அண்ணனிடமிருந்து தம்பிக்கு பணத்தைக் கைமாற்றுவது எப்படி?போன பதிவு நிறைய பேருக்கு புரியவில்லை போலும். தமிழ்வாசி பிரகாஷ் போன் செய்து ‘சுத்தமா புரியலை’ என்றார். இந்தப் பதிவு நிச்சயம் அனைவருக்கும் புரியும்படி எழுதுகிறேன்.

பணம்

இருபத்தைந்து வயது இளைஞர் அவர். பெரும் பணக்காரர். எல்லாம் அப்பா சொத்து. அப்பாவுக்கு ஏகப்பட்ட தொழில். அதனால் மகனுக்கு ஒரே வேலை – செலவ செய்வது. ஊதாரித்தனமாக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்வார்.