உத்தம வில்லன்
Wednesday, March 11, 2015
Posted by கார்த்திக் சரவணன்
கொஞ்சம் தவறியிருந்தால் விழுந்திருப்பேன். மூடப்படாத டிரைனேஜ் அது. யாரோ ஒரு பெரியவர், "தம்பி தம்பி, பாத்து" என்று குரல் கொடுத்திருக்கவில்லையென்றால் உள்ளே விழுந்திருப்பேன். போனில் பேசியபடியே நடந்ததால் வந்த வினை. மூடியைக் காணவில்லை. யாரும் அங்கே நடக்காமலிருக்க மாநகராட்சி ஊழியர்கள் இரண்டு பெரிய கற்களை வைத்து நடுவே ஒரு மரக்கிளையை செருகியிருந்தார்கள். யாரோ விஷமிகள் அவற்றை அகற்றியிருந்தார்கள். வேறு யாராவது விழுவதற்குள் ஒரு பாதுகாப்பு வளையம் ஏற்படுத்த வேண்டும். சுற்றிலும் தேடிப்பார்த்தேன். கல்லோ மரக்கிளையோ எதுவுமின்றி சாலையே சுத்தமாக இருந்தது. பக்கத்தில் எங்கிருந்தாவது எடுத்து வரவேண்டும். இப்போது என் போன் அடிக்கத் தொடங்கியது. நாராயணன்.
கருத்து சுதந்திரம் இருக்கிறதா இல்லையா?
Monday, March 09, 2015
Posted by கார்த்திக் சரவணன்
புதிய தலைமுறை சேனலின் “உரக்கச் சொல்லுங்கள்” நிகழ்ச்சியில்
பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. பேசுவதற்கான தலைப்பு “கருத்து சுதந்திரம்
இருக்கிறதா இல்லையா” என்பதுதான். நான், அஞ்சா சிங்கம் செல்வின், ஆரூர் மூனா
செந்தில், போலி பன்னிக்குட்டி, குடந்தை ஆர்.வி.சரவணன், ஜூபிளி நடராஜன் உள்ளிட்ட
இருபதுக்கும் மேற்பட்டோர் கருத்து சுதந்திரம் இல்லை என்று பேசும் குழுவில்
அமர்ந்திருந்தோம்.
Subscribe to:
Posts (Atom)