ஹோட்டல் SAFARI
Tuesday, June 25, 2013
Posted by கார்த்திக் சரவணன்
ராயப்பேட்டையின் மிக முக்கிய இடத்தில் அமைந்திருக்கும் இந்த ஹோட்டல் சட்டென்று கண்ணில் படாது. காரணம் அந்த இடத்தின் டிராபிக். மயிலாப்பூரிலிருந்து ராயப்பேட்டை போகும் வழியில் ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் தாண்டியதும் வரும் சிக்னலுக்கு முன்னால் இடதுபுறத்தில் இருக்கிறது இந்த ஹோட்டல். நண்பர் ஒருவரின் ட்ரீட் இந்த ஹோட்டலில் ஒருநாள் அரங்கேறியது.
Ambience: கீழ்தளத்தில் Non-AC மேல் தளம் முழுவதும் ஏ.சி. செய்யப்பட்டிருக்கிறது. கூட்டமாக வருபவர்களுக்கு மேல் தளமே சிறந்தது. தினமும் வந்து சாப்பிடுபவர்கள் கீழ் தளத்திலேயே சாப்பிடுகிறார்கள். மேல் தளம் மிகவும் நீட்டாகவே இருக்கிறது. நான்குபேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய வகையில் டேபிள் மற்றும் சோபா போட்டிருக்கிறார்கள். ஆனால் அதிக அளவில் உணவு வகைகள் வைக்கும்போது டேபிளில் இடம் போதவில்லை.
நாங்கள் ஆறுபேர் சென்றிருந்தோம். எல்லா உணவுவகைகளையும் சுவைத்துப்பார்க்கும் எண்ணத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிளேட் ஆர்டர் செய்தோம். பிரியாணி வகைகளில் பிஷ், மட்டன், சிக்கன் மற்றும் ப்ரான் பிரியாணியும், சைட் டிஷ்ஷாக சிக்கன் மஞ்சூரியன், செட்டிநாடு சிக்கன், சிக்கன் பக்கோடா மற்றும் சிலோன் சிக்கனும் ஆர்டர் செய்திருந்தோம்.
சிக்கன் பக்கோடா |
முதன்முதலில் வந்தது சிக்கன் பக்கோடா. நாங்கள் ஆறுபேர் என்பதாலும், அனைவரும் பயங்கர பசியுடன் இருந்ததாலும் பக்கோடாவை போட்டோ எடுத்த அடுத்த நிமிடமே காலியானது.
சிக்கன் மொகல் பிரியாணி |
ப்ரான் பிரியாணி |
சிக்கன் செட்டிநாடு |
எல்லா உணவு வகைகளையும் சூடாகவே கொண்டுவருகிறார்கள். சுவையும் அருமை. பிரியாணியில் அரிசி சரியான பதத்தில் வெந்திருக்கிறது. எக்ஸ்ட்ரா ரைத்தா மற்றும் குழம்பு வகைகளை கேட்டால் மட்டுமே கொடுக்கிறார்கள்.
ஆறுபேர் சாப்பிட்டும் மொத்த பில் ரூ.1535/- மட்டுமே. அதாவது ஒரு ஆளுக்கு சுமார் 250 ரூபாய் வருகிறது. கொஞ்சம் காஸ்ட்லியாகத் தெரிந்தாலும் இந்த சுவைக்கு இது worth என்றே தோன்றுகிறது.
நன்றி...
This entry was posted by school paiyan, and is filed under
ஹோட்டல்
.You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
பிரியாணியை சுவைக்கும் போது காஸ்ட்லி நினைவு வருவதில்லை... ஹிஹி...
ReplyDeleteஅதே.... அதே...
Deletehttp://schoolpaiyan2012.blogspot.in/ இந்த .in இருந்ததால் பிரச்சனை... .com க்கு மாற்றி விட்டேன்...
ReplyDeleteதமிழ்மணம் இப்போது வேலை செய்யும்...
நன்றி...
நன்றி அண்ணா....
Deleteமுந்தைய பதிவை... "சூடணும்" ஆசையை காதல் மன்னன் சீனு அவர்களிடம் ஒப்படைக்கிறேன்... ஹிஹி...
ReplyDeleteஹா ஹா ஹா....
Deleteமுகல் சிக்கன் பிரியாணியில முட்டையை போட்டாப்புல இருக்கே...!
ReplyDeleteஅறுசுவை பல்சுவை, என்னைக் கூப்பிடாம போனதுக்கு கண்டம்கள் ச்சே கண்டனங்கள்.
சென்னைக்கு வாங்க.... கலக்கிருவோம்...
Deleteம்ம்ம்... வெளுத்துக் கட்டுற மக்கா...
ReplyDeleteஹி ஹி நன்றி அண்ணா..
Deleteஒரு முறை போய் தான் பார்த்திடுவோம்...
ReplyDeleteபோலாமே..
Deleteதல பதிவு எழுதுறதுக்காகவே சாப்ட போறிங்கள இல்ல பதிவு எழுதுறதுக்காக சாப்ட போறிங்களா
ReplyDeleteரெண்டும்தான்....
Deleteசக்கர கட்டி...,
ReplyDeleteதல பதிவு எழுதுறதுக்காகவே சாப்ட போறிங்கள இல்ல பதிவு எழுதுறதுக்காக சாப்ட போறிங்களா
>>
ஃபோட்டோலாம் எடுக்கனும்ன்னா கேமராவோட தான் போய் இருக்கனும்.., அப்போ இது பதிவு தேத்தறுதுக்காகவே போனதுதான் சகோ
அதாவது அக்கா, சாப்பிட்டப்புறம் போட்டோ எடுக்கமுடியாதுல்ல....அதனாலதான்...
Deleteஅடடா, நேரில் சென்று சாப்பிட்டு வந்தது போலவே இருக்கிறது - சென்னை வந்தால் போகலாம்ல!!
ReplyDeleteம்ம்ம்ம். நடத்துங்க! :)))))
ReplyDeleteசாப்பாட்டு வாசம் மூக்கைத் துளைக்குதே ....ஒரு கட்டுக்
ReplyDeleteகட்டிட வேண்டியது தான் :))
சார் கடைசியா நீங்க மட்டும் மாவாட்டிட்டு வந்த போட்டோவ ஏன் போடல அப்படின்னு நான் கேட்கல எதிர்கட்சிக் காரன் கேட்கக் சொன்னான் :-)
ReplyDeleteநல்ல கேள்வி
Deleteஇதுவும் நல்ல கேள்வி...!
Deleteஒரு புடி புடிச்சிட்டீங்க போல..
ReplyDeleteசரி.. பில் யாரு செட்டில் பண்ணினாங்க ப்ரதர்?
சிக்கன் பக்கோடாவும் சிக்கன் மொகல் பிரியாணியும் பாக்கும்போதே எஜ்ஜி ஊருது. . .
ReplyDelete-Kavin Smk
ஆக,
ReplyDeleteபில்லுல ரவுண்ட் ஆஃப் பண்ணும் போது அவங்க 20 காசு விட்டுத்தரமாட்டாங்க. நாம 30 காசு சேத்து தரனும்.
பதிவும் ,படமும் ,பசியை தூண்டுகிறது அருமை
ReplyDeleteசுவையான பதார்த்தங்கள்.. விலையும் பரவாயில்லை.. என்னை எப்போ நண்பா கூட்டிட்டு போறீங்க?
ReplyDeleteவாய்ப்பு கிடைத்தால் சாப்பிட்டு பாரத்துடனும்...!
ReplyDelete