முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போள்
Wednesday, May 02, 2018
Posted by கார்த்திக் சரவணன்
முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போள் என்றொரு மலையாளத்
திரைப்படம் பார்த்தேன். நாயகன் மோகன்லால் திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்ற மத்திம
வயதைக் கடந்தவர். கீழாட்டூர் கிராம பஞ்சாயத்து செகரட்டரியாக வேலை செய்கிறார். தனது
மனைவி மீனாவிடமும், மகள், மகனிடமும் பாசம் காட்டாமல்
எப்போதும் எரிந்து விழுகிறவர். இந்நிலையில், தன்னை வசீகரிக்கும்,
தான் வசீகரிக்கப்பட்டதாகக் கூறும் ஒரு திருமணமான பெண்ணைச் சந்திக்கிறார். அந்தப்
பெண் தான் அவர் மீது மிகுந்த காதல் கொண்டிருப்பதாகக் கூற, சபலத்தில் விழுந்துவிடுகிறார்.
அடுத்த அடி எடுத்து வைப்பதற்குள் ஒரு பிரச்சினை வந்துவிட, பின் மீண்டும் அந்த
விஷயத்தை நினைக்காமல் தன் மனைவியை மட்டுமே நேசிக்கும் ஒரு நல்ல கணவனாக மாறிவிடுகிறார்.
சுபம்!
சுகன்யா
Tuesday, April 24, 2018
Posted by கார்த்திக் சரவணன்
வீட்டில் ஏ.ஸி. அவ்வப்போது நின்றுவிடுகிறது.
வோல்ட்டேஜ் பிரச்சினை. ஒழுங்காக ஓடிக்கொண்டிருக்கும் - திடீரென்று நின்றுவிடும்.
அரை மணி நேரம், ஒரு மணி நேரம்
என்று அமைதியாக இருந்துவிட்டு பிறகு தன் பணியை செவ்வனே செய்ய ஆரம்பிக்கும்.
இத்தனைக்கும் டபுள் பூஸ்டர் ஸ்டெபிலைசர்தான் பயன்படுத்துகிறேன். நான் வசிக்கும்
ஏரியா நண்பருடன் சேர்ந்துதான் ஏ.ஸி. வாங்கினேன். “நம்ம ஏரியா கரண்ட் பிரச்சனைக்கு
டபுள் பூஸ்டர்தான் செட்டாவும்” என்று கூறியிருந்தார். அவருடைய ஆலோசனையின்படி
வாங்கிவிட்டேன். ஐந்தாறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை பிரச்சினை இருந்ததில்லை.
தொண்டையில் கரகர
Saturday, December 30, 2017
Posted by கார்த்திக் சரவணன்
சென்னையின் சீஷோஷ்ண நிலை அவ்வளவு சரியில்லை. பகலில் வெயிலுடன் குளிர் காற்றும்
சேர்ந்து அடிக்கிறது. இரவில் பனி கொட்டுகிறது. உலர்பனி. ஈரப்பதம் என்பது கொஞ்சம்
கூட இல்லை. வண்டியில் பயணிக்கும்போது நேரடியாக நெஞ்சுக்குள் ஊடுருவுகிறது. நம்
அனுமதியின்றி மூக்கினுள் நுழைந்து நுரையீரலை சேதப்படுத்துகிறது.
நடை
Thursday, November 09, 2017
Posted by கார்த்திக் சரவணன்
நடைப்பயிற்சிக்குச் செல்வதென்றால், எனக்குப் பல வழிகள் உண்டு. முதலாவது,
உள்ளகரம், மடிப்பாக்கம் செல்லும் மார்க்கம். இரண்டாவது, வேளச்சேரி செல்லும் பெரிய
சாலை. மூன்றாவது, அதற்கு எதிர்த்திசையான கிண்டி செல்லும் பெரிய சாலை. நான்காவது,
நங்கநல்லூர் வீதிகள். இவற்றில் வேளச்சேரி, கிண்டி செல்லும் சாலைகள் விசாலமானவையாக
இருந்தாலும், வண்டிகளின் இரைச்சலும், இருசக்கர வாகன ஓட்டிகளின் வேகமும் அமைதியாக
நடக்க விடுவதில்லை. மடிப்பாக்கம் செல்லும் சாலையில், சாலை விரிவாக்கப் பணிகள்
நடந்துகொண்டு இருப்பதாலும், சமீபத்திய மழையால் சாலையில் ஏற்பட்டுள்ள மேடு,
பள்ளங்களாலும் சீரான நடை பயில்வது என்பது கடினமான காரியமான ஒன்றாக இருக்கிறது.
மேடைப்பேச்சு
Friday, October 20, 2017
Posted by கார்த்திக் சரவணன்
மேடைப்
பேச்செல்லாம் வாய்த்ததே இல்லை. அப்படியே அமைந்தாலும் மிகச் சுருக்கமாகப்
பேசிவிட்டு ஓடிவிடுவது வழக்கம். ஆனால், ஏதேனும் விஷயம் குறித்து எழுதச்
சொன்னால் எழுதிவிடுவேன். அதற்கான தரவுகள் இருக்கவேண்டும், நேரமும் வேண்டும். கூடவே
கொஞ்சம் அமைதியான சூழல். அவ்வளவுதான்.
இந்த வருட தீபாவளி
Wednesday, October 18, 2017
Posted by கார்த்திக் சரவணன்
பட்டாசில்லை, புகையில்லை. அமைதியாகக் கழிந்தது தீபாவளி.
அடுத்த வீட்டுக் கதையில் மூக்கை நுழைக்கும் ஆசாமிகள்
Tuesday, October 03, 2017
Posted by கார்த்திக் சரவணன்
பக்கத்து வீட்டம்மணியின் குணாதிசயம்
இப்படித்தான். ஆரம்ப காலத்தில், அவருக்கு எங்கள் குடும்பத்தின்
மீது அக்கறை என வியந்து, அவருக்குத் தேவையான
விவரங்களை நாங்கள் வெள்ளந்தியாகச் சொல்லியிருக்கிறோம். சில நாட்களுக்குப் பிறகுதான்
தெரிகிறது, அவரது பண்பே இப்படித்தான்
என்று. அவரைப்பற்றி ஓரளவுக்கு நாங்கள் புரிந்துகொண்ட பிறகு, தவிர்க்க ஆரம்பித்துவிட்டோம். இருந்தாலும், குழந்தைகள் மூலமாக அவருக்குத் தேவையான விவரங்களைக் கேட்டுப் பெற்றுக்கொண்டுதான்
இருக்கிறார். அவரது மகள்கள் இருவருமே அவரைப்போலவே வருகிறார்கள் என்பது வேறு கதை.
Subscribe to:
Posts (Atom)