வீரம்
Friday, January 10, 2014
Posted by கார்த்திக் சரவணன்
ஒட்டன்சத்திரத்தில் அஜித்தும் அவரது தம்பிகள் நான்கு பேரும் திருமணம் செய்யவேண்டாம் என்ற முடிவுடன் பிரம்மச்சாரிகளாகவே வாழ்ந்து வருகிறார்கள். காரணம் பெண் ஒருத்தி வீட்டுக்குள் வந்தால் அவள் ஒற்றுமையாக வாழும் ஐந்து பேரையும் பிரித்துவிடுவாள் என்று நினைக்கிறார்கள். அவர்களில் இரண்டு தம்பிகள் இரண்டு வேறு பெண்களைக் காதலிக்க அவரியாகது காதலுக்கு அஜித் பச்சைக்கொடி காட்டவேண்டும் என்றால் அவர் யாரிடமாவது காதல்வயப்படவேண்டும் என்று கோவில் வேலையாக ஊருக்கு வந்திருக்கும் தமன்னாவைக் கோர்த்துவிடுகிறார்கள். அஜித்தும் சகோக்களும் பொதுவாகவே வந்த சண்டைக்கு வாள் எடுப்பவர்கள். பக்கா அகிம்சாவாதியான தமன்னாவிடம் தான் சண்டை சச்சரவுக்குப் போகாதவன் என்று சொல்லி காதலிக்கிறார்.
தமன்னா ஊரில் இருக்கும் தன் தந்தை நாசரிடம் போனில் அழைத்து விஷயத்தைச் சொல்ல அவரும் அஜித்தை ஊருக்கு அழைத்து வரச்சொல்கிறார். நிற்க, இங்கே அஜித்தைப் பார்த்ததும் நாசர் அதிர்ச்சி அடைவார் என்றோ Flashback வரும் என்றோ நீங்கள் நினைத்தால் தவறு. ஊருக்குப் போகும்போதே ரயிலில் ரவுடி கும்பல் துரத்த தமன்னாவின் கண் முன்னே அனைவரையும் அடித்து துவம்சம் செய்கிறார். இடைவேளை.
ஊரில் இருக்கும் தமன்னாவின் வீட்டுக்கு இரண்டு நாட்களுக்குப்பின் சென்று தான் தன்னை மாற்றிக்கொள்வதாக உறுதியளிக்கிறார். ஒரு வாரம் தங்கியிருந்து திருவிழா முடிந்ததும் செல்லுமாறு நாசர் பணிக்க அண்ணன் தம்பிகள் ஐந்துபேரும் அங்கேயே தங்கிவிடுகிறார்கள். இந்த ஊருக்கும் சில ரவுடி கும்பல்கள் தேடிவர அவர்கள் துரத்துவது தன்னை அல்ல நாசரை குடும்பத்துடன் தீர்த்துக்கட்டுவதற்காக என்று தெரிந்துகொள்கிறார். அகிம்சாவாதியாக மாறியிருக்கும் அவர் எப்படி இந்தப் பிரச்னையை எதிர்கொள்கிறார், எப்படி நாசரின் குடும்பத்தைக் காப்பாற்றுகிறார் என்பது கிளைமாக்ஸ்.
படம் முழுவதும் அஜித் நிறைந்திருக்கிறார். அவர் கண்ணசைத்தாலோ காலரைத் தூக்கிவிட்டாலோ ரசிகர்கள் ஆரவாரம் செய்கின்றனர். காமெடி காட்சிகளாகட்டும், செண்டிமெண்ட் ஆக்சன் காட்சிகளாகட்டும், நடிப்பில் பின்னுகிறார். விதார்த் உட்பட நான்கு தம்பிகளுக்கும் ஒரே மாதிரியான பாத்திரப்படைப்பு. யாருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் எல்லாருக்கும் ஒரே மாதிரியான நடிப்பு ஸ்கோப் மட்டுமே. நாயகியாக வரும் தமன்னா காது வரை சிரிக்காமல் அடக்கி வாசித்திருக்கிறார், அதுவே போதும்.
காமெடிக்கு சந்தானம். கொஞ்ச நாட்களாய் தொய்வடைந்திருந்த கவுன்டர் காமெடி என்றென்றும் புன்னகையைத் தொடர்ந்து இதிலும் களைகட்டுகிறது. அஜீத் தவிர அனைத்து கதாபாத்திரங்களையும் உருட்டிப் புரட்டி எடுத்திருக்கிறார்.
நடிகர் தம்பி ராமையா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்:- தாங்கள் ஒரு தேசிய விருது பெற்ற ஆகச் சிறந்த நடிகர் என்பதை மறந்து இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளீர்கள். தங்களுக்கு இருக்கும் திறமைக்கு நல்ல பாத்திரப்படைப்பைத் தேர்ந்தெடுத்து நடித்தல் நலம். இதே மாதிரியான ஒன்றுமில்லாத காமெடியானாக நடித்தால் ஒற்றை விருதுடன் தங்கள் நடிப்பு வாழ்க்கை முடிந்துவிடும் அபாயம் இருக்கிறது.
இடைவேளை வரை கலகல காமெடி, சண்டை என்று போகும் படம் இடைவேளைக்குப்பின் குடும்ப செண்டிமெண்ட் ஆக்சன், அம்மா அப்பா, பாட்டி, குழந்தைகள் மற்றும் அரிவாள் என்று நாம் ஹரி படத்துக்கு வந்துவிட்டோமோ என்று எண்ண வைக்கிறது. ஏற்கனவே பாடல்கள் ஹிட் என்றாலும் படத்துக்காக வலிந்து திணிக்கப்பட்டது போல் இருக்கிறது. மசாலா படங்களுக்கே உரிய லாஜிக் மிஸ்டேக் இதிலும் நிறைய இருக்கிறது.
மொத்தத்தில் வீரம் - அஜித் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து, மற்றவர்களுக்கு மாஸ் Entertainment, குடும்பத்துடன் காணக்கூடிய திரைப்படம்.
This entry was posted by school paiyan, and is filed under
சினிமா,
சினிமா விமர்சனம்,
வீரம்
.You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
வணக்கம்
ReplyDeleteவீரம் படம் பற்றிய விமர்சனம் தங்களின் பார்வையில் மிக அற்புதமாக எழுதியுள்ளிர்கள் ... வாழ்த்துக்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
வணக்கம்
ReplyDeleteத.ம 2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
'தல' பொங்கல் என்று சொல்றீங்க...! தம்பி ராமையா அவர்களுக்கு நல்லதொரு வேண்டுகோள்...!
ReplyDeleteஅப்போ இது 'தல' பொங்கல்தான்............
ReplyDeleteஉங்கள் விமர்சனம் நன்று.
விமர்சனம் சூப்பர் அண்ணே,
ReplyDeleteஎன்ன இருந்தாலும் நம்ம தல போல வருமா.....
தல தல தான்.
Mass Entertainer...! mmm! parkalam...! naan today jilla parka poren s.pai!
ReplyDeleteஅடடே... தலைக்கு அடுத்தடுத்து இரண்டு படங்கள் ஹிட்டா...! இன்னிக்கி நைட் போகலாம்னு இருக்கேன். விமர்சனம் அருமையாக இருக்கு தம்பி !
ReplyDeleteதலைக்கு அடுத்த ஹிட்டா ??/ கலக்கல் தான்
ReplyDeleteதல பொங்கல் கொண்டாடிட வேண்டியதுதான்
ReplyDeletevimarsanam nalla irunthichu sir. padam parkka arvathai thundi irukku nandri sir.
ReplyDeleteசுவையான விமர்சனம்! நன்றி!
ReplyDeleteஅதற்குள்ளாக வீரம் விமர்சனம் - ஏங்க நீங்க ஆபிஸ் போறீங்களா இல்லையா? அன்னைக்கு என்னடான்னா, இரண்டாம் உலகம் ரிலீஸ் அன்றே போய் பார்த்தீர்கள். இன்றைக்கும்....
ReplyDeleteவிமர்சனம் நன்றாக இருக்கிறது. உடனே எழுதியமைக்கு நன்றி.
நல்ல அருமையாக எழுதியுள்ளீர்கள் அண்ணேன்......
ReplyDeleteஅடுத்து ஜில்லா எப்போது?
//ஆகச் சிறந்த நடிகர்// என்னது நீங்களுமா
ReplyDeleteவிமர்சனம் படம் பார்க்கத்தூண்டுகின்றது.
ReplyDeletethala intha moviela than en kannuku alaga theriuraru
ReplyDeleteavara kandipa sait adikavachi movie pakka poganum pa
சைட் அடிக்கவச்சி சினிமா பாக்க போகணுமா, ஒன்னும் புரியல தங்கச்சி..
Deleteஸ்பை - நல்ல விமர்சனம.. ஆனா ஒரு சின்ன வேண்டுகோள்.. கதை முழுவதையும் இங்கயே சொல்லிட்டா பார்க்கனும்னு நினைக்கிறவங்க படம் பார்க்கும் போது ஒரு ஆர்வம் இருக்காது.. கொஞ்சமா சொல்லிட்டு விட்டுடுங்க.. அதுவும் நீங்க முதல் ஆளா போட்டிருக்கீங்க.. நான் சொன்னத தப்பா எடுத்துக்காதீங்க.. :)
ReplyDeleteநல்லதொரு விமர்சனம். வெகு நாட்களுக்கு பிறகு வரிசையில் நின்று பார்த்த அனுபவம் இந்த படத்தைப் பார்க்க போகும் நிகழ்ந்தது.
ReplyDelete-------
தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்.
//நாயகியாக வரும் தமன்னா காது வரை சிரிக்காமல் அடக்கி வாசித்திருக்கிறார், அதுவே போதும்.//
ReplyDeleteரசித்தேன்.....
நிறைய வருடங்களுக்கு பிறகு அஜீத் அவர்களை வேட்டி,சட்டையில் பார்ப்பதே அழகாக இருந்தது...
ReplyDeletewww.writerkarthikeyan.blogspot.in