நல்லார் ஒருவர் உளரேல்!
Monday, August 11, 2014
Posted by கார்த்திக் சரவணன்
நான் எப்போதும் அலுவலகத்துக்கு என் இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்வதில்லை. வீட்டிலிருந்து வேளச்சேரி ரயில்நிலையம் வரை மட்டுமே. ரயில்நிலையத்திலிருக்கும் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து முண்டகக்கண்ணியம்மன் கோவில் வரை ரயில் பயணம். அங்கிருந்து ஐந்து நிமிட நடை. அவ்வளவே. ஒரு மணி நேரத்திற்குள் அலுவலகம் சென்றுவிடலாம். ஏதாவது வெளிவேலை இருப்பின் வண்டியை எடுத்துச் செல்வதுண்டு. இப்படித்தான் கடந்த புதன்கிழமை ஒரு சொந்த வேலையாகவும் வியாழனன்று பதிவர் துளசிதரன் இயக்கிய குறும்படம் வெளியீடு இருந்ததாலும் வெள்ளியன்று தி.நகரில் ஒருவரை சந்திக்க இருந்ததாலும் தொடர்ந்து மூன்று நாட்கள் வண்டியிலேயே வரவேண்டியதாயிற்று. இப்படி தொடர்ச்சியாக வந்ததில் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்கத் தவறிவிட்டேன்.
சதுரங்க வேட்டை
Tuesday, July 22, 2014
Posted by கார்த்திக் சரவணன்
ஞாயிறன்றே பார்த்துவிட்டேன். பீனிக்ஸ் மாலில் ஆன்லைனில் புக் செய்யலாம் என்று போனால் முதல் வரிசை சீட்கள் மட்டுமே இருந்தன. சப்தம் அதிகமாக இருக்கும், மகள் பயப்படுவாள். மேலும் கழுத்து வலி ஏற்படும் என்பதால் ஆன்லைன் புக்கிங்கைத் தவிர்த்துவிட்டு ஆப்லைனில் ஆளைப்பிடித்து காலை 11.50 மணி காட்சி பார்த்தாயிற்று.
பிசினஸ் பிரென்ட்ஷிப்பை முறிக்கும்!
Monday, July 14, 2014
Posted by கார்த்திக் சரவணன்
அது இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு என்று நினைவு. அலுவலக நண்பர் ஒருவர் திடீரென்று வேலையை விட்டுவிட்டார். தொன்னூறு நாட்கள் Notice Period உண்டு. அதையும் இறுதிக் கணக்கில் கழித்துக்கொள்ளச் சொல்லிவிட்டார். அவர் வேலையை விடுவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே சரியாக வருவதில்லை. ஏதோ சொந்தத் தொழிலில் இறங்கிவிட்டார் என்று கேள்விப்பட்டிருந்தேன். "இப்பவே அவருக்கு நாப்பதாயிரம் வருதாம், அடுத்த வருஷம் ஒரு லட்சம் வருமாம்" என்று பலர் பொறாமைப்பட்டிருந்தனர்.
நான்சி
Monday, June 30, 2014
Posted by கார்த்திக் சரவணன்
அவள் பெயர் நான்சி. அவளுடன் வாக்கிங் வருபவர் அப்படித்தான் அழைப்பார். தினமும் காலை ஆறு மணிக்கெல்லாம் அவருடைய குரலைக் கேட்கமுடியும். நான்சி எங்காவது நின்றுவிட்டால் "நான்சி கமான்" என்பார். சாலையில் கிடக்கும் தேவையில்லாத வஸ்துக்களை அவள் முகர்ந்தால், "நான்சி டோன்ட்" என்பார். அவளும் அவருடைய சொல்பேச்சைத் தட்டமாட்டாள். அவர்கள் வீடு இருக்கும் தெருவிலிருந்து இரண்டு தெருக்கள் தாண்டித்தான் நான் வசிக்கிறேன். என் இருப்பிடத்தைக் கடந்துசென்று தெருமுனையிலிருக்கும் கடையில் அவர் தினமும் தேநீர் குடிப்பார். நான்சிக்கு பிஸ்கட்.
பத்து கேள்விகளுக்கு சீரியஸ் பதில்கள்
Wednesday, June 25, 2014
Posted by கார்த்திக் சரவணன்
இதுவரை இந்த தொடர்பதிவுக்கு மூன்றுபேர் அழைத்துவிட்டார்கள். திரு.சம்பந்தம் (சொக்கன் சுப்பிரமணியன்) அவர்கள், சாமானியன் மற்றும் நண்பர் தமிழ்வாசி பிரகாஷ். எழுதலாமா வேண்டாமா என்று என்று நினைத்திருந்த எனக்கு வெறும் பத்து கேள்விகள் தானே முயற்சி செய்வோம் என்று தொடங்கியதில் ஒரு சீரியஸ் பேட்டி கண்டது போலாகிவிட்டது. சீரியஸ் பேட்டி என்பதைவிட ஒரு சுய பரிசோதனை பதிவாகிவிட்டது. எல்லா கேள்விகளுக்கும் பதில்கள் சொந்த அனுபவங்களால் கொஞ்சம் சீரியசாகவே இருக்கும் என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.
பயணம்...!
Monday, June 09, 2014
Posted by கார்த்திக் சரவணன்
அலுவலகம் முடிந்து வெளியே வந்தபோது மணி பத்தைக் கடந்திருந்தது. நான் எப்போதெல்லாம் ஊருக்குப் போகவேண்டும் என்று திட்டமிடுகிறேனோ அப்போதெல்லாம் ஏதாவது முக்கியமான வேலையில் மாட்டிக்கொள்கிறேன். நல்லவேளையாக மனைவி கேட்டபோது கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வரவேண்டாம் என்று சொல்லியிருந்தேன். அவள் வந்திருந்தால் அனாவசிய அலைச்சல், டென்ஷன். இனி கடலூர் செல்வதென்றால் காலையில்தான் புறப்படவேண்டும். இப்போதே போகலாம்தான். ஆனால் நடுராத்திரியில் ஊர் ஊராக அலைவதில் எனக்கு விருப்பமில்லை. காலை ஐந்து மணிக்கு கிளம்பினால் பத்து மணிக்குள் சென்றுவிடலாம்.
பிறந்த நாள் Surprise!
Wednesday, May 14, 2014
Posted by கார்த்திக் சரவணன்
அலுவலக நண்பர் ஒருவருக்கு பிறந்த நாள். இன்றல்ல, ஏப்ரல் 22ஆம் தேதி. நண்பர்களின் பிறந்த தினம் என்றால் அலுவலக கேண்டீன் அல்லது வராண்டாவில் வைத்து நெருங்கிய நண்பர்கள் மட்டும் புடைசூழ கேக் வெட்டுவது வழக்கம். வேறு யாருக்கும் சொல்லிக்கொள்வதில்லை. அன்றும் அதேபோல் தான் அரங்கேறியது. கடந்த மூன்று வருடங்களாக இதையே நாங்கள் செய்வதால் பிறந்தநாள் காண்பவருக்கு surprise என்பது இல்லாமலே போய்விட்டது. அதற்கு முன்னால் ஒரு விஷயம். எனது நெருங்கிய நட்பு வட்டத்தில் எனக்குத்தான் முதல் பிறந்த நாள். ஏப்ரல் பதினேழு, அடுத்ததாக ஏப்ரல் இருபத்திரண்டு, மே ஏழு, ஒன்பது மற்றும் இருபத்தேழு. என்னுடைய பிறந்த நாளை யாரும் கண்டுகொள்வதே இல்லை. காரணம் யாருக்கும் ஞாபகம் இருப்பதில்லை. புது வருடம் தொடங்கி முதல் பிறந்த நாள் என்னுடையது என்பதாலோ என்னவோ. நானும் என் பிறந்த நாளன்று அதிகம் propoganda செய்வதில்லை. அதிலும் எனக்கு விருப்பமும் இல்லை. இவர்களெல்லாம் நெருங்கிய நண்பர்களா என்று திட்டுகிறீர்களா? திட்டிக்கொள்ளுங்கள்.
Subscribe to:
Posts (Atom)