வணக்கம் நண்பர்களே,




சென்னையிலேயே மிகப்பெரிய ஹோட்டல் இதுதான். ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற இது கிண்டி ஸ்பிக் வளாகத்துக்கு எதிரே அமைந்துள்ளது.  இனி வரும் காலங்களில் சோழா ஹோட்டலுக்கு எதிரே ஸ்பிக் பில்டிங் அமைந்துள்ளது என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த ஹோட்டல் திறக்கப்பட்டு ஒரு வருடமே ஆகியுள்ள நிலையில் ஒருநாள் மதியம் சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது.  இங்கே மொத்தம் 12 உணவகங்கள் உள்ளன, அதில் நாங்கள் சென்றது Madras Pavilion என்ற உணவகம்.  இங்கு தான் பபே முறையில் சாப்பாடு கிடைக்கிறது.




நான் சாப்பிடச் சென்ற உணவகம்


ரத்த சிகப்பு நிறத்தில் ஜூஸ்

ஸ்டார்ட்டர்ஸ்



மீன் பப்ஸ், பிரைட் ரைஸ்

ஸ்டார்ட்டர்ஸ் என்று சிக்கன், மீன் வகைகளை விதம் விதமாக சமைத்துத் தருகிறார்கள்.  சர்வரிடம் கேட்டால் எந்த உணவாக இருந்தாலும் அவை சமைக்கப்படும் விதத்தை தெளிவாக சொல்கிறார்கள்.

நமக்கு ஸ்டார்ட்டர்ஸ் முடித்துவிட்டு பிரியாணி, பிரைட் ரைஸ் சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்துவிடுகிறது.  இதற்குப் பின்னர் சாதம், அசைவமாயின் மீன், சிக்கன் மற்றும் மட்டன் குழம்பும் சைவமாயின் வித விதமான gravy வகைகளும் நம்மை வரவேற்கின்றன.  கொடுத்த காசுக்கு அவற்றையும் கொஞ்சம் எடுத்துக்கொண்டோம்.  இதற்கே எனக்கு கிறக்கம் வந்துவிட, என்னுடன் வந்தவரோ desserts ஒரு பிடி பிடிக்கலாம் என்றார்.








இன்னும் நிறைய இருக்கின்றன, படம்தான் எடுக்க முடியவில்லை.  எனக்கோ வயிறு நிறைந்துவிட்டதால் பழவகைகள், ஐஸ்கிரீம், பாயாசம் போன்றவற்றை சாப்பிட முடியவில்லை.  அதனால் ஒரு பதினைந்து நிமிடம் கழித்து காபி கொண்டுவரச் சொன்னோம்.  காபியை தயார் செய்து கொண்டுவரவா அல்லது ஆற்றித்தரவா என்று கேட்டார்கள்.  எனக்கோ ஒன்றும் புரியவில்லை, என்னுடன் வந்தவர் "ஆத்துங்க" என்றார்.  காபியை கொண்டுவந்தவுடன்

இப்படி எடுத்துவந்து

இப்படி ஆற்றி

டபராவில் ஊற்றித் தருகிறார்.

பபே முறையில் இந்த ஹோட்டலில் தரப்படும் உணவின் விலை ஒருவருக்கு ரூ.1300 மற்றும் வரிகள்.  கூட்டமாகச் சென்றால் பத்து சதவீதம் டிஸ்கவுன்ட் கேட்டுப் பெறலாம்.


இந்த ஹோட்டலை நாங்கள் ஹோட்டல் மேனேஜர் ஒருவருடைய அனுமதியுடன் சுற்றிப்பார்த்தோம்.

ஆடம்பரமான விளக்கு

ஜொலிக்கும் மேற்கூரை

பிரம்மாண்டமான லாபி
முழுவதும் மார்பிள்
அழகிய குதிரை பொம்மை

மற்றொரு உணவகமான Royal Vega. இதற்குள்ளும் சுற்றிப்பார்த்தோம். (என்ன பண்றது, நம்மால அவ்வளவு தானே முடியும்)


Royal Vega

Royal Vega-வின் உள்ளே

சுவையைப் பொறுத்தவரை எல்லாமே சூப்பர்.  விலைதான் மூச்சு முட்டுகிறது.  பணக்காரர்களுக்கு இது சாதாரணமாக இருக்கலாம், நமக்கோ வாழ்வில் ஒருமுறை என்கிற ரீதியில்தான்.


நன்றி.