Showing posts with label பதிவர் சந்திப்பு. Show all posts
Showing posts with label பதிவர் சந்திப்பு. Show all posts
மூன்றாமாண்டு வலைப்பதிவர் திருவிழா - பின்னணி விவரங்கள்
Wednesday, November 05, 2014
Posted by கார்த்திக் சரவணன்
தமிழ் வலைப்பதிவர் குழுவின் சார்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னையில் நடைபெற்ற பதிவர் திருவிழா இந்த வருடம் மதுரையில் நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த சந்திப்பு குறித்து ஆலோசனை செய்வதற்காக மே மாதத்தில் மதுரையைச் சேர்ந்த பதிவர்களுக்கும் திண்டுக்கல் தனபாலன், உணவு உலகம் சங்கரலிங்கம், சிவகாசிக்காரன் ராம்குமார் ஆகியோருக்கும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. பின்னர் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சீனா ஐயா, பிரகாஷ், ரமணி ஐயா மற்றும் திண்டுக்கல் தனபாலன் ஆகியோர் கண்டிப்பாக மதுரையில் நடத்திவிடலாம் என்று நம்பிக்கை கொண்டிருந்தனர்.
இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து...
Thursday, September 19, 2013
Posted by கார்த்திக் சரவணன்
அனைவருக்கும் வணக்கம்.
நான் வலையுலகுக்கு வந்து இன்றுடன் ஒரு வருடம் முடிந்து இரண்டாம் வருடம் தொடங்குகிறது. நேற்று தான் புதியவனாக எழுதத் தொடங்கியது போன்று இருக்கிறது, அதற்குள் ஒருவருடம் முடிந்து விட்டது எனும்போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த ஒரு வருடத்தைப் பின்னோக்கிப் பார்க்கையில் எனக்குக் கிடைத்த நண்பர்கள் ஏராளம். நேரில் சந்தித்தும், தொலைபேசி மூலம் பேசியும், மின்னஞ்சல் மூலமாகவும், முகநூலிலும், அரட்டையிலும் பதிவர்களுடனான நட்பு தொடர்கிறது. இத்தனைக்கும் ஒரு வருடத்துக்கு முன்னர் யாரையுமே அறிமுகம் இல்லை, ஆனால் இன்றோ ஸ்கூல் பையன் என்றால் வலையுலகில் கிட்டத்தட்ட அனைவருக்கும் தெரிந்திருக்கிறது (தெரிந்திருக்கிறதா?).
பதிவர் திருவிழாவில் சேட்டைக்காரன் பேச்சு
Tuesday, September 10, 2013
Posted by கார்த்திக் சரவணன்
வணக்கம் நண்பர்களே,
கடந்த செப்.1 ஆம் தேதி பதிவர் திருவிழாவில் மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தை வெளியிட்டு சேட்டைக்காரன் அவர்கள் பேசியதைத் தந்துள்ளேன்.
ஒரு படம், இன்னொரு படம், ரெண்டு டிரைலர்
Monday, September 09, 2013
Posted by கார்த்திக் சரவணன்
ஒரு படம்
நேற்று மாலை காட்சிக்கு மடிப்பாக்கம் குமரன் தியேட்டரில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பார்த்தேன். ஆஹா ஓஹோ என்று புகழக்கூடிய அளவுக்கு இல்லை என்றாலும் ஆரம்பம் முதல் கடைசி வரை காமெடியில் கலக்கியிருக்கிறார்கள். வசனம் இயக்குநர் ராஜேஷ் என்பதாலோ என்னவோ. ஒரே ஒரு சின்ன ட்விஸ்ட் மட்டும் வைத்துக்கொண்டு படம் தொடங்கியது முதல் கிளைமாக்ஸ் வரை ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
பதிவர் திருவிழா 2013 - துளிகள்
Wednesday, September 04, 2013
Posted by கார்த்திக் சரவணன்
பதிவர் திருவிழா 2013 - துளிகள்
இந்த வருட பதிவர் சந்திப்பில் என் கண் முன் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறேன் நண்பர்களே. இல்லையென்றால் சிலவற்றை மறக்கக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு.
பதிவர் திருவிழா - 2013 - எனது கிளிக்ஸ்
Tuesday, September 03, 2013
Posted by கார்த்திக் சரவணன்
வணக்கம் நண்பர்களே,
பதிவர் சந்திப்பில் நான் மாங்கு மாங்குன்னு போட்டோ எடுத்ததைப் பார்த்துட்டு பலரும் இப்போதுவரை போட்டோ போடு போட்டோ போடுன்னு போன்ல, மெயில்ல, சாட்லன்னு வந்துக்கிட்டே இருக்காங்க. அவங்களுக்காக....
பதிவர் திருவிழாவில் நான் பாடும் பாடல்
Tuesday, August 20, 2013
Posted by கார்த்திக் சரவணன்
உங்களுக்குத் தெரியாத ஒரு விஷயம், அது ரகசியம் இல்லை. ரகசியம் காக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. நான் எவ்வளவு நன்றாகப் பாடுவேன் என்று யாருக்கும் தெரியாது.
சென்னையில் திடீர் பதிவர் சந்திப்பு
Sunday, June 02, 2013
Posted by கார்த்திக் சரவணன்
![]() |
| பதிவர்கள் பத்து பேர் |
திடீரென்றுதான் முடிவானது. நேற்று காலை திடங்கொண்டு போராடு சீனு எனக்கு அலைபேசியில் அழைத்து விஷயத்தை சொன்னவுடன் தான் தெரிந்தது. சனிக்கிழமை எனக்கு அலுவலகம் அரை நாள் என்பதால் மாலை நண்பர் ஒருவருடன் பரங்கிமலை செல்வதாக முடிவு செய்திருந்தேன். சீனு எனக்கு பதிவர் சந்திப்பு விஷயத்தைச் சொன்னதும் பரங்கிமலை அங்கேயேதான் இருக்கும், இத்தனை பதிவர்களை நேரில் சந்திப்பது அரிது என்று ப.மலை பயணத்தை பரண் மேல் போட்டுவிட்டேன்.
![]() |
| இடமிருந்து வலமாக அரசன், புலவர் ஐயா, நான், ராஜ், சிவா, மதுமதி, பாலகணேஷ் |
இடம் தி நகர் புலவர் ராமானுசம் ஐயா அவர்களின் இல்லம். நானும் சீனுவும் சேர்ந்து ஒன்றாகவே புறப்பட்டுச்சென்றோம். எங்களுக்கு முன்பாகவே மின்னல் வரிகள் பாலகணேஷ், சினிமா சினிமா ராஜ் மற்றும் மெட்ராஸ்பவன் சிவா ஆகியோர் வந்திருந்தனர். நாங்கள் சென்றதும் பின்னாலேயே அரசன், மதுமதி ஆகியோர் வந்தனர். சென்னைப் பித்தன் ஐயாவும் ஆரூர் மூனா செந்திலும் வந்தவுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது.
![]() |
| சென்னையின் நாயகன் |
பேச்சினூடே கொறிப்பதற்கு மன்னா ஸ்வீட்ஸ் மிக்சர், சமோசா, பிஸ்கட் மற்றும் குளிர்பானங்கள் ஆகியவற்றை புலவர் ஐயாவே ஏற்பாடு செய்திருந்தார்.
![]() |
| தின்பண்டங்களை ஆராய்ச்சி செய்யும் ஜெய் |
![]() |
| சென்னைப்பித்தன், ஜெய், சீனு, அரசன் |
![]() |
| வெட்கத்தில் ஆரூர் மூனா |
![]() |
| திடங்கொண்டு போராடு சாந்தமாக |
![]() |
| அடியாள் அரசன் |
![]() |
| போட்டோ எடுக்கும் என்னை போட்டோ எடுக்கும் சென்னைப்பித்தன் |
![]() |
| குரூப் போட்டோ |
என்னது? என்ன பேசினீங்கன்னா? அதெல்லாம் மூத்த பதிவர்கள் சொல்வார்கள். நான் வுடு ஜூட்...
Subscribe to:
Posts (Atom)









