ரத்தம் பார்க்கின் - 1
Monday, August 12, 2013
Posted by கார்த்திக் சரவணன்
ரத்தம் பார்க்கின் - 1
அந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நன்கு மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிட்டது. பொதுவாக ரயிலில் எனக்கு தூக்கமே வராது. இருந்தும் நடுராத்திரி பன்னிரண்டு மணிக்கு கொஞ்சம் அயர்ந்ததில் தூங்கிப்போனேன்.
அந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நன்கு மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிட்டது. பொதுவாக ரயிலில் எனக்கு தூக்கமே வராது. இருந்தும் நடுராத்திரி பன்னிரண்டு மணிக்கு கொஞ்சம் அயர்ந்ததில் தூங்கிப்போனேன்.
நான் சென்றுகொண்டிருக்கும் ரயில் காலை ஆறு மணிக்கெல்லாம் தாம்பரம் சென்றுவிடும். மீண்டும் புரண்டு படுத்தேன். மனதில் நேற்றைய சந்திப்பு காட்சியாக ஓடிக்கொண்டிருந்தது. மதுரைக்கு அறுகே இருக்கும் அந்த நிறுவனத்தின் முக்கியமான ஆர்டர் கிடைத்திருக்கிறது. போனவாரம் தான் quotation கொடுத்திருந்தேன். ஒரு கோடி ரூபாய்க்கான ஸ்பேர் பார்ட்ஸ் இரண்டு மாதத்துக்குள் வாங்கிக் கொடுக்கவேண்டும்.
இதோ! தாம்பரம் வந்துவிட்டது. லேசாக விடியத் தொடங்கியிருந்தது. தோள்பையை மாட்டிக்கொண்டு இறங்கினேன். பல்லாவரத்தில் இருக்கும் என் வீட்டுக்குச் செல்லவேண்டும். பாலம் ஏறி இறங்கி அடுத்த பிளாட்பாரம் சென்று அங்கே கடற்கரை செல்லும் மின்சார ரயிலில் புறப்பட்டேன். என்னமோ தெரியவில்லை, சென்னையில் காலடி எடுத்துவைத்ததும் இனம்புரியாத பரபரப்பு தொற்றிக்கொள்கிறது.
ரயில் முன்னோக்கியும் என் மனம் பின்னோக்கியும் பயணிக்கத் தொடங்கின. இந்த ஆர்டர் மட்டும் எந்தக் குறையுமின்றி அவர்களுக்கு செய்து கொடுத்தால் சுமார் இருபது லட்சம் வரை லாபம் கிடைக்கக்கூடும். மேலும் இதே நிறுவனத்தின் ஆர்டர்கள் இன்னும் கிடைக்கக்கூடும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றியாக வேண்டும்.
பல்லாவரம்! ஆட்டோக்கள் வரிசையாய் நின்றிருந்தன. நான் எப்போதும் ஆட்டோவில் பயணிப்பதில்லை, வீடு நடந்து செல்லும் அளவுக்கு அருகில் இல்லை என்றாலும் நான் நடந்து செல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தேன். தவிர ஆட்டோக்காரர்களிடம் காலையிலேயே பேரம் பேசுவதில் எனக்கு உடன்பாடில்லை. பிரதான சாலையைக் கடந்து செல்வநாயகம் சாலையில் அரை கிலோமீட்டர். அங்கிருந்து இடதுபுறம் திரும்பி நான்கு தெருக்களைத் தாண்டினால் ஜெகதாம்பாள் காலனியில் என் வீடு.
இரண்டு பக்கமும் முரட்டு பங்களாக்கள். ஆள் நடமாட்டம் இல்லாத அந்தத் தெருவில் திரும்பினேன், என் நிழல் எனக்கு முன்னாள் நீண்டிருந்தது. என்னைத் தொடர்ந்து வா என்றது. டீக்கடை ஒன்றில் காலை FM ரேடியோ ஒன்று ஒலித்துக்கொண்டிருந்தது. என் நிழலைப் பார்த்தவாறே நடந்தேன்.
பக்கவாட்டில் இன்னொரு நிழல் என் நிழலைத் தொட்டது. யாரோ என் பின்னால் நடந்து வந்து கொண்டிருக்கிறார்கள். நடையை கொஞ்சம் எட்டிப்போட்டேன், அந்த நிழல் என் பின்னால் சென்றுவிட்டது. மீண்டும் என் நிழலைப் பார்த்தவாறே நடக்கலானேன். மீண்டும் அதே நிழல் என் நிழலைப் பின்தொடர்ந்தது. என்னை முந்திச்செல்ல நினைக்கிறார் போலும், வேனத்தைக் குறைக்காமல் நடந்தேன். இப்போது இந்த நிழல் கையைத் தூக்கியது, பின்னால் திரும்பினேன்.
இரண்டடி நீளமுள்ள அரிவாள் ஒன்று அந்த நிழலுக்கு சொந்தக்காரனிடம் இருந்தது. என்னை குரூரமாகப் பார்த்தான். எதையோ மென்று கொண்டிருந்தான். எனக்குப் புரிந்துவிட்டது...
தொடரும்....
This entry was posted by school paiyan, and is filed under
சிறுகதை
.You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
mmm...
ReplyDeletethodarungal...
நன்றி சீனி..
Deleteதிகில் கதையா....
ReplyDeleteதொடரட்டும்..
தொடர்கிறேன் வெங்கட் அண்ணே..
Deleteகதையின் நடை அருமை.
ReplyDelete//இரண்டடி நீளமுள்ள அரிவாள் ஒன்று அந்த நிழலுக்கு சொந்தக்காரனிடம் இருந்தது. என்னை குரூரமாகப் பார்த்தான். எதையோ மென்று கொண்டிருந்தான். எனக்குப் புரிந்துவிட்டது, என்னை வெட்டப்போகிறான//
இதில் "என்னை வெட்டப்போகிறான்" என்பதை எடுத்து விட்டு எனக்கு புரிந்து விட்டது என்றதோடு நிறுத்தி இருந்தால் சுவாரசியம் கூடுமே.
புரிந்தது "வெட்ட போவதாக" இருக்கலாம் அல்லது வேறு ஏதாவது கூட இருக்கலாம்.
இது ஆலோசனை மட்டுமே. தவறாக நினைக்க வேண்டாம்
வலைசர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்
ஆலோசனைக்கு நன்றி அண்ணே... இதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்.... நன்றி...
Deleteஆஹா இருபது லட்சம் ரூபாய்க்கே அருவாளா ?
ReplyDeleteமுதுகு சொறிய எடுத்துருப்பான்ய்யா....
அடுத்த பாகத்தில் தெரியும் அண்ணே...
Deleteமுதுகு சொறிய எடுத்துருப்பான்ய்யா....
Deleteஹா ஹா ஹா
மனோ அண்ணனின் காமெடி... ஹா ஹா ஹா...
Deleteமதுரைக்கு அறுமே இருக்கும் அந்த நிறுவனத்தின்//தவறை சரி செய்யவும்
ReplyDeleteசெய்தாயிற்று ஐயா...
Deleteயார் அது? படித்து தெரிந்து கொள்ள ஆவல்.
ReplyDeleteதொடருங்கள்...
Deleteஇரண்டடி நீளமுள்ள அரிவாள் ஒன்று அந்த நிழலுக்கு சொந்தக்காரனிடம் இருந்தது. என்னை குரூரமாகப் பார்த்தான். எதையோ மென்று கொண்டிருந்தான். எனக்குப் புரிந்துவிட்டது...
ReplyDeleteதிகிலான கதை ..!
திகில் தொடரும்...
Deleteஆரம்பமே அசத்தலா இருக்கே!
ReplyDeleteஅசத்துவோம்... நன்றி குட்டன்...
Deleteத.ம.1
ReplyDelete//ரயில் முன்னோக்கியும் என் மனம் பின்னோக்கியும் பயணிக்கத் தொடங்கின// இதையே மடக்கிப் போட்டு இருந்தா கவிதை ஆகி இருக்குமே ஆச்சரியக் குறி :-)))))
ReplyDelete//என் நிழல் எனக்கு முன்னாள் நீண்டிருந்தது. என்னைத் தொடர்ந்து வா என்றது. // இது அடுத்த கவிதையா :-)))
யோவ், திகில் கதையைப் படிச்சிட்டு கவிதையான்னா கேக்குற? அடுத்த பாகத்தில சாகடிக்கிறேன்...
Deleteஅடுத்து என்ன???? ரத்தம் சிந்தியதா?
ReplyDeleteதொடருங்கள்...
Deleteதிகிலா ? நடத்துங்க நடத்துங்க , நல்லாருக்கு அண்ணே ., தொடருங்கள் ...
ReplyDeleteநன்றி அரசன்...
Deleteஎன்னங்க ஆரம்பமே ரொம்ப திகிலா இருக்கே?
ReplyDeleteஆமாங்க... அடுத்த பாகத்தில் பாருங்க... இன்னும் திகிலா இருக்கும்...
Deleteதிகில் கதையின் ஆரம்பம் நன்றாக இருக்கிறது. அடுத்தடுத்த பாகத்திலும் இதே திகில்தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteதொடரும்... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா...
Deleteதிகில் தொடருக்கு வாழ்த்துக்கள்! அடுத்தபகுதிக்காக ஆவலுடன் வெயிட்டிங்!!!
ReplyDeleteஅடுத்த பகுதி நாளை...
Deleteநல்ல ஆரம்பம். தொடருங்கள்
ReplyDeleteநன்றி விஜயன்...
Delete//ரயில் முன்னோக்கியும் என் மனம் பின்னோக்கியும் //
ReplyDeleteசெம்ம..
:)
Deleteஆஹா..இன்னொரு திகில் கதையா.. இதாவது சொல்லக் கூடிய ரகசியமா இருக்குமா?
ReplyDeleteரத்தம் பார்க்கின் மர்டர் இல்லை.. செம்ம டைட்டில்ங்க
கதை கொஞ்சம் சஸ்பென்ஸ் திரில்லர்...
Deleteகுற்றம் பார்க்கின் மாதிரி ரத்தம் பார்க்கின்....
ஆரம்பத்திலேயே அரிவாள் காட்டி பயமுறுத்திறீங்கள்.
ReplyDeleteஅடுத்து.........
அடுத்த பாகம் படிக்கவும்....
Deleteதொடர் கதை இரண்டு பகுதிகளையும் படித்து விட்டேன் .. சுவாரசியம்... நீளமாக இல்லாதது சிறப்பு .... தொடருங்கள்...
ReplyDeleteநன்றி ரூபக்...
Deleteகதைக்கு நீ பிடிச்சிருக்கற டைட்டிலே இழுக்குது ஸ்.பை.! மிக இயல்பா ஆரம்பிச்சு கடைசியில ஒரு திகில் கொக்கியைப் போட்டு உள்ள இழுத்துட்டிங்க... இதே விறுவிறுப்பு கதை முழுவதும் தொடரும்னு நம்பறேன். அடுத்த பாகத்தை உடனே படிக்கப் போறேன்.
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : ரூபக் ராம் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கனவு மெய்ப்பட
வலைச்சர தள இணைப்பு : பனியைத் தேடி - தலைநகரில்
வணக்கம்
ReplyDeleteஇன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது...வாழ்த்துக்கள்
நன்றி
அன்புடன்
ரூபன்