காதல் போயின் (சிறுகதை)
Tuesday, December 16, 2014
Posted by கார்த்திக் சரவணன்
அவள் பெயர் சந்தியா. எனக்கு எதிர் பிளாட்டில்தான் குடியிருக்கிறாள். நான் அலுவலகம் போகும்போதோ வரும்போதோ அவளைக் காண்பதுண்டு. என்னைப் பார்த்தால் அவள், "ஹாய்" என்பாள். நானும் பதிலுக்கு ஹலோ என்ற ஒற்றை வார்த்தையை உதிர்த்துவிடுவேன் அல்லது ஒரு சிறு புன்னகையுடன் கடந்துவிடுவேன். சில நேரங்களில் நான் வீட்டுக்கு வரும்போது அம்மாவுடன் பேசிக்கொண்டிருப்பாள். பை த பை என் பெயர் அருண்.
ஸ்கூல் பையன் எனும் நான்
Thursday, December 11, 2014
Posted by கார்த்திக் சரவணன்
ஸ்கூல் பையன்
என்ன நினைத்து இந்தப் பெயர் வைத்தேன் என்று தெரியவில்லை. வலைப்பதிவு
தொடங்கியபோது என் மகன் படத்தை முன்வைத்து ஸ்கூல் பையன் என்று பெயரிட்டேன். மற்ற
வலைத்தளங்களைப் படித்து அதே பெயரில் கருத்துக்களை சொல்ல, அந்தப் பெயரே
நிலைத்துவிட்டது.
முகநூல் பக்கம் வந்தபோது வலைப்பதிவர்களுக்குத் தெரியும் விதமாக ஸ்கூல்
பையன் என்கிற பெயரிலேயே நட்பு அழைப்புக்கள் விடுக்கத் தொடங்கினேன். நம்
வலைப்பதிவர்களும் என்னை அடையாளம் கண்டு நட்பு அழைப்புகளை ஏற்றுக்கொண்டனர்.
நிற்க.... வலைப்பதிவுகளைப் பொறுத்தவரையில் இம்மாதிரியான பெயர்கள்
ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஆனால் முகநூலிலோ இதை fake id என்கின்றனர். இருக்கட்டும்.
ஆனால் நெருங்கிய நட்பு வட்டத்தில் வைத்துக்கொண்டு சிலருடைய பதிவுகளைப்
படித்துவருகிறேன். அவர்களில் சிலர் என்னை நட்பு வட்டத்திலிருந்து
நீக்கியிருக்கிறார்கள். தெரியாதவர்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. ஆனால் பல
வருடங்களாக நான் தொடர்ந்து வரும் சதீஷ்குமார் ஜோதிடர் மற்றும் அகநாழிகை பொன் வாசுதேவன்
கூட இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள் என்பது தான் கொஞ்சம் வருத்தப்படச்
செய்கிறது.
Unfriend செய்வது ஒருபுறம் இருக்க, நான் விடுக்கும் சிலபல நட்பு
அழைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படாமலே இருக்கின்றன. சமீபத்திய உதாரணம் திரு.பெ.கருணாகரன்
அவர்கள். பேக் ஐடி என்று நினைத்து நட்பு அழைப்பை ஏற்றுக்கொள்ளாமலே விட்டிருந்தார்.
ஸ்கூல் பையன் என்ற பெயரில் இயங்குவதால் பல முறை கேலி கிண்டலுக்கு
ஆளானதுண்டு. பொதுவாக அதையெல்லாம் கண்டுகொள்ளாத எனக்கு நெருக்கமான நண்பர்களே
கிண்டல் செய்யும்போது கொஞ்சமே கொஞ்சம் உறுத்துகிறது. பிடித்த பத்து புத்தகங்களைப்
பற்றிய தொடர்பதிவு வந்தபோது கூட நெருங்கிய நண்பர் என்னை tag செய்து கிண்டல்
செய்திருந்தார். அதைத் தொடர்ந்து வந்திருந்த பின்னூட்டங்களிலும் நண்பர்கள் கிண்டல்
செய்திருந்தனர். பரவாயில்லை. ஸ்க்ரீன்ஷாட் காண்பித்து அவர்களது மனதைப் புண்படுத்த
விரும்பவில்லை.
சில நாட்களுக்கு முன் என் மனைவிக்கு ஒரு முகநூல் கணக்கு தொடங்கிக்
கொடுத்தேன். அடிப்படைத் தகவல்களை உள்ளீடு செய்யும்போது “Married to” என்ற
பகுதியில் ஸ்கூல் பையன்னா எழுதறது என்று அவள் கேட்டபோது கொஞ்சம் ஜெர்க் ஆனேன். J
சீரியசான சில இடங்களில் பின்னூட்டம் இடுவதில் சிக்கல்கள் இருக்கின்றன.
பல இடங்களில் இறங்கி விளையாட முடியவில்லை. ஓரமாக நின்று வேடிக்கை மட்டுமே
பார்க்கமுடிகிறது. இரண்டு வருடங்களுக்கு முன் தமிழ் அமுதன் அவர்களது பதிவுக்கு
பின்னூட்டம் எழுதியதில் பின்னால் வந்த பெண்மணி ஒருவர் “முட்டாப்பயலே, ஒழுங்கா
படிச்சிட்டு வா” என்று எனக்கு பதில் கொடுத்திருந்தார்.
சொந்தப்பெயர் இருக்க எதற்கு புனைபெயரில்(!!) எழுதவேண்டும்? இதுபற்றிய
ஒரு தனிப்பட்ட விவாதத்தில் நண்பர்கள் சிலர் ஸ்கூல் பையன் என்ற பெயர்
நிலைத்துவிட்டது, இனி மாற்றவேண்டியதில்லை என்கின்றனர். ஆனால் பின்னாளில் நான்
நடிக்கப்போகும், உதவி இயக்குனராக வேலை செய்யப்போகும் சில குறும்படங்களில் என்ன
பெயர் வைப்பது? இவ்வளவு ஏன், நானே ஒரு புத்தகம் எழுதினால் என்ன பெயரில் எழுதுவது?
இவ்வாறாக சில கேள்விகள் மனதைக் குடைய சொந்தப் பெயரிலேயே எழுதுவது
என்று தீர்மானித்துவிட்டேன். இது சொந்தப் பெயரிலேயே எழுதலாமா வேண்டாமா என்ற
விவாதத்துக்காக இல்லை. ஆரம்பத்திலேயே செய்திருக்கவேண்டும்.
Profile-இல் பெயர் மாற்றுவதற்காக ஒரு பதிவா என்று கேட்காதீர்கள்.
சத்தமில்லாமல் பெயர் மாற்றிய பதிவர்களால் பலமுறை குழம்பியிருக்கிறேன். இதே நிலை
என் பதிவுகளைப் படிப்பவர்களுக்கு வரவேண்டாம்.
ஆக, சரவணகார்த்திகேயன் என்ற சொந்தப் பெயரைக் கொஞ்சம் மாற்றி
எழுத்துலகுக்காக “கார்த்திக் சரவணன்” என்று மாற்றிக்கொள்கிறேன். நாளை முதல் பெயர்
மாற்றம் செய்கிறேன். மனதில் ஏற்றிக்கொள்ளுங்கள். அல்லது மூன்று முறை சொல்லுங்கள்:
கார்த்திக் சரவணன்
கார்த்திக் சரவணன்
கார்த்திக் சரவணன்
Subscribe to:
Posts (Atom)