உங்களுக்கு போன் செய்தது யார்?






முன்பெல்லாம் நம் வீட்டில் லேண்ட்லைன் மட்டும்தான் இருந்தது
. ஒருவருடைய தொலைபேசி எண்ணைக் கண்டுபிடிக்கவேண்டும் என்றால் அந்தப் புத்தகத்தில் தேடுவோம். ஆனால் இப்போது லேண்ட்லைன் என்பது வழக்கொழிந்து வருகிறது. அனைவரும் செல்போன் வைத்திருக்கிறார்கள். சிலர் இரண்டு மூன்று எண்கள் வரை வைத்திருக்கிறார்கள். அனானிமஸ் மற்றும் மிரட்டல் விடுக்கும் நபர்கள், தவறான எண்ணுக்கு டயல் செய்துவிட்டு அது பெண்ணாக இருந்தால் கடலை போடும் நபர்கள் அதிகரித்துவிட்டார்கள். ஏன் நாமே சிலருக்கு நமது செல்போன் எண்ணைக் கொடுத்திருப்போம் ஆனால் நமது போனில் அவர்களுடைய எண்களை பதிவேற்றியிருக்க மாட்டோம். திடீரென்று நமக்கு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் அது யாரென்று யோசிப்போம். போனை எடுத்து பேசியபிறகு "அட, இவர்தானா" என்று நினைப்போம். இப்போது அந்தப் பிரச்சனை இல்லை. உங்கள் செல்போன் அழைக்கும்போதே அது யாருடையதென்று நொடிகளில் தெரிவிக்கும் ஆண்டிராய்ட் அப்ளிகேஷன் இருக்கிறது. அதுதான் "Truecaller - Global Directory".




உலகத்திலுள்ள தொலைபேசி எண்களில் சுமார் 80 சதவீதம் வரை இவர்களுடைய டைரக்டரியில் இருக்கிறது.  அது எப்படி என்று இவர்களுடைய தளத்தில் சென்று விசாரித்தால் பல விதமான டைரக்டரிகளில் இருந்து எண்களை சேகரித்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். மேலும் ஆண்டிராய்டு மற்றும் விண்டோஸ் போன் வைத்திருப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து இவர்களுடைய டேட்டாபேஸில் தங்களுடைய போனில் இருக்கும் contact விபரங்களை அப்லோட் செய்கிறார்கள்.





எப்படி வேலை செய்கிறது?  இந்த அப்ளிக்கேஷனை உங்களுடைய போனில் நிறுவிவிட்டால் போதும்.  ஏதாவது ஒரு எண்ணிலிருந்து போன் வரும்போது அந்த எண் உங்களது கான்டாக்ட் லிஸ்ட்-இல் இல்லையென்றால் தானாகவே தேடத்துவங்குகிறது.  ஒரு சில நொடிகளில் யாரிடமிருந்து அழைப்பு வந்தது என்பதையும் சிறு விண்டோவில் காட்டிவிடுகிறது.  இவர்களுடைய டேட்டாபேஸில் அந்த எண் இல்லாதபட்சத்தில் "No Matches Found" என்று காட்டிவிடுகிறது.







இந்த அப்ளிகேஷன் மூலம் ஒரு அருமையான வசதி உண்டு.  தேவையற்ற அழைப்புகளை நாம் block செய்துவிடலாம்.  இதன்மூலம் நமக்கு வரும் வங்கி இன்சூரன்ஸ் மற்றும் பிற தேவையற்ற அழைப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.  நமக்கு எந்த எண்ணிலிருந்து அழைப்பு வரக்கூடாது என்று எண்ணுகிறோமோ அந்த எண்ணை blacklist என்ற இடத்தில் உள்ளீடு செய்தால் போதும்.  அந்த எண்ணிலிருந்து வரும் அழைப்பு தடுக்கப்படும். அதற்கும் இவர்கள் ஒரு பெரிய டேட்டாபேஸ் வைத்திருக்கிறார்கள்.  நம்மைப்போல் பயனாளர்கள் உள்ளீடு செய்த எண்களின் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டுகிறது.




இன்னுமோர் சிறப்பான விஷயம் என்னவென்றால், எப்போது வேண்டுமானாலும் எந்த எண்ணுடைய கான்டாக்ட் பெயரை வேண்டுமானாலும் நாம் சோதித்துப் பார்த்துக்கொள்ளலாம்.  அந்த எண் இவர்களுடைய டேட்டாபேசில் இருந்தால் போதும். உங்களுக்கு அந்த நபரின் பெயரைக் காட்டிவிடும்.


 
இந்த அப்ளிக்கேஷனைப் பெற என்ன தேவை?



ஆண்டிராய்ட் அல்லது விண்டோஸ் வசதியுள்ள ஸ்மார்ட்போன் மற்றும் இன்டர்நெட் இணைப்பு.  இன்டர்நெட் எப்போதும் ஆன்லைனில் இருக்க வேண்டும்.  அப்போது தான் அழைப்பு வந்தவுடன் இந்த அப்ளிகேஷன் தனது செர்வரில் உள்ள தகவல்களைத் தேடுவதற்கு எளிதாக இருக்கும்.



மேலும் தகவல்களுக்கு  www.truecaller.com  என்ற முகவரியில் காணவும்..

நன்றி...