ஷர்மிலி மிஸ்
Monday, July 20, 2015
Posted by கார்த்திக் சரவணன்
இது தான் அவருடைய பெயர். வயசு முப்பதுக்குள் இருக்கும். மகளுக்கு
கிளாஸ் டீச்சர். எல்.கே.ஜி. B செக்சன் என்று பதினைந்து நாட்களுக்கு முன்னர் பணம்
கட்டியபோதே சொன்னார்கள்.
அவரை முதன்முதலில் சந்தித்தது இன்னும் நினைவில் இருக்கிறது. மகளை
முதல் நாள் பள்ளிக்கு விடச்சென்ற அதே நாள். வகுப்புக்கு வெளியே நின்று பென்சிலால்
பெயர்களை டிக் செய்துகொண்டே ஒவ்வொருவராய் உள்ளே அனுமதித்துக்கொண்டிருந்தார். என்
முறை வந்தபோது, “கற்பகாஸ்ரீ” என்றேன். “ஆர்.கற்பகாஸ்ரீ?” என்றார். “இல்லை,
எஸ்.கற்பகாஸ்ரீ” என்றேன். “ஓ, ஆபிஸ்ல இனிஷியலை தப்பா எழுதிருக்காங்க. எஸ் தானே”
என்று திருத்திக்கொண்டார்.
மகனையும் மகளையும் பள்ளியில் கொண்டுபோய் விடுவது மட்டுமே என்னால்
சாத்தியம். மற்றபடி மாலையில் வீட்டுக்கு அழைத்து வருவது, பள்ளியில் நடக்கும்
விஷயங்களைக் கேட்டறிவது எல்லாம் என் மனைவி தான். என்றைக்காவது அலுவலகத்துக்கு
விடுப்பு எடுத்திருந்தால் மட்டும் அந்த வேலைகள் எனக்கானது. சிவகாமி, வித்யா, சுந்தரி,
இன்னும் சிலர் என் மகன் / மகள் படிக்கும் வகுப்பில் படிக்கும் குழந்தைகளின்
பெற்றோர் என் மனைவிக்கு தோழியர். தினமும் பள்ளி முடிந்து குழந்தைகள் வரும் வரை சில
நிமிடங்கள் இவர்களது அரட்டை நடக்கும். அவ்வப்போது பாடங்கள் பற்றிய சந்தேகங்களும் விளக்கங்களும்
அலைபேசி வாயிலாக பரிமாறப்படும்.
நான் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக்கொண்டிருக்கும் நாட்களில் நானே
தான் இருவரையும் வீட்டுக்கு அழைத்துவருவேன். பத்து நிமிடங்களுக்கு முன்னதாகப்
போய்விடுவேன். காத்திருக்கும் அந்த நேரத்தில் என்னையே சில கண்கள் குறுகுறுவெனப்
பார்ப்பதுபோல் இருக்கும். ஒருநாள் அவர்கள் பேசுவது கூட எனக்குக் கேட்டுவிட்டது, “ஏய்,
இவர்தான்டி பிரபா வீட்டுக்காரர், அப்படியா? நான் கூட யாரோன்னு நினைச்சேன்”. நான்
இங்கே எழுத்து வாயிலாக அதிகம் பேசுவேனே தவிர நேரில் பூஜ்யம். புதியவர்களிடம் அறிமுகம்
இல்லாதவர்களிடம் பேசுவதற்கு அவ்வளவு தயங்குவேன். பழகிவிட்டால் சகஜமாகிவிடுவேன்.
சிறு வயதிலிருந்தே இப்படித்தான் என்பதால் மாற்றிக்கொள்ள அதிகம் முயற்சித்ததில்லை.
ஓவர் டு ஷர்மிலி மிஸ். கடந்த செவ்வாய்க்கிழமை என்று நினைவு.
அலுவலகத்திலிருந்து வந்ததும் என் மகள் என்னிடம் ஓடிவந்து, “அப்பா, என்னை மிஸ்
அடிச்சிட்டாங்க” என்றாள். எனக்கோ கடும் கோபம். “ஏன் அடிச்சாங்க?” என்றேன். என்
மனைவியோ, “இவ என்ன செஞ்சான்னு கேளுங்க” என்றாள். “என்ன செஞ்சே?” என்றேன். “கிளாஸ்ல
இடம் மாறி உக்காந்தேன்பா, அதுக்கு அடிச்சிட்டாங்க” என்றாள்.
இடம் மாறி அமர்ந்ததற்காகவா அடித்தார்கள்? இதெல்லாம் ஒரு காரணமா?
எனக்கு கோபம் தலைக்கேறியது. என் மகள் பிறந்ததிலிருந்து எவ்வளவோ சேட்டைகள் செய்திருக்கிறாள்.
அடம் பிடித்து எங்களைத் தொந்தரவு செய்திருக்கிறாள். எல்லாவற்றுக்கும் பொறுமையாகவே
போயிருக்கிறேன். ஒரு நாள் கூட அவளைக் கைநீட்டி அடித்ததில்லை. ஸ்கூல் மிஸ், அதுவும்
ரெண்டு மாசம் கூட ஆகலை, அதுக்குள்ளே அவருக்கு கைநீட்ட தைரியம் வந்துவிட்டதோ? அவர்
அடித்தபோது என் மகள் என்ன நினைத்திருப்பாள்? இதுக்குத்தான் அம்மா அப்பா நம்மை
ஸ்கூலில் விடுறாங்க போல என்று நினைத்திருக்க மாட்டாள்?
என் முகத்தில் தெரிந்த கோபத்தை என் மனைவி புரிந்துகொண்டாள். “நீங்க
ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகறீங்க? லேசா தான் அடிச்சாங்களாம். கிளாஸ் விட்டு வெளிய
வந்தவுடனேயே பாப்பா சொல்லிட்டா” என்றாள். “நீ மிஸ் கிட்ட கேக்கலையா?” என்றேன். “அவ
சொன்னவுடனேயே மிஸ் நாக்கை கடிச்சிக்கிட்டாங்க, இடம் மாறி உக்காந்ததால லேசா
கன்னத்தில தட்டினேன், அதை அடிச்சேன்னு சொல்றான்னு சொன்னாங்க” என்றாள். “அவங்க
அப்பா கிட்ட சொல்லிராதீங்க-ன்னும் சொன்னாங்க” என்றாள் முத்தாய்ப்பாக.
எனக்கு இன்னும் டென்ஷன் தலைக்கேறியது. “செய்றதையும் செஞ்சிட்டு
என்கிட்டே சொல்லாதீங்கன்னு வேற சொன்னாங்களா? நாளைக்கே என்னன்னு கேக்கறேன்”
என்றேன். மன சமாதானம் ஆகவில்லை. மனைவியிடம் கடிந்துகொண்டேன், “நீ கேக்க
வேண்டியதுதானே, என் பிள்ளையை அடிக்கிற வேலையெல்லாம் வேண்டாம்னு?”.
அடுத்த நாள் புதன்கிழமையன்று காலை நேரத்தோடேயே பள்ளிக்குச் சென்றுவிட்டேன்.
ஷர்மிலி மிஸ் சரியாக எட்டரை மணிக்குத்தான் வகுப்புக்கு வருவார். மகளை
வகுப்புக்குள் அமரவைத்துவிட்டு வெளியே காத்திருந்தேன். நேரம் சரியாக எட்டரை. வேறு
ஒரு மிஸ் வந்தார். “நீங்க போங்க நான் பாத்துக்கறேன்” என்றார். “ஷர்மிலி மிஸ்”
என்றேன். “அவங்க லீவு” என்றார். கொஞ்சம் ஏமாற்றத்துடன் திரும்பினேன். அடுத்த நாள்
வியாழக்கிழமை இதேபோல் நேரத்தோடு சென்று வகுப்புக்கு வெளியே காத்திருந்தேன்.
முந்தைய தினம் வந்திருந்த அதே மிஸ். அதே கேள்வி, அதே பதில். ஒருவேளை நான் கோபமாக
இருக்கிறேன் என்று தெரிந்துகொண்டு பள்ளிக்கு விடுப்பு எடுத்துவிட்டாரோ மனம்
சந்தேகப்பட்டது. இப்படியே போனால் என் மனதிலிருக்கும் கோபம் தணிந்துவிடும்,
விடக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன்.
அடுத்த நாள், வெள்ளிக்கிழமை – அன்றைக்கும் ஷர்மிலி மிஸ் வரவில்லை.
இந்த முறை கேட்டேவிட்டேன். “அவங்கப்பா இறந்துட்டாங்களாம்” என்ற பதிலில்
திடுக்கிட்டேன். வெகு காலமாக படுத்த படுக்கையாக இருந்திருக்கிறார், செவ்வாயன்று
இரவு உயிர் பிரிந்துவிட்டது. திங்கட்கிழமை வந்தாலும் வருவாங்க என்றார்கள்.
இதோ, காத்திருக்கிறேன். என் மகளை ஏன் அடித்தார் என்று சண்டை
போடுவதற்காக அல்ல, அவரது தந்தை இறந்த துக்கம் கேட்பதற்காக.
This entry was posted by school paiyan, and is filed under
அனுபவம்,
புனைவு
.You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
பாவம் - கோபத்தையும் சொன்னேன்...
ReplyDeleteஆமாம் டிடி..
Deleteகுழந்தையை அடித்து விட்டார் என்று கோபம்..... கடைசியில் முடித்த விதம் நன்று. பாவம் ஷர்மிலி மிஸ்......
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா...
Deleteஎல்.கே.ஜி.படிக்கிற குழந்தைங்க பூ மாதிரி அவ்ளோ அழகா இருக்கும் அடிக்க யாருக்கும் மனசு வராது ஸ்.பை. அவங்க சொன்ன மாதிரி நிச்சயம் மெதுவாத்தான் தட்டியிருப்பாங்க. இறுதிப் பகுதிக்கு வந்ததும் மனசு கனமாயிட்டது. நிச்சயம் பார்த்து ஆறுதல் சொல்.
ReplyDeleteமெதுவா தட்டியது தான்... கண்டிப்பாக சொல்கிறேன் வாத்தியாரே...
DeleteMudivu Arumai.
ReplyDeleteநன்றி கில்லர்ஜி... நேற்றைய தினம் தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி....
Deleteபாசம் மிகுந்த அப்பா, மனிதநேயமிக்க மனிதர் கார்த்திக்சரவணன்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா...
Deleteநல்ல அனுபவ விவரணம். செல்ல மகளை மெலிதாகத் தட்டியதற்கே கோபம்...ஆனால் இறுதியில் உங்களுள் இருக்கும் அந்த மனிதம் எட்டிப் பார்த்துவிட்டது பாருங்கள்!....
ReplyDeleteஹா ஹா... ஆமாம்... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....
Deleteநல்ல செம ஃப்ளோவா போயிட்டு இருக்கும் போது டக்க்னு முடிஞ்சா மாதிரி ஒரு பீல். ஒருவேள இதற்கு இவ்ளோ போதும்னு நினைச்சிட்டீங்களோ.. ஆனா நல்ல ஃபிரஷ் ரைட்டிங்.. கீப் இட் அப்...
ReplyDeleteமுடிக்கணும்னு நினைச்சு முடிக்கலை... இதுக்கு மேல எழுத வரலை....
Deleteithu oru nalla ((S) paiyanin) pathivu. vazhthukkal .
ReplyDeleteநன்றிகள் வாழ்த்துக்கும் வரவுக்கும்....
Deleteமகளை அடித்தால் கோபம் வரத்தான் செய்யும்! ஆனால் நம் பிள்ளைகள் செய்யும் குறும்புகள் இருக்கிறதே! இவற்றை சமாளிப்பது எவ்வளவு கடினம். இது மாதிரி கிண்டர் கார்டன் குழந்தைகளுக்கு ஆசிரியராக இருப்பதற்கு மகா பொறுமை வேண்டும். குழந்தையுடன் அதிகம் கொஞ்சினாலும் உரிமை எடுத்துக் கொள்ளும். கண்டிப்பு காட்டினாலும் வெறுத்துவிடும். ஓர் மிதமான அணுகுமுறை அவசியம். நிச்சயம் அந்த மிஸ் உங்கள் குழந்தையை அடித்திருக்க மாட்டார். லேசாக அவர் சொன்னது போல தட்டியிருக்கலாம். அதுவும் அவர் பொறுமையை மீறி ஏதோ டென்சனில் செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அவரது தந்தையின் இறப்பினால் பள்ளி வரவில்லை என்பது எதிர்பாராத ஓர் திருப்பம். நல்லதொரு பதிவு! நன்றி!
ReplyDeleteநிச்சயம் அவர் அடிக்கவில்லை, லேசாகத் தட்டியது தான்...
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ் அண்ணா....
கோபமாகவும் வருகிறது, மனதிற்கு பாரமாகவும் இருக்கிறது, எதுக்கும் அப்பாவின் துஷ்டி கேட்டு விடுங்கள்.
ReplyDeleteகண்டிப்பாக அண்ணே...
Deleteபதிவை படிக்க ஆரம்பிக்கும் போது கிண்டல் செய்து கருத்து இட வேண்டும் என நினைத்தேன் ஆனால் படித்து முடிக்கும் போது நானும் மாறிவிட்டேன் சொல்லி சென்ற விதம் அருமை.. சீனுவே பாராட்டிய பிறகு வேற என்ன வேண்டும் உங்களுக்கு...
ReplyDeleteநல்ல வேளையாக உங்களது கிண்டலிலிருந்து தப்பினேன்... சீனுவின் பாராட்டு மகிழ்ச்சியளிக்கிறது.... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மதுரைத்தமிழன்....
Deleteadiththuvittaar endru padiththavudan enakke kovama vandhuduchu. lesa thattiyirundhaalum thappu dhan, vaayila solla vendiyadhudhane..
ReplyDeleteaana indha soozhalil onnum solla mudiyaadhe..
ஆமாம், எதுவும் சொல்ல முடியவில்லை... நன்றி சகோ...
Deleteஎன்னுடைய ட்விஸ்ட் :-)
Deletehttp://thaenmaduratamil.blogspot.com/2015/07/sharmili-miss-short-story.html
இதில் உங்கள் மனிதாபிமானமும் விஷயத்தைச் சொன்ன விதமும் அழகாக இருந்த்தது
ReplyDeleteநன்றி அம்மா....
Deleteகோபத்தின் முடிவை பார்க்க வந்தால் சோகம் முடிவாகிப்போச்சு! டீச்சர் நிலை பல நேரத்தில் பலருக்கு புரியாத புதிர்தான்! அருமையான கதை வாசித்து ரசித்தேன்.
ReplyDeleteநன்றி நேசன்...
Deleteஅனுபவம் கற்பனை கலந்து அழகாக வந்துள்ளது. அருமையான நடை . கலக்குங்க சரவணன்
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி முரளி அண்ணா....
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇந்த பதிவிற்கு இன்னொரு கற்பனை முடிவை பின்னூட்டத்தில் எழுத ஆரம்பித்தேன் நீளமாக ஆகிவிட்டதால் என்னுடைய வலைப்பதிவில் எழுதி இருக்கிறேன்.
ReplyDelete//அடுத்த நாள் புதன்கிழமையன்று காலை நேரத்தோடேயே பள்ளிக்குச் சென்றுவிட்டேன்// என்ற வரிகளுக்குப் பின் தொடர்ந்து எனது பதிவை வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இணைப்பு
ஷர்மிலி மிஸ் என் பொண்ண ஏன் அடிச்சீங்க
ஹையோ... இது இன்னும் சூப்பர்.... குறும்பட ஆர்வலர்கள் எடுப்பதாக இருந்தால் என் மகளையே நடிக்க வைக்கிறேன்... (ஹப்பாடா, துண்டு போட்டாச்சு)
Deleteஹாஹாஹா!! ஏற்கனவே பையன் ஒரு ஷார்ட் பிலிம் மில் கூட நடித்த அத்தனை பேரையும் left ல அடிக்கிற மாதிரி perform பண்ணி கலக்கினாரு. இப்போ பொண்ணா!!! கலைகுடும்பம்:))))
Deleteநல்ல மனங்களில் இதுபோன்ற மாற்றங்கள் எதிர்பார்க்கக் கூடியதுதான். அருமை.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம் சார்...
Deleteகோபம் தொடக்கத்தில்! முடிவு துக்கத்தில்! நடை நன்று!
ReplyDeleteநன்றி ஐயா...
Deleteஅட கோபம் வரத்தானே செய்யும் அப்பாவுக்கு, ஆனால் அவங்களும் செல்லமா தான் கன்னத்தில தட்டி இருப்பாங்க போலும். சுவாரஸ்யமாக கொண்டு சென்றீர்கள். வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteஆமாம், லேசாகத் தட்டியது தான்... வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி...
Deleteநான் முதலில் கணேஷ் அவர்கள் பதிவை படித்துவிட்டு இங்கு வந்தேன். ஆதலால் இங்கும் கிண்டலாக பதில் சொல்ல நினைத்தேன் .
ReplyDeleteஅப்பாவின் முகத்தை கணேஷ் சொன்னது போல அமுல்பேபியாக நினைத்த போது சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
நீங்கள் கிண்டல் செய்யலாம்... உங்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது... நன்றி சகோதரி...
Deleteஅஹா அருமை கார்த்திக். !
ReplyDeleteஅருமை முரளி ஜி
& அருமை கணேஷ் !!!!!!!!!!!!!!!!!!
நன்றி
Deleteநன்றி
நன்றி
தேனம்மை அக்கா....
வணக்கம் அண்ணே ....
ReplyDeleteகதைக்குள் செல்லுமுன் சில விசயங்களை சொல்லிவிட வேண்டும் என்று நினைக்கிறேன், ஆம், ஆரம்பத்தில் இருந்த சிறிய நடுக்கம் தங்களது எழுத்தில் துளியுமில்லை! கூடவே நல்ல முதிர்ச்சி தெரிகிறது. வாசகனை எழுத்தோடு மிக எளிதாக எழுத்தோடு ஒன்ற வைத்துவிடும் வல்லமை இருக்கிறது. தேவையற்ற சொற்களின் நீட்சிகளை குறைத்து பளிச்சென்ற நகர்வு மனதிற்கு நெருக்கமாய் இருக்கிறது.
இனி ஆறுமாசத்துக்கு ஒரு பதிவு என்றில்லாமல் தொடர்ந்து எழுதுங்கள், நேரமில்லை என்று சமாளிப்பதை விட்டுவிடுங்கள் அண்ணே!
//இதோ, காத்திருக்கிறேன். என் மகளை ஏன் அடித்தார் என்று சண்டை போடுவதற்காக அல்ல, அவரது தந்தை இறந்த துக்கம் கேட்பதற்காக.//
இந்த வரிகள் தேவையில்லை என்று தோன்றுகிறது அண்ணே, இந்த வரிகள் இல்லாமல் படித்தாலும் சொல்ல வரும் பீலிங் புரிந்துவிடுகிறது ஆகையால் வேண்டாம் என்று எனக்கு தோன்றுகிறது. மீண்டுமொரு கதையில் சந்திப்போம் அண்ணே
முதலில் பாராட்டுக்கு நன்றி அரசன்... இன்னும் தன்னம்பிக்கை தரும் வார்த்தைகள் கேட்பதில் மகிழ்ச்சி.
Deleteவாரம் ஒன்று என்ற கணக்கில் முயற்சிக்கிறேன்...
//இந்த வரிகள் தேவையில்லை என்று தோன்றுகிறது அண்ணே, இந்த வரிகள் இல்லாமல் படித்தாலும் சொல்ல வரும் பீலிங் புரிந்துவிடுகிறது ஆகையால் வேண்டாம் என்று எனக்கு தோன்றுகிறது.//
இருக்கலாம்... அடுத்த பதிவில் வேறு மாதிரி முயற்சிக்கிறேன்....
சில நேரம் இப்படித் தான் நாம நினைக்கிறது ஒன்னு, நடக்கறது ஒன்னு ன்னு ஆகிடுது! mood shift மிக இயல்பாய், மனதை பாதிப்பதாய் இருக்கிறது சகோ! நல்ல நடை. வாழ்த்துகள்!
ReplyDeleteஆமாம் சகோ, வாழ்த்துக்கு மிக்க நன்றி...
Deleteஇதுக்கு நானும் ஒரு தொடர் பதிவு எழுதி இருக்கிறேன் சகோ. நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள். லிங்க் http://makizhnirai.blogspot.com/2015/07/sharmili-miss-relay-short-story.html
Deleteஇதோ இப்பவே வர்றேன்...
Deleteலேசாகத் தட்டினாலும் தப்பு தான். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத டீச்சர் வீட்டு துக்கத்தில் பிள்ளைக்கான பரிவு மறைவது ஆச்சரியம் என்றாலும் சற்று மனிதம்.
ReplyDeleteகுழந்தைகளுக்கு தட்டும் அடியும் புரியும்.
நன்றி அப்பாதுரை சார்....
Deleteசெம்ம டச்சிங்... அருமை தம்பி..
ReplyDeleteநன்றி மணி அண்ணே....
Deleteஒரு அப்பாவின் கோபத்தை இன்னொரு அப்பா தவிர்த்திருக்கிறார்....
ReplyDeleteஅடடே, இது இதுவரை யாரும் சொல்லாத கருத்து... நன்றி எழில் மேடம்...
Deleteவாவ்.. அருமையான Ending. இரசித்தேன். பிரமாதம். எழுத்தின் வீச்சு இன்னும் ஆழமாகியிருக்கிறது. தொடருங்கள்.
ReplyDeleteநன்றி ஆவி...
Deleteஇதோ என்னோட வெர்ஷன்.. http://www.kovaiaavee.com/2015/07/blog-post.html
ReplyDeleteஹா ஹா... செம ஓட்டு...
Deleteஅப்பாவின் யதார்த்தமான உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள்.
ReplyDeleteபொண்ணு என்ன செய்தான்னு கேளுங்கள் அம்மாவின் யதார்த்தம்.
கோபம் குறையும் காலத்தின் யதார்த்தம்.
அருமையான நடையில் செல்கிறது உங்கள் எழுத்து. அங்கு அங்கு இதன் தொடர்ச்சியை படித்து இங்கு வர காலதாமதம் ஆகிவிட்டது. நன்றி சகோ.
தாமதம் ஒன்றுமில்லை... வந்து கருத்திட்டீர்களே..... அதுவே போதும்... நன்றி....
Deleteஅருமையான கதை! யதார்த்தம். அப்போல்லாம் அதாவது நாங்க ஸ்கூல்லே படிக்கும் காலங்களிலே வாத்தியார்களிடம் பெற்றோர் அடிச்சுக் கண்டிங்கனு சொல்லுவாங்க. அதையும் நினைச்சுக் கொண்டு, இதையும் படிச்சேன். பாடம் எழுதலைனா வீட்டுக்கு அனுப்பாதீங்க! எழுதி முடிக்கும் வரை ஸ்கூல்லே இருக்கட்டும்னும் சொல்வாங்க! அது அந்தக் காலம்! :)
ReplyDeleteரொம்பச் சீக்கிரமா வந்துட்டேன் இல்ல? இப்படி ஒரு தொடர் ஓடுவதே தெரியாது. துளசிதரன் பதிவுகள் மூலம் தெரிந்து கொண்டேன். :)
ReplyDeleteஎல்லாருக்கும் பின்னூட்டம் தந்தாச்சு ,,,முக்கியமான கதை நாயகனுக்கு பின்னூட்டமளிக்கல்லைன்னா சரியா இருக்காது .லேட்டானாலும் கமெண்ட் போட்டாச் ..எனக்கொரு ஆசை .அவங்கவங்க கதைக்கு தொடர் பதிவா எழுதினவங்களே ஹீரோவா நடிக்கணும் :) :) .. ...
ReplyDelete" என்னம்மா இப்படி பண்றிங்களேம்மா?" - மாதிரி " மிஸ் அடிச்சிட்டாங்க.." வும் பேமஸா ஆகிடுச்சு... வெளிய வாங்க மொத்த மீடியாவும் உங்கள பேட்டி எடுக்க காத்திட்டிருக்கு....
ReplyDelete