பதிவர் திருவிழாவில் நான் பாடும் பாடல்
Tuesday, August 20, 2013
Posted by கார்த்திக் சரவணன்
உங்களுக்குத் தெரியாத ஒரு விஷயம், அது ரகசியம் இல்லை. ரகசியம் காக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. நான் எவ்வளவு நன்றாகப் பாடுவேன் என்று யாருக்கும் தெரியாது.
ரத்தம் பார்க்கின் - 4 (நிறைவுப் பகுதி)
Friday, August 16, 2013
Posted by கார்த்திக் சரவணன்
விழிப்பு வந்தபோது நான் எங்கிருக்கிருக்கிறேன் என்பதை மறந்துபோனேன். ஓ, குமாரின் வீடு. கைவலி அதிகமாக இருந்தது. மாத்திரைகளின் வீரியம் குறைந்திருக்கும் என்று நினைக்கிறேன். மணி பார்த்தேன், மாலை ஐந்து ஆகியிருந்தது. காலை எட்டு மணிக்கு நடந்த சம்பவம். டி.வி.யில் செய்தி சேனலில் பார்க்கலாமா, மனம் துடித்தது. ஹாலுக்கு வந்தேன். டி.வி.யை ஆன் செய்தேன்.
ரத்தம் பார்க்கின் - 2
Tuesday, August 13, 2013
Posted by கார்த்திக் சரவணன்
இந்தக் கதையின் முற்பகுதியைப் படித்திராதவர்கள் படித்துவிட்டு வரவும்
இனி
திரும்பி ஓட்டமெடுத்தேன். அவன் அரிவாளை என்மீது வீசினான். என் பின்னங்கழுத்தில் ஒரு கோடு விழுந்தது. "ஆஆஆஆஆஆஆ" அலறினேன், ஓடுவதை நிறுத்தவில்லை. சூடான என் ரத்தம் சட்டையை நனைக்கத் தொடங்கியது. அவன் என்னை துரத்திக்கொண்டிருந்தான். நேற்றைய மதுரை மீட்டிங் மறந்துபோனது, இவனிடமிருந்து தப்புவதே பிரதானமாக இருந்தது. ஓடினேன், இடது வலது என்று அடுத்தடுத்த திருப்பங்களில் தாண்டி ஓடினேன். நான்கு முனை சந்திப்பு வரும் அதில் ஏதாவதொன்றில் திரும்பினால் அவன் குழப்பமடையக்கூடும்.
CHENNAI EXPRESS - விமர்சனம்
Friday, August 09, 2013
Posted by கார்த்திக் சரவணன்
நூறு வயதுக்கு ஒரு நாளே இருக்கும் நிலையில் ஷாருக் கானின் தாத்தா காலமாகிவிடுகிறார். அவரது அஸ்தியைக் கரைக்க பாட்டியின் அறிவுரைப்படி ராமேஸ்வரத்துக்குப் புறப்படுகிறார். கல்யாணம் பிடிக்காமல் ஊரைவிட்டு ஓடிச்சென்ற தமிழ்ப்பெண்ணான தீபிகாவையும், அவரை மீண்டும் ஊருக்கே கூட்டிச்செல்லும் அடியாட்களையும் சந்திக்கிறார். சந்திக்கிறார் என்பதை விட அடியாட்களிடம் மாட்டிக்கொள்கிறார் என்றே சொல்லவேண்டும்.
வேறு வழியின்றி ஷாருக் கானும் தீபிகாவுடன் தீபிகாவின் கிராமத்துக்கே செல்ல நேரிடுகிறது. தமிழ் தெரியாத ஷாருக் கானும் தானும் காதலிப்பதாக தீபிகா தன் தந்தையிடம் சொல்ல, தந்தையும் மறுப்பு தெரிவிக்க, ஏற்கனவே நிச்சயம் செய்திருந்த முறைப்பையனும் சண்டைக்கு வர, நிலவரம் கலவரமாக மாறுகிறது. ஷாருக் அங்கிருந்து தப்பிச்செல்ல, மீண்டும் போலிசாரால் அதே இடத்துக்கு வரவழைக்கப்படுகிறார். இந்த முறை தீபிகாவுடன் தப்பிச்செல்கிறார் ஷாருக். அதன் பின்னர் அவர்களுக்குள் காதல் எப்படி வந்தது, வில்லன் குரூப் என்ன செய்தார்கள், முடிவு என்ன என்பதை தியேட்டரில் போய் பாருங்கள்.
நல்ல உள்ளங்கள் இருக்கையிலே
Friday, August 09, 2013
Posted by கார்த்திக் சரவணன்
மாணவன் தளத்துக்கு வந்திடுவீர் - தமிழ்
மணத்தில் வாக்குகள் பலவும் தந்திடுவீர்
சூடான இடுகை ஆவதினால் - ஸ்கூல்
பையன் உள்ளம் குளிர்ந்திடுமே
வாக்குகள் பலவும் பெறுவதினால் - தமிழ்
மணத்தில் மகுடம் சூடிடுவேன்
கருத்துக்கள் பலவும் சொல்லிடுவீர் - எனை
வாழ்த்தி மகிழ்ந்து மகிழ்விப்பீர்
பலவார்த்தை கருத்தைப் பதிந்திடுவீர் - ஒற்றை
வார்த்தை கருத்தை தவிர்த்திடுவீர்
தங்கள் தளத்துக்கும் தான் வந்து - பல
கருத்தைச் சொல்லிச் செல்கின்றேன்
நல்ல உள்ளங்கள் இருக்கையிலே - நான்
நித்தம் கவிதை வெளியிடுவேன்
முதல் பதிவின் சந்தோஷம் - தொடர்பதிவு
Tuesday, August 06, 2013
Posted by கார்த்திக் சரவணன்
வணக்கம் நண்பர்களே....
தொடர்பதிவுகள் பதிவுலகில் மீண்டும் ஓர் உற்சாகத்தைக் கொடுத்துவருகிறது. பல நாட்களாக எழுதாத பதிவர்கள் கூட சுறுசுறுப்பாக எழுதுகிறார்கள். பதிவுலகம் மீண்டும் களைகட்டியிருப்பதில் மகிழ்ச்சி. இதன்மூலம் நட்பு வட்டங்கள் பெருகி வருகின்றன, பழைய நட்புக்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
தொடர்பதிவு இவ்வளவு பிரபலமாக காரணம் தொடங்கி வைப்பவரின் தலைப்பு தான் என்றே நினைக்கிறேன். "எனது முதல் கணினி அனுபவம்" மற்றும் "முதல் பதிவின் சந்தோசம்" என்ற தலைப்புகளில் எழுதவேண்டும் என்றால் ஐந்து நிமிடங்களில் எழுதிவிடலாம், தவிர பழைய சந்தோஷத்தை அசைபோடுவது அலாதி சந்தோஷம்.
இந்த தொடர்பதிவை எழுத அளித்த சகோதரி தென்றல் சசிகலாவுக்கு என் நன்றிகள்.
நான் எழுதிய முதல் பதிவு "திருப்பதி பாத யாத்திரை". கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று எழுதினேன்.
கீழ் திருப்பதியில் இருந்து 3550 படிகள் ஏறி மேல் திருப்பதி அடைந்து பெருமாளை தரிசனம் செய்த அனுபவத்தை எழுதியிருந்தேன். இதே நாளில் தான் நண்பர் மெட்ராஸ்பவன் சிவகுமார் அவர்களும் "திருப்பதி அனுபவம்லு" என்ற பதிவை எழுதியிருந்தார். அதைப்பர்த்தவுட்ன எனக்கு ஒரு ஆச்சரியம். அவருக்கு இப்படி ஒரு பின்னூட்டம் இட்டேன்.
"அண்ணா வணக்கம். நமக்குள் என்ன ஒரு ஒற்றுமை, சற்று முன்பு தான் திருப்பதி பதிவு எழுதினேன்
அப்போதெல்லாம் சிவகுமாரை எனக்கு யாரென்றே தெரியாது.
இந்தப் பதிவுக்கு முதன்முதலாக பின்னூட்டம் அளித்தவர் "Chilled Beers" என்ற பெயரில் எழுதிவரும் நண்பர். அவரையும் யாரென்றே தெரியாது, அவரது பதிவுகளைப் படித்ததில் அவர் பெங்களூரில் இருக்கிறார் என்று தெரிந்துகொண்டேன்.
இரண்டாம் பின்னூட்டம் அளித்தவர் நம் நண்பர், காதல் மன்னன் "திடங்கொண்டு போராடு சீனு". அவர் கீழ்க்கண்டவாறு பின்னூட்டம் எழுதியிருந்தார்.
"முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா... முதல் பதிவே திருப்பதியில் இருந்து தொடங்கி உள்ளீர்கள்.. பதிவுலக பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Refer this site
www.bloggernanban.com
முக்கியமான வேண்டுகோள்;
In settings -> Post comments -> Show word verification -> No
என்று மாற்றுங்கள்...இல்லையேல் பல பின்னூட்டங்களை நீங்கள் இழக்க நேரிடும்... பெரும்பாலும் பின்னூட்டம் இடுபவர்கள் இதை விரும்புவதில்லை "
சீனுவின் பின்னூட்டம் மிகவும் உற்சாகம் கொடுப்பதாக இருந்தது. அவர் சொன்னபடி பின்னூட்ட செட்டிங்கை மாற்றிவிட்டேன்.
அதற்குப் பிறகு பின்னூட்டம் எழுதியவர்கள்
பதிவுலகின் குறும்புத் தலைவன் நம் மதுரைத் தமிழன்
முதல் பதிவு எழுதிவிட்டு உடனே நூறு பின்னூட்டங்களும் ஆயிரம் ஹிட்சும் வரும் என்று நினைத்துக்கொண்டு டாஷ்போர்டை refresh செய்து பார்த்துக்கொண்டே இருந்தேன். ஹா ஹா ஹா... இன்னும் நினைத்தாலே சிரிப்பாக வருகிறது. நான் மட்டும் தான் இப்படியா, இல்லை எல்லோரும் இப்படித்தானா.
எனது கணினி அனுபவங்கள் - பெரிசா ஒரு பதிவு
Monday, August 05, 2013
Posted by கார்த்திக் சரவணன்
இதற்கு முந்தைய கணினி அனுபவப்பதிவைப் படித்தவர்கள் பெரும்பாலானோர் ரொம்ப சுருக்கமாசொல்லியிருப்பதாக பின்னூட்டத்தில் குறைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். தவிர நானும் தலைப்பை "எனது கணினி அனுபவங்கள்"னு பன்மையில் வைத்துவிட்டதால் விரிவான ஒரு பதிவை எழுதியே ஆகவேண்டும் என்று அந்த இயற்கையே கட்டளையிட்டது போன்ற உணர்வு. அதனால நீங்க கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, இன்னொரு பதிவு படிச்சே ஆகணும்.
இது 1997-1998 இல் நடந்தது. அந்த வருடம் நான் டிப்ளமா முடித்த கையோடு திருநெல்வேலியில் உள்ள அந்த மிகப்பெரிய தொழிற்சாலையின் எச்.ஆர். டிபார்ட்மெண்டில் அப்ரண்டிஸ் ஆக வேலைக்குச் சேர்ந்தேன். அந்த நிறுவனம் ஒரு துறைக்கு இருவர் என்று உதவிக்காக டிப்ளமா படித்தவர்களை அப்ரண்டிஸ் ஆக வேலைக்கு வைத்துக்கொள்வது வழக்கம். என்னுடைய வேலை நிறுவனத்தில் புதிதாக சேருபவர்கள், விலகிச்செல்பவர்கள், ஊர் மாற்றம், துறைமாற்றம் ஆகும் தொழிலாளர்களின் தகவல்களை கணினியில் உள்ளீடு செய்யும் டேட்டா என்ட்ரி, மேலாளர்களுக்குத் தேவையான தினசரி, வாராந்திர, மாதாந்திர அறிக்கைகளைத் தயார் செய்வது என்பது போன்றவை.
இப்போதெல்லாம் ஒரு நபருக்கு ஒரு கணினி என்று கொடுக்கிறார்கள். ஆனால் அப்போதைய காலகட்டத்தில் ஒரு டிபார்ட்மெண்டுக்கு ஒரு கணினி தான். ஒரு துறையில் பத்து பேர் இருக்கிறார்கள் என்றால் பத்து பெரும் தினமும் சண்டையிட்டுக்கொள்வார்கள். அவர்களுடைய குடுமிப்பிடி சண்டையில் நானும் சிக்கித் தவித்திருக்கிறேன்.
நிறுவனத்தின் தகவல்கள் அனைத்தும் FOXPRO என்ற சாப்ட்வேரில் டிசைன் செய்திருந்தார்கள். டேட்டாபேஸ் அப்டேட் செய்வது அந்த சாப்ட்வேரில் தான். இது DOS இல் இயங்கக்கூடியது. அப்போதைய கணினி திறந்தவுடன் DOS PROMPT இல் தான் இருக்கும். WINDOWS பொறுத்தவரை 3.1 என்ற வெர்ஷன் தான் இருந்தது. நாம் FOXPRO வில் வேலை செய்யும்போது நம்மால் விண்டோஸ் திறக்க முடியாது. எல்லாவற்றையும் சேமித்துவிட்டு FOXPRO வை மூடிவிட்டு DOS PROMPT இல் win என்று டைப் செய்தால் மட்டுமே விண்டோஸ் திறக்கும்.
MS OFFICE ஐப் பொறுத்தவரையில் word மற்றும் excel 95 மட்டுமே இருந்தன. அந்தத் துறையினர் அனுப்பும் கடிதங்கள் word பைலாகவும் ஒரு சில அறிக்கைகள் மட்டும் excel பைல்கலாகவும் சேமித்து வைக்கப்பட்டன. நான் டிப்ளமா படித்தபோது விண்டோஸ் மற்றும் எம் எஸ் ஆபிஸ் பாடங்களாக இருந்ததில்லை. இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த பிறகுதான் ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டேன். அதுவும் மிக வேகமாய். காரணம் நாளொன்றுக்கு ஏழு மணி நேரம் வரை கணினியில் வேலை இருந்ததே. வேலையை கச்சிதமாக செய்ய முடியும் என்றாலும் வேகமாக முடிப்பதென்பது நான் அங்கே தான் கற்றுக்கொண்டேன். எக்சல் மற்றும் வேர்ட் போன்றவற்றில் நிறைய ஷார்ட்கட் இருப்பதை கண்டுபிடித்து ஒவ்வொன்றாக பழகிப்பழகி ஆறே மாதங்களில் எல்லா வேலைகளையும் நன்கு கற்றுக்கொண்டேன்.
FOXPRO வில் வேலை செய்யும்போது கீ-போர்ட் மட்டுமே தேவைப்படும். அதுமட்டுமல்லாமல் பெரிய பெரிய புத்தகங்களை மடியில் வைத்துக்கொண்டு டேட்டா என்ட்ரி செய்யவேண்டும். அந்த நேரத்தில் மவுஸ் இடைஞ்சலாக இருக்கும் என்பதால் அதைத் தூக்கி CPU மேல் வைத்துவிடுவேன். மீண்டும் வேர்ட் அல்லது எக்சல் போன்ற அப்ளிக்கேஷன்களில் வேலை செய்யும்போது (பெருமைக்காகத்தான்) CPU மேல் வைத்திருக்கும் மவுசை எடுக்காமலே கீபோர்ட் மட்டுமே உபயோகித்து மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவேன் (நீயெல்லாம் அவ்வளவு பெரிய அப்படக்கரா என்று கேட்கக்கூடாது).
ஒரு நாள் மவுஸ் வேலை செய்யவில்லை. கீ போர்டிலும் என்டர் கீ மட்டும் வேலை செய்யவில்லை. புதிய மவுஸ் மற்றும் கீபோர்ட் வாங்கலாம் என்றால் நான்கு நாட்கள் ஆகும் என்று சொல்லிவிட்டார்கள். (அப்போதெல்லாம் அவ்வளவு எளிதில் எதுவும் கிடைக்காது) ஆனாலும் ஒரு டாக்குமெண்டை எடிட் செய்து பிரின்ட் எடுத்துக்கொடுத்தேன். "எப்படிடே, இவ்வளவு விரசையா எடுத்துக்கொடுத்தே?" என்று மற்றவர்கள் வியந்தே போனார்கள்.
ஆரம்பத்தில் கணினியை பயன்படுத்துவதற்கு மற்றவர்களிடன் கேட்டுத் தெரிந்துகொண்டிருந்த எனக்கு சில நாட்களுக்குப் பின் மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு "ஞானம்" வந்துவிட்டது. பின்னர் பல இடங்களில் பணி நிமித்தமாக அலைந்து பலவிதமான கணினிகளை பயன்படுத்தியிருக்கிறேன். இன்று வரை புதிய புதிய தகவல்கள், சாப்ட்வேர்கள் என கற்றுக்கொண்டே இருக்கிறேன். அது சரி, இந்த ப்ளாகரின் HTML பார்த்தாலே தலை சுத்துதே. இது பத்தி தெரிந்தவர்கள் சொல்லவும்.
இதோட போதும்னு நினைக்கிறேன், அடுத்த தொடர்பதிவுக்கு தென்றல் சசிகலா அழைத்திருக்கிறார், அதுவும் ரெடி பண்ணனும்.
இதோட போதும்னு நினைக்கிறேன், அடுத்த தொடர்பதிவுக்கு தென்றல் சசிகலா அழைத்திருக்கிறார், அதுவும் ரெடி பண்ணனும்.
நன்றி
Subscribe to:
Posts (Atom)