வணக்கம் நண்பர்களே....



தொடர்பதிவுகள் பதிவுலகில் மீண்டும் ஓர் உற்சாகத்தைக் கொடுத்துவருகிறது.  பல நாட்களாக எழுதாத பதிவர்கள் கூட சுறுசுறுப்பாக எழுதுகிறார்கள்.  பதிவுலகம் மீண்டும் களைகட்டியிருப்பதில் மகிழ்ச்சி.  இதன்மூலம் நட்பு வட்டங்கள் பெருகி வருகின்றன, பழைய நட்புக்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.



தொடர்பதிவு இவ்வளவு பிரபலமாக காரணம் தொடங்கி வைப்பவரின் தலைப்பு தான் என்றே நினைக்கிறேன்.  "எனது முதல் கணினி அனுபவம்" மற்றும் "முதல் பதிவின் சந்தோசம்" என்ற தலைப்புகளில் எழுதவேண்டும் என்றால் ஐந்து நிமிடங்களில் எழுதிவிடலாம், தவிர பழைய சந்தோஷத்தை அசைபோடுவது அலாதி சந்தோஷம்.



இந்த தொடர்பதிவை எழுத அளித்த சகோதரி தென்றல் சசிகலாவுக்கு என் நன்றிகள்.


நான் எழுதிய முதல் பதிவு "திருப்பதி பாத யாத்திரை".  கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று எழுதினேன்.







கீழ் திருப்பதியில் இருந்து 3550 படிகள் ஏறி மேல் திருப்பதி அடைந்து பெருமாளை தரிசனம் செய்த அனுபவத்தை எழுதியிருந்தேன்.  இதே நாளில் தான் நண்பர் மெட்ராஸ்பவன் சிவகுமார் அவர்களும் "திருப்பதி அனுபவம்லு" என்ற பதிவை எழுதியிருந்தார்.  அதைப்பர்த்தவுட்ன எனக்கு ஒரு ஆச்சரியம்.  அவருக்கு இப்படி ஒரு பின்னூட்டம் இட்டேன்.



"அண்ணா வணக்கம். நமக்குள் என்ன ஒரு ஒற்றுமை, சற்று முன்பு தான் திருப்பதி பதிவு எழுதினேன்



அப்போதெல்லாம் சிவகுமாரை எனக்கு யாரென்றே தெரியாது.



இந்தப் பதிவுக்கு முதன்முதலாக பின்னூட்டம் அளித்தவர் "Chilled Beers" என்ற பெயரில் எழுதிவரும் நண்பர்.  அவரையும் யாரென்றே தெரியாது, அவரது பதிவுகளைப் படித்ததில் அவர் பெங்களூரில் இருக்கிறார் என்று தெரிந்துகொண்டேன்.



இரண்டாம் பின்னூட்டம் அளித்தவர் நம் நண்பர், காதல் மன்னன் "திடங்கொண்டு போராடு சீனு". அவர் கீழ்க்கண்டவாறு பின்னூட்டம் எழுதியிருந்தார்.


"முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா... முதல் பதிவே திருப்பதியில் இருந்து தொடங்கி உள்ளீர்கள்.. பதிவுலக பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 

Refer this site
www.bloggernanban.com

முக்கியமான வேண்டுகோள்;
In settings -> Post comments -> Show word verification -> No
என்று மாற்றுங்கள்...இல்லையேல் பல பின்னூட்டங்களை நீங்கள் இழக்க நேரிடும்... பெரும்பாலும் பின்னூட்டம் இடுபவர்கள் இதை விரும்புவதில்லை "



சீனுவின் பின்னூட்டம் மிகவும் உற்சாகம் கொடுப்பதாக இருந்தது.  அவர் சொன்னபடி பின்னூட்ட செட்டிங்கை மாற்றிவிட்டேன்.



அதற்குப் பிறகு பின்னூட்டம் எழுதியவர்கள்


பதிவுலகின் குறும்புத் தலைவன் நம் மதுரைத் தமிழன்








முதல் பதிவு எழுதிவிட்டு உடனே நூறு பின்னூட்டங்களும் ஆயிரம் ஹிட்சும் வரும் என்று நினைத்துக்கொண்டு டாஷ்போர்டை refresh செய்து பார்த்துக்கொண்டே இருந்தேன்.  ஹா ஹா ஹா... இன்னும் நினைத்தாலே சிரிப்பாக வருகிறது.  நான் மட்டும் தான் இப்படியா, இல்லை எல்லோரும் இப்படித்தானா.