ஆண்டிராய்டில் இனி மின்னல் வரிகள்
Monday, June 03, 2013
Posted by கார்த்திக் சரவணன்
கடந்த வாரம் நான் மெட்ராஸ்பவன் சிவாவின் ஃபோரம் மால் பற்றிய இந்தப் பதிவையையும் திடங்கொண்டு போராடு சீனுவின் சொல்ல விரும்பாத ரகசியம் படித்தபோதும் அதிர்ச்சியடைந்தேன். காரணம் அண்ணன் மின்னல் வரிகள் பாலகணேஷின் பின்னூட்டங்கள். தன் படைப்புகளுக்கு வரும் பின்னூட்டங்களுக்குக் கூட "ஹா ஹா என்று வாய்விட்டுச் சிரித்த உங்களுக்கு என் உள்ளம் நிறைந்த நன்றி" என்றுதான் பதில் பின்னூட்டம் இடுவார். இப்போது என்னவென்றால் புதிதாக ஆங்கிலத்தில் பின்னூட்டம்.
எனக்கு ஒரு சந்தேகம், ஒரு வேளை அவர் போனில் பின்னூட்டம் எழுதியிருப்பாரோ என்று. கொஞ்சம் யோசித்துப் பார்த்ததில் அண்ணன் ஆண்டிராய்டு போன் வாங்கியிருக்கக் கூடும் என்று புரிந்துவிட்டது. இருந்தாலும் என் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள அவருக்கு போன் செய்து கேட்டேவிட்டேன்.
"என்ன சார், ஆண்டிராய்டு போன் வாங்கிட்டீங்களா?"
"ஆமா, எப்படி கண்டுபிடிச்சே?"
"இல்ல, இன்னைக்கு இங்கிலீஷ்ல கமெண்ட் போட்டிருந்தீங்களே, அதைவச்சி ஒரு சந்தேகம்"
"அதானே, நான் செந்தமிழ்ல கமெண்ட் போடுற ஆளு, எப்படி இங்கிலீஷ் கமெண்ட்னு உனக்கு சந்தேகம் வந்திருக்கும், கரெக்ட்"
"சார், உங்க ஆண்டிராய்டு போனிலேயே தமிழ்ல டைப் பண்றதுக்கு சாப்ட்வேர் இருக்கு, நான் அப்புறமா அதுக்கு லின்க் அனுப்பறேன்"
சொல்லிவிட்டேனே தவிர மனதுக்குள் வேறு ஒரு சிந்தனை. இதை ஒரு பதிவாக வெளியிட்டால் என்ன? நிறைய பேருக்கு பயன்படுமே என்று நினைத்ததன் விளைவுதான் இந்தப் பதிவு.
இந்த அப்ளிகேஷனை நிறுவ நமக்கு வேண்டியது ஒரு ஆண்டிராய்டு போன். எந்த வெர்ஷனாக இருந்தாலும் சரி. கீழே உள்ள கூகிள் ப்ளேஸ்டோரின் முகவரியில் சென்று நிறுவிக்கொள்ளவும் அல்லது Google Play Store சென்று KM Tamil Keyboard என்று தேடவும்.
இந்த அப்ளிகேஷனை நிறுவ நமக்கு வேண்டியது ஒரு ஆண்டிராய்டு போன். எந்த வெர்ஷனாக இருந்தாலும் சரி. கீழே உள்ள கூகிள் ப்ளேஸ்டோரின் முகவரியில் சென்று நிறுவிக்கொள்ளவும் அல்லது Google Play Store சென்று KM Tamil Keyboard என்று தேடவும்.
இதை நிறுவியவுடன் நாம் முதலில் செய்யவேண்டியது Setting சென்று Language என்ற பிரிவில் KM Tamil Keyboard என்ற ஆப்ஷனை டிக் செய்துகொள்ளவும்.
இதை நிறுவியவுடன் நீங்கள் தமிழில் டைப் செய்ய வேண்டிய தளத்துக்குச் சென்று வழக்கம்போல யுனிகோட் தட்டச்சு முறையில் டைப் செய்யவும். உதாரணமாக "பாலகணேஷ்" என்பதை "baala kaNEsh" என்று டைப் செய்யவும். பின்னர் கீழிருக்கும் "Cnv" என்ற பட்டனை அழுத்தினால் ஆங்கிலத்தில் இருக்கும் வார்த்தைகள் தமிழுக்கு மாறிவிடும்.
சில வார்த்தைகளை தமிழில் தட்டச்சு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
கொஞ்சம் - konjsam
நலம் - nalam
மகிழ்ச்சி - makizchchi
வாழ்த்துக்கள் - vaazththukkaL
அரங்கம் - arangkam
இந்த மென்பொருளை தரவிறக்குவதற்கு மட்டுமே இணைய இணைப்பு தேவை. பயன்படுத்துவதற்குத் தேவையில்லை. இதை உபயோகித்து பதிவுகளும், பின்னூட்டங்களும் குறுஞ்செய்திகளும் அனுப்பலாம். பாலகணேஷ் சார், உடனே உங்க போனை எடுங்க, டயல் பண்ணுங்க, ச்சீ, டவுன்லோட் பண்ணுங்க.
இந்த மென்பொருளைப் பயன்படுத்துவதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னைத் தொடர்புகொள்ளவும்.
நன்றி...
This entry was posted by school paiyan, and is filed under
ஆண்டிராய்ட்,
கூகுள்,
பதிவர்கள்
.You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
பயனுள்ள தகவல்கள்..பாராட்டுக்கள்..
ReplyDeleteமுதல் வருகைக்கும் மிக்க நன்றி அம்மா....
Deleteரொம்பவே பிரயோஜனமான தகவல் தம்பி. நான் நீ பேசினப்புறம் ப்ளே ஸ்டோர்ல போயி ‘தமிழ் விசை’ங்கறதை தரவிறக்கி இப்ப தமிழ் டைப் பண்ண பயிற்சி எடுத்திட்டிருக்கேன். இதையும் கவனிக்கறேன். ஆனா நான் அப்படின்னு அடிச்சா அதுல னான் அப்படின்னு வருது. இந்த மாதிரி சில குழப்பங்கள்தான் இப்ப எனக்கு. சீக்கிரமே அதுலயும் தப்பில்லாம சைட்டடிக்கற... ச்சே, டைப்படிக்கற அளவுக்கு தேறிடுவேன். எனக்காகவே ஒரு பதிவு வெளியிட்டதுக்கு மிக்க நன்றிப்பா!
ReplyDeleteதமிழ் விசையை விட இது சிறந்ததாக இருக்கும் என்று நினைக்கிறேன் அண்ணா... நன்றி...
Deleteசைட்டடிக்கற எண்ணம் உட்பட இப்போ தான் எல்லா விசயங்களும் தெரியுது... ஹிஹி...
ReplyDeleteஹி ஹி...
Deleteவாத்தியாருக்காக ஒரு பதிவே போட்டாச்சா சூப்பர், அதுல என்னோட பதிவு லிங்க் கொடுத்தது இன்னும் சூப்பரோ சூப்பர்...
ReplyDeleteவிரைவில் நானும் ஆண்ட்ராயிட் வாங்கலாம் என்று இருக்கிறேன், தொடர்பு கொள்கிறேன்,
தற்போது நான் நோக்கியாவின் தலைசிறந்த தரமான வெளியீடான நோக்கியா 101ஐ என்ற அதி நவீன மாடல் பயன்படுத்துகிறேன்.
எனக்கு ஐஸ்க்ரீம் சான்ட்விச் என்றால் மிகவும் பிடிக்கும் என்னுடைய நோக்கியா மொபைலில் அதை நிறுவுவது எப்படி # ஆகச்சிறந்த டவுட் :-)
சீனு சார், உங்க போன எடுத்து, மேல கொஞ்சம் பழங்கள தூவி, ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் வச்சா, நீங்க கேட்ட ஐஸ்க்ரீம் சான்ட்விச் உங்க நோக்கியா மொபைல்ல நிறுவிடலாம் .
Deleteதம்பி.... தங்களது நோக்கியா தொஐபேசியை உடனடியாக தலையை சுற்றி போட்டுவிட்டு வாத்தியாரைப் போல் அழகான ஆன்டிராய்ட் போன் வாங்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்..
Deleteரூபக் & ஸ்கூல் பையன்... நியாயம்மாறே இது நியாயம்மாறே
Deleteஇந்த பதிவை ஒரு போன் வாங்கி கொடுத்திட்டு சொல்லித்தந்தா நல்லா தான் இருக்கும்.
ReplyDeleteவாங்கிக் கொடுத்திட்டா? யாரு நீங்க?
Deleteரொம்ப நல்லவங்க நீங்க..
Deleteநல்ல தகவல் பகிர்வு. நானும் ஆண்டிராய்டு போன் வாங்கனா பயன்படும்.
ReplyDeleteநன்றி ரூபக்....
Deleteஆஹா, அருமையான பயனுள்ள பதிவு. நானும் என்னுடைய போனில் டவுன் லோட் செய்து கொள்ளுகிறேன்,
ReplyDeleteபகிர்விற்கு நன்றி.
அருமை நன்றி நண்பா
ReplyDeleteபயனுள்ள குறிப்புகள்.....
ReplyDeleteகணேஷ் அண்ணே - வாழ்த்துகள்!
Sellinam is one best tamil keyboard
ReplyDeleteம்ம்ம் இந்த கணேஷ் அண்ணா ரொம்ப மோசம். தனக்கு மட்டும் ஒரு ஃபோன் வாங்கிக்கிட்டு இந்த தங்கச்சிக்கு வாங்கி குடுக்காம விட்டுட்டாரே! மற்றாப்படி பயனுள்ள பதிவு. என் பொண்ணு ஆன்ராய்டு போன் தான் வச்சிரிக்கு. அவளுக்கு யூஸ் ஆகும் பகிர்வுக்கு நன்றி தம்பி
ReplyDeleteஇந்த அக்கா ரொம்ப மோசம், அவங்க பொண்ணுக்கு மட்டும் வாங்கிக் கொடுத்துட்டு, இந்தத் தம்பிக்கு வாங்கிக் கொடுக்காம பண்ணிடாங்க.... # குருவே சரணம் :-)
Deleteதமிழ் விசை கீபோர்டும் பயன்படுத்தலாம்.கூகுள் ப்ளே ஸ்டோர் இல் கிடைக்கும்
ReplyDeleteநன்றி பையா....நான் தேடும்போது சீனு காண்பித்த பயனுள்ள தகவல்...
ReplyDeleteநன்றி தலைவரே ட்ரை பண்ணி பார்க்கலாம்
ReplyDeleteஇத வச்சு உங்களஒத்தஸன் எப்படி டைப் பண்றதுன்னு கொஞ்சம் விளக்கவும்.. ப்ளீஸ் ;-)
ReplyDeleteSir pls help me settings la km tamil option illa
ReplyDelete