மூடர் கூடம்
Tuesday, September 17, 2013
Posted by கார்த்திக் சரவணன்
மூடர் கூடம் என்றால் முட்டாள்கள் சங்கமிக்கும் இடம் என்று பொருள் வருகிறது. FOOLS GATHERING என்று கேப்ஷன் வைத்திருக்கிறார்கள். தலைப்பே நம்மை உள்ளே ஈர்க்கும் விதத்தில் இருக்கிறதே, கண்டிப்பாக படமும் நன்றாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் ஞாயிறு மாலை காட்சிக்கு நங்கநல்லூர் வெற்றிவேல் தியேட்டருக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன்.
அடுத்தவேளை சோற்றுக்கே வழியில்லாத நான்கு பேர் சந்திக்க நேரிடுகிறது. ஒவ்வொருவருடைய வாழ்விலும் ஒவ்வொரு Flashback. சீட்டு கம்பெனி ஓனரான ஜெயப்பிரகாஷின் வீட்டைக் கொள்ளை அடிக்க திட்டம் தீட்டுகிறார்கள். அங்கே நடக்கும் சுவாரஸ்யமான காட்சிகளே மூடர் கூடம்.
இதில் முக்கிய ஹைலைட் படம் நெடுக இழையோடியிருக்கும் மெல்லிய நக்கல் நையாண்டி. எந்தக் கதாபாத்திரமுமே புத்திசாலி இல்லை. திருடுவதாக திட்டம் தீட்டியதும் முகத்தை மறைக்க முகமூடி வாங்கும் காட்சியில் ஆரம்பிக்கிறது, தமிழ் பேசும் சேட்டு, தாவூத் இப்ராகிமின் சென்னை கிளை அலுவலகம், அங்கு பிணைக் கைதியாய் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் நபர், படிக்கத் தெரியாத திருடனிடம் ஒரு சிடியையும் ஒரு பொம்மையையும் திருடி வரச்சொல்லும் முட்டாள் வியாபாரி, புதுப்பேட்டை ரவுடி, குட்டிப்பையன், குட்டிப்பெண், நாய், முஸ்லிம் பையனைக் காதலிக்கும் ஓவியா, வீட்டு வேலைக்காரன் என ஏகப்பட்ட கதாபாத்திரங்கள்.
அவ்வளவு பெரிய வீட்டில் திருட வந்து ஒன்றுமே கிடைக்காமல் போக விசாரிப்பதில் தெரிகிறது, ஜெயப்பிரகாஷ் சீட்டுக் கம்பெனி நடத்தியதில் நஷ்டம் ஏற்பட்டு குடும்பத்துடன் துபாய் போய் செட்டில் ஆக திட்டமிட்டிருப்பது. அவருடைய பார்ட்னர் இரண்டு லட்ச ரூபாய் பணத்தை மட்டும் எமர்ஜென்சிக்காக வைத்துக்கொண்டு மற்ற பணத்தையெல்லாம் துபாய் வங்கிக்கு மாற்றிவிட்டதாகவும் இருக்கும் இரண்டு லட்சத்தை மட்டும் எடுத்து வருவதாகவும் கூற, இது போதும் என்று முடிவு செய்கிறார்கள் திருட வந்தவர்கள். கடைசியில் அந்தப் பணமும் வேலைக்காரியின் மகளுக்கு ஆப்பரேஷன் செலவுக்கு தானமாக கொடுத்துவிடுகிறார்கள்.
ஒவ்வொரு கேரக்டரும் கிடைக்கிற கேப்பில் சிக்சர் அடித்துவிடுகிறார்கள். திருடன் மீது குட்டிப்பையனுக்கு ஏற்படும் நம்பிக்கையும், அதனால் அவனே கையில் பேட்டை எடுத்துக்கொண்டு தன் குடும்பத்தினர் எந்த முட்டாள் தனமும் செய்யாமல் காவல் காப்பது, தவறு செய்யும் பிணைக்கைதிகளை முட்டி போடச்சொல்லுவதும் தலைகீழாக நிற்கச் சொல்லுவதும், ஒரே ஒரு சீனியர் சிட்டிசன் தனக்கான உரிமைக்காக குரல் கொடுப்பதும் என பல இடங்களில் நக்கல் நையாண்டியில் கலக்கியிருக்கிறார்.
இந்தப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஆரம்பம் முதல் கடைசி வரை மெதுவாகவே பயணிக்கும் திரைக்கதை, அதிகம் பின்னணி இசை இல்லாமல் "டொய்" என்ற சப்தம் மட்டுமே அடிக்கடி வருவது, கதா பாத்திரங்களின் முகபாவனைகளுக்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டது, இடைவேளைக்குப் பின் வரும் சில தொய்வான காட்சிகள் தவிர்த்துப் பார்த்தால் ஒரு சிறப்பான முயற்சியே.
நன்றி..
This entry was posted by school paiyan, and is filed under
சினிமா,
சினிமா விமர்சனம்
.You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
படத்தின் எல்லா விஷயங்களையும் கவர் செய்து விட்டீர்கள். நல்ல விமர்சனம். எனக்கும் படம் பிடித்தது.
ReplyDeleteஎனக்கும் பிடித்தது... கொஞ்சம் இழுவையைத் தவிர்த்திருக்கலாம்....
Deleteவிமர்சனம் நன்று விரைவில் டிவியில் வந்து விடும் என்று நினைக்கறேன்.அப்போது பார்த்துக் கொள்ளலாம்
ReplyDeleteகண்டிப்பாக டிவியில் வரும்... நன்றி முரளி அண்ணா...
Deleteமூடர் கூடம் என்றால் முட்டாள்கள் சங்கமிக்கும் இடம் என்று பொருள்///
ReplyDeleteபடம் இண்ணும் பார்க்கல சார்.
உங்க விமர்சனம்தான் முதலில் படித்தேன்!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மகேஷ்...
Deleteடி.வி.யை முட்டாள்களின் பெட்டி என்பதுபோல் சினிமாவைத்தான் 'மூடர் கூடம் 'என்று சொல்கிறார்களோ ?
ReplyDeleteபின்னூட்டத்தில் கூட ஜோக்கடிக்கிறீர்களே பகவான்ஜி.... நன்றி...
Deleteஎனக்கும் படம் பார்க்கணும் போலதான் இருக்கு...!
ReplyDeleteஹிஹி... எல்லாருக்கும் பிடிக்குமான்னு தெரியலையே... நன்றி மனோ அண்ணே...
Deleteவணக்கம்
ReplyDeleteவிமர்சனப் பதிவு அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி நண்பா....
Deleteபாட்டே ஒன்னு கூட கிடையாதா ?
ReplyDeleteவிமரிசனம் செய்த விதம் சற்றே புதுமையாக உள்ளது .
பாட்டு இருக்கு... புதுமைன்னு சொன்னதுக்கு மிக்க நன்றி அம்மா...
Deleteஇந்தப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஆரம்பம் முதல் கடைசி வரை மெதுவாகவே பயணிக்கும் திரைக்கதை, அதிகம் பின்னணி இசை இல்லாமல் "டொய்" என்ற சப்தம் மட்டுமே அடிக்கடி வருவது, கதா பாத்திரங்களின் முகபாவனைகளுக்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டது, இடைவேளைக்குப் பின் வரும் சில தொய்வான காட்சிகள் தவிர்த்துப் பார்த்தால் ஒரு சிறப்பான முயற்சியே.
ReplyDeleteநல்ல அலசல் பதிவு.........
நன்றி நண்பரே... உங்களைப் போலவே எனக்கும் என்ன சொல்வதென்றே தெரியாமல் இருந்தது... உக்காந்து யோசிச்சா தான் புரியுது... மைல்டான காமெடி, சென்றாயனின் தமிழ் ஆர்வம்... இன்னும் எவ்வளவோ....
Deleteமூடர்கூடம் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது இருந்தும் இந்த மாதம் நோ சினிமா மாதம்...
ReplyDeleteஏன்பா... ஏன்? இந்தப்படம் பார்க்கலைன்னா ஓகே, இந்த மாதம் நோன்னு சொன்னா என்ன அர்த்தம்? புரியலையே.... அவ்வ்வ்வவ்வ்வ்வ்...
Deleteதி.கொ.போ.சீ புரட்டாசி விரதமோ ...?
ReplyDeleteஇருக்கும் இருக்கும்.....
Delete/இந்த மாதம் நோ சினிமா மாதம்//
ReplyDeleteநமக்கு எப்பவுமே நோ சினிமா.... எங்கேயோ தூரத்துல இருக்குப்பா தமிழ் சினிமா போடற தியேட்டர்......
ஹா ஹா... நீங்க சினிமா பாக்கனும்னா இங்க வரும்போது பாத்துக்கோங்க... நன்றி வெங்கட் அண்ணா...
Deleteஎனக்கும் படம் பிடித்தது
ReplyDeleteஇந்தப் படம் நல்லா இருக்குது, ரசிக்க முடியும்னு ஆவி சிபாரிசு பண்ணினாரு. இப்ப ஸ்.பை.யும் நல்லா வந்திருக்குன்னு சொல்றீங்க... நானும் பாத்துடணும்னு விரும்பறேன். முயற்சிக்கறேன்.
ReplyDelete