ஒரு படம், இன்னொரு படம், ரெண்டு டிரைலர்
Monday, September 09, 2013
Posted by கார்த்திக் சரவணன்
ஒரு படம்
நேற்று மாலை காட்சிக்கு மடிப்பாக்கம் குமரன் தியேட்டரில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பார்த்தேன். ஆஹா ஓஹோ என்று புகழக்கூடிய அளவுக்கு இல்லை என்றாலும் ஆரம்பம் முதல் கடைசி வரை காமெடியில் கலக்கியிருக்கிறார்கள். வசனம் இயக்குநர் ராஜேஷ் என்பதாலோ என்னவோ. ஒரே ஒரு சின்ன ட்விஸ்ட் மட்டும் வைத்துக்கொண்டு படம் தொடங்கியது முதல் கிளைமாக்ஸ் வரை ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயனை பொறுத்தவரையில் தன்னுடைய வழக்கமான நடிப்பையே வெளிப்படுத்தியிருக்கிறார். படத்துக்கு பளிச் என்று பொருந்துவதால் பட்டையைக் கிளப்புகிறார். இன்னும் எத்தனை வருடங்களுக்குத்தான் நாயகனை வேலைவெட்டி இல்லாத ஊர்சுற்றியாக காட்டுவார்களோ தெரியவில்லை.
நாயகி ஸ்ரீதிவ்யா ஸ்கூல் படிக்கும் பெண்னாம். யூனிபார்மில் அப்படியே ஒரு சின்னப் பெண்ணைப் பார்ப்பது போன்றும் புடவை கட்டிவரும்போது ஒரு பெரிய பெண்ணைப் பார்ப்பது போன்றும் நமக்கே தோன்றுகிறது. இதை ஹீரோவே படத்தில் வெளிப்படுத்தியிருப்பார்.
ஒரு சில காட்சிகளே வந்திருந்தாலும் பிந்து மாதவி அழகு. முதலில் இவர்தான் ஹீரோயின் என்று நான் நினைத்திருந்தேன். பிளஸ் ஒன் டீச்சர் என்றால் மட்டும் நம்பமுடியவில்லை.
படத்தில் ஹீரோவுடன் சேர்ந்து காமெடி செய்வது புரோட்டா சூரி. டைமிங் காமெடியில் மனிதர் கலக்குகிறார். நல்ல எதிர்காலம் இருக்கிறது, இதேபோல் தொடரவும்.
இரண்டாம் பாதி கொஞ்சம் இழுவை போல் தோன்றினாலும் காமெடியும் பாடல்களும் நமக்கு அலுப்பு தட்டாமல் படத்தைக் கொண்டு செல்கின்றன. மொத்தத்தில் கதை, லாஜிக் என்றெல்லாம் பாராமல் படம் பார்த்தோமேயானால் வருத்தப்படாத வாலிபர் சங்கம் கலக்கல் காமெடி பட்டாசு.
இன்னொரு படம்
இது திரைப்படம் அல்ல, பதிவர் சந்திப்பில் கவியாழியின் கேமராவில் எடுத்த படம். பிளசில் பகிர்ந்திருந்தார், அவரது அனுமதியுடன் இங்கே பகிர்கிறேன். ஒவ்வொருவருடைய முக பாவங்களைப் பாருங்கள். சிரிப்பு சிரிப்பாக வரும்.
ரெண்டு டிரைலர்
நேற்று மடிப்பாக்கம் குமரன் தியேட்டரில் இரண்டு டிரைலர் காட்டினார்கள். ஒன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அனிமேஷனில் வரப்போகும் கோச்சடையான். பிரம்மாண்டமாக இருக்கும் இந்த டிரைலர். இன்னொன்று இயக்குனர் ராஜேஷின் இயக்கத்தில் கார்த்தி, சந்தானம் நடித்த All in All அழகுராஜா படத்தின் டீசர். இது மிகவும் simple ஆக இருக்கும். இரண்டையும் பாருங்கள்.
நன்றி.
This entry was posted by school paiyan, and is filed under
அனுபவம்,
சினிமா,
சினிமா விமர்சனம்,
பதிவர் சந்திப்பு
.You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
என்ன..எல்லோரும் யார் முன்னாடி-பின்னாடி என்று போட்டிப் போடுகின்றார்களா...? நல்லவேளை நான் இல்ல
ReplyDeleteஹா ஹா.. நீங்க இருந்திருந்தீங்கன்னா இன்னும் நல்லா இருந்திருக்கும்...
Deleteஅண்ணேன்..நான் யாரையும் கேட்காம என் ஆர்யா சூர்யா பதிவுல இந்தப் படத்த போட்டுப்புட்டேன்....எல்லாம் ஒரு நம்பிக்கைதான் யாரும் ஒன்னும் சொள்ளமாட்டாங்கனு http://parithimuthurasan.blogspot.in/2013/09/aryasurya-vimarsanam.html
Deleteசுட்டுக்கோங்க, ஒண்ணும் பிரச்சனையில்லை....
Deleteபதிவர் சந்திப்பில் கவியாழியின் கேமராவில் எடுத்தபடம்
ReplyDeleteவித்யாசமாக அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்..!
நன்றி அம்மா...
Deleteபதிவர் சந்திப்பில் எடுத்தபடம் சூப்ப்ப்பப்பர்!
ReplyDeleteஉங்க புண்ணியத்துல ரெண்டு ட்ரைலரும் இப்பதான் பார்த்தேன்..
ReplyDeleteஇன்னைக்கு பேஸ்புக்கில நிறைய பேர் பகிர்ந்திருக்கிறார்களே....
Deleteஇரண்டு படங்களும் அருமை..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆவி...
Deleteஉங்கள் பதிவு அத்தனையும் ரசிக்கவைக்கிறது.
ReplyDeleteஅருமை! வாழ்த்துக்கள்!
த ம.2
தொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும் த.ம. ஓட்டுக்கும் நன்றி சகோதரி...
Deleteவித்தியாசமான படம் (பதிவர்கள்)... அட்டகாசம்...
ReplyDeleteஅதில உங்க முகபாவம் சூப்பர் அண்ணே...
Deleteinnum padam parkala virivl paarkanum... thalaivar padam triler vanthathu unga pathivn mulam therinthu konden nandri, finala rajesh padam trielr enakku rompa pidichu iruku padam vanthathum paarkkanum pola irukku :-))) mothaththil pathivu super sir...
ReplyDeleteரெண்டு டீசர் வந்தது நேத்து தான் எனக்கு தெரியும், ரெண்டுமே சூப்பர்... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மகேஷ்...
Deleteஇப்படி படமெடுத்த மகராசனுக்கு நன்றி.
ReplyDeleteஅவருக்கும், இதைப் பகிர்வதற்கு அனுமதி அளித்த தங்களுக்கும் மிக்க நன்றி கவியாழி ஐயா....
Deleteகண்ணதாசன் சார் படம் சூப்பர். இதை உருவாக்கியது யார்னு தெரிஞ்சிக்கலாமா?
Deleteஒரு பதிவுக்கு மேட்டர் கொடுத்ததற்கு நன்றி.
உருவாக்கினது யார்னு தெரியாது... கவியாழி அவர்கள் பிளசில் பகிர்ந்திருந்தார்... எனக்குப் பிடித்திருந்தது, கேட்டேன், கொடுத்துவிட்டார்...
Deleteநல்லா இருக்கு.
ReplyDeleteநன்றி நண்பரே... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...
Deleteஎன்னப்பா தம்பீ! பதிவர்களை ஆட விட்டிருக்கே! நன்று!
ReplyDeleteஅந்தப் பெருமை அனைத்தும் கவியாழி அவர்களையே சாரும்...
Deleteபோட்டோஸ் பட்டைய கிளப்புது ... வ வா ச பாக்கணும் அண்ணே
ReplyDeleteவாழ்க கவியாழி.... வ வா ச பாருங்க....
Deleteவிமர்சனம் நல்ல இருக்கு ஸ்கூல் பையன்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முரளி அண்ணே...
Deleteவிமர்சனம் நன்றி
ReplyDeleteவாழ்த்துக்கள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா..
Deleteபடம்...சூப்பர்...
ReplyDeleteநன்றி நக்கீரன் அண்ணே...
Deleteஇவர்கள் இப்படியே கதைத்துக் கொண்டேதான் இருப்பார்களா ?...:))
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரரே சிறப்பான முயற்சி இதற்கு .
முயற்சி என்னுடையதல்ல, வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரி...
Deleteவெளெங்கிரும் போங்கன்னு நக்ஸ் அண்ணன் பின்னாடி ஓடுவது நன்றாக இருக்கிறது ஹி ஹி....
ReplyDeleteநான் முன்னாடியா நீ முன்னாடியான்னு ஆரூர் மூனாவும் நக்கீரன் அண்ணனும் ஓடுறாங்க...
Deleteபடம் நல்லா இருக்கு.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க...
Delete//ஒரு சில காட்சிகளே வந்திருந்தாலும் பிந்து மாதவி அழகு.// கரெக்ட் ... அவுங்களுக்கு இன்னும் கொஞ்சம் காட்சி வைத்திருக்கலாம்...
ReplyDeleteபதிவர் சந்திப்பு போட்டோ செம...
உங்க விமர்சனமும் படிச்சேன் மணி அண்ணே, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
Deleteஎப்படி அந்த படத்தை எடுத்தீர்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது, ஆனால் அருமையாக இருக்கிறது ! மீண்டும் அடுத்து எப்போது எல்லோரையும் சந்திக்க போகிறோம் என்று ஆவலாய் இருக்கிறது !
ReplyDeleteபடம் எடுத்ததில் கவியாழி அவர்களுக்கே நன்றி சொல்லவேண்டும்... மீண்டும் அடுத்த பதிவர் சந்திப்பில் சந்திப்போம்... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்...
Deleteஹாஹா, நல்லா இருக்கு. சூப்பர் படம்
ReplyDelete