க ஊர்ப் பொண்ண கிண்டல் பண்ணியிருக்கான்.  அவனை படுக்கவச்சு பட்டாக்கத்தியால கழுத்த கொரகொரன்னு அறுக்கிறேன்.  அப்போ, கேமராவுக்கு பக்கத்துல நின்னு ரெண்டு பேர் ஒரு லிட்டர் ரத்தத்தை என் மூஞ்சியில் ஊத்துறாங்க.  ஏன்னா, அது கழுத்துல இருந்து தெறிச்சு  வர்ற ரத்தம்.  நான்தான் கொலை பண்ணினேன்கிறதை தெரிஞ்சிக்கிட்ட வில்லன் எனக்குத் தெரியாம என்கிட்டே ஆயுதம் எதுவும் இல்லாத நேரத்துல கொலை செய்ய ஆள் அனுப்புறான்.  ஏழு பேர், ஒருத்தன் நடு மண்டையில வெட்டறான், ஒருத்தன் கழுத்துல, ஒருத்தன் கையில, ஒருத்தன் கால்ல, ஒருத்தன் முதுகுல குத்துறான், மொத்தம் முப்பத்தி ரெண்டு இடத்துல வெட்டு விழுகுது.  அப்ப இண்டர்வல்.  நான் செத்துப் போய்ட்டேன்னு ஆடியன்ஸ் நெனச்சிக்கிட்டு இருப்பாங்க.  ஆனா, அங்கதான் வைக்கிறேன் ட்விஸ்ட்.  ஹீரோயின் தன்னோட நகைய வித்து மதுரையில ஒரு பெரிய ஆஸ்பத்திரியில சேர்த்து என்னை காப்பாத்திடறா.  உயிர் பொழச்சு வந்த நான் வில்லன் கூட சண்ட போட்டு அவன் வேட்டியிலேயே அவனை ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டான்டில கட்டிப்போடுறேன்.  அதுக்கப்புறம் வர்ற மோதல்ல அடிதடியாகி கிளைமாக்சில படத்துல நடிச்ச அத்தனை பேரும் செத்துப் போயிடறோம்"


மூச்சு விடாமல் சொல்லி முடித்த கசிக்குமாரை வியப்பாகப் பார்க்கிறார் அருவா டைரக்டர் கரி.


"அண்ணே, தண்ணி குடிங்க" என்று தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுக்கிறார்.  கசிக்குமார் அண்ணாந்து தண்ணீர் குடித்துவிட்டு குனியும்போது கரி எஸ்கேப்.


கரியின் மனதில் - 'நான்தான் பெரிய அருவா டைரக்டர்னு நெனச்சேன், இந்தாள் பயங்கரமா இருக்காரே.  இவர் கதை சொல்றதப் பாத்தா என் மூஞ்சியிலேயே ரத்தம் வருதே, நல்லவேளை, தப்பிச்சேன்' என்று தலைதெறிக்க ஓடுகிறார்.


"எங்கயா இந்த ஆளு?" என்று தன் உதவியாளரிடம் கேட்கிறார் கசிக்குமார். அதற்கு அவர் "இல்லண்ணே, நீங்க ரொம்ப கொடூரமா படம் எடுக்குறதா வந்துபோன எல்லா டைரக்டரும் சொன்னாங்கன்னே, எனக்கு என்னமோ அவங்க இனிமே இங்க வரமாட்டாங்கன்னு தோனுதுன்னே" என்கிறார்.


"ஓ, அப்படியா சங்கதி, போங்கய்யா, போங்க, நீங்க இல்லேன்னா என்ன, என் ஆருயிர் நண்பன் கவுத்துறசனி இருக்கான், எனக்காக எத்தனை படம் வேணும்னாலும் எடுப்பான், எங்க கூட்டணி எப்படின்னு தெரியும்ல?"


எல்லாரையும் திட்டிய களைப்பில் மீண்டும் தண்ணீர் குடித்துவிட்டு கவுத்துறசனிக்கு போன் செய்கிறார் கசிக்குமார்.  "நீங்கள் டயல் செய்த எண் தற்போது தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளது, தயவுசெய்து சிறிது நேரத்துக்குப் பின் முயற்சிக்கவும்"  என்று வர என்னாச்சு என்பது போல் தன் உதவியாளரைப் பார்க்கிறார்.  உதவியாளரோ "அண்ணே, இதோ வந்துடறேன்" என்று எஸ்கேப் ஆகிறார்.

பிச்சைக்காரன்

பிச்சைக்காரன் - கவிதை








அன்றொரு நாள்.  என் இதயத்தை யாரோ இரு கையால் பிசைவது போன்றொரு இனம்புரியா வலியொன்று தோன்றியது - அந்தக் காட்சியைக் காணும் சமயம்.  ஒரு உணவு விடுதியின் வாசலில் எச்சில் இலைத் தொட்டி.  தொட்டியைத் தோண்டிக் கொண்டிருந்தான் ஒரு மனநிலை தவறிய பிச்சைக்காரன்.  அவனருகே நாக்கில் நீர் வடிய ஓர் நாய்.  அவன் துழாவிய கைகளில் கிடைத்தது சில பருக்கைகளுடன் ஓர் இலை.  அவசரமாய் பசியாறிய முகம் தெரியா ஒருவனின் எச்சில் இலை அது.  ஆனால் அவனுக்கோ அது அட்சயப் பாத்திரமாக விளங்கியது.  ஆறறிவாயினும் ஐந்தறிவாயினும் அடிவயிற்றுத் தீ ஒன்று தானே.  அத்தீயின் வெப்பம் தாளாது ஆறறிவு ஐந்தறிவு ஆனது.  ஆம்! எடுத்துண்ண இரு கரம் இருக்கையில் வாய் கொண்டே வயிற்றை நிரப்பினான் அவன்.  அந்நேரம் உணர்ச்சியளையால் உள்ளம் இறைச்சலிடும்போது கவிதை எழுத கை வரவில்லை. 






மற்றொரு நாள் மற்றொரு இடத்தில் இதே போன்று இன்னொரு சம்பவம்.  ஒரு டீக்கடை முன் இருவர் டீ அருந்திக்கொண்டிருக்க அவர்கள் அருகில் கொறிப்பதற்காக சீவல் பொட்டலம்.  இமைக்காமல் அவர்கள் இருவருவரையும் பார்த்துக் கொண்டேயிருந்தது அவர்கள் முன் நின்ற நாய் ஒன்று.  அவ்வப்போது அவர்களும் அதற்கு இரையிட்டுக் கொண்டிருந்தனர்.  சற்றே தள்ளி நின்று இவர்களையே கவனித்துக்கொண்டிருந்தான் அதே பிச்சைக்காரன்.  அவன் மனதில் அந்நேரம் என்ன தோன்றும்? என்ற என் கேள்விக்கு விடைகாணும் சிறு முயற்சியே இக்கவிதை.  "வர வர உன் thinking ரொம்ப advance ஆ போகுது" இக்கவிதையைப் படித்த நண்பன் ஒருவன் நவின்ற வார்த்தைகள் இவை! உங்களுக்கும் அவ்வாறே தோன்றினால் நான் ஜெயித்துவிட்டேன்.





நாக்கில் ஜலம்வடிய
நாய் நோக்கும்
நாயோடு சேர்ந்து
நானும் நிற்பேன்

நன்றி காட்ட நாய் வாலசைக்கும்
வார்த்தையில் சொல்ல
வாய் திறப்பேன் நான்

நக்கிய எலும்புத்துண்டு
நாய்க்கு வரும்
எனக்கோ வெறும்
ஏளனப் பேச்சுக்கள்

வார்த்தைகளை விட
வாலாட்டத்தின் வடிவத்திற்கே
வாக்குகள் எனில் -

இறைவா!
எனக்கும் வால் தா!



SPECIAL 26

ஸ்பெஷல் 26 என்று ஒரு ஹிந்தி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டது என்பது அனைவரும் அறிந்ததே (அறிந்ததா?).  எண்பதுகளில் நடைபெற்ற போலி சி.பி.ஐ. ரெய்டுகளை மையமாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டிருக்கிறது.




 

கதை...




முதல் காட்சியிலேயே அக்‌ஷய் குமார் மற்றும் அனுபம் கெர் தலைமையிலான குழு மந்திரி ஒருவரின் வீட்டில் ரெய்டு நடத்துகிறார்கள்.  கிடைக்கும் பணம், நகை மற்றும் டாக்குமெண்டுகளை அள்ளிச் செல்கிறார்கள்.  அவர்கள் போலியான சி.பி.ஐ ஆபிசர்கள் என்பது பின்னர்தான் தெரியவருகிறது.  அவர்களைப் பிடிக்க வரும் நிஜ சி.பி.ஐ ஆபிசருக்கும் அவர்களுக்கும் இடையே நடக்கும் ஒரு விறுவிறுப்பான ஓட்டம்தான் ஸ்பெஷல் 26.


கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையடிக்கும் இந்த கும்பல் கடைசியாய் நகரின் மிகப்பெரிய நகைக்கடையில் ஒரே ஒரு பெரிய‌ ரெய்டு நடத்தி  பெரிய அளவில் சுருட்டிவிடத் திட்டமிடுகின்றனர்.  அதற்காக நிஜ சி.பி.ஐ. ஆபிசர்களைத் தேர்ந்தெடுப்பது போன்று 26 பேரை வேலைக்குத் தேர்ந்தெடுக்கின்றனர்.  தேர்ந்தெடுக்கப்பட்ட 26 பேரும் தாங்கள் உண்மையான ஆபிசர்கள் என்றே நினைத்துவிடுகின்றனர்.  இதைத் தெரிந்துகொண்ட நிஜ சி.பி.ஐ, அவர்கள் கொள்ளை நிகழ்ச்சியை அரங்கேற்றும்போது பிடித்து விடவேண்டும் என்று திட்டமிட்டு நகைக்கடையில் உள்ள நகைகளை எல்லாம் மூட்டை கட்டி நகை செய்யும் பட்டறையில் கொண்டு போய் வைத்துவிட்டு கடையில் போலியான நகைகளை வைத்துவிடுகிறார்கள்.






கிளைமாக்ஸில் 26 பேர் கொண்ட போலி சி.பி.ஐ ஆபிசர்கள் குழு பேருந்தில் வந்து நகைக்கடை முன்பு காத்திருக்கிறார்கள்.  நிஜ சி.பி.ஐ ஆபிசர்களும் கடைக்கு வந்திருக்கும் வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் மற்றும் சேல்ஸ் கவுண்டரில் வேலை பார்ப்பவர்கள் போல மாறுவேடத்தில் இருந்து காத்திருக்கிறார்கள்.  ஆனால் நடப்பதோ வேறு, போலி சி.பி.ஐ.யின் முக்கிய புள்ளிகளான நான்கு பேர் நகைப்பட்டறைக்குச் சென்று ஒரு ரெய்டு நடத்தி கோடிக்கணக்கான நகைகளையும் கொள்ளையடித்துவிட்டு கம்பி நீட்டிவிடுகின்றனர்.  இங்கே நகைக்கடையில் காத்திருக்கும் நிஜ சி.பி.ஐ., பேருந்தில் காத்திருக்கும் போலி சி.பி.ஐ. என்று இரண்டு காத்திருக்கும் கும்பல்கள்.  ஒரு கட்டத்தில் பொறுமை இழக்கும் நிஜ சி.பி.ஐ. போலி சி.பி.ஐ.யைப் பிடித்து விசாரிக்க, முக்கிய புள்ளிகள் மட்டும் வராதது தெரிகிறது.  அதற்குள் நகைப்பட்டறையில் அத்தனை நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் வர நிஜ சி.பி.ஐ. அதிர்ச்சி அடைகிறார்கள்.



மாறுவேடத்தில் இருக்கும் சி.பி.ஐ. ஆபிசர்களை ஒவ்வொருவராக வெளியேற்றும் போது தான் தெரிகிறது, நிஜ சி.பி.ஐ. ஆபிசர்கள் மொத்தம் 26 பேர் என்று.  ஸ்பெஷல் 26 என்ற பெயரில் ரெய்டு நடத்த வந்திருக்கும் போலி கும்பலுக்கு காவல் நின்ற ஸ்பெஷல் 26 சி.பி.ஐ. ஆபிசர்கள் நிஜமான சி.பி.ஐ. என்ற அதிர்ச்சியுடன் படம் முடிவடைகிறது.



இந்தப்படத்தின் முக்கிய கதைத்திருப்பமான கிளைமாக்ஸ் காட்சியில் நிஜ சி.பி.ஐ. ஆபிசர்கள் பல்பு வாங்குவது மிகவும் ரசிக்கக்கூடியதாக இருக்கும்.







டிஸ்கி 1: இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் இந்தப் படத்தின் சிடியை திடங்கொண்டு போராடு சீனு என்னிடமிருந்து வாங்கியிருந்தார்.


டிஸ்கி 2: இந்தப் படத்தின் கதைக்கும் திடங்கொண்டு போராடு சீனு நடத்தும் காதல் கடிதம் பரிசுப்போட்டிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.



படங்கள் உதவி: கூகுள், சீனு


கடன் - சிறுகதை

கடன் - சிறுகதை


"நாளைக்கு நான் வர்றப்ப வட்டிப்பணமாவது ரெடியாயிருக்கணும். இல்ல....!"

வழக்கம்போல் வாக்கியத்தை முடிக்காமலே கடன் கொடுத்தவன் சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த பாஸ்புக் கையில் கிடைக்கும் வரை.  யோசனையோடு பழைய குப்பைகளை கிளறிக் கொண்டிருந்தபோது தான் அது கண்ணில் பட்டது.

தாய்க்குத் தலைமகன் போல, கஞ்சன் கையில் கரன்சி போல... இப்படி எத்தனை உவமானம் சொன்னாலும் அத்தனையும் அர்த்தமற்றதாகிவிடுவதைப் போலத் தோன்றியது.. அந்தப் புதையல்..


Balance Rs.5742/‍- என்றிருந்தது.

போதும், இது போதும், கடன்காரனின் வாயை அடைக்க இது போதும்.

=============

என் இருசக்கர வாகனத்தை மெதுவாகச் செலுத்திக் கொண்டிருந்தேன்.  என் மனதில் ஏதோ இனம் புரியாத படபடப்பு,  ரொம்ப நாளுக்கப்புறம் படித்த கல்லூரியைக் காணப்போகிறேன்.  இப்போது உங்கள் மனதில் ஒரு கேள்வி வருமே?

கடன்காரனைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தான்.  திடீரென்று கல்லூரியைப் பார்க்கப் போகிறேன் என்று சொல்கிறானே. இரண்டுக்கும் என்ன சம்பந்தம்?

இது தானே உங்கள் கேள்வி?

பொறுமை, பொறுமை.

வண்டி முன்னேறிக்கொண்டிருந்தாலும் மனம் ரிவர்ஸ் கியரில் பின்னோக்கிப் போய்க்கொண்டிருந்தது.

இதோ, இந்தச் சாலையில்தான் நாங்கள் எல்லோரும் சேர்ந்து வருவோம்.  சைக்கிளில் போகும்போது சாகசங்கள்! இரண்டு கைகளையும் விட்டுவிட்டு ஓட்டுவது, தோளோடு தோள் சேர்த்துப் போவது, நடுவில் வரும் ஸ்பீடு பிரேக்கர்களில் முன் சக்கரத்தை குதிரையைப் போல தூக்குவது, இதைப்போல் பல சாகசங்கள். எல்லாம் உடன் படிக்கும் சைட்டுகளின் முன்னால் தான்.

எங்கள் காலேஜ் கோ‍எட் தான் என்றாலும் ஒரு கட்டுக்கோப்பு இருக்கும்.  இருபாலரும் தங்கள் எல்லைகளைப் புரிந்துகொண்டு உரிமைகளை வரையறுத்துக்கொண்டு அந்த வட்டத்திலேயே வளையவருவது ஒரு தனி அழகுதான்.  அதைவிட ஆச்சரியம் அந்த வட்டத்தை யாருமே தாண்டாமலிருந்தது.

சாலையின் இரண்டு பக்கங்களிலும் பெயர் தெரியாத மரங்களின் அணிவகுப்பு. பெயர்தான் தெரியாதே ஒழிய ஏப்ரல் மாதத்தில் பூக்கும் அந்த ரத்தச் சிவப்பு நிறப் பூக்கள் மிகவும் ஃபேவரிட்.  ஒவ்வொரு மரத்தினடியும் கல்லால் ஆன பெஞ்ச் போடப்பட்டிருக்கும்.  அதில்தான் நானும் மூர்த்தியும் எப்போதும் அமர்வோம்.  மூர்த்தி என் வகுப்புத் தோழனாய் அறிமுகமாகி பின் அவனுடைய நடவடிக்கைகளால் என்னை பெரிதும் கவர்ந்தவன்.  மற்றவர்களைக் காட்டிலும் ஒரு படி அதிகமாய் என் மனதில் உள்ளவன்.  நானும் அவனும் இன்னதென்றில்லாமல் எல்லா விஷயங்களும் பேசுவோம். அரசியல், சினிமா, நட்பு, காதல், கவிதை, வகுப்பு, இன்ன பிற என்று இல்லக்கின்றிப் பேசுவோம்.

இன்னும் மரமிக்கிறது, பெஞ்ச் உள்ளது, பூ உள்ளது.  ஆனால் பெஞ்சில் எங்களுக்குப் பதிலாக வேறு சில இளைய நண்பர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் இக்காலத்துக்கு ஏற்றபடி அவர்களது இத்யாதி இத்யாதிகளைப் பேசிக்கொண்டிருந்தார்கள்.  நானோ அவர்களை ரசிக்கும் நிலையில் இல்லை. இப்போது நான் வந்திருக்கும் வேலைதான் முக்கியம்.

இருசக்கர வாகனத்தை நிறுத்தும் இடம் வந்தேன்.  அருகிலேயே சைக்கிள் ஸ்டாண்ட்.  நான் எப்போதும் ஏழாவது தூணுக்குப் பக்கத்தில்தான் என் சைக்கிளை விடுவேன். நான் படித்த மூன்றாண்டுகளும் அந்த இடத்தில் தான் சைக்கிளை நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.  நான் நிறுத்தும் முன்னரே வேறு யாராவது அங்கு சைக்கிளை நிறுத்தியிருந்தால் அதை நகர்த்திவிட்டு அந்த இடத்தில் என் சைக்கிளை நிறுத்துவேன்.  அந்த இடம் இப்போது காலியாக இருந்தது.  அதை நான் கவனித்திருந்தாலும் முதலாவது தூணுக்குப் பக்கத்திலுள்ள காலி இடத்தில் என் வண்டியை நிறுத்தினேன்.





நீள் செவ்வக வடிவில் கல்லூரியின் முகப்புக் கட்டிடம்.  நடுவில் உள்ள படிகளை ஏறியவுடன் ஒரு ஹால். ஹாலின் நடுவே நிறுவனரின் வெண்கலச்சிலை. அதன் அருகே அன்றலர்ந்த பன்னீர் புஷ்பங்கள்.  இவை தினசரி மாறாமலிருக்கும்.

நான் ஒவ்வொரு படியாக ஏறத்தொடங்கினேன். நேற்றுதான் வந்தது போல் இருக்கிறது. அதற்குள் இத்தனை வருடங்கள் கடந்துவிட்டனவே! அனுபவம் மிக்க சம்பவங்கள் நிறைந்த நான்கு வருடங்கள்! என்னவெல்லாம் நடந்துவிட்டன அதற்குள்!

படித்து முடித்தவுடன் வேலை கிடைத்துவிட்டது.  ஆனால் வரும் சம்பளமோ வயிற்றுப்பாட்டிற்கே சரியாய் இருந்துவந்தது.  அதனால் அதுகூட ரொம்ப நாளைக்கு நீடிக்கவில்லை.

திடீரென்று கம்பெனியில் லேஆஃப்.  அனைத்து தொழிலாளர்களும் தெருவில் நின்றோம்.  உள்ளூர்க்காரர்கள் வேறு வேலைக்கு முயற்சி செய்ய என்னைப்போன்ற வெளியூர்க்காரர்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை.  சோகத்தோடு திரும்பினேன்.  ஊரிலிருந்தபடியே வேறு வேலைக்கு முயற்சி செய்தேன்.  ஆனால் இம்முறை அதிர்ஷ்டம் என்னை கைவிட்டுவிட்டது.

விரக்தியோடு சுற்றிக்கொண்டிருந்த நேரத்தில் தான் என் அக்கா மகளுக்கு காதணி விழா வந்தது.  என்னதான் சும்மா சுற்றிக்கொண்டிருந்தாலும் தாய்மாமனான நான் ஏதாவது செய்யவேண்டுமே! என்ன செய்வதென்று தெரியவில்லை.  அம்மா அப்பாவிடமும் கேட்கக்கூடாது. கூடாதென்ன முடியாது.  அவர்கள் என்னை இன்னும் "தண்டச்சோறு" என்று கூப்பிடாமல் இருப்பதே பெரிய விஷயம்.

அந்த நேரத்தில் தான் உணர்ச்சி வேகத்தில் என்ன செய்கிறோம் என்றே அறியாமல் செய்த ஒரு தவறுதான் இன்று இந்த நிலைக்கு ஆளாக்கிவிட்டது.

ஆம்! என் கல்விச் சான்றிதழை ஒருவரிடம் ஐயாயிரம் ரூபாய்க்கு அடமானம் வைத்துவிட்டேன்.  வாங்கிய பணத்தை விழாவில் என் பங்களிப்பாக அக்காவிடம் கொடுத்துவிட்டேன்.

தனியே வந்து யோசிக்கையில் தான் தவறு புரிகிறது.  ஆனால் எல்லாம் முடிந்த பிறகு என்ன செய்ய.  கடன் கொடுத்தவன் தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிட்டான்.  அவன் வீட்டுக்கு வந்து மானத்தை வாங்குவதற்குள் ஏதாவது ஏற்பாடு செய்தாக வேண்டும்.

எங்கள் கல்லூரியில் இந்தியன் வங்கியின் கிளை ஒன்று இருந்தது.  அதில் நானும் ஒரு கணக்கு தொடங்கியிருந்தேன்.  என் படிப்புக்கு வரும் பணத்தின் மீதி, செலவுக்கு வரும் பணம் போக பாக்கி என்று என்னால் முடிந்த போதெல்லாம் சிறுகச் சிறுக அந்தக் கணக்கில் சேர்த்துவைத்திருந்தேன்.

அப்போது கையில் தாராளமாக பணப்புழக்கம் இருந்ததால் இதை எடுக்க வேண்டிய அவசியம் இருந்ததில்லை.  நான்கு வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் அதன் தேவை புரிந்து எடுக்கச் சென்று கொண்டிருந்தேன்.


நீள் வராண்டாவின் கடைசியில் இருக்கும் வங்கியை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.  ஒரு புறம் வகுப்பறைகள், மறு பறம் மைதானம்.  மைதானத்தில் ஆங்காங்கே மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.  அவர்களைப் பார்க்கும் போது தான் எனக்கு அந்த எண்ணம் தோன்றியது.  நான் ஏதாவது தவறு செய்யப்போகிறேனோ?  எனக்கும் என் கல்லூரிக்கும் இடையேயான கடைசித் தொடர்பு இந்தக் கணக்கு தான்.  இதையும் முறித்துவிட்டால்....?

அவ்வளவு தானா?  பணத்தை எடுத்துவிட்டால் அவ்வளவுதானா?  இனி எனக்கும் இந்தக் கல்லூரிக்கும் இடையே தொடர்பே கிடையாதா?  வாழ்நாள் முழுவதும் எத்தனையோ துன்பங்கள் வந்தாலும் அந்நேரங்களில் எல்லாம் நினைத்து என்னைத் தேற்றிக்கொள்ளும்படியாய் எத்தனையோ சம்பவங்களை பரிசளித்த இந்த நண்பனின் கடைசித் தொடர்பையா துண்டிக்கப் போகிறேன்! வேண்டாம்! வேண்டாம்!





வராண்டாவின் முடிவில் வங்கி அலுவலகம்.  அதற்கு முந்தின அறையில் ராமசாமி ஆசிரியர் முதலாமாண்டு மாணவர்களுக்கு தமிழ்ப்பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.  "அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டார், இந்தப் பழமொழிக்கு அனைவரும் தவறான அர்த்தமே கற்பித்து வருகின்றனர்.  இங்கு அடி என்பது நண்பர்களைக் குறிக்கும் ஒரு சொல்லாகும்"

அவர் மேலும் சொல்லிக்கொண்டே போக நான் கண்ணோரம் பொங்கிய நீரை அடக்கியவாறே திரும்பிவிட்டேன்.

மறுநாள்....

"டேய், உன் ஸ்கூட்டரை எங்கடா காணோம்?"

அம்மா கேட்டபோது மெளமாகத் தலை குனிந்துகொண்டேன்.