திருடா திருடா
Thursday, April 03, 2014
Posted by கார்த்திக் சரவணன்
"முருகா, எனக்கு வேலை கிடைச்சிருச்சுடா" மகிழ்ச்சி பொங்கச் சொன்னான் ரவி. இந்தச் செய்தி எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. என் முகம் மாறியதை அவன் கவனித்திருந்தான். "அப்போ இனிமே நீ வரமாட்டியா?" என்றேன். "டேய், வேண்டாம்டா நீயும் ஏதாவது வேலை தேடிக்கோ, அதுவரைக்கும் நான் உனக்கு சோறு போடுறேன். எவ்வளவு நாளானாலும் சரி. நான் பாத்துக்கறேன்" என்றான்.
ஆச்சி எனும் சகாப்தம்
Tuesday, April 01, 2014
Posted by கார்த்திக் சரவணன்
அந்த சனிக்கிழமை இரவு ஒன்பது முப்பது மணிக்கு அம்மாவிடமிருந்து போன். "கோமதி ஆச்சி போய்ட்டாங்க சரவணா" அம்மாவின் கண்களில் கண்ணீர் உகுத்திருப்பது குரலில் தெரிந்தது. "என்னம்மா ஆச்சு?" மீதி விவரங்களைக் கேட்டுக்கொண்டேன்.
யோசிக்கவேயில்லை. உடனடியாக கால் டாக்சிக்கு போன் செய்தேன், கோயம்பேடு சென்றாகவேண்டும். மனைவி குழந்தைகளுடன் அந்த நேரத்தில் அதுவும் பேருந்தில் செல்வது அசௌகர்யம் என்பதால் நான் மட்டும் பயணப்பட்டேன். விசாரித்ததில் ராஜபாளையத்துக்கு எந்தப் பேருந்தும் இல்லை, முதலாவதா நின்றுகொண்டிருந்த தனியார் பேருந்தில் மதுரைக்குப் புறப்பட்டேன்.
கலர் பென்சில் - 03.03.2014
Monday, March 03, 2014
Posted by கார்த்திக் சரவணன்
பதிவர் சந்திப்பு
இந்த வருடம் தொடங்கியது முதலே பதிவர் சந்திப்பாகத்தான் கழிந்துகொண்டிருக்கிறது. ஜன.1 ஆம் தேதி எங்கள் ப்ளாக் கௌதமன் சார் சென்னையில் சந்திப்பதாக முகநூலில் அழைப்பு விடுக்க, நான், வாத்தியார் பால கணேஷ், கோவை ஆவி, சீனு, ரூபக் ராம் ஆகியோர் குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்திக்க அடுத்தடுத்து பதிவர்களின் புத்தக வெளியீடு, புத்தகத் திருவிழா என்று நேற்று பதிவர் சேட்டைக்காரன் அவர்களின் சென்னை விஜயம் வரை இந்த ஆண்டு பதிவர் சந்திப்பாகத்தான் சென்றுகொண்டிருக்கிறது.
இப்படிக்கு இறந்துபோனவன்
Thursday, February 27, 2014
Posted by கார்த்திக் சரவணன்
இந்தக்கதையை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் நேரம் நான் இறந்துபோயிருப்பேன். காரணம் - விரக்தி. தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு என்ன விரக்தி என்று கேட்கிறீர்களா? மேற்கொண்டு படியுங்கள்.
எனக்கு உடலில் சிறு பிரச்சனை. சிறு பிரச்சனை தான். ஆனாலும் பலரும் அதைப் பெரிய விஷயமாக பூதாகரமாக்கி இது பெரும் பிரச்சனைதானோ என்று என்னை என்னிடமே கேள்வி கேட்கவைத்துவிடுகிறார்கள். எனக்கு வலது காலை விட இடது கால் உயரத்திலும் பருமனிலும் கொஞ்சம் சிறியது. ஆம், போலியோ பாதித்திருக்கிறது. சில காலங்களுக்கு முன் ஊனமுற்றவன் என்றும் சம காலத்தில் மாற்றுத்தினாளி என்றும் அழைக்கப்பட்ட ஏராளமானோரில் நானும் ஒருவன்.
தாத்தா
Monday, January 27, 2014
Posted by கார்த்திக் சரவணன்
என் தாத்தாவை எனக்கு எப்போதிலிருந்து பரிச்சயம் என்று தெரியாது. ஆனால் அம்மா சொல்லுவார், நான் பிறந்ததும் முதல்முறையாக என் தாத்தாவின் கையில் தான் கொடுக்கப்பட்டேன் என்று. என்னைக் கையில் வாங்கியதும், "பேரப்புள்ள" என்று மகிழ்ந்து கொஞ்சியவர். அவருடைய மகிழ்ச்சிக்கு நான் தான் முதல் பேரக்குழந்தை என்பது கூட காரணமாக இருக்கலாம்.
வீரம்
Friday, January 10, 2014
Posted by கார்த்திக் சரவணன்
ஒட்டன்சத்திரத்தில் அஜித்தும் அவரது தம்பிகள் நான்கு பேரும் திருமணம் செய்யவேண்டாம் என்ற முடிவுடன் பிரம்மச்சாரிகளாகவே வாழ்ந்து வருகிறார்கள். காரணம் பெண் ஒருத்தி வீட்டுக்குள் வந்தால் அவள் ஒற்றுமையாக வாழும் ஐந்து பேரையும் பிரித்துவிடுவாள் என்று நினைக்கிறார்கள். அவர்களில் இரண்டு தம்பிகள் இரண்டு வேறு பெண்களைக் காதலிக்க அவரியாகது காதலுக்கு அஜித் பச்சைக்கொடி காட்டவேண்டும் என்றால் அவர் யாரிடமாவது காதல்வயப்படவேண்டும் என்று கோவில் வேலையாக ஊருக்கு வந்திருக்கும் தமன்னாவைக் கோர்த்துவிடுகிறார்கள். அஜித்தும் சகோக்களும் பொதுவாகவே வந்த சண்டைக்கு வாள் எடுப்பவர்கள். பக்கா அகிம்சாவாதியான தமன்னாவிடம் தான் சண்டை சச்சரவுக்குப் போகாதவன் என்று சொல்லி காதலிக்கிறார்.
கொஞ்சம் லேட்டா திரும்பிப் பார்க்கிறேன்
Tuesday, January 07, 2014
Posted by கார்த்திக் சரவணன்
திரும்பிப் பார்க்கிறேன்கிற பதிவு எழுதி நண்பர் ராஜபாட்டை ராஜாவும் ராஜி அக்காவும் என்னை கோர்த்து விட்டிருந்தாங்க. ஆனா பாருங்க, அதிகமான வேலை மற்றும் சோம்பல் காரணமா எழுத முடியாம போச்சு. வருஷமும் முடிஞ்சு போச்சு, இருந்தாலும் எழுதலைன்னா நண்பர்கள் கோவிச்சுப்பாங்க அப்படிங்கறதால இதோ, இந்தப்பதிவு.
Subscribe to:
Posts (Atom)