உத்தம வில்லன்

கொஞ்சம் தவறியிருந்தால் விழுந்திருப்பேன். மூடப்படாத டிரைனேஜ் அது. யாரோ ஒரு பெரியவர், "தம்பி தம்பி, பாத்து" என்று குரல் கொடுத்திருக்கவில்லையென்றால் உள்ளே விழுந்திருப்பேன். போனில் பேசியபடியே நடந்ததால் வந்த வினை. மூடியைக் காணவில்லை. யாரும் அங்கே நடக்காமலிருக்க மாநகராட்சி ஊழியர்கள் இரண்டு பெரிய கற்களை வைத்து நடுவே ஒரு மரக்கிளையை செருகியிருந்தார்கள். யாரோ விஷமிகள் அவற்றை அகற்றியிருந்தார்கள். வேறு யாராவது விழுவதற்குள் ஒரு பாதுகாப்பு வளையம் ஏற்படுத்த வேண்டும். சுற்றிலும் தேடிப்பார்த்தேன். கல்லோ மரக்கிளையோ எதுவுமின்றி சாலையே சுத்தமாக இருந்தது. பக்கத்தில் எங்கிருந்தாவது எடுத்து வரவேண்டும். இப்போது என் போன் அடிக்கத் தொடங்கியது. நாராயணன்.

கருத்து சுதந்திரம் இருக்கிறதா இல்லையா?

புதிய தலைமுறை சேனலின் “உரக்கச் சொல்லுங்கள்” நிகழ்ச்சியில் பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. பேசுவதற்கான தலைப்பு “கருத்து சுதந்திரம் இருக்கிறதா இல்லையா” என்பதுதான். நான், அஞ்சா சிங்கம் செல்வின், ஆரூர் மூனா செந்தில், போலி பன்னிக்குட்டி, குடந்தை ஆர்.வி.சரவணன், ஜூபிளி நடராஜன் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்டோர் கருத்து சுதந்திரம் இல்லை என்று பேசும் குழுவில் அமர்ந்திருந்தோம். 

காதல் போயின் காதல் - குறும்படம்

சில நொடி சிநேகம் முடிந்தவுடன் கோவை ஆவி என்னிடம் சொன்னார் - "பாஸ், அடுத்து நம்ம படம்தான், கண்டிப்பா நீங்க கூட இருக்கணும்" என்று.  ஏற்கனவே சில நொடி சிநேகத்தில் என்னால் கலந்துகொள்ள முடியாமல் போனதால் கண்டிப்பாக இருக்கிறேன் என்று ஒப்புக்கொண்டேன். என்ன கதை என்று கேட்டபோது "காதல் போயின் காதல், நான் ஏற்கனவே ப்ளாக்ல எழுதியிருக்கும் கதை தான்" என்றார்.

எலக்ட்ரானிக் அடிமைகள்

வேளச்சேரியிலிருக்கும் அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தபோது மணி இரண்டைக் கடந்திருந்தது. அனிச்சைச் செயலாய் சல்யூட் அடித்து கதவைத் திறந்துவிட்டார் காவலாளி. உள்ளே நுழைந்ததும் முகத்திலறைந்த காற்று வெயிலில் வண்டி ஓட்டி வந்த களைப்பிற்கு இதமாக இருந்தது. வெளிர் நீல நிற சபாரி அணிந்திருந்த ஒருவர் என்னையும் என் மனைவி குழந்தைகளையும் பார்த்துவிட்டு எத்தனை பேர் சார்? என்றார். ரெண்டே முக்கால் என்று சொல்ல வாயெடுத்தவன் கடைசி நேரத்தில் முடிவை மாற்றிக்கொண்டு நாங்க மட்டும்தான் என்றேன். அந்த லாஸ்ட்ல போயிருங்க சார் என்றார்.

ஜீரோ பட்ஜெட்டில் ஒரு குறும்படம்

இயக்குநர் கேபிள் சங்கருடைய தொட்டால் தொடரும் திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது. அவர் சில நாட்களுக்கு முன் ஒரு குறும்படப் போட்டி ஒன்றை அறிவித்திருந்தார். அதாவது, "தொட்டால் தொடரும்" என்ற தலைப்புக்கு ஏற்றவாறு ஒரு நிமிடத்தில் ஒரு நல்ல கருத்துள்ள குறும்படம் எடுக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தார். இதையொட்டி என் மனதில் தோன்றிய ஐடியா ஒன்றை நண்பர் ஒருவரிடம் தெரிவிக்க, அவருக்கும் இது பிடித்துப் போனது. உடனே அவர் நீயே எடு என்று கூறி தனது கேமராவையும் கொடுத்து உதவினார்.

காதல் போயின் (சிறுகதை)

அவள் பெயர் சந்தியா. எனக்கு எதிர் பிளாட்டில்தான் குடியிருக்கிறாள். நான் அலுவலகம் போகும்போதோ வரும்போதோ அவளைக் காண்பதுண்டு. என்னைப் பார்த்தால் அவள், "ஹாய்" என்பாள். நானும் பதிலுக்கு ஹலோ என்ற ஒற்றை வார்த்தையை உதிர்த்துவிடுவேன் அல்லது ஒரு சிறு புன்னகையுடன் கடந்துவிடுவேன். சில நேரங்களில் நான் வீட்டுக்கு வரும்போது அம்மாவுடன் பேசிக்கொண்டிருப்பாள். பை த பை என் பெயர் அருண்.

ஸ்கூல் பையன் எனும் நான்

ஸ்கூல் பையன்

என்ன நினைத்து இந்தப் பெயர் வைத்தேன் என்று தெரியவில்லை. வலைப்பதிவு தொடங்கியபோது என் மகன் படத்தை முன்வைத்து ஸ்கூல் பையன் என்று பெயரிட்டேன். மற்ற வலைத்தளங்களைப் படித்து அதே பெயரில் கருத்துக்களை சொல்ல, அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.



முகநூல் பக்கம் வந்தபோது வலைப்பதிவர்களுக்குத் தெரியும் விதமாக ஸ்கூல் பையன் என்கிற பெயரிலேயே நட்பு அழைப்புக்கள் விடுக்கத் தொடங்கினேன். நம் வலைப்பதிவர்களும் என்னை அடையாளம் கண்டு நட்பு அழைப்புகளை ஏற்றுக்கொண்டனர்.

நிற்க.... வலைப்பதிவுகளைப் பொறுத்தவரையில் இம்மாதிரியான பெயர்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஆனால் முகநூலிலோ இதை fake id என்கின்றனர். இருக்கட்டும். ஆனால் நெருங்கிய நட்பு வட்டத்தில் வைத்துக்கொண்டு சிலருடைய பதிவுகளைப் படித்துவருகிறேன். அவர்களில் சிலர் என்னை நட்பு வட்டத்திலிருந்து நீக்கியிருக்கிறார்கள். தெரியாதவர்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. ஆனால் பல வருடங்களாக நான் தொடர்ந்து வரும் சதீஷ்குமார் ஜோதிடர் மற்றும் அகநாழிகை பொன் வாசுதேவன் கூட இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள் என்பது தான் கொஞ்சம் வருத்தப்படச் செய்கிறது.

Unfriend செய்வது ஒருபுறம் இருக்க, நான் விடுக்கும் சிலபல நட்பு அழைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படாமலே இருக்கின்றன. சமீபத்திய உதாரணம் திரு.பெ.கருணாகரன் அவர்கள். பேக் ஐடி என்று நினைத்து நட்பு அழைப்பை ஏற்றுக்கொள்ளாமலே விட்டிருந்தார்.
ஸ்கூல் பையன் என்ற பெயரில் இயங்குவதால் பல முறை கேலி கிண்டலுக்கு ஆளானதுண்டு. பொதுவாக அதையெல்லாம் கண்டுகொள்ளாத எனக்கு நெருக்கமான நண்பர்களே கிண்டல் செய்யும்போது கொஞ்சமே கொஞ்சம் உறுத்துகிறது. பிடித்த பத்து புத்தகங்களைப் பற்றிய தொடர்பதிவு வந்தபோது கூட நெருங்கிய நண்பர் என்னை tag செய்து கிண்டல் செய்திருந்தார். அதைத் தொடர்ந்து வந்திருந்த பின்னூட்டங்களிலும் நண்பர்கள் கிண்டல் செய்திருந்தனர். பரவாயில்லை. ஸ்க்ரீன்ஷாட் காண்பித்து அவர்களது மனதைப் புண்படுத்த விரும்பவில்லை.

சில நாட்களுக்கு முன் என் மனைவிக்கு ஒரு முகநூல் கணக்கு தொடங்கிக் கொடுத்தேன். அடிப்படைத் தகவல்களை உள்ளீடு செய்யும்போது “Married to” என்ற பகுதியில் ஸ்கூல் பையன்னா எழுதறது என்று அவள் கேட்டபோது கொஞ்சம் ஜெர்க் ஆனேன். J

சீரியசான சில இடங்களில் பின்னூட்டம் இடுவதில் சிக்கல்கள் இருக்கின்றன. பல இடங்களில் இறங்கி விளையாட முடியவில்லை. ஓரமாக நின்று வேடிக்கை மட்டுமே பார்க்கமுடிகிறது. இரண்டு வருடங்களுக்கு முன் தமிழ் அமுதன் அவர்களது பதிவுக்கு பின்னூட்டம் எழுதியதில் பின்னால் வந்த பெண்மணி ஒருவர் “முட்டாப்பயலே, ஒழுங்கா படிச்சிட்டு வா” என்று எனக்கு பதில் கொடுத்திருந்தார்.

சொந்தப்பெயர் இருக்க எதற்கு புனைபெயரில்(!!) எழுதவேண்டும்? இதுபற்றிய ஒரு தனிப்பட்ட விவாதத்தில் நண்பர்கள் சிலர் ஸ்கூல் பையன் என்ற பெயர் நிலைத்துவிட்டது, இனி மாற்றவேண்டியதில்லை என்கின்றனர். ஆனால் பின்னாளில் நான் நடிக்கப்போகும், உதவி இயக்குனராக வேலை செய்யப்போகும் சில குறும்படங்களில் என்ன பெயர் வைப்பது? இவ்வளவு ஏன், நானே ஒரு புத்தகம் எழுதினால் என்ன பெயரில் எழுதுவது?

இவ்வாறாக சில கேள்விகள் மனதைக் குடைய சொந்தப் பெயரிலேயே எழுதுவது என்று தீர்மானித்துவிட்டேன். இது சொந்தப் பெயரிலேயே எழுதலாமா வேண்டாமா என்ற விவாதத்துக்காக இல்லை. ஆரம்பத்திலேயே செய்திருக்கவேண்டும்.

Profile-இல் பெயர் மாற்றுவதற்காக ஒரு பதிவா என்று கேட்காதீர்கள். சத்தமில்லாமல் பெயர் மாற்றிய பதிவர்களால் பலமுறை குழம்பியிருக்கிறேன். இதே நிலை என் பதிவுகளைப் படிப்பவர்களுக்கு வரவேண்டாம்.

ஆக, சரவணகார்த்திகேயன் என்ற சொந்தப் பெயரைக் கொஞ்சம் மாற்றி எழுத்துலகுக்காக “கார்த்திக் சரவணன்” என்று மாற்றிக்கொள்கிறேன். நாளை முதல் பெயர் மாற்றம் செய்கிறேன். மனதில் ஏற்றிக்கொள்ளுங்கள். அல்லது மூன்று முறை சொல்லுங்கள்:

கார்த்திக் சரவணன்
கார்த்திக் சரவணன்
கார்த்திக் சரவணன்