பரபரப்பான பதினைந்து நிமிடங்கள் - உண்மைச்சம்பவம்
Monday, May 20, 2013
Posted by கார்த்திக் சரவணன்
பரபரப்பான பதினைந்து நிமிடங்கள் - உண்மைச்சம்பவம்
கடந்த மாதத்தில் ஒருநாள் மாலை. வழக்கம்போல நான் பதிவுகளைப் படித்து பின்னூட்டங்கள் டைப் அடித்துக் கொண்டிருந்தேன். என் வீட்டம்மா குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு வாக்கிங் செல்வதாகச் சொன்னார்கள், நானும் வழக்கம்போல முகத்தைக்கூடத் திருப்பாமல் மண்டையை மட்டும் ஆட்டினேன். அவர்கள் போய் கொஞ்சநேரம் கூட ஆகவில்லை. காலிங் பெல் அடிக்கும் சத்தம். அடடடா யார்றா அது டிஸ்டர்பன்ஸ் என்று மனதில் திட்டிக்கொண்டே கதவைத் திறந்தேன். பக்கத்து வீட்டுப் பெண்.
முகத்தில் லேசான பதட்டம், அதை நான் கவனிக்கவில்லை. "அவ வாக்கிங் போயிருக்காளே" என்றேன். "!@#$%^&*()_+{}|":><?" பீகாரி கலந்த ஹிந்தியில் ஏதோ சொன்னார். எனக்கு ஹிந்தி என்பது "ஏக் காவ் மே ஏக் கிஸான்" என்ற அளவுக்கே என்பதால் எனக்கு ஒன்றும் புரியவில்லை.அவர் அப்படி இப்படி என்று ஒரு ஐந்து நிமிடம் விளக்கி எனக்குப் புரியவைத்துவிட்டார். அவருடைய இரண்டு வயது மகளுக்கு கண்ணில் ஏதோ பிரச்சனை, உடனே வந்து பார்க்கவேண்டும் என்று புரிந்துகொண்டேன்.
அவர்கள் இருக்கும் வீடு எங்கள் வீட்டுப் பக்கத்தில் இரண்டாவது மாடியில் தான் இருக்கிறது. அந்தப்பெண் முன்னால் செல்ல நான் பின்னால் நடக்க ஆரம்பித்தேன். பிரச்சனை மிகவும் பெரிது என்று அவர் படியேறும் வேகத்தை வைத்துப் புரிந்துகொண்டேன். நானும் வேகமாகப் படியேறி அவரது வீட்டுக்குள் செல்ல ஹாலில் இருக்கும் சோபாவில் அவருடைய இரண்டு வயது மகள் அமைதியாகப் படுத்திருந்தாள்.
மீண்டும் அவர் பீகாரி கலந்த இந்தியில் ஏதோ சொல்ல முயல, "நான் பாத்துக்கறேன்" என்று கூறிவிட்டு குட்டிப்பெண்ணுக்கு வலதுபக்கம் அமர்ந்தேன், அவளது அம்மா இடதுபுறம் அமர்ந்துகொண்டார். குழந்தையின் கண்களை ஆராய்ந்தேன். கண்ணில் ஒன்றும் பிரச்சனையில்லை, தேனில் மிதக்கும் திராட்சைப்பழம் போல பளபளப்பாக இருந்தது. "நல்லாத்தானே இருக்கு?" என்றேன். மூக்கில் கைவைத்து சோதித்துப் பார்க்குமாறு சைகை கொடுத்தார். "ஆங்கோ மே"னு சொன்னீங்களே, மூங்கோ மேனு சொல்ல வேண்டியதுதானே" என்று சொல்லிவிட்டு குழந்தையின் மூக்கில் டார்ச் அடித்துப் பார்த்தேன். உள்ளே சீவிய பென்சிலின் துகள் போல எதுவோ இருந்தது.
எனக்குப் புரிந்துவிட்டது. குழந்தை விளையாட்டாக பென்சில் சீவிய துகள்களை மூக்கில் போட்டிருக்கிறாள். அது மூக்கின் துளையில் சென்று ஒட்டிக்கொண்டது. அவளது அம்மா அதை எடுக்கிறேன் பேர்வழி என்று காது குடையும் பஞ்சைக் கொண்டு எடுக்க முயல, துகள் மேலும் உள்ளே சென்றுவிட்டது. நான் மீண்டும் டார்ச் அடித்து குனிந்து பார்க்க, குழந்தையின் அம்மாவும் குனிந்து பார்க்க எங்களது தலை லேசாக முட்டிக்கொண்டது. "சாரி" என்று சொல்லிவிட்டு நான் மெல்லத் திரும்ப, வாசலில் என் மனைவி இடுப்பில் கை வைத்தபடி எங்களை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
இங்கே தான் பரபரப்பான பதினைந்து நிமிடங்கள் ஆரம்பிக்கப்போகிறது, என் மனைவி என்னை அடித்து, துவைத்து, பிழிந்து, காயப்போட்டு க்ளிப் மாட்டி விட்டாள் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. வாசலில் நின்றிருந்த என் மனைவி நிலைமையை சரியாகப் புரிந்துகொண்டு பிரச்சனைக்கான தீர்வை மடமடவென்று சொல்ல ஆரம்பித்தாள். இது காது மூக்கு தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சனை, எனவே இஎன்டி ஸ்பெஷலிஸ்டிடம் போகவேண்டும் என்று. பக்கத்தில் என்று பார்த்தால் எனக்குத் தெரிந்து சாந்தோமில் ஒரு டாக்டர் இருக்கிறார், ஆனால் எனக்கு சரியான இடம் தெரியாது என்றேன். உடனடியாக நேரத்தை வீணாக்காமல் வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் டாக்டர் பி.வி.ராமன் அவர்களிடம் செல்வதென்று முடிவாயிற்று. அவர் பொது மருத்துவர்தான், இருந்தாலும் அவர் அருகில் இருக்கும் இஎன்டி டாக்டரை பரிந்துரைப்பார் என்பதால் அவரிடம் செல்ல முடிவெடுத்தோம்.
உடனடியாக சற்றும் காலம் தாமதிக்காமல் என்னுடைய இருசக்கர வாகனத்தில் முன்னால் குழந்தையை உட்காரவைத்துக்கொண்டு புறப்பட்டேன். அடுத்த இரண்டு நிமிடங்களில் டாக்டர் பி.வி.ராமன், உள்ளே நோயாளி ஒருவர் உட்கார்ந்திருக்க, வெளியேயும் கூட்டம். எதையும் பொருட்படுத்தாமல் "டாக்டர், எமர்ஜென்சி" என்று உள்ளே நுழைந்தேன், விஷயத்தை சுருக்கமாகச் சொன்னேன். அவர் உடனடியாக மயிலாப்பூர் ஜெயின் கோவில் அருகே இருக்கும் இஎன்டி டாக்டர் மகேந்திரனைப் பார்க்கச்சொன்னார். அடுத்த ஐந்து நிமிடத்தில் மயிலாப்பூர் சென்றடைந்தேன். ஜெயின் கோவிலுக்கு முந்தைய கட்டிடம் டாக்டர் மகேந்திரனின் கிளினிக், மிகவும் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டேன்.
குழந்தையைத் தூக்கிக்கொண்டு உள்ளே ஓடினேன். கூட்டம் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. அங்கிருந்த அலுவலகப் பணியாளர் ஒருவரிடம் விஷயத்தைச் சொன்னேன். அவர், "டாக்டர் வேற ஒருத்தருக்கு பாத்திட்டிருக்காரு, ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணுங்க" என்றார். சரியென்று காத்திருக்க ஆரம்பித்தேன். இன்னொரு பணியாளர் அழைத்தார், "சார், பேரு சொல்லுங்க" என்றார். திருதிரு என்று விழித்தேன். "சார், குழந்தை பேரு சொல்லுங்க சார்" என்றார். "குழந்தை பேரு...." மீண்டும் திருதிரு என்று விழித்தேன். "இது உங்க குழந்தை தானே?" என்றார். "இல்லை, பக்கத்துவீட்டுக் குழந்தை" என்றேன். "அப்போ உங்க பேரு சொல்லுங்க" என்றார், சொன்னேன். அந்தப் பதட்டத்திலும் எனக்கு கவுண்டமணி வசனம் நினைவுக்கு வந்தது, "கேக்குறான் பாரு கேணப்பய மாதிரி ஒரு கேள்விய" என்று. நான் என்ன கலரு, பாப்பா என்ன கலரு, நான் பக்கா தமிழ்நாடு, பாப்பா பீகாரு, எங்க மூஞ்சியப் பாத்துமா இப்படி ஒரு சந்தேகம். மனதில் திட்டிக்கொண்டே இருந்தேன்.
கொஞ்ச நேரத்தில் டாக்டர் மகேந்திரன் அவர்களின் முன்னால் அமர்ந்திருந்தோம். "பென்சில் ஸ்லைஸ் மூக்குக்குள் போய்விட்டது, அதை எடுக்கவேண்டும்" என்றேன். கண்ணுக்குமேலே லென்ஸ் ஒன்றை வைத்துக்கொண்டு தன் நெற்றியில் கட்டியிருந்த டார்ச்சை ஆன் செய்து மூக்கில் இரண்டு விநாடிகள் அடித்துப் பார்த்தார். "ஓகே, பாப்பாவோட காலை உங்க காலால இறுக்கிப் பிடிச்சுக்கோங்க, கை ரெண்டையும் உங்க கையால பிடிச்சுக்கோங்க" என்றார். பிடித்துக்கொண்டேன், தலையை ஆடாமல் அசைக்காமல் பணியாளர் ஒருவர் பிடித்துக்கொண்டார். இதுவரை எதற்குமே அழாத அந்தக் குழந்தை இப்போது அழ ஆரம்பித்தது. நானோ இந்தியில் சமாதானம் சொல்லத் தெரியாமல் கைகளையும் கால்களையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருந்தேன்.
டாக்டர் சிறு இடுக்கி போன்ற ஒரு வஸ்துவை எடுத்தார், அதைப் பார்த்ததும் குழந்தை மேலும் வீறிட்டு அழ ஆரம்பித்தது. பணியாளர் தலையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்க டாக்டர் அந்த இடுக்கியை மூக்கினுள் விட்டு வெளியே எடுத்தார். உள்ளிருந்த பென்சில் துகள் இடுக்கியில் வந்துவிட்டது. பின்னர் மூக்கினுள் ஒரு ட்யூப் விட்டார், இன்னும் கொஞ்சம் உடைந்த துகள்கள் சளியுடன் சேர்ந்து வந்துவிட்டது. ஒரே நிமிடம்தான், வேலை முடிந்தது. ஒரே நாள் மட்டும் மூக்கில் விடுவதற்கு மருந்து எழுதிக் கொடுத்தார்.
எனக்கு அதற்குப் பிறகுதான் நிம்மதி வந்தது. டாக்டர் பீஸைக் கொடுத்துவிட்டு வெளியே வந்து மருந்தையும் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு போன் செய்து விஷயத்தை கூறியதும் அவர்கள் நிம்மதியடைந்தார்கள். பின்னர் போகும் வழியில் டாக்டர் பி.வி.ராமனிடம் நன்றி தெரிவித்துவிட்டு வீட்டுக்குச் சென்றேன்.
உங்களுக்கு போன் செய்தது யார்?
Thursday, April 25, 2013
Posted by கார்த்திக் சரவணன்
உங்களுக்கு போன் செய்தது யார்?
முன்பெல்லாம் நம் வீட்டில் லேண்ட்லைன் மட்டும்தான் இருந்தது
. ஒருவருடைய தொலைபேசி எண்ணைக் கண்டுபிடிக்கவேண்டும் என்றால் அந்தப் புத்தகத்தில் தேடுவோம். ஆனால் இப்போது லேண்ட்லைன் என்பது வழக்கொழிந்து வருகிறது. அனைவரும் செல்போன் வைத்திருக்கிறார்கள். சிலர் இரண்டு மூன்று எண்கள் வரை வைத்திருக்கிறார்கள். அனானிமஸ் மற்றும் மிரட்டல் விடுக்கும் நபர்கள், தவறான எண்ணுக்கு டயல் செய்துவிட்டு அது பெண்ணாக இருந்தால் கடலை போடும் நபர்கள் அதிகரித்துவிட்டார்கள். ஏன் நாமே சிலருக்கு நமது செல்போன் எண்ணைக் கொடுத்திருப்போம் ஆனால் நமது போனில் அவர்களுடைய எண்களை பதிவேற்றியிருக்க மாட்டோம். திடீரென்று நமக்கு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் அது யாரென்று யோசிப்போம். போனை எடுத்து பேசியபிறகு "அட, இவர்தானா" என்று நினைப்போம். இப்போது அந்தப் பிரச்சனை இல்லை. உங்கள் செல்போன் அழைக்கும்போதே அது யாருடையதென்று நொடிகளில் தெரிவிக்கும் ஆண்டிராய்ட் அப்ளிகேஷன் இருக்கிறது. அதுதான் "Truecaller - Global Directory".
உலகத்திலுள்ள தொலைபேசி எண்களில் சுமார் 80 சதவீதம் வரை இவர்களுடைய டைரக்டரியில் இருக்கிறது. அது எப்படி என்று இவர்களுடைய தளத்தில் சென்று விசாரித்தால் பல விதமான டைரக்டரிகளில் இருந்து எண்களை சேகரித்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். மேலும் ஆண்டிராய்டு மற்றும் விண்டோஸ் போன் வைத்திருப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து இவர்களுடைய டேட்டாபேஸில் தங்களுடைய போனில் இருக்கும் contact விபரங்களை அப்லோட் செய்கிறார்கள்.
எப்படி வேலை செய்கிறது? இந்த அப்ளிக்கேஷனை உங்களுடைய போனில் நிறுவிவிட்டால் போதும். ஏதாவது ஒரு எண்ணிலிருந்து போன் வரும்போது அந்த எண் உங்களது கான்டாக்ட் லிஸ்ட்-இல் இல்லையென்றால் தானாகவே தேடத்துவங்குகிறது. ஒரு சில நொடிகளில் யாரிடமிருந்து அழைப்பு வந்தது என்பதையும் சிறு விண்டோவில் காட்டிவிடுகிறது. இவர்களுடைய டேட்டாபேஸில் அந்த எண் இல்லாதபட்சத்தில் "No Matches Found" என்று காட்டிவிடுகிறது.
இந்த அப்ளிகேஷன் மூலம் ஒரு அருமையான வசதி உண்டு. தேவையற்ற அழைப்புகளை நாம் block செய்துவிடலாம். இதன்மூலம் நமக்கு வரும் வங்கி இன்சூரன்ஸ் மற்றும் பிற தேவையற்ற அழைப்புகளில் இருந்து தப்பிக்கலாம். நமக்கு எந்த எண்ணிலிருந்து அழைப்பு வரக்கூடாது என்று எண்ணுகிறோமோ அந்த எண்ணை blacklist என்ற இடத்தில் உள்ளீடு செய்தால் போதும். அந்த எண்ணிலிருந்து வரும் அழைப்பு தடுக்கப்படும். அதற்கும் இவர்கள் ஒரு பெரிய டேட்டாபேஸ் வைத்திருக்கிறார்கள். நம்மைப்போல் பயனாளர்கள் உள்ளீடு செய்த எண்களின் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டுகிறது.
இன்னுமோர் சிறப்பான விஷயம் என்னவென்றால், எப்போது வேண்டுமானாலும் எந்த எண்ணுடைய கான்டாக்ட் பெயரை வேண்டுமானாலும் நாம் சோதித்துப் பார்த்துக்கொள்ளலாம். அந்த எண் இவர்களுடைய டேட்டாபேசில் இருந்தால் போதும். உங்களுக்கு அந்த நபரின் பெயரைக் காட்டிவிடும்.
இந்த அப்ளிக்கேஷனைப் பெற என்ன தேவை?
ஆண்டிராய்ட் அல்லது விண்டோஸ் வசதியுள்ள ஸ்மார்ட்போன் மற்றும் இன்டர்நெட் இணைப்பு. இன்டர்நெட் எப்போதும் ஆன்லைனில் இருக்க வேண்டும். அப்போது தான் அழைப்பு வந்தவுடன் இந்த அப்ளிகேஷன் தனது செர்வரில் உள்ள தகவல்களைத் தேடுவதற்கு எளிதாக இருக்கும்.
மேலும் தகவல்களுக்கு www.truecaller.com என்ற முகவரியில் காணவும்..
நன்றி...
ஹோட்டல் - ZAATAR
Wednesday, April 24, 2013
Posted by கார்த்திக் சரவணன்
ஹோட்டல் - ZAATAR
சென்னையில் புதிதாகத் தொடங்கப்பட்டு கவனிப்பாரின்றி இருக்கும் சில ஹோட்டல்களில் முக்கியமானது இது. இவர்கள் தரும் சுவை மற்றும் வெரைட்டியான உணவு வகைகள். இந்த ஹோட்டலுக்குச் சென்று நான் குடும்பத்துடன் சாப்பிட்ட அனுபவத்தை இங்கே பகிர்கிறேன்.
கடந்த மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை. நம்ம வீட்டு ஸ்கூல் பையன் சிக்கன் லாலிபாப் சாப்பிடவேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டு அடம்பிடித்ததால் சரி இருக்கவே இருக்கிறது வீட்டுக்குப் பக்கத்திலேயே என்று கிளம்பிவிட்டோம். ஹோட்டல் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் யெல்லோ பேஜஸ் எதிரே உள்ள வி.எம். தெருவில் திரும்பியவுடன் இடதுபுறத்தில் இருக்கிறது. இந்த அமைப்பு தான் இந்த ஹோட்டலுக்கு ஒரு மிகப்பெரிய மைனஸ் என்றே கூறலாம். காரணம் மெயின் ரோட்டில் இல்லாத காரணம் மற்றும் அந்த இடத்தில் ஹோட்டல் இருப்பதற்கான அறிகுறியே இல்லாதது. இருந்தாலும் தற்போது மவுத்டாக் மூலம் ஓரளவு கூட்டம் சேர்ந்துவருகிறது.
நம்ம ஸ்கூல் பையனுக்கு ஆர்டர் செய்தது சிக்கன் லாலிபாப், மற்றும் ஒரு சிக்கன் நூடுல்ஸ். எனக்கு ப்ரான் பிரைட் ரைஸ் கேட்டேன், ப்ரான் பிரைட் ரைசை விட ப்ரான் செஸ்வான் பிரைட் ரைஸ் மிகவும் ஸ்பைசியாக இருக்கும் என்று சர்வர் சொல்ல அதையே எடுத்துக்கொள்ளச் சொன்னேன். வீட்டம்மா வழக்கம்போல குல்ச்சாவும் பனீர் பட்டர் மசாலாவும் ஆர்டர் செய்தார்கள்.
முதலில் வந்தது சிக்கன் லாலிபாப். எலும்பின் ஒரு பகுதியில் மட்டும் சதை இருப்பதுபோல வெட்டி மசாலா சேர்த்து பொரித்திருந்தார்கள். மறுபகுதியில் கையில் எண்ணெய் படாமல் இருக்க பேப்பர் சுற்றியிருந்தார்கள். தொட்டுக்கொள்ள சில்லி சாஸ் மற்றும் தக்காளி சாஸ். மிகவும் மொறுமொறுவென்று இருந்தது.
அடுத்ததாக ப்ரான் செஸ்வான் பிரைட் ரைஸ். மிகவும் அருமை. சாதாரண பிரைட் ரைஸ் சாப்பிட்டிருந்தால் கூட இந்த அளவுக்கு உணர்ந்திருக்க மாட்டேன். சும்மா நாக்கில் பட்டதும் சுளீர் என்றிருந்தது. சர்வரின் ஆலோசனைக்கு மிகவும் நன்றி சொல்லிக்கொண்டேன். தொட்டுக்கொள்ள சிக்கன் மசாலா மற்றும் ஆனியன் ரைத்தா கொடுத்தார்கள். மசாலா மற்றும் ரைத்தா வகைகளை எவ்வளவு வேண்டுமானாலும் முகம் சுளிக்காமல் கொடுக்கிறார்கள்.
சிக்கன் நூடுல்ஸ். சிக்கனை நன்றாக வேகவைத்து நூடுல்ஸ் சமைக்கும்போது கலந்து சமைத்திருந்தார்கள். கொஞ்சம் எண்ணெய் அதிகமாக இருந்தது. இருந்தாலும் சுவையில் குறைவில்லை.
இறுதியாக பையனுக்கும் வீட்டம்மாவுக்கும் ஆளுக்கொரு ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீமும் எனக்கு ஒரு ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்கும் ஆர்டர் செய்தோம். ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் என்பது ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீமில் பாலைக் கலந்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றித் தந்தது போல் இருந்தது. சுவையோ பிரமாதம். இவையனைத்தையும் சாப்பிட்டு முடிப்பதற்குள் வயிறு நிறைந்திருந்தது.
இவ்வளவு சாப்பிட்டும் மொத்த பில் ரூபாய் 852 மட்டுமே (!). கொஞ்சம் அதிகம் என்றாலும் தரத்துக்காகவும் சுவைக்காகவும் தாராளமாகக் கொடுக்கலாம். இங்குள்ளவர்களின் உபசரிப்பும் அருமை. ஆர்டர் எடுப்பதிலும் சரி, பரிமாறுவதிலும் சரி, மற்ற ஹோட்டல்களைப் போல ஏனோ தானோவென்று செய்யாமல் கொஞ்சம் டெடிகேட்டடாகச் செய்வது சிறப்பு.
மொத்தத்தில் ஒருமுறை வந்தவர்கள் மீண்டும் அந்தப்பக்கம் போனால் இந்த ஹோட்டலை விசிட் அடித்துவிட்டே வருவார்கள் என்பது உறுதி.
இந்த ஹோட்டலின் மற்றுமொரு சிறப்பு கிரில் சிக்கன். ஹோட்டலுக்கு வெளியே எண்ணெய் வடிய சுற்றிக்கொண்டு வருவோர் போவோரை சுண்டி இழுக்கும் ஒரு காட்சி. இங்கே நான் சென்று சாப்பிட்டதை விட பார்சல் வாங்கி சாப்பிட்டதே அதிகம். இவ்வாறு நான் பார்சல் வாங்கி சாப்பிட்ட ஐட்டங்கள் சில உங்கள் பார்வைக்காக. அசைவம் பிடிக்காதவர்கள் மன்னிக்க.
கருத்துரையிட்டு ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே....
நன்றி...
சென்னையில் புதிதாகத் தொடங்கப்பட்டு கவனிப்பாரின்றி இருக்கும் சில ஹோட்டல்களில் முக்கியமானது இது. இவர்கள் தரும் சுவை மற்றும் வெரைட்டியான உணவு வகைகள். இந்த ஹோட்டலுக்குச் சென்று நான் குடும்பத்துடன் சாப்பிட்ட அனுபவத்தை இங்கே பகிர்கிறேன்.
![]() |
| சிக்கன் லாலிபாப்புடன் |
கடந்த மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை. நம்ம வீட்டு ஸ்கூல் பையன் சிக்கன் லாலிபாப் சாப்பிடவேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டு அடம்பிடித்ததால் சரி இருக்கவே இருக்கிறது வீட்டுக்குப் பக்கத்திலேயே என்று கிளம்பிவிட்டோம். ஹோட்டல் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் யெல்லோ பேஜஸ் எதிரே உள்ள வி.எம். தெருவில் திரும்பியவுடன் இடதுபுறத்தில் இருக்கிறது. இந்த அமைப்பு தான் இந்த ஹோட்டலுக்கு ஒரு மிகப்பெரிய மைனஸ் என்றே கூறலாம். காரணம் மெயின் ரோட்டில் இல்லாத காரணம் மற்றும் அந்த இடத்தில் ஹோட்டல் இருப்பதற்கான அறிகுறியே இல்லாதது. இருந்தாலும் தற்போது மவுத்டாக் மூலம் ஓரளவு கூட்டம் சேர்ந்துவருகிறது.
நம்ம ஸ்கூல் பையனுக்கு ஆர்டர் செய்தது சிக்கன் லாலிபாப், மற்றும் ஒரு சிக்கன் நூடுல்ஸ். எனக்கு ப்ரான் பிரைட் ரைஸ் கேட்டேன், ப்ரான் பிரைட் ரைசை விட ப்ரான் செஸ்வான் பிரைட் ரைஸ் மிகவும் ஸ்பைசியாக இருக்கும் என்று சர்வர் சொல்ல அதையே எடுத்துக்கொள்ளச் சொன்னேன். வீட்டம்மா வழக்கம்போல குல்ச்சாவும் பனீர் பட்டர் மசாலாவும் ஆர்டர் செய்தார்கள்.
![]() |
| சிக்கன் லாலிபாப் |
முதலில் வந்தது சிக்கன் லாலிபாப். எலும்பின் ஒரு பகுதியில் மட்டும் சதை இருப்பதுபோல வெட்டி மசாலா சேர்த்து பொரித்திருந்தார்கள். மறுபகுதியில் கையில் எண்ணெய் படாமல் இருக்க பேப்பர் சுற்றியிருந்தார்கள். தொட்டுக்கொள்ள சில்லி சாஸ் மற்றும் தக்காளி சாஸ். மிகவும் மொறுமொறுவென்று இருந்தது.
![]() |
| ப்ரான் செஸ்வான் பிரைட் ரைஸ் |
அடுத்ததாக ப்ரான் செஸ்வான் பிரைட் ரைஸ். மிகவும் அருமை. சாதாரண பிரைட் ரைஸ் சாப்பிட்டிருந்தால் கூட இந்த அளவுக்கு உணர்ந்திருக்க மாட்டேன். சும்மா நாக்கில் பட்டதும் சுளீர் என்றிருந்தது. சர்வரின் ஆலோசனைக்கு மிகவும் நன்றி சொல்லிக்கொண்டேன். தொட்டுக்கொள்ள சிக்கன் மசாலா மற்றும் ஆனியன் ரைத்தா கொடுத்தார்கள். மசாலா மற்றும் ரைத்தா வகைகளை எவ்வளவு வேண்டுமானாலும் முகம் சுளிக்காமல் கொடுக்கிறார்கள்.
![]() |
| சிக்கன் நூடுல்ஸ் |
சிக்கன் நூடுல்ஸ். சிக்கனை நன்றாக வேகவைத்து நூடுல்ஸ் சமைக்கும்போது கலந்து சமைத்திருந்தார்கள். கொஞ்சம் எண்ணெய் அதிகமாக இருந்தது. இருந்தாலும் சுவையில் குறைவில்லை.
![]() |
| குல்ச்சாவுடன் பனீர் பட்டர் மசாலா |
இறுதியாக பையனுக்கும் வீட்டம்மாவுக்கும் ஆளுக்கொரு ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீமும் எனக்கு ஒரு ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்கும் ஆர்டர் செய்தோம். ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் என்பது ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீமில் பாலைக் கலந்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றித் தந்தது போல் இருந்தது. சுவையோ பிரமாதம். இவையனைத்தையும் சாப்பிட்டு முடிப்பதற்குள் வயிறு நிறைந்திருந்தது.
இவ்வளவு சாப்பிட்டும் மொத்த பில் ரூபாய் 852 மட்டுமே (!). கொஞ்சம் அதிகம் என்றாலும் தரத்துக்காகவும் சுவைக்காகவும் தாராளமாகக் கொடுக்கலாம். இங்குள்ளவர்களின் உபசரிப்பும் அருமை. ஆர்டர் எடுப்பதிலும் சரி, பரிமாறுவதிலும் சரி, மற்ற ஹோட்டல்களைப் போல ஏனோ தானோவென்று செய்யாமல் கொஞ்சம் டெடிகேட்டடாகச் செய்வது சிறப்பு.
மொத்தத்தில் ஒருமுறை வந்தவர்கள் மீண்டும் அந்தப்பக்கம் போனால் இந்த ஹோட்டலை விசிட் அடித்துவிட்டே வருவார்கள் என்பது உறுதி.
இந்த ஹோட்டலின் மற்றுமொரு சிறப்பு கிரில் சிக்கன். ஹோட்டலுக்கு வெளியே எண்ணெய் வடிய சுற்றிக்கொண்டு வருவோர் போவோரை சுண்டி இழுக்கும் ஒரு காட்சி. இங்கே நான் சென்று சாப்பிட்டதை விட பார்சல் வாங்கி சாப்பிட்டதே அதிகம். இவ்வாறு நான் பார்சல் வாங்கி சாப்பிட்ட ஐட்டங்கள் சில உங்கள் பார்வைக்காக. அசைவம் பிடிக்காதவர்கள் மன்னிக்க.
| கிரில் சிக்கன் |
| சிக்கன் பிரியாணி |
| சிக்கன் பிரைட் ரைஸ் |
| சிக்கன் 65 |
![]() |
| சில்லி சிக்கன் |
![]() |
| சிக்கன் ஸ்பிரிங் ரோல் |
![]() |
| கிரில் சிக்கன் |
| தொட்டுக்கொள்ளும் ஐட்டங்கள் |
![]() |
| தொட்டுக்கொள்ளும் ஐட்டங்கள் |
கருத்துரையிட்டு ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே....
நன்றி...
திருமதி தமிழ் - சினிமா விமர்சனம்
Sunday, April 21, 2013
Posted by கார்த்திக் சரவணன்
திருமதி தமிழ் - சினிமா விமர்சனம்
நண்பர்களுடன் சேர்ந்து அதுவும் ப்ளாக்கர் நண்பர்களுடன் சேர்ந்து படம் பார்ப்பதென்பது ஒரு உன்னதமான அனுபவம். அதுவும் இதுபோன்ற புரட்சிகரமான காவியப் படங்களை விசிலடித்து, கத்தி ஆர்ப்பரித்துப் பார்ப்பதில் அலாதி ஆனந்தம். இந்த ஆனந்தத்தை அனுபவிப்பதற்காகவே சென்ற வாரம் சீனு என்னை சனிக்கிழமை மதியக் காட்சிக்கு போகலாம் என்று அழைத்தவுடன் கொஞ்சம் கூடத் தயங்காமல் சம்மதித்தேன். அதன்படி நேற்று மதியம் நானும் சீனுவும் மதியம் 2.15 மணிக்கு ராயப்பேட்டை உட்லேண்ட்ஸ் தியேட்டரில் ஆஜர். எங்களுக்கு முன்பாகவே மெட்ராஸ்பவன் சிவகுமாரும் மின்னல் வரிகள் பாலகணேஷும் வந்து காத்திருந்தார்கள். சிறிது நேரத்தில் அஞ்சா சிங்கமும் அரசனும் வர அரங்கினுள் நுழைந்தோம்.
நீண்ட காலம் கழித்து ராஜகுமாரன் எழுதி இயக்கியிருக்கும் படம் என்பதாலும் தானே கதாநாயகன் என்பதாலும் இது அவரது மனைவி தேவயானியின் 75ஆவது படம் என்பதாலும் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. மேலும் டிரைலர்கள் மற்றும் பேஸ்புக்கில் பார்த்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் திரைப்படம் எப்படி இருக்கும் என்பதற்கான அறிகுறிகளை அறிவித்திருந்தது. சாம்பிளுக்கு இணையத்தில் வந்த படங்களை கவிதை வீதி சௌந்தர் அவர்களின் இந்தப் பதிவைப் பார்க்கவும்.
இனி படத்தைப் பற்றி....
தொண்ணூறுகளில் இயக்குநர் அவதாரம் எடுத்த தொண்ணூறு பேரில் எண்பத்தொன்பது பேர் கதாநாயகனாகி ரிட்டயர் ஆகிவிட கடைசியாகக் களமிறங்கியிருக்கும் நம்ம அண்ணன் சோலார் ஸ்டார் ராஜகுமாரன் அவர்களின் தைரியத்தை மனம் திறந்து பாராட்டியே ஆக வேண்டும். விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தையே தன் காதல் கடிதமாக உபயோகித்து தேவயானியின் ராஜகுமாரனாக ஆனவர் இந்தப்படத்தின் மூலம் தேவதாஸ் ஆனால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
கதையைப் பற்றிச் சொன்னால் சஸ்பென்ஸ் குறைந்துவிடும் என்பதாலும் தியேட்டருக்கு வரும் பத்து பேரும் வராமல் போய்விடும் அபாயம் இருப்பதாலும் மற்ற விஷயங்களைப் பற்றி மட்டும் பார்ப்போம்.
படம் தொடங்கியதும் போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ் அதிகாரிகளிடம் அடி வாங்குகிறார். ஒன்று, இரண்டு, மூன்று என அவர் அடி வாங்குவதைப் பார்க்கும்போது நம் நெஞ்சு பதைபதைக்கிறது. நான்காவது அடிக்குள் அவர் எழுந்து போலீசாரைப் பந்தாடும்போது தியேட்டரிலிருந்த பத்துபேரில் எட்டுபேர் விசிலடிக்கிறார்கள். பின்னர் அவரை துப்பாக்கி முனையில் பிடித்து கட்டி கடலில் வீசி எறிகிறார்கள். இப்படி ஆரம்பமே அதகளப்படும்போது நம்மால் இருக்கை நுனியை விட்டு நகர முடியவில்லை.
கதாநாயகன் ராஜகுமாரன் இரண்டு இன்ச்சுக்கு மேக்கப் போட்டிருக்கிறார், அதிலும் அவர் உபயோகித்திருக்கும் லிப்ஸ்டிக் கருஞ்சிவப்பு நிறத்தில் ஜொலிக்கிறது. படம் முழுவதும் நீலநிற முண்டா பனியன் மேல் திறந்துவிடப்பட்ட சட்டையும் நீல நிற பேண்ட்டுமாக அலைகிறார். சாக்கடையில் நனைந்து கருப்பு நிற சாயத்தில் மிகவும் அழகாக இருக்கிறார். பாடல் காட்சிகளில் பல ரூபங்களில் தோன்றி நம்மை பயமுறுத்துகிறார். அதிலும் அவர் வசனம் பேசும் காட்சிகள்... ஆஹாஹா.. எந்த உணர்ச்சியும் இல்லாமல் உரைநடை வாசிப்பதுபோல் வாசிக்கிறார். அதிலும் புருஷன், வருஷம், விஷயம் என்பதை புருசன், வருசம், விசயம் என்று உச்சரிக்கிறார். ஏண்ணே, உங்களுக்கு "ஷ" வே வராதா?
நாயகியாக தேவயானி மற்றும் கீர்த்தி சாவ்லா. தேவயானி ஸ்கூல் படிக்கும் பெண்ணாம். முகத்தில் சுருக்கங்களை மறைக்க முடியவில்லை, பாவாடை சட்டை போட்டு வலம் வருகிறார், சிரிக்கும்போது தன் முயல் பற்களைக் காட்டி பயமுறுத்துகிறார். மாமா மாமா என்று நாயகனிடம் உருகி வழிகிறார். வக்கீலாக இன்னொரு வேடத்திலும் நடித்து தன் பங்குக்கு கடமையாற்றியிருக்கிறார். அதிலும் நீதிமன்றக் காட்சிகளில் அவர் பேசும் வசனங்களுக்கு அரங்கத்திலுள்ள பத்துபேரும் கைதட்டுகிறார்கள். இன்னொரு நாயகியாக கீர்த்தி சாவ்லா, நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தாலும் படத்தின் ஓட்டத்தில்(!) அவர் கவனிக்கப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
மலேசியா வாசுதேவன், டெல்லி கணேஷ், மதன்பாப், பாத்திமா பாபு, ரமேஷ் கண்ணா, பப்லு, சிங்கமுத்து, மனோகர், தலைவாசல் விஜய், லிவிங்ஸ்டன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஆனால் தேவயானி ராஜகுமாரன் தம்பதியின் ஆளுமையால் யாருடைய நடிப்பையும் ரசிக்க முடியவில்லை. இசை எஸ் ஏ ராஜ்குமர். பாடல்கள் கேட்பதற்கு நன்று, ஆனால் படமாக்கப்பட்ட விதம் பாடல்களை ரசிக்கவைக்கவில்லை. பின்னணி இசையில் லலலா....லாலா மிஸ்சிங்.
படு அபத்தமான கதை, அதைவிட அபத்தமான திரைக்கதை, மோசமான காஸ்டிங், இசை, திடீர் திடீரென வரும் பாடல்கள், சாதாரண கேரக்டர் கூட முழ நீளத்துக்கு வசனம் பேசுவது என்று நம்மைக் கிறங்கடிக்கிறார்கள். இதில் ஒரு புதுமையான கருத்தை வேறு சொல்லியிருக்கிறார்கள். மணமக்களின் தாய் தந்தை தவிர்த்து திருமண மண்டப ஓனர், பாத்திரக்காரர், சமையல்காரர், ஐயர், கக்கூஸ் கழுவுபவர் வரை மணப்பெண்ணுக்கு சம்மதமா என்று விசாரித்த பின்னரே தங்களது பணிக்கு ஒத்துக்கொள்ள வேண்டும் என்று. கொடுமைடா சாமி....
மொத்தத்தில் தூக்கு போட்டோ, விஷம் சாப்பிட்டோ, உயரமான கட்டிடத்தில் இருந்து குதித்தோ அல்லது வேறு வழிகளில் தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பவர்கள் மாற்று வழியாக இந்தப்படத்தைப் பார்த்து முயற்சிக்கலாம்.
திருமதி தமிழ் விமர்சனம் படிக்க
கவிதை - காலும் அரையும்
Wednesday, March 20, 2013
Posted by கார்த்திக் சரவணன்
காலில் அரை
காது வரை என
காலம் செல்ல
காலில் அரை
கால் மணி நேரமே
என்றாகி
காலில் அரை
காலாய் வளர்ச்சியுற்று
காலே மிதமாகி
காலங்களைக் கடந்து
அரையே உருவானதே
அதுவே முழுதாய்
அதரம் கொண்டதே
அரையும் போதாமல்
காலைக் கேட்கிறதே
அழுகும் குடலும்
அலறும் சிறுநீரகமும்
அவனைக் சபிக்கிறதே
ஆபிஸ் போகும் நீ
ஆம்புலன்ஸில் ஆஸ்பத்திரி போக
அல்லது
மயக்கத்தில் மரணம் தழுவி
மண்ணுலகம் செல்ல
கொல்லும் குடியின்
கொடும்பாவி எரி
மனதில்
கல்லும் கரையும்
கனியின் வாய்மொழி கேட்டால்
முதலில்....
---------------
வத்திக்குச்சி - சினிமா விமர்சனம்
Saturday, March 16, 2013
Posted by கார்த்திக் சரவணன்
வத்திக்குச்சி - சினிமா விமர்சனம்
நேற்று வெளியான தமிழ்ப்படங்கள் இரண்டு. ஒன்று பாலாவின் பரதேசி, இன்னொன்று வத்திக்குச்சி. பரதேசி பார்க்கவேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் "அவன் இவன்" கொடுத்த அடியின் வலியே இன்னும் மறக்காத நிலையில் வத்திக்குச்சி போவதென தீர்மானிக்கப்பட்டது. ஏ ஆர் முருகதாஸ், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் இரண்டாவது படம் என்பதால் கொஞ்சம் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ஆனால் படம் நம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால் இல்லையென்றே சொல்லவேண்டும்.
படத்தின் நாயகனான திலீபன் சொந்தமாக ஒரு ஷேர் ஆட்டோ ஓட்டுகிறார். பல்லாவரம் பகுதியிலிருந்து தாம்பரத்துக்கும் வேளச்சேரிக்கும் செல்லும் அஞ்சலியை ஒருதலையாகக் காதலிக்கிறார். ஒரு நாள் இவர் ஏடிஎம் மில் இருந்து பணம் எடுத்துவிட்டு வெளியேறும்போது சம்பத் தலைமையிலான சிலர் கத்தி முனையில் பத்தாயிரம் ரூபாயை பறித்துவிடுகின்றனர். அவர்களைக் கண்காணித்து, அவர்களுடைய இடத்துக்கே சென்று அடித்துத் துவைத்து பறிகொடுத்த பணத்தைப் பிடுங்கிக்கொண்டு வந்துவிடுகிறார். போதாததற்கு சம்பத்தையும் நையப் புடைத்துவிடுகிறார். இந்த விஷயம் தெரிந்தவுடன் சம்பத்தை வைத்து காரியம் சாதிக்கும் முதலாளிகளும் சம்பத்தின் நண்பர்களும் அவரை விட்டு விலகிவிடுகிறார்கள். வேலை இல்லாததால் ஏழையாகும் சம்பத் திலீபனைக் கொல்லத் திட்டம் தீட்டுகிறார்.
ரோட்டில் யாரோ யாரையோ கொல்வதைப்பற்றி போனில் பேசுவதைக் கேட்கும் ஹீரோ திட்டமிட்டு செய்யப்படப்போகும் கொலையை திட்டமிட்டு சமயோசிதமாக செயல்பட்டு சண்டைபோட்டு தடுக்கிறார். இதனால் பெரும் நஷ்டம் அடையும் நகை வியாபாரியான ஜெயப்பிரகாஷ் ஹீரோவைக் கொல்லத்துடிக்கிறார்.
ஒரு பெரிய பணக்காரரின் மகனைக் கடத்தத் திட்டமிடும் ஜெகன் தலைமையிலான கும்பலுக்கு ஹீரோ முட்டுக்கட்டையாக இருக்க ஹீரோவைக் கொல்லத் திட்டம் தீட்டுகிறார் ஜெகன்.
ஆக மொத்தத்தில் ஹீரோவை மூன்று கும்பல் கொல்லத் துடிக்கின்றன. அந்த மூன்று கும்பல் அவரை எப்படிக் கொல்லத் திட்டமிடுகிறார்கள், அவர்களிடமிருந்து ஹீரோ தப்பித்தாரா என்பதுதான் வத்திக்குச்சி படத்தின் கதை.
இன்ஃப்ளுயன்ஸ் இருந்தால் யார் வேண்டுமானாலும் ஹீரோ ஆகிவிடலாம் என்பதற்கு இணங்க தன் தம்பியையே நடிக்கவைத்து படம் தயாரித்திருக்கிறார் ஏஆர் முருகதாஸ். திலீபன் நம்ம பக்கத்து வீட்டுப் பையன் போல இருக்கிறார். ஆனால் ஹீரோ ரோலுக்குப் பொருத்தமான முக அமைப்பு இல்லை. இயக்குநர்களே, தயவு செய்து படத்தின் கதைக்கேற்ற ஹீரோவைத் தேர்வு செய்யுங்கள். திலீபன் இனி அண்ணன், தம்பி, அடியாள், அமெரிக்க மாப்பிள்ளை போன்ற கேரக்டர்களில் நடிக்கலாம்.
ஹீரோயினாக அஞ்சலி. குண்டாக உயரமான ஒரு பெரிய மாமிச மலை போல் இருக்கிறார். அவரது குரல் வேறு இரண்டு சில்வர் பாத்திரங்களை வைத்து தேய்த்ததுபோல் கீச் கீச் என்று இருக்கிறது. அவர் வசனம் பேசும்போது நமக்கு முடி சிலிர்த்துக்கொள்கிறது. இனியாவது படங்களில் சொந்தக்குரலில் பேசாமல் இருக்கவேண்டும். ஒரு அட்வைஸ், இப்படியே போனால் மொத்தத் தமிழகமும் தங்களைப் புறக்கணிக்க நேரிடும். திருத்திக்கோங்க அம்மணி...
படம் முழுவதும் துப்பாக்கிச்சூடு, கத்திக்குத்தல், துரத்தல், சண்டை என்றே செல்கிறது. படம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை பரபரப்பாகச் செல்லவேண்டும் என்பதற்காக இயக்குநர் கின்ஸ்லின் ரொம்பவும் மெனக்கெட்டு உழைத்திருப்பது தெரிகிறது. ராஜசேகரின் சண்டைக்காட்சிகள் பிரமாதமான இருக்கின்றன. முக்கியமாக வேளச்சேரி பஸ் ஸ்டாப்பில் நடக்கும் சண்டையும் கிளைமாக்ஸில் பரங்கிமலையில் நடக்கும் சண்டையும் அதிர வைக்கின்றன. துரத்தல் காட்சிகளில் ஜெகன் கும்பல் ஹீரோவை வீட்டில் பூட்டிவைத்துவிட்டுக் காத்திருக்கும் காட்சிகள் திக் திக்.
நிறைய லாஜிக் ஓட்டைகள். உதாரணத்துக்கு ஒன்றே ஒன்று. ஹீரோவை சம்பத் கோஷ்டி கொலை செய்வதற்காக பைக்கில் கூட்டிச்செல்கிறார்கள். போகும் வழியில் போக்குவரத்துப் போலிஸ் மடக்குகிறார்கள். ஹீரோ அங்கேயே போலீசிடம் சொல்லித் தப்பித்திருக்கலாம். அதை விட்டுவிட்டு மூச்சிரைக்க ஓடிப்போய் சாப்பிட்டுவிட்டு எக்சர்சைஸ் செய்து சண்டைக்குத் தயாராகிறார். கடவுளே!
வத்திக்குச்சி - பத்திக்கவில்லை.
அருண் O -ve (சிறுகதை)
Monday, March 11, 2013
Posted by கார்த்திக் சரவணன்
அருண் O -ve
என் பெயர் அருண். நான் பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். எனது ரத்த வகை ஓ நெகட்டிவ். ரொம்பநாள் வரை எனக்கு என் பிளட் குரூப் என்னவென்றே தெரியாது. அதற்கான அவசியமும் வந்ததில்லை. காரணம் ஆண்டவன் எனக்கு ஆரோக்கியமான உடலைக் கொடுத்திருக்கிறான். கல்லூரியில் படிக்கும்போது ஒருமுறை ஒரு தனியார் மருத்துவமனையிலிருந்து ரத்ததானம் கேட்டு வந்திருந்தார்கள். ரத்தம் கொடுக்கவேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் அம்மா மறுத்துவிட்டதால் கொடுக்கவில்லை.
இந்நிலையில் நான் படித்து முடித்தவுடன் கேம்பஸ் இன்டர்வியூவில் பிரபல தனியார் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டேன். எல்லா தகுதிச் சுற்றுக்களும் முடிந்த பின்னர் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்வதற்கு அவர்களே ஒரு பெரிய மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்கள். பின்னர் ஒரு சுபயோக சுபதினத்தில் வேலைக்குச் சேர்வதாகத் தெரிவித்தேன். அன்றே அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் கொடுத்தார்கள். ஜாயின் செய்யும் நாள் அன்று எச் ஆர் டிப்பார்ட்மென்டில் மதுரைப்பாண்டியன் என்பவரைப் பார்க்குமாறு சொன்னார்கள்.
நிறுவனத்தில் சேரும் நாளன்று எச் ஆர் டிப்பார்ட்மென்டின் காத்திருக்கும் அறையில் அமர்ந்திருந்தேன். "மிஸ்டர் அருண்" என்று ஒருவர் அழைத்தார். பார்ப்பதற்கு ஒல்லியாக வெள்ளையாக இருந்தார். மீசை இல்லை, முகத்துக்கும் உருவத்துக்கும் சம்பந்தமில்லாத கண்ணாடி அணிந்திருந்தார். அவரைப் பார்த்தவுடன் எனக்குப் பிடிக்கவில்லை. "ப்ளீஸ் கம்" என்று தனது அறைக்கு அழைத்துச் சென்றார். "மிஸ்டர் அருண், ஐயாம் மதுரைப்பாண்டியன்" என்றார். நான் மனதுக்குள் சிரித்துக்கொண்டேன். "என்ன மிஸ்டர் அருண், மதுரைப்பாண்டியன்னா பெரிய மீசையோட கையில அருவாளை வச்சிருப்பேன்னு கற்பனை பண்ணிருந்தீங்களா" என்றார். ஆச்சரியத்தை மறைத்துக்கொண்டு, "நோ சார்" என்றேன்.
வேலையில் சேர்வதற்கான பார்மாலிட்டிகளை ஒரு அரை மணி நேரத்தில் முடித்துக் கொடுத்தார். "மிஸ்டர் அருண், உங்களுக்கு தம், தண்ணி இந்தமாதிரிப் பழக்கம் இருக்கா?" என்றார். "நோ சார்" என்றேன். "நீங்க இருந்தாலும் இல்லன்னுதானே சொல்லுவீங்க" என்று சொல்லி ஏதோ உலகமகா ஜோக் சொன்னதுபோல் சத்தமாகச் சிரித்தார். அதன் பிறகு நான் வேலை பார்க்கப் போக வேண்டிய டிப்பார்ட்மென்ட் பற்றி சொன்னார். என்னுடைய டீம் லீடரை சந்திக்க வைப்பதாகக் கூறி அழைத்துச் சென்றார். என்னுடைய டிப்பார்ட்மென்டுக்கு ரொம்ப தூரம் நடக்க வேண்டியிருந்தது. போகும்போது லொடலொடவென்று பேசிக்கொண்டே வந்தார். எனக்கோ எப்படா நம்ம டிப்பார்ட்மென்ட் வரும் என்றிருந்தது. நமக்கு வர்ற பாஸும் இவரை மாதிரியே இருக்கக்கூடாதென்று கடவுளை வேண்டிக்கொண்டே நடந்தேன்.
ஒருவழியாக என் டிப்பார்ட்மென்டை அடைந்தோம். என்னுடைய டீம் லீடரைப் பார்த்தேன். நல்ல மனிதராகத்தான் இருந்தார். "மிஸ்டர் கணேஷ், ஹீ இஸ் மிஸ்டர் அருண், நியூலி ஜாயிண்ட்" என்று அறிமுகப்படுத்தி வைத்தார் மதுரைப்பாண்டியன். "வெல்கம் மிஸ்டர் அருண்" என்றார் என் டீம் லீடர். "ஹலோ சார்" என்றேன். "நோ நோ, கால் மீ கணேஷ், இங்க எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் அவங்களை சார்னோ மேடம்னோ கூப்பிடக்கூடாது. பேர் சொல்லித்தான் கூப்பிடணும், இதுதான் உங்களுக்கு முதல் பாடம்" என்றார். "ஓகே, கணேஷ்" என்றேன். மதுரைப்பாண்டியன், "கணேஷ், அருண் வில் பி ஆன் லீவ் டுடே, ஓகே?" என்றார். கணேஷ் அவரை கேள்விக்குறியுடன் பார்த்தார். "யெஸ் கணேஷ், ஹி இஸ் ஓ நெகட்டிவ்" என்றார்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிளட் குரூப்புக்கும் ஜாயின் பண்ற அன்னைக்கே லீவ் போடுவதற்கும் என்ன சம்பந்தம் என்றே யோசித்துக் கொண்டிருந்தேன். கொஞ்சம் லேட்டாகப் புரியவரவே, அடப்பாவிகளா அப்படின்னா என்னைக் கூட்டிட்டுப் போய் ரத்தம் எடுக்கப் போறீங்களா, நீங்க நல்லா வருவீங்கடா என்று மனதுக்குள்ளேயே திட்டினேன். மதுரைப்பாண்டியன் கணேஷிடம் பேசிவிட்டு, "கமான் அருண், நான் லெட்டர் தர்றேன், அந்த ஹாஸ்பிட்டல் போய் பிளட் டொனேட் பண்ணிடுங்க, இன்னைக்கு ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு ஆபிஸ் வந்தா போதும்" என்று அழைத்துச் சென்றார். ஆடு கூட தலையை சிலுப்பினாத்தானேடா வெட்டுவாங்க, இங்க என்னடான்னா என்னன்னுகூட சொல்லாம கூட்டிட்டுப் போறாரே என்று உள்ளுக்குள்ளேயே அழுதுகொண்டிருந்தேன்.
"மிஸ்டர் அருண், நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு எனக்குத் தெரியுது. என்னடா ஒண்ணுமே சொல்லாம பிளட் டொனேட் பண்ண கூட்டிட்டுப் போறாரேன்னு தானே" என்றார். மனசுக்குள்ளகூட நினைக்க விடமாட்டீங்கறீங்களே என்று நினைத்துக்கொண்டு, "அ.. ஆமா சார், இ.. இல்ல சார்" என்று வழிந்தேன்.
"அருண், ஓ நெகட்டிவ் ரொம்ப ரேர் டைப், கிடைக்கிறது கஷ்டம்"
"இல்லையே சார், ஏபி நெகட்டிவ் தானே ரேர்னு சொல்லுவாங்க"
"யு ஆர் ரைட் அருண், ஏபி நெகட்டிவ் தான் ரொம்ப ரேர், இந்தியாவில 0.2% மக்கள்ட்ட மட்டும்தான் இருக்கு, ஆனா அவங்களுக்கு ஓ நெகட்டிவ், ஏ நெகட்டிவ், பி நெகட்டிவ் பிளட்டும் கொடுக்கலாம், ஆனா உன்ன மாதிரி ஓ நெகட்டிவ் மக்களுக்கு ஓ நெகட்டிவ் பிளட் மட்டும்தான் கொடுக்க முடியும். அதனால தான் நம்ம கம்பெனியில ஜாய்ன் பண்றவங்கள்ல ஓ நெகட்டிவ் பிளட் இருக்கிறவங்களை நான் வலுக்கட்டாயமா பிளட் டொனேட் பண்ண வச்சிடறேன்" என்றார்.
ஆஸ்பத்திரியில் அந்த ஏசி அறையை அடைந்ததும் எனக்கு மனதில் கொஞ்சம் ஓரமாக பயம் மின்னல் போல வந்துபோனது. ஆனால் அங்கே ஏற்கனவே இரண்டு பேர் ரத்தம் கொடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் மனம் ஆசுவாசமானது. முதலில் ஒரு நர்ஸ் வந்தாள்.
"சார் உங்க பேரு" என்றாள்.
"அருண்" என்றேன்.
"எங்கிருந்து வர்றீங்க?"
கம்பெனி பெயரைச் சொன்னேன்.
"ஓ, மதுரைப்பாண்டியன் சார் அனுப்பி வச்சாரா" என்றாள்.
"ஆமா"
ஒரு ஃபார்ம் கொடுத்தாள். பூர்த்தி செய்து கொடுத்தேன். "காலைல என்ன சாப்பிட்டீங்க?" என்று கேட்டாள். "இட்லி" என்றேன்.
இன்னொரு நர்ஸ் வந்தாள், கையில் ரப்பர் போன்ற ஒன்றை வைத்து இறுக்கமாகக் கட்டினாள். தட்டித் தட்டி ஒரு நரம்பைத் தேடிக் கண்டுபிடித்தாள். ஒரு சிறிய சிரிஞ்சில் கொஞ்சம் ரத்தம் எடுத்துக் கொண்டாள்.
"இவ்வளவுதானா?" என்றேன்.
"இல்ல சார், இது சாம்பிள்" என்றாள்
"சாம்பிளா, எதுக்கு?"
"உங்களுக்கு ரத்த சோகை, கேன்சர், எச் ஐ வி ஏதும் இருக்கான்னு பார்க்க"
உள்ளே சென்றுவிட்டாள்.
சிறிது நேரம் கழித்து வேறு ஒரு நர்ஸ் வந்தாள். ஒரு படுக்கையில் சாய்வாக படுக்க வைத்தாள். மீண்டும் ரப்பர் கொண்டு கையில் கட்டு, ஒரு ஊசிக்குத்தல். இந்தமுறை கடுமையாக வலித்தது. ஏதேதோ ட்யூப்களை எடுத்து சொருகினாள். பின் ரப்பரின் இறுக்கத்தைத் தளர்த்தினாள். என் கை வழியாக சூடான ரத்தம் ட்யூபுக்குப் பாய்வது எனக்கே நன்றாகத் தெரிந்தது. என் கையில் ஒரு பந்தைக் கொடுத்தாள். "சார், முடியும் வரை இதை அமுக்கிட்டே இருங்க" என்று சொல்லிவிட்டு அவள் நகர்ந்தாள். "சிஸ்டர், என்னை விட்டுட்டுப் போறீங்களே" என்று பரிதாபமாகக் கேட்டேன். "இருக்கட்டும் சார், கொஞ்சம் டைம் ஆகும்" என்று சிரித்துக்கொண்டே சொன்னாள். மூக்கு உடைந்ததோ, இருந்தால் என்ன, என் ரத்தம் வீணாகக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்தாள். என் பக்கத்தில் நின்று ரத்தம் ட்யூப் வழியாக பையில் சேருவதைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். நானாக இருந்தால் மயங்கி விழுந்திருப்பேன்.
"எவ்வளவு எடுப்பீங்க?" என்றேன்
"ஒரு யூனிட்" என்றாள்
"ஒரு யூனிட்னா?"
"350 மில்லி"
அதற்குள் பை நிரம்பிவிட்டது போலும். கையில் குத்தியிருந்த ஊசியை எடுத்து அந்த இடத்தில் ஒரு பஞ்சை வைத்து கையை மடக்கச் சொன்னாள். சிறிது நேரம் அப்படியே வைத்திருக்கச்சொன்னாள்.
"சிஸ்டர், நான் கொடுத்த பிளட் எப்போ இன்னொருத்தருக்கு ஏத்துவீங்க?"
"சார், உங்க ரத்தத்தை வாங்கி நாங்க வேஸ்ட் பண்றோம்னு நினைக்கிறீங்க. ஒரு நாளைக்கு எங்களுக்கு மட்டும் 5000 யூனிட் ரத்தம் தேவைப்படுது. ஆனா இங்க வந்து டொனேட் பண்றவங்கள்ட்ட இருந்து 1000 யூனிட் மட்டும்தான் கிடைக்குது. பத்தாததுக்கு வெளியில நிறைய பிளட் பேங்க்லருந்து வாங்கறோம். ஆனாலும் பத்த மாட்டங்குது. உங்க ரத்தம் இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ளயே ஆப்பரேஷனுக்கோ ஆக்சிடென்ட் ஆனவங்களுக்கோ போயிடும். ஏன்னா, உங்களுது ஓ நெகட்டிவ். கிடைக்கறது கஷ்டம். உங்க ரத்தத்தை வச்சு மூணு பேரக்கூட காப்பாத்துவோம், இன்னைக்கு நீங்க கொடுத்த ரத்தத்தை ரெண்டு நாள்ல உங்க உடம்பு திரும்பவும் உற்பத்தி பண்ணிடும். ரெண்டு மாசத்துல ரெட் செல்ஸ் சரியான அளவுக்கு வந்திரும். அதனால திரும்பவும் நீங்க மூணாவது மாசம் ரத்தம் கொடுக்கலாம்" என்று விளக்கத்தைக் கொடுத்தாள்.
அவள் கொடுத்த ஜூஸைக் குடித்தேன். பிஸ்கட் சாப்பிட்டேன். மனதில் அவள் சொன்னதே மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டிருந்தது. இன்று நான் செய்திருக்கும் காரியம் மூன்று பேர் உயிரைக் காப்பாற்றப் போகிறது என்ற திருப்தியே மனதில் மேலோங்கியிருந்தது. மதுரைப்பாண்டியன் சார் மீது எனக்கு ஒரு தனி மரியாதை வந்தது.
======
நண்பர்களே, படித்துவிட்டீர்களா.. கருத்தைச் சொல்லிட்டுப் போங்க... நீங்க சொல்லும் கருத்தை வைத்துத்தான் இதன் தொடர்ச்சியான "என் ரத்தத்தின் ரத்தமே" என்ற சிறுகதையை எழுதலாம் என்றிருக்கிறேன். நன்றி...
Subscribe to:
Posts (Atom)







































