பதிவர் திருவிழாவில் சேட்டைக்காரன் பேச்சு
Tuesday, September 10, 2013
Posted by கார்த்திக் சரவணன்
வணக்கம் நண்பர்களே,
கடந்த செப்.1 ஆம் தேதி பதிவர் திருவிழாவில் மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தை வெளியிட்டு சேட்டைக்காரன் அவர்கள் பேசியதைத் தந்துள்ளேன்.
அவையோர்களே, பெரியோர்களே, சக பதிவர்களே, நண்பர்களே, விஸ்வரூபங்களாக அவையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் இந்த கொசுவரூபனின் வணக்கம். போன வருஷம் சகோதரி சசிகலாவின் தென்றலின் கனவு என்ற புத்தகம் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களால் வெளியிடப்பட்டு, அதன் முதல் பிரதியை நான் வாங்கினேன். இந்த வருஷம் என்னுடைய புத்தகம் உட்பட நான்கு புத்தகங்கள் என்று அறிவித்து இப்போது ஐந்தாக வெளியிடப்பட இருக்கின்றது. அதாவது ஒரே வருடத்தில் ஐந்து வருடத்து வளர்ச்சி ஐந்து வருட வெற்றி இந்தப் பதிவர் திருவிழாவுக்கு கிடைத்திருக்கிறது.
இந்த வலை உலகம் என்பது மிகப்பெரிய சர்க்கஸ். இதில் ஒருவர் சிங்கத்தின் வாயில் தலையைக் கொடுக்கிறார், ஒருவர் அந்தரத்தில் பல்டி அடிக்கிறார், ஒருவர் நெருப்புக்குள் தாவுகிறார், அவர்களுக்கு அதை செய்யக்கூடிய திறமை இருக்கிறது, வலிமை இருக்கிறது. நான் என்ன பண்றது? நான் பரங்கிமலையில் பல்லியைக் கண்டால் பல்லாவரம் வரை ஓடுவேன். என்னுடைய தகுதிக்கேற்ற வேலை தேடிக்கொண்டேன் அது என்னவென்றால் கோமாளி வேலை. அந்தக் கோமாளி செய்வதைத்தான் நான் இப்போது செய்துகொண்டிருக்கிறேன். அதனுடைய விளைவுதான் இந்த மொட்டைத் தலையும் முழங்காலும் என்ற புத்தகம்.
இது எப்படியென்றால், இடம் பொருள் ஏவல் என்று சொல்வார்கள். இந்தப் புத்தகத்துக்கும் இடம் பொருள் ஏவல் எல்லாம் சரியாக அமைந்திருக்கிறது. முதலில் இந்த வெளியீடு நடக்கும் இடம் திரை இசைக் கலைஞர்கள் சங்கம், ஒரு ஆறு வருடத்துக்கு முன் ஒரு திரைப்படப் பாடலின் வரிகளை மாற்றி எழுத ஆரம்பித்து தான் இணையத்துக்கு அறிமுகமானேன். இன்று இதே வளாகத்தில் என்னுடைய புத்தகம் வெளியாவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
இரண்டாவதாக கலைவாணர் NS.கிருஷ்ணன் அவர்கள் பிறந்த நாகர்கோவில் தான் என்னுடைய சொந்த ஊர். நான் பிறந்தது வளர்ந்தது படித்தது, படித்தது என்று சொல்ல முடியாது, காலேஜுக்கு போனது எல்லாம் அங்கே தான். அதே கலைவாணர் பெயர் சூட்டப்பட்ட NSK சாலையில் இந்தப் புத்தகம் வெளியாகிறது. அது மிகவும் மகிழ்ச்சி.
மூன்றாவதாக, இதே வடபழனி முருகன் கோவிலில் தான் இரண்டு மாதங்களுக்கு முன் நான் மொட்டையடித்தேன். இன்று அதே வடபழனியில் மொட்டைத்தலையும் முழங்காலும் புத்தகம் வெளியாகிறது.
எந்த ஒரு காரியத்தை எடுத்துக்கொண்டாலும் நாம் கணேசனை நினைத்துவிட்டுத்தான் தொடங்குகிறோம். அந்த விதத்தில் நான் நினைத்தது மின்னல் வரிகள் பாலகணேஷ்-ஐத் தான். அவர் பாலகணேஷ் அல்ல பலே கணேஷ். என்னைப் பொறுத்தவரையில் அவர் இணைய உலகத்தின் இளைய தளபதி. எப்படியென்றால் அவர் எல்லோரையும் அண்ணா அண்ணா என்றுதான் அழைப்பார். இந்தப் புத்தகத்தை வடிவமைப்பதற்கு அவர் பட்ட கஷ்டம், ஓவியத்தை சீர் செய்ய அவரது மெனக்கெடல்கள், அமெரிக்காவில் இருப்பவரிடமிருந்து அணிந்துரை வாங்குவதற்காக அவர் தேடிக்கொண்ட சிரமங்கள் என்று பட்டியலிட்டால் அது நம்ம வீடு வசந்தபவன் மெனு கார்டை விட நீளமாகப் போகும். அதனால் சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் அவருக்கு நன்றி என்று மட்டும்தான் சொல்லமுடியும். அந்த நன்றி இன்றோடு முடிவதில்லை, இன்னும் என் ஆயுள் உள்ளவரை தொடரும். அவர் என்னை அண்ணான்னு கூப்பிட்டார், தம்பிக்கு நன்றி சொல்வது மரபல்ல, எனவே சம்பிரதாயத்துக்காக நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
நன்றி-திரு.பாலகணேஷ் |
அடுத்ததாக எழுத்தாளர் கடுகு. அவர் அமெரிக்காவில் இருந்து அணிந்துரை எழுதியிருக்கிறார், இந்தப் புத்தகத்துக்கான அணிந்துரை imported from அமேரிக்கா. அந்த விஷயத்தில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே. அடுத்ததாக வாழ்க்கை வாழ்வதற்கே என்று நேர்மறையான சிந்தனைகொண்ட வலைப்பூ பெயரைக் கொண்ட நண்பர் திரு.பிரபாகர் அவர்கள். அவர் இல்லையென்றால் சேட்டைக்காரன் வந்திருக்கவே முடியாது. அவர் தான் எனக்கு எப்படி எழுதவேண்டும், ஏன் எழுதவேண்டும், எதை எழுதவேண்டும் எதை எழுதக்கூடாது என்று சொல்லிக்கொடுத்தவர். அவர் இங்கு வந்து இந்தப் புத்தகம் வெளியிடுவதில் எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. அடுத்ததாக அனன்யா மகாதேவன் அவர்கள் என்னுடைய ஒவ்வொரு பதிவையும் படித்து பின்னூட்டம் எழுதுவார்கள். எனது பதிவுகளில் சில வரிகளை சுட்டிக்காட்டி இந்த மாதிரி எழுதாதீர்கள், பெண்களுக்கு பிடிக்காது, இதை மாற்றுங்கள் என அறிவுரைகள் வழங்கினார்கள். இவர் முகம் தெரிந்து நட்பு பாராட்டியதை விட முகம் தெரியாமல் நட்பு பாராட்டியதே அதிகம், இது பெரிய விஷயம். அதனால் தான் இவரையும் வரச்சொன்னேன்.
அடுத்தபடியாக இங்கு நீங்கள் அனைவரும் திரண்டு வந்திருக்கிறீர்கள். உங்களது மத்தியில் என்னுடைய புத்தகத்தை வெளியிட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாயால் நன்றி சொல்லமுடியாது. ஆனால் இதற்கென்று என்னால் இன்னொரு வாய் வாங்க முடியாது. அதனால் உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை நான் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன். இப்படி ஒரு நிகழ்ச்சியை அமைத்துக்கொடுத்து என்னுடைய புத்தகத்தை வெளியிட வாய்ப்பு கொடுத்த உங்கள் அனைவருக்கும் குறிப்பாக விடா முயற்சியே வெற்றிக்கு வித்து என்பதை இரண்டாவது ஆண்டாக நிரூபித்துக்காட்டிய விழாக்குழுவினருக்கும் வயதில் மூத்த பெரியோருக்கும் வந்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொண்டு விடைபெறுகிறேன், நன்றி, வணக்கம்.
This entry was posted by school paiyan, and is filed under
சேட்டைக்காரன்,
பதிவர் சந்திப்பு,
பதிவர் திருவிழா
.You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
அவர் பேசும்போது நான் இல்லை. அந்த ஏக்கத்தினைப் போக்கியது உங்கள் பகிர்வு. மிக்க நன்றி சரவணன்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட் அண்ணா...
Deleteமறுபடியும் ரசித்தேன்... நன்றி...
ReplyDeleteநன்றி தனபாலன் அண்ணே..
Deleteசேட்டைக்காரனின் பேச்சின் ஒவ்வொரு வார்த்தையிலும் உள்ள காமெடி கொழுப்பை ரசித்தேன் !அதை நீங்கள் மசாலா கலக்காமல் தந்த விதம் அருமை !
ReplyDeleteஅவருக்கு உடம்பில இருக்கவேண்டிய கொழுப்பு வார்த்தையில இருக்கு...
Deleteநிஜத்தைச் சொன்னால் அன்று நான்
ReplyDeleteசேட்டைக்காரனின் பேஸ்சிக் கேட்க இயலவில்லை
நான் அவரது தீவிர ரசிகன்,அந்த வகையில்
அவர் பேட்சைக் கேட்கமுடியாமல் போனது
ஒரு குறைபோல உறுத்திக் கொண்டே இருந்தது
அந்தக் குறையை பதிவாக்கி நீக்கியமைக்கு
மனமார்ந்த நன்றி
என் மூலம் தங்கள் குறை தீர்ந்ததில் எனக்கு மகிழ்ச்சி... நன்றி ஐயா...
Deleteவரிக்கு வரி அசத்தல் பேச்சு. அதை அப்படியே கொடுத்த சரவண'ரு'க்கு நன்றிகள் பல.
ReplyDeleteஅசத்தலான பேச்சை முன்வரிசையில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.... நன்றி ஆவி...
Deleteஇருந்தாலும், அப்படியே மனப்பாடம் செய்து நீங்க ஸ்கூல் பையன்னு நிரூபிச்சுட்டீங்க!!ஹிஹி
Deleteஇது மனப்பாடம் இல்லை, Recorded...
Deleteமொட்டைத் தலை எனக்கு ஏற்கனவே நடுவிலே ஒரு சொட்டை .
ReplyDeleteமுழங்காலும் மடக்க முடியாமல் இடக்கு செய்ய
சேட்டைக்காரன் பேசும்போது நான் அரங்கில் இல்லை.
அமைதியாக அழகாக அடக்கத்துடன் அவர் பேசியிருப்பது
பார்த்து எனக்கு நினைவு வருவதெல்லாம்
பெருக்கத்து வேண்டும் பணிவு எனும் வள்ளுவனின் வாய்மொழிதான்.
இன்னும் சேட்டைக்காரன்மேன் மேலும் உயர இம்முதியோனின் வாழ்த்துக்கள்.
புத்தகம் பற்றிய ஒரு சிறு குறிப்பும் நடு நிலை விமர்சனமும்
எங்கேனும் இருப்பின் லின்கிடவும்.
சுப்பு தாத்தா.
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா... நன்பர் ரூபக் ராம் தன் தளத்தில் விமர்சனம் எழுதியிருக்கிறார்.... http://rubakram.blogspot.com/
Deleteஅவரது உரை முழுவதும் பதிவில் தந்திருப்பது சிறப்பு! வாழ்த்து தம்பீ!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா...
Deleteவாவ் சேட்டைக்காரன் லைவ் பேச்சு சூப்பர்டே தம்பி....! நன்றி....
ReplyDeleteஎன்னுடைய தகுதிக்கேற்ற வேலை தேடிக்கொண்டேன் அது என்னவென்றால் கோமாளி வேலை. அந்தக் கோமாளி செய்வதைத்தான் நான் இப்போது செய்துகொண்டிருக்கிறேன். அதனுடைய விளைவுதான் இந்த மொட்டைத் தலையும் முழங்காலும் என்ற புத்தகம்.
ReplyDeleteசர்க்கஸில் மற்றவர்களை விட நாம் சீப் ஆக எண்ணும் கோமாளியின் திறமை மிகவும் அதிகம் .. அனைத்து கலைஞர்களின் திற்மையையும் ஜஸ்ட் லைக் தட் என் ஒருங்கே பெற்றிருக்கும் சகலகலா வல்லவர் அவர்..
சேட்டைக்காரனின் அருமையான திறமைக்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!
வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி அம்மா....
Deleteரசித்தேன்... நன்றி...
ReplyDeleteரசித்தமைக்கு மிக்க நன்றி சக்கர கட்டி...
Deleteஅசத்தாலான பேச்சு.. மிக்க நன்றி ஸ்கூல்.. இதைப் படிக்கும் போதே உற்சாகம் தானாய் தொற்றிக் கொள்கிறது
ReplyDeleteஎப்போதும் அவரது பதிவைப் படிக்கும்போது சிரிப்பு பொங்கும்.... அவரது பேச்சு உற்சாகம் தருகிறது....
Deleteசேட்டைக்காரன் வேணு அவர்கள் பேச்சை பதிவிட்டது சந்தோஷம். சுருக்கமாக, ஆனால் அருமையாக பேசியிருக்கிறார்.
ReplyDeleteசேட்டைக்காரன் பேச்சை பதிவிட்டது சந்தோஷம்.அருமையாக பேசியிருக்கிறார்.நன்றி !!!
ReplyDeleteReply
வந்து ரசித்தமைக்கு நன்றி நண்பரே....
Deleteநேரமாகிட்டதால, ஐயாவோட பேச்சை கேக்கலை. உங்க பதிவின் மூலம் தெரிந்துக் கொண்டேன். பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஇங்க வந்து கேட்டதுக்கு மிக்க நன்றி அக்கா....
Deleteஅருமை தம்பி.எங்க சொந்த அனுபவம்போல ஃபீல் பண்ணுகிறேன்!
ReplyDeleteநன்றி செல்வி அக்கா... வருகைக்கும் கருத்துக்கும்...
Delete//என்னைப் பொறுத்தவரையில் அவர் இணைய உலகத்தின் இளைய தளபதி//
ReplyDeleteஇருவக்கும் நடிக்க தெரியாது என்று சொன்னதை விட்டு விட்டீர்கள்.
ஆமா... அங்க கொஞ்சம் அரசியல் வந்தது, சேட்டைக்காரன் உங்க கிட்ட சொல்றதில தப்பில்லன்னு சொன்னார்.... இங்க சென்சார் பண்ணிட்டேன்...
Delete/இருவருக்கும் நடிக்கத் தெரியாது./ ஹா... ஹா... என்ன இருந்தாலும் சிங்கம் சிங்கம்தான்டே!
Delete
ReplyDeleteஅட... அவரது எழுத்து மட்டுமல்ல ..பேச்சும் நகைச்சுவையாகத்தான் இருக்கிறது...பகிர்ந்ததற்கு பாராட்டுக்கள்.
பேச ஆரம்பிச்சா பேசிக்கிட்டே இருப்பார்... பாராட்டுக்கு மிக்க நன்றி மணி அண்ணே...
Deleteஅழகாக தொகுத்து தந்தமைக்கு நன்றிகள்..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரூபக்...
Deleteஏற்புரை வழங்கியவர்களில் சேட்டைக்காரனின் பேச்சே சிறப்பாக இருந்தது. சேட்டை பேச்சிலும் கெட்டிக்காரர் என்பதை நிரூபித்து விட்டார்
ReplyDeleteஆமாம் அண்ணே... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முரளி அண்ணே...
Deleteவரிக்கு வரி அப்படியே தட்டச்சு செய்து இடுகையாய்ப் போடுவது எவ்வளவு கடினம்!!! இந்த அன்புக்கும் இவ்வளவு முயற்சிக்கும் எப்படிப் பாராட்டுவது, எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை .
ReplyDeleteமுதலில் புத்தக விமர்சனம் எழுதலாம் என்றிருந்தேன், நண்பர் ரூபக் ராம் முந்திக்கொண்டார், அதனால் தங்களது சுவாரஸ்யமான பேச்சை அப்படியே பதிவிட்டுவிட்டேன்... வருகைக்கும்வாழ்த் துக்கும் மிக்க நன்றி சேட்டைக்காரன் அண்ணா...
Deleteசேட்டையண்ணாவின் பேச்சின் ஒவ்வொரு வரியும் அன்று எனக்குள் பதிவாகின. என்றாலும் நான் எழுதவில்லையே என்கிற ஒரு குறை இருந்தது. அது இதைப் படித்ததன் மூலம் தீர்ந்து விட்டது ஸ்.பை.! அவர் பேசியதை மிக அழகாக, சுவையாகத் தந்திருக்கிறீர்கள். மிகமிக மகிழ்வுடன் என் நன்றி!
ReplyDelete