மீனாச்சி
Monday, April 28, 2014
Posted by கார்த்திக் சரவணன்
நான் இப்போது மீனாட்சியைத் தேடித்தான் போய்க்கொண்டிருக்கிறேன். தேடி என்றால் காணவில்லை என்று பொருள் கொள்ளவேண்டாம். அவள் இங்கேயே தான் இருக்கிறாள். எனக்காகவே காத்திருக்கிறாள். கொஞ்சமல்ல, பதினேழு வருடங்களாய்.
அவள் மீது எனக்கு எப்படி காதல் வந்தது என்பதெல்லாம் நினைவிலில்லை. அப்போது எனக்கு பதினெட்டு வயது, அவளுக்கு பதினாறு. கண்டோம், காதல் கொண்டோம். நான் தான் தயக்கத்துடன் அவளிடம் கூறினேன். ஒரு வாரம் கழித்து ஏற்றுக்கொண்டாள். அதன் பிறகு ஊரிலிருக்கும் பூங்கா, ஆற்றங்கரை, வாழைத்தோட்டம் என பல இடங்களில் சந்தித்துக்கொள்வோம்.
மனம் மயக்கும் மூணாறு - 5
Tuesday, April 22, 2014
Posted by கார்த்திக் சரவணன்
கடந்த பகுதிகள்
மூணாறை விட்டு வெளியேற மனமில்லை என்றாலும் தேனியிலிருந்து சென்னைக்கு பேருந்தில் டிக்கட்கள் முன்பதிவு செய்யப்பட்டிருந்ததால் புறப்பட வேண்டியதாயிற்று. இன்னொரு நாள் கூட தங்கியிருந்திருக்கலாம். தேனிக்கு இறங்கும் வழியில் லாக்ஹாட் கேப் (Lockhart Gap) என்ற இடம் அழகாக இருக்கும் என்பதால் அந்த இடம் நோக்கிப் புறப்பட்டோம். அந்த இடத்தை அடைந்தபோது ஏற்கனவே ஐந்தாறு கார்கள் அங்கு நின்றிருந்தன. பலதரப்பட்ட மக்களும் அங்கு நின்று போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார்கள். இதோ நாங்கள் எடுத்த படங்கள் உங்களுக்காக.
மனம் மயக்கும் மூணாறு - 4
Monday, April 21, 2014
Posted by கார்த்திக் சரவணன்
முந்தைய பகுதிகளைப் படிக்க
ஹோட்டல் ஹில்வியூவில் complimentary breakfast உண்டு என்பதால் அடுத்த நாள் காலை அங்கேயே சாப்பிட்டோம். ஹோட்டலின் முகப்பிலிருந்து நேர் கடைசியில் இருக்கிறது அவர்களது ரெஸ்டாரென்ட். காலை ஒன்பது மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என்பதால் எட்டே முக்காலுக்கே ஆஜராகியிருந்தோம். வெளிநாட்டவரும் சில வட இந்திய குடும்பங்களும் மட்டுமே குழுமியிருந்தனர். வலதுபுறம் பாத்திரங்களில் சுடச்சுட பதார்த்தங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. முதலில் கார்ன்ப்ளேக்ஸ்-உடன் பாலைக் கலந்து தொடங்கினோம். அடுத்து பிரெட், சென்னா, பட்டர் நான், என அடுத்தடுத்து சென்றது. கொதிக்கும் பாத்திரம் ஒன்றில் முட்டைகள் உருண்டுகொண்டிருக்க, அனைவரும் ஆளுக்கொன்றாய் அள்ளிக்கொண்டோம்.
மனம் மயக்கும் மூணாறு - 3
Friday, April 18, 2014
Posted by கார்த்திக் சரவணன்
முந்தைய பகுதிகளைப் படித்திராதவர்கள் படித்துவிட்டு வரவும்
டாப் ஸ்டேஷனிலிருந்து கீழே இறங்கியதும் முதலில் வரும் இடம் குண்டலா டேம். பிரதான சாலையிலிருந்து திரும்பி சுமார் அரை கிலோமீட்டர் உட்புறம் செல்லவேண்டும். உள்ளே நுழைவதற்கு காருக்கும் பார்க்கிங் கட்டணம் செலுத்தவேண்டும். உள்ளே சென்றதும் நம்மை வரவேற்கக் காத்திருக்கிறது பெரும் கூட்டம்.
மனம் மயக்கும் மூணாறு - 2
Thursday, April 17, 2014
Posted by கார்த்திக் சரவணன்
முந்தைய பகுதியைப் படித்திராதவர்கள் படித்துவிட்டு வரவும்.
அவர் அப்படிச் சொன்னதும் எங்களுக்கு அதிர்ச்சியாகத் தான் இருந்தது. இருந்தாலும் அவரே சொன்னார், "சார், உங்களுக்கு ரூம் ரெடி ஆகிறதுக்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். அதுவரைக்கும் இதோ, இந்த ரூம்ல fresh up ஆகிக்கோங்க" என்று கூறி ரிசப்ஷன் அருகிலேயே இருந்த அறை ஒன்றைக் காட்டினார். அது ஒரு சிறிய அறை. ஒரே ஒரு கட்டில், ஒரு டேபிள் சேர், லாக்கர், டிவி மட்டுமே இருந்தது. நேரத்தை வீணாக்காமல் அனைவரும் குளித்து ரெடியானால் நிறைய இடங்களை சுற்றிப் பார்க்க முடியும் என்பதால், "ம், சீக்கிரம்... ரெவ்வெண்டு பேரா போய் சோலிய முடிச்சிட்டு வாங்க" என்றேன் வடிவேலு ஸ்டைலில். அதற்கு நண்பர் இளங்கோவன், "ஒரே பாத்ரூம்ல ரெண்டுபேரா? சங்கடமா இருக்காது?" என்று அதே வடிவேலு ஸ்டைலில் சொல்ல, அறை முழுதும் சிரிப்பலையில் அதிர்ந்தது.
மனம் மயக்கும் மூணாறு - 1
Wednesday, April 16, 2014
Posted by கார்த்திக் சரவணன்
அலுவலக நண்பர்களுடன் வருடத்துக்கு ஒரு முறை இரண்டு நாட்கள் எங்காவது டூர் செல்வது வழக்கம். 2௦11-இல் கொடைக்கானலுக்கும் 2௦12-இல் ஆலப்புழைக்கும் சென்ற அனுபவங்கள் மறக்க முடியாதது. மூணாறு செல்லவேண்டுமென்று கடந்த வருடம் திட்டமிட்டு எதிர்பாராத / தவிர்க்க முடியாத சில காரணங்களால் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது. அதிலும் மூன்றாம் முறை மிகவும் கொடுமை - ரயில் டிக்கட்களையும் ஹோட்டல் புக்கிங்கையும் கடைசி நேரத்தில் கேன்சல் செய்தோம். இதனால் ஆறாயிரம் ரூபாய்க்கு மேல் நஷ்டம். ஆறு பேர் என்பதால் தலைக்கு ஆயிரம் ரூபாய் தான். அதனால் நான்காம் முறை பேருந்தில் பயணம் செய்வதென்று முடிவாயிற்று. நாங்கள் புறப்படுவதற்கு முந்தைய தினம் தான் பேருந்துக்கும், கார் மற்றும் தங்குவதற்கு ஹோட்டல் என முன்பதிவு செய்தோம்.
திருடா திருடா
Thursday, April 03, 2014
Posted by கார்த்திக் சரவணன்
"முருகா, எனக்கு வேலை கிடைச்சிருச்சுடா" மகிழ்ச்சி பொங்கச் சொன்னான் ரவி. இந்தச் செய்தி எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. என் முகம் மாறியதை அவன் கவனித்திருந்தான். "அப்போ இனிமே நீ வரமாட்டியா?" என்றேன். "டேய், வேண்டாம்டா நீயும் ஏதாவது வேலை தேடிக்கோ, அதுவரைக்கும் நான் உனக்கு சோறு போடுறேன். எவ்வளவு நாளானாலும் சரி. நான் பாத்துக்கறேன்" என்றான்.
ஆச்சி எனும் சகாப்தம்
Tuesday, April 01, 2014
Posted by கார்த்திக் சரவணன்
அந்த சனிக்கிழமை இரவு ஒன்பது முப்பது மணிக்கு அம்மாவிடமிருந்து போன். "கோமதி ஆச்சி போய்ட்டாங்க சரவணா" அம்மாவின் கண்களில் கண்ணீர் உகுத்திருப்பது குரலில் தெரிந்தது. "என்னம்மா ஆச்சு?" மீதி விவரங்களைக் கேட்டுக்கொண்டேன்.
யோசிக்கவேயில்லை. உடனடியாக கால் டாக்சிக்கு போன் செய்தேன், கோயம்பேடு சென்றாகவேண்டும். மனைவி குழந்தைகளுடன் அந்த நேரத்தில் அதுவும் பேருந்தில் செல்வது அசௌகர்யம் என்பதால் நான் மட்டும் பயணப்பட்டேன். விசாரித்ததில் ராஜபாளையத்துக்கு எந்தப் பேருந்தும் இல்லை, முதலாவதா நின்றுகொண்டிருந்த தனியார் பேருந்தில் மதுரைக்குப் புறப்பட்டேன்.
Subscribe to:
Posts (Atom)