நம்மில் பலர் தினமும் நடை பயிற்சி மேற்கொள்கிறோம்.  தொப்பையைக் குறைக்க, சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க, கொழுப்பைக் குறைக்க, உடல் உறுதி பெற என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம்.  ஆனால் நாம் இப்படி மாங்கு மாங்கென்று நடக்கிறோமே, நம் உடலுக்குள் என்ன நடக்கிறது என்று யாருக்குத் தெரியும்?  நாம் நடந்ததற்கு ஒரு அளவு சொல்ல முடியுமா?  முடியும் என்கிறது இந்த ஆண்டிராய்டு அப்ளிகேஷன்.





5.7MB அளவுள்ள இந்த அப்ளிகேஷன் நாம் எவ்வளவு தூரம் நடந்திருக்கிறோம், எத்தனை கலோரிகளை எரித்திருக்கிறோம், எத்தனை மணிக்குத் தொடங்கி எத்தனை மணிக்கு முடித்திருக்கிறோம், எவ்வளவு வேகத்தில் நடந்திருக்கிறோம் போன்ற விபரங்களைத் தருகிறது.


இதற்குத் தேவையானவை - ஆண்டிராய்டு போன் வெர்ஷன் 1.5க்கு மேல். (இப்போது நாம் பயன்படுத்தும் அனைத்தும் வெர்ஷன் 4க்கு மேல் தான்).  இன்டர்நெட் இணைப்பு மிக அவசியம்.  இந்த அப்ளிகேஷனை நிறுவியவுடன் Start Workout என்ற பட்டனை அழுத்தவும்.  உடனே GPS மூலம் நம் இருப்பிடத்தை தெரிந்துகொள்ளும்.  இனி நடக்க வேண்டியதுதான், இந்த அப்ளிகேஷன் இயங்கிக்கொண்டே இருக்கும், நாம் நடைப்பயிற்சி முடித்தவுடன் End Workout என்ற பட்டனை அழுத்தினால் போதும்.  உடனே நம்முடைய நடைப்பயிற்சி விபரங்களைக் கொடுக்கும்.



மேலே உள்ள உதாரண படத்தில் கூகிள் மேப்பில் உள்ள நீளக்கோடு நடந்த பாதையைக் குறிப்பிடுகிறது.  மொத்தம் 34.45 நிமிடத்தில் 4.48 மைல்கள் நடந்து 562 கலோரிகள் எரித்திருப்பதாகத் தெரிகிறது.  இதில் தூர அளவை கிலோமீட்டர் கணக்கிலும் நாம் அளவு செய்துகொள்ளலாம்.  இதற்கான setting-இல் நாம் இதை மாற்றிக்கொள்ளலாம்.  




சிறப்பம்சங்கள்:

இடையிடையே நாம் எவ்வளவு தூரம் நடந்திருக்கிறோம் எங்கே இருக்கிறோம் என்ற விபரங்களையும் ஆடியோ மூலமாகத் தெரிவிக்கும்.

நம் போனில் இருக்கும் பாடல்களைத் தானாகவே பாடச்செய்யும். (வேண்டாம் என்றால் நிறுத்திக்கொள்ளலாம்).

தினம் தினம் நாம் செய்யும் நடை பயிற்சியை சேமித்து வைத்துக்கொள்ளும். 

Reminder வசதி உண்டு.

Statistics வசதி மூலம் நம்முடைய பழைய நடை பயிற்சி விபரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக், ட்விட்டர் மூலம் நண்பர்களுக்கு பகிரலாம்.




ஐந்துக்கு 4.4 என்ற தர வரிசை பெற்றிருக்கிறது இந்த அப்ளிகேஷன்.  ஆண்டிராய்டில் தரவரிசை என்பது நம்மைப் போன்ற பயனாளர்கள் பயன்படுத்திவிட்டு கொடுக்கும் தரவரிசையே.  இதே போன்று Playstore-இல் நிறைய இருந்தாலும் நான் பயன்படுத்திய வரையில் இதுதான் சிறந்த அப்ளிகேஷன்.



இந்த அப்ளிகேஷனைத் தரவிறக்க மற்றும் மேலதிக விபரங்களுக்கு...



நன்றி.