ரத்தம் பார்க்கின் - 2
Tuesday, August 13, 2013
Posted by கார்த்திக் சரவணன்
இந்தக் கதையின் முற்பகுதியைப் படித்திராதவர்கள் படித்துவிட்டு வரவும்
இனி
திரும்பி ஓட்டமெடுத்தேன். அவன் அரிவாளை என்மீது வீசினான். என் பின்னங்கழுத்தில் ஒரு கோடு விழுந்தது. "ஆஆஆஆஆஆஆ" அலறினேன், ஓடுவதை நிறுத்தவில்லை. சூடான என் ரத்தம் சட்டையை நனைக்கத் தொடங்கியது. அவன் என்னை துரத்திக்கொண்டிருந்தான். நேற்றைய மதுரை மீட்டிங் மறந்துபோனது, இவனிடமிருந்து தப்புவதே பிரதானமாக இருந்தது. ஓடினேன், இடது வலது என்று அடுத்தடுத்த திருப்பங்களில் தாண்டி ஓடினேன். நான்கு முனை சந்திப்பு வரும் அதில் ஏதாவதொன்றில் திரும்பினால் அவன் குழப்பமடையக்கூடும்.
அடுத்த இடதுபுறத்தில் திரும்பினேன், ஓ, அது ஒரு முட்டு சந்து. இடம் வலம் என எங்கேயும் திருப்பங்கள் இல்லை. அரைகுறையாக கட்டப்பட்ட ஒன்றிரண்டு கட்டிடங்கள் மட்டுமே. அவ்வளவுதான், நான் மாட்டிக்கொண்டேன். இவனது அரிவாளுக்கு இரையாகப் போகிறேன். ஓடினேன், இன்னும் முடிக்கப்படாத அந்தக் கட்டிடத்தினுள் நுழைந்தேன். தோள்பையை இறக்கிவைத்தேன்.
"யார்ரா நீ?"
அவன் இன்னும் எதையோ மென்று கொண்டிருந்தான். அரிவாளை இறுக்கிப் பிடித்துக்கொண்டான். ஆ, ஓடும்போது தெரியாத வலி இப்போது என் பின்னங்கழுத்தில் தெரிந்தது. ரத்தம் என் உள்ளாடையை நனைத்து கால்சட்டையில் பரவ ஆரம்பித்திருந்தது.
"துப்" என்ற சத்தம் மட்டுமே கேட்டது. அடுத்த நொடி என் முகமெங்கும் கீறல். ஆம், அவன் இவ்வளவு நேரமாய் மென்று கொண்டிருந்த பிளேடு துகள்களை என் முகத்தில் துப்பியிருந்தான். வலித்தது, நல்லவேளையாக என் கண்களில் குத்தியிருக்கவில்லை. அவனைப் பார்த்துக்கொண்டே கன்னத்திலும் நெற்றியிலும் குத்தியிருந்த துகள்களைப் பிய்க்க ஆரம்பித்தேன். அரிவாளைத் தூக்கியபடியே அவன் என்னை நோக்கி ஓடி வந்தான். விலகினேன், திரும்பினான், சற்றும் தாமதிக்காமல் அவன் வாயில் ஒரு குத்துவிட்டேன்.
"ஆஆஆஆஆஆ", என் கை வலித்தது. தோல் கிழிந்து சதை தொங்கியது. அவனைப் பார்த்தேன், குனிந்து வாயிலிருந்த ரத்தத்தை துப்பிக்கொண்டிருந்தான். நான்கு பற்களாவது உடைந்திருக்கும். இப்போது எனக்கு தைரியம் வந்தது. ஓடிச்சென்று அவன் பின்னால் ஒரு உதைவிட்டேன். தடுமாறி விழுந்தான். அவன் கையிலிருந்த அரிவாள் நழுவி விலகியது. அடுத்த நொடி அது என் கையில். இதைக் காட்டியே அவனிடமிருந்து தப்ப வேண்டும்.
திரும்பினேன். என் வலுவான வலது புஜத்தில் கூரான கத்தி ஒன்று பாய்ந்தது. குத்திவிட்டான். இழுத்தான், வரவில்லை. பலங்கொண்டமட்டும் இழுத்தான். ரத்தம் சீறிப்பாய்ந்து அவன் முகத்தை நனைத்தது. அடுத்து அவன் என் நெஞ்சில் குத்தி என் இதயத்தை பொத்தலாக்கலாம். அல்லது வயிற்றில் குத்தி என் குடலைத் துண்டு துண்டாக்கலாம். அவன் செயல்படும் முன்னர் நான் முந்தியாக வேண்டும்.
அரிவாளைப் பிடித்திருந்த என் வலது கையைத் தூக்க முடியவில்லை. சட்டென இடது கைக்கு மாற்றி அவன் மீது வீசி எறிந்தேன். அது சரியாக அவனது குரல்வளையைக் கிழித்துக்கொண்டு விழுந்தது. "ஹக்" அவனால் மூச்சு விடமுடியவில்லை. குரல்வளையிலிருந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. இரண்டடி நடந்தான், பின் சுருண்டு விழுந்தான், ஒரு நிமிடம் துடித்தான், அடங்கிப்போனான்.
தொடரும்....
திரும்பினேன். என் வலுவான வலது புஜத்தில் கூரான கத்தி ஒன்று பாய்ந்தது. குத்திவிட்டான். இழுத்தான், வரவில்லை. பலங்கொண்டமட்டும் இழுத்தான். ரத்தம் சீறிப்பாய்ந்து அவன் முகத்தை நனைத்தது. அடுத்து அவன் என் நெஞ்சில் குத்தி என் இதயத்தை பொத்தலாக்கலாம். அல்லது வயிற்றில் குத்தி என் குடலைத் துண்டு துண்டாக்கலாம். அவன் செயல்படும் முன்னர் நான் முந்தியாக வேண்டும்.
அரிவாளைப் பிடித்திருந்த என் வலது கையைத் தூக்க முடியவில்லை. சட்டென இடது கைக்கு மாற்றி அவன் மீது வீசி எறிந்தேன். அது சரியாக அவனது குரல்வளையைக் கிழித்துக்கொண்டு விழுந்தது. "ஹக்" அவனால் மூச்சு விடமுடியவில்லை. குரல்வளையிலிருந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. இரண்டடி நடந்தான், பின் சுருண்டு விழுந்தான், ஒரு நிமிடம் துடித்தான், அடங்கிப்போனான்.
தொடரும்....
This entry was posted by school paiyan, and is filed under
சிறுகதை
.You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
ஏன் ,ஏன் இந்த கொலைவெறி ?ஆவலைத் தூண்டுகிறது ...சற்று நீளமான சிறுகதை ?
ReplyDeleteஆமாம் ஐயா... நான்கு அல்லது ஐந்து பாகங்களில் முடிந்துவிடும்...
Deleteவரிக்கு வரி வெட்டு. காட்சிக்கு காட்சி ரத்தம். படிக்கத் தவறாதீர்கள் ரத்தம் பார்க்கின்
ReplyDeleteஹா ஹா... ராகு தசையில் செவ்வாய் புத்தி நடக்கிறது... ரத்தத்தை காட்டியாகவேண்டும்... இல்லையென்றால் ரத்தக்காவு தான்....
Deleteபயங்கர வன்முறைக் காட்சிகள் நிறைந்த சிறுகதையாய் காணப்படுகிறதே! சஸ்பென்ஸ் வேறு வைத்து ஆர்வத்தை அதிகப் படுத்துகிறீர்கள்.
ReplyDeleteஆமாம் சகோதரி... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....
DeleteYean intha kolaveri
ReplyDeleteபடிக்கிறவங்களைய்வ்ல்லாம் கொலையா கொல்லத்தான்....
Deleteவரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை ரத்தம் பார்கனும்ன்றதுகாகவே நம்ம ஸ்பை ரத்தம் பார்கின்ன்னு தலைப்பு வச்சிருக்காரு போல...
ReplyDeleteகதை நல்ல சுவாரசியம்..
ஹா ஹா... ஆமா....
Deleteகனவுக் காட்சியா..??/
ReplyDeleteஇல்லை நிஜம்.....
Deleteஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்தி
ReplyDeleteசிறப்பித்தற்கு மனம் நிறைந்த
இனிய அன்பு நன்றிகள்..!
:)
Deleteகொஞ்சம் தள்ளியே இருங்க பயம்ம்ம்ம்ம்மா இருக்கு.
ReplyDeleteநீங்க பயப்படக்கூடாது....
Deleteஇன்னும் கொஞ்சம் நீளமா பதிஞ்சிருக்கலாம். சிந்துபாத் கதையில மூனே முனூ படத்த போட்டுட்டு தொடரும் சொன்னா மாதிரி இருக்கு.... ஆனாலும் விறுவிறுப்பாத்தான் இருக்கு...
ReplyDeleteஹா ஹா கண்டிப்பா செய்யிறேன் சார்...
Deleteஆவ்வ்வ் சதக் சதக் தொடருது...... சரி குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லைம்பாங்க! அப்போ இரத்தம் பார்க்கின்.............??? அறிய ஆவல்!!
ReplyDeleteகத்திக்கு பயந்தா உயிர் இருக்காது.... அதுதான் சொல்ல வர்றேன்.... கருத்துக்கு மிக்க நன்றி மணி.....
Deleteவணக்கம்
ReplyDeleteகதை மிக அருமையாக உள்ளது அண்ணா தொடர்ந்து படைப்புக்கள் வெளிவர எனது வாழ்த்துக்கள்
இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்...
Deleteபயங்கரமாக இருக்கின்றது.
ReplyDeleteபடக் கதையா?
இல்லை இல்லை சிறுகதை...
Deleteஐயோ!பதிவே சிவப்பாகி விட்டது!சினிமாப் பார்ப்பது போல் இருக்கிறது
ReplyDeleteஹா ஹா... சீக்கிரம் முடித்துவிடுவோம் குட்டன்..
Deleteகொலை.... கொலை.... யாராவது சீக்கிரம் போலீஸ கூப்பிடுங்க!
ReplyDeleteதொடர்கிறேன். :)
போலிஸ் வர்றாங்க...
Deleteதொடர் கதை இரண்டு பகுதிகளையும் படித்து விட்டேன் .. சுவாரசியம்... நீளமாக இல்லாதது சிறப்பு .... தொடருங்கள்...
ReplyDeleteநன்றி ரூபக்... தொடரவும்....
Deleteஏங்க, ரத்தம் பார்க்கின் அப்படின்னு தலைப்புன்னா இப்படியா வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை - அய்யய்யோ என் கையிலேருந்து கூட .....ஆ....ஆ...!
ReplyDeleteஉங்கள் பதிவை மேலேருந்து பார்த்துகிட்டு இருக்கிற பாப்பா பயந்துக்க போறான்!
Deleteஹா ஹா.. நன்றி அம்மா...
Deleteதலைப்புக்கேற்ற மாதிரி கதையெங்கும் ரத்தம் தெறிக்கின்றது.கதை இப்போது தான் ஆவலைத் தூண்டுகின்றது.
ReplyDeleteசினிமாவுல வர்ற மாதிரி ஒரு ஆக்ஷன் காட்சியை, ரத்தமும் அடிபட்ட வலியும் படிக்கறவங்களுக்குத் தெரியற மாதிரி அழகா வர்ணிச்சு அசத்திட்டியே ஸ்கூல் பையா! குட்! அடுத்த பகுதிக்கு உடனே எஸ்கேப்...!
ReplyDelete