அனைவருக்கும் வணக்கம்.


நான் வலையுலகுக்கு வந்து இன்றுடன் ஒரு வருடம் முடிந்து இரண்டாம் வருடம் தொடங்குகிறது.  நேற்று தான் புதியவனாக எழுதத் தொடங்கியது போன்று இருக்கிறது, அதற்குள் ஒருவருடம் முடிந்து விட்டது எனும்போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.  ஆனால் இந்த ஒரு வருடத்தைப் பின்னோக்கிப் பார்க்கையில் எனக்குக் கிடைத்த நண்பர்கள் ஏராளம்.  நேரில் சந்தித்தும், தொலைபேசி மூலம் பேசியும், மின்னஞ்சல் மூலமாகவும், முகநூலிலும், அரட்டையிலும் பதிவர்களுடனான நட்பு தொடர்கிறது.  இத்தனைக்கும் ஒரு வருடத்துக்கு முன்னர் யாரையுமே அறிமுகம் இல்லை, ஆனால் இன்றோ ஸ்கூல் பையன் என்றால் வலையுலகில் கிட்டத்தட்ட அனைவருக்கும் தெரிந்திருக்கிறது (தெரிந்திருக்கிறதா?).




நான் முதன்முதலில் சந்தித்த பதிவர்கள் திடங்கொண்டு போராடு சீனு மற்றும் வாத்தியார் பாலகணேஷ் அவர்கள்.  தி.நகரில் உள்ள அந்த பார்க்கில் ஒருநாள் மாலை வேளையில் சந்தித்தோம், ஹா ஹா ஹா.. அடையாளத்துக்காக நான் என் மகனையும் கூட்டிச் சென்றிருந்தேன்.  அடுத்ததாக டிஸ்கவரி புக் பேலஸில் பதிவர் சி.கருணாகரசு அவர்களின் காதல் தின்றவன் என்ற புத்தக வெளியீடு நடந்த அன்று சீனு, பால கணேஷ் உட்பட பதிவர்கள் ஷான், ஆதிரா முல்லை, மதுமதி, அரசன், பட்டிக்காட்டான் ஜெய் மற்றும் முகநூல் நண்பர் அரங்கப்பெருமாள் (இன்னும் யார் யாரை சந்தித்தேன் என்று மறந்துவிட்டது) ஆகியோரை சந்தித்தேன்.  பின்னர் அவ்வப்போது சிறு சிறு சந்திப்புகள் தொடர்ந்தன, பதிவர் சந்திப்பு ஏற்பாடுகள் நடைபெற ஆரம்பித்தவுடன் சென்னை பதிவர்கள் அனைவரையும் நேரில் சந்தித்தாயிற்று.  நடந்து முடிந்த பதிவர் திருவிழாவில் ஏராளமான பதிவர்களை நேரில் சந்தித்துவிட்டேன்.



சந்திப்புகள் ஒருபுறம் இருக்க, இந்த ஒரு வருடத்தில் ஸ்கூல் பையனாக என்ன செய்துவிட்டேன்?  இதுவரை எழுதிய பதிவுகள் இந்தப் பதிவையும் சேர்த்து 48. பக்கப்பர்வைகள் 28625.  வந்திருக்கும் பின்னூட்டங்கள் சுமார் 750. பின் தொடர்பவர்கள் 92 பேர்.  ஒரு வருடத்தில் நாற்பதெட்டு பதிவுகள் என்பது மிகமிகக் குறைவே என்றாலும் ஆரம்ப காலத்தில் நான் என்னவோ மாதம் ஒரு பதிவே எழுதிவந்தேன்,  போகப்போக மாதம் இரண்டு, பின் வாரம் ஒன்று என முன்னேறி இப்போது கடந்த சில நாட்களாக தினம் ஒரு பதிவு என்கிற ரீதியில் எழுதிக்கொண்டிருக்கிறேன்.  இதுவரை எழுதிய பதிவுகள் ஒன்றில் கூட ஆபாசம் இல்லை, அரசியல் இல்லை, காப்பி பேஸ்ட் பதிவுகள் இல்லை. யாரையும் அவதூறாக விமர்சித்தோ தாக்கியோ எழுதியதில்லை.  பெண்கள் அனைவரும் விரும்பி படிக்கும் வலைப்பூ என்பது வந்திருக்கும் பின்னூட்டங்களில் தெரிகிறது, அதனால் கண்ணியம் கடைபிடிக்கப்படுகிறது.  இதுவரை எழுதியது அனைத்துமே கதை, கட்டுரை, கவிதை, நகைச்சுவை, சினிமா, அனுபவங்கள் என்றுதான் இருக்கிறது.  இதைத் தாண்டி என்ன எழுதுவது என்று எனக்குத் தெரியவில்லை.  ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.




இந்த ஒரு வருடத்தில் என்னை சகித்துக்கொண்ட சக பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.  உங்கள் ஆதரவும் பின்னூட்டமும் தான் என்னை உற்சாகப்படுத்தி மேலும் எழுதத் தூண்டுகின்றன.  அதே உற்சாகத்தை எனக்கு தொடர்ந்து அளித்து வாருங்கள்.


இந்த நேரத்தில் பதிவர் அல்லாத நண்பர் ஒருவருக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.  அவர், என் அலுவலக நண்பர் திரு.இளங்கோவன் அவர்கள்.  (எங்கள் அலுவலகத்திலேயே என் பதிவைப் படிப்பவர் இவர் ஒருவரே). என்னுடைய ஒவ்வொரு பதிவையும் படித்து எனக்கு நேரில் நிறை குறைகளை சொல்லி வந்தவர் தற்போது பின்னூட்டம் மூலம் என்னை உற்சாகப்படுத்தி வருகிறார்.  அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.


நான் எழுதும் பதிவுகளைப் படித்து புரிந்துகொண்டு பின்னூட்டம் இட்டு எனக்கு மேலும் எழுத உற்சாகம் அளிக்கும் பதிவுலக நண்பர்கள்:


திண்டுக்கல் தனபாலன்
ரமணி ஐயா
இராஜராஜேஸ்வரி
திடங்கொண்டு போராடு சீனு
மின்னல் வரிகள் பாலகணேஷ்
கோவை ஆவி
ரூபக் ராம்
அரசன்
கவியாழி
கோவை நேரம் ஜீவா
அம்பாளடியாள்
அவர்கள் உண்மைகள் மதுரைத்தமிழன்
காணாமல் போன கனவுகள் ராஜி
ஜீவன்சுப்பு
தி.தமிழ் இளங்கோ
தென்றல் சசிகலா
நாஞ்சில் மனோ
T.N.முரளிதரன்
ரஞ்சனி நாராயணன்
வெங்கட் நாகராஜ்
குடந்தையூர் சரவணன்
ஜோதிஜி திருப்பூர்
கடல் பயணங்கள் சுரேஷ்குமார்
எங்கள் ப்ளாக் ஸ்ரீராம்
இளமதி
சீனா ஐயா
தமிழ்வாசி பிரகாஷ்
தளிர் சுரேஷ்
பகவான்ஜி
பழனி கந்தசாமி
துளசி கோபால்
பரிதி முத்துராசன்
புலவர் இராமாநுசம்
மகேஷ்
மணிமாறன்
மதுமதி
மலரின் நினைவுகள் மலர்வண்ணன்
மாத்தியோசி ஜீவன்
மாதேவி
ராஜலக்ஷ்மி பரமசிவம்
ரூபன்
இரவின் புன்னகை வெற்றிவேல்
வேடந்தாங்கல் கருண்
சக்கர கட்டி
கோவை2தில்லி
குட்டன்
கோவை மு சரளா
எழில்
டிபிஆர்.ஜோசப்
கீதா சாம்பசிவம்
உஷா அன்பரசு
அபய அருணா
என் ராஜபாட்டை ராஜா
உணவு உலகம் சங்கரலிங்கம்
கரந்தை ஜெயக்குமார்
கலா குமரன்
கலியபெருமாள் புதுச்சேரி
சங்கவி
தங்கம் பழனி
தனிமரம் நேசன்
செல்வி காளிமுத்து

ஆகியோருக்கு நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.  மேலும் இந்தப் பட்டியலில் விட்டுப்போன நண்பர்கள் மன்னிக்க. (லிங்க் கொடுக்க முடியவில்லை, அதற்கும் மன்னிக்க)

முக்கியமான ஒருவருக்கு நான் இந்தப் பதிவின் மூலம் நன்றி சொல்லியே ஆகவேண்டும்.  அவர் என் மனைவி.  கால் காசுக்கு பிரயோஜனமில்லை, இதெல்லாம் தேவையா என்று திட்டாமல் நான் பதிவு எழுதும்போதெல்லாம் எனக்கு எந்த தடங்கலும் செய்யாமல், என் குழந்தைகளிடம் இருந்து என்னைத் தனித்துவைத்து அவ்வப்போது காபி போட்டுக்கொடுத்து என் உணர்வுகளை மதித்து எனக்கு மறைமுகமாக உற்சாகப்படுத்தி வருகிறார். அவருக்கும் என் நன்றிகள்.


இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன், தங்கள் நல்லாதரவு வேண்டி...

நன்றி...