நம்ம ராஜி அக்கா ஆரம்பிச்சு வச்சு அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில என் வரைக்கும் வந்திருச்சு.  இது எப்படின்னு பாத்தா முதல்ல அக்கா தமிழ்வாசி பிரகாஷை எழுத அழைக்க  அவர் அவரோட பதிவில நாஞ்சில் மனோவைக் கோர்த்து விட்டுட்டார்.  அவரோ கே.ஆர்.விஜயனை எழுதச்சொல்ல  விஜயன் செல்வி அக்காவை எழுதச்சொல்லிட்டார். இப்போ செல்வி அக்கா மலேசியால இருந்து சென்னைல இருக்கிற என்னை எழுதச்சொல்லி கூப்பிட்டிருக்காங்க. சரி ரொம்ப ஈசியான பதிவுதானே எழுதிட்டுப் போவோம்னு ஆரம்பிச்சிட்டேன்.அது 1994ஆம் வருஷம்.  நான் அப்போதான் பத்தாங்கிளாஸ் முடிச்சிருந்தேன்.  (உடனே நான் எந்த வருஷம் பிறந்திருப்பேன், என் வயசு என்னன்னு கணக்கு போடுவீங்களே, உங்களுக்கு இருக்கு).  வீட்டில சும்மா இருக்கக்கூடாதுங்கிறதுக்காக டைப்ரைட்டிங் கிளாஸ் போக ஆரம்பிச்சேன்.  நான் போன இன்ஸ்டிட்யூட்ல சுமார் முப்பது டைப்ரைட்டிங் மிஷின் இருக்கும்.  இன்ஸ்டிட்யூட் ஓனர்க்கு அங்க தனி ரூம் உண்டு.  அங்கதான் அது இருந்தது.  அதுதான், அதேதான்.


மேல படத்துல பாத்தீங்களே, அதே தான்.  அந்த ரூமைக் கடக்கும்போது திரும்பிப் பாக்காம போனதில்ல.  எப்ப பாத்தாலும் ஓனர் ஏதாவது அதில தட்டிக்கிட்டு இருப்பார்.  அவர் இல்லாத நேரத்துல அதுமேல வெள்ளையா பிளாஸ்டிக் கவர் போட்டு மூடியிருக்கும்.  டைப்ரைட்டிங் சொல்லிக்கொடுக்கிற அக்கா கிட்ட நான் கம்ப்யூட்டரை ஆன் பண்ணச்சொல்லிக் கேட்டிருக்கேன்.  "அட போடா, எனக்கே எப்படி ஆப்பரேட் பண்ணனும்னு தெரியாது, சார் கிட்ட ரொம்ப நாளா சொல்லித்தரச் சொல்லிக் கேட்டிட்டிருக்கேன்" அப்படின்னு என் வாய அடைச்சிட்டாங்க.  அந்தக் கம்ப்யூட்டரை ஆப்பரேட் செய்வது கனவாவே போய்ருச்சு.அதே வருஷம் நான் டிப்ளமா படிக்க சேர்ந்தேன்.  நான் படிச்ச கோர்ஸ்ல கடைசி வருஷம் (மூணாவது வருஷம் 1996-1997) மட்டும் கம்ப்யூட்டர் ஒரு சப்ஜெக்டா இருந்தது.  என்ன படிச்சேன்னு கேளுங்க. Wordstar, Lotus, BASIC, DBASE, COBOL.  அப்பவே வாத்தியார் சொன்னார், இந்த அஞ்சு சாப்ட்வேரும் உலகத்தையே கலக்கப்போகுது, எழுதி வச்சுக்கோங்கன்னு.  எக்சாமுக்குன்னு இதில வர்ற ஷார்ட்கட், கமான்ட் எல்லாத்தையும் மனப்பாடம் செஞ்சு வச்சதுண்டு.அந்த வருஷம் தான், நான் முதல்முறையா கம்ப்யூட்டரை தொட்டுப்பாத்த வருஷம்.   Wordstar, Lotus, BASIC இந்த மூணும் ரொம்ப ஈசியா இருந்தது.  DBASE ரொம்ப மூளைய செலவழிக்க வேண்டியிருந்தது.  இருந்தாலும் சவாலா இருந்ததால ரொம்ப பிடிச்சிருந்தது. COBOL மட்டும் தான், ஒன்றரை மைல் நீளத்துக்கு புரோகிராம் இருக்கும். ஒன்னும் புரியாது, நாமளா புதுசா எழுதினாலும் நூறு மிஸ்டேக் சொல்லும்.  அதனால அது மட்டும் பாகக்காயா கசந்தது.1997, நான் டிப்ளமா முடிக்கிறதுக்கு கொஞ்சம் முன்னாடி தான் Windows 95 வந்தது.  ஒரே ஒரு கம்ப்யூட்டர் வச்சு எங்க வாத்தியார் சிடி போட்டு அந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் எப்படின்னு அவருக்குத் தெரிஞ்ச வரையில் கத்துக்கொடுத்தார்.  அப்ப ஒண்ணு சொன்னார், "எதிர்காலத்தில காம்பாக்ட் டிஸ்க் ஒரு பெரிய புரட்சியே செய்யப்போகுது"ன்னு.அவ்வளவுதாங்க, என் முதல் கணினி அனுபவம்.  நாமளும் ஒரு நாலு பேர கோர்த்துவிட்டுப் போவோம். இல்லேன்னா ஆரம்பிச்சு வச்ச அக்காவுக்கு கோவம் வந்திரும்.வாங்க வாங்க


நன்றி.