எனது கணினி அனுபவங்கள் - தொடர்பதிவு
Wednesday, July 24, 2013
Posted by கார்த்திக் சரவணன்
நம்ம ராஜி அக்கா ஆரம்பிச்சு வச்சு அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில என் வரைக்கும் வந்திருச்சு. இது எப்படின்னு பாத்தா முதல்ல அக்கா தமிழ்வாசி பிரகாஷை எழுத அழைக்க அவர் அவரோட பதிவில நாஞ்சில் மனோவைக் கோர்த்து விட்டுட்டார். அவரோ கே.ஆர்.விஜயனை எழுதச்சொல்ல விஜயன் செல்வி அக்காவை எழுதச்சொல்லிட்டார். இப்போ செல்வி அக்கா மலேசியால இருந்து சென்னைல இருக்கிற என்னை எழுதச்சொல்லி கூப்பிட்டிருக்காங்க. சரி ரொம்ப ஈசியான பதிவுதானே எழுதிட்டுப் போவோம்னு ஆரம்பிச்சிட்டேன்.
அது 1994ஆம் வருஷம். நான் அப்போதான் பத்தாங்கிளாஸ் முடிச்சிருந்தேன். (உடனே நான் எந்த வருஷம் பிறந்திருப்பேன், என் வயசு என்னன்னு கணக்கு போடுவீங்களே, உங்களுக்கு இருக்கு). வீட்டில சும்மா இருக்கக்கூடாதுங்கிறதுக்காக டைப்ரைட்டிங் கிளாஸ் போக ஆரம்பிச்சேன். நான் போன இன்ஸ்டிட்யூட்ல சுமார் முப்பது டைப்ரைட்டிங் மிஷின் இருக்கும். இன்ஸ்டிட்யூட் ஓனர்க்கு அங்க தனி ரூம் உண்டு. அங்கதான் அது இருந்தது. அதுதான், அதேதான்.
மேல படத்துல பாத்தீங்களே, அதே தான். அந்த ரூமைக் கடக்கும்போது திரும்பிப் பாக்காம போனதில்ல. எப்ப பாத்தாலும் ஓனர் ஏதாவது அதில தட்டிக்கிட்டு இருப்பார். அவர் இல்லாத நேரத்துல அதுமேல வெள்ளையா பிளாஸ்டிக் கவர் போட்டு மூடியிருக்கும். டைப்ரைட்டிங் சொல்லிக்கொடுக்கிற அக்கா கிட்ட நான் கம்ப்யூட்டரை ஆன் பண்ணச்சொல்லிக் கேட்டிருக்கேன். "அட போடா, எனக்கே எப்படி ஆப்பரேட் பண்ணனும்னு தெரியாது, சார் கிட்ட ரொம்ப நாளா சொல்லித்தரச் சொல்லிக் கேட்டிட்டிருக்கேன்" அப்படின்னு என் வாய அடைச்சிட்டாங்க. அந்தக் கம்ப்யூட்டரை ஆப்பரேட் செய்வது கனவாவே போய்ருச்சு.
அதே வருஷம் நான் டிப்ளமா படிக்க சேர்ந்தேன். நான் படிச்ச கோர்ஸ்ல கடைசி வருஷம் (மூணாவது வருஷம் 1996-1997) மட்டும் கம்ப்யூட்டர் ஒரு சப்ஜெக்டா இருந்தது. என்ன படிச்சேன்னு கேளுங்க. Wordstar, Lotus, BASIC, DBASE, COBOL. அப்பவே வாத்தியார் சொன்னார், இந்த அஞ்சு சாப்ட்வேரும் உலகத்தையே கலக்கப்போகுது, எழுதி வச்சுக்கோங்கன்னு. எக்சாமுக்குன்னு இதில வர்ற ஷார்ட்கட், கமான்ட் எல்லாத்தையும் மனப்பாடம் செஞ்சு வச்சதுண்டு.
அந்த வருஷம் தான், நான் முதல்முறையா கம்ப்யூட்டரை தொட்டுப்பாத்த வருஷம். Wordstar, Lotus, BASIC இந்த மூணும் ரொம்ப ஈசியா இருந்தது. DBASE ரொம்ப மூளைய செலவழிக்க வேண்டியிருந்தது. இருந்தாலும் சவாலா இருந்ததால ரொம்ப பிடிச்சிருந்தது. COBOL மட்டும் தான், ஒன்றரை மைல் நீளத்துக்கு புரோகிராம் இருக்கும். ஒன்னும் புரியாது, நாமளா புதுசா எழுதினாலும் நூறு மிஸ்டேக் சொல்லும். அதனால அது மட்டும் பாகக்காயா கசந்தது.
1997, நான் டிப்ளமா முடிக்கிறதுக்கு கொஞ்சம் முன்னாடி தான் Windows 95 வந்தது. ஒரே ஒரு கம்ப்யூட்டர் வச்சு எங்க வாத்தியார் சிடி போட்டு அந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் எப்படின்னு அவருக்குத் தெரிஞ்ச வரையில் கத்துக்கொடுத்தார். அப்ப ஒண்ணு சொன்னார், "எதிர்காலத்தில காம்பாக்ட் டிஸ்க் ஒரு பெரிய புரட்சியே செய்யப்போகுது"ன்னு.
அவ்வளவுதாங்க, என் முதல் கணினி அனுபவம். நாமளும் ஒரு நாலு பேர கோர்த்துவிட்டுப் போவோம். இல்லேன்னா ஆரம்பிச்சு வச்ச அக்காவுக்கு கோவம் வந்திரும்.
வாங்க வாங்க
நன்றி.
This entry was posted by school paiyan, and is filed under
அனுபவம்,
தொடர்பதிவு
.You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
கணினி என்பது கனவாகவே இருந்த காலம் எல்லாருக்கும் உண்டுபோல, ஆனால் நம்ம பிள்ளைங்களுக்கு அது ஈசியா போனதில் சந்தோஷமே இல்லையா ?
ReplyDeleteமுதல் கணினி அனுபவம் சுவாரஸ்யமாதான் இருக்கு...!
நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட் அண்ணே... நம்ம பிள்ளைகளுக்கு அது ஈசியாப் போச்சு... முதல் ஆளா வந்து கமென்ட் போட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ் அண்ணே...
Deleteகணிணி அனுவப் பகிர்வுகளுக்கு பாராட்டுக்கள்..!
ReplyDeleteநன்றி அம்மா..
Delete1996-1997 ல நீங்க கொஞ்சம் கவனமாக cobol படித்து இருந்தால் இப்ப நீங்க அமெரிக்க ஸ்கூல் பையனாக ஆகி இருப்பிங்க....
ReplyDeleteஎன்ன பண்றது... அந்த ஒரு மொழி மட்டும் புரியவே இல்லை...
Deleteஅனுபவம் அருமை... இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாமோ...? என்று தோன்றுகிறது... (தப்பிச்சிட்டீங்க போல... ஹிஹி...)
ReplyDeleteஇன்னும் எழுதியிருந்தால் பதிவு ரொம்ப பெரிசாயிரும்னு தான் அண்ணா எழுதலை... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
Deleteஅக்காவுக்குகோத்துவிட்டுவேடிக்கைபார்கிறாங்கஆனாலும்மகிழ்சிதான்
ReplyDeleteஹா ஹா.. ஆமா ஐயா..
Deleteவிஜயன் ஜீவன் கண்மணி ஆக மொத்தம் எனக்கு யாரையும் விடறதா இல்ல :-) எனக்கு என்னவோ ஆட்டைய நான்தான் முடிச்சி வைப்பேன்னு நினைக்கிறன்
ReplyDeleteஹா ஹா யாராவது முடிச்சு வைங்க....
Deleteஅந்த COBOLல வச்சிட்டு தான் ஒரு வாரமா என் தலை உருளுது....
ReplyDeleteஇன்னுமா யூஸ் பண்றீங்க?
Deleteராஜியோட பதிவை படிச்சிட்டு எனக்கும் என்னோட அனுபவத்தை எழுதணும்னு தோனியதால நானும் ஒரு சங்கிலி பதிவ ஆரம்பிச்சி வச்சேன். >என்னுலகம் என்னை தொடர்ந்து எழுதறதுக்கு மூத்த பதிவர்களான துளசி மற்றும் தருமியை அழைச்சிருக்கேன்... படிச்சி பாருங்க.
ReplyDeleteகண்டிப்பா படிக்கிறேன் சார்....
Deleteபடித்ததில் மிக அருமையான பதிவு தம்பி. மிக்க நன்றி ஒத்துழைப்புக்கு.
ReplyDeleteறொம்ப நன்றி அக்கா.... உங்க மூலமா ஒரு பதிவு தேறிச்சு...
Delete"எதிர்காலத்தில காம்பாக்ட் டிஸ்க் ஒரு பெரிய புரட்சியே செய்யப்போகுது"ன்னு.///
ReplyDeleteகண்டிப்பா.... கம்ப்யூட்டர் புரட்சி நெனச்சு பாக்க முடியாத வேகத்தில் நடக்குது அண்ணே..
இன்னும் கொஞ்சம் விரிவா எழுதியிருக்கலாம்னு தோனுச்சு...
உண்மையிலேயே அந்த வாத்தியார் தீர்க்கதரிசி தான்... 15 வருஷம் முன்னாடியே இதை கணிச்சிருக்கார்....
Deleteசுவாரஸ்யத்திற்காக மிகைப்படுத்தாது
ReplyDeleteசொல்லிச் சென்றது
மனம் கவர்ந்தது
வாழ்த்துக்கள்
நன்றி ஐயா...
Deletetha.ma 5
ReplyDelete93- 94 ல் நானும் உங்க மாதிரியே பேசிக் படிச்சேன்! ப்ளஸ்டூ முடிச்சுட்டு! நீங்க எனக்கு ஜூனியர் போல! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி அண்ணே....
Deleteஅனுபவத்தை அடக்கமாக எழுதி இருக்கிறீர்கள் ஸ்கூல் பையன்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
பதிவு ரொம்ப சின்னதுன்னு சொல்ற மூணாவது ஆள் நீங்க... ம்.... நாளைக்கு இதொட தொடர்ச்சி எழுதலாமான்னு யோசிக்கிறேன்...
Deleteஉங்கள் கட்டளையை நிறைவேற்றி விட்டேன்!
ReplyDeleteநான் ரொம்பச் சின்னப் பதிவாக்கி விட்டேன்.குட்டனின் குட்டிப்பதிவு
படித்தேன்... ரசித்தேன்...
Deleteநல்ல அனுபவம்... என்னையும் ஸ்ரீராம் கூப்பிட்டு இருக்கார். எழுதணும்! :)
ReplyDeleteஎழுதுங்க....
Deleteஆஹா அப்ப உங்க வயசை அறிந்துவிட்டோம்!ஹீ நல்லாக இருக்கு பதிவு!
ReplyDeleteஇந்த தொடர்பதிவு மூலமா நிறைய பேரோட வயசு தெரிஞ்சுபோச்சு...
Deleteஅப்போது பெரிய விஷயமாக கருதப்பட்டது இப்போது அனைவரது விட்டில் வந்து விட்டதை நினைக்கும் பொழுது வியப்பாக உள்ளது
ReplyDeleteகரெக்ட் நண்பரே... சிறு வயதில் நாம் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டோம்....
Deleteஉண்மையில் ஸ்கூல் பையன் போல சுருக்கமாக எழுதி முடித்துவிட்டீர்கள். நீங்கள் படித்த பேசிக், கோபால், லோட்டஸ் வேர்ட்ஸ்டார் எல்லாம் நானும் படிச்சேன். இப்போதைக்கு நினைவில் இருப்பது வேர்ட்ஸ்டார் ஒன்றுதான்!
ReplyDeleteஆமா, நாங்கதான் வயசப் பத்திக் கவலைப் படுவோம்....இங்க பார்த்தா நீங்களுமா?
பதிவு சின்னதா இருக்குன்னு நீங்களும் சொல்லிட்டீங்க... இன்னொரு பதிவு போட்டுற வேண்டியதுதான்.... ஹாஹா நிறைய பேருக்கு என் வயது தெரியாது... அதனால்தான் அப்படி எழுதினேன்... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா....
Deleteநல்ல அனுபவம்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி...
Delete//உடனே நான் எந்த வருஷம் பிறந்திருப்பேன், என் வயசு என்னன்னு கணக்கு போடுவீங்களே,// போட்டாச்சு போட்டாச்சு ...!
ReplyDeleteஎன்னைய ஏம்பா கோர்த்துவிட்ட ...? கெட்ட நிகழ்வுகளையெல்லாம் ஞாபகம் வச்சுக்குறது கிடையாது ...!
அப்படியெல்லாம் சொல்லப்படாது.... அக்கா கோச்சுக்கும்...
Deleteஅம்மா அடிப்பா! அம்மா திட்டுவா! அம்மாக்கிட்ட சொல்லவா?!ன்னு எங்க வீட்டுலதான் என்னை என்னவோ பூச்சாண்டி போல பயமுறுத்த யூஸ் பண்றாங்கன்னு பார்த்தா, இங்கயுமா?!
Deleteஹா ஹா... பதிவுலகத்துக்கும் ஒரு பூச்சாண்டி தேவை.... நீங்க நிறைவேத்திட்டீங்க....
Deleteஆமா என்னைய மட்டும் சொன்னிங்க நீங்க சிறுசா தான் எழுதியிருக்கிங்க. ஆனாலும் சிறப்பு.
ReplyDeleteநன்றி...
Delete// அவ்வளவுதாங்க, என் முதல் கணினி அனுபவம் //
ReplyDeleteஎன்னாங்க சார்! சுருக்கா முடிச்சிட்டீங்க?
விரிவான பதிவு ஒன்று உறுதி...
Deleteநாமளும் ஒரு நாலு பேர கோர்த்துவிட்டுப் போவோம். இல்லேன்னா ஆரம்பிச்சு வச்ச அக்காவுக்கு கோவம் வந்திரும்.
ReplyDelete>>
இப்படி நாலு வரில எழுதுனா கோவம் வராமா அவார்டா கொடுப்பாங்க!!
கவலைப்படாதீங்க... பெரிய பதிவு எழுதிடறேன்...
Deletewaiting for part-2 :)
ReplyDeleteகண்டிப்பா...
Deleteநல்லாஇருக்கு கணிணி அனுபவம்/
ReplyDeleteநன்றி அண்ணே...
Delete//அது 1994ஆம் வருஷம். நான் அப்போதான் பத்தாங்கிளாஸ் முடிச்சிருந்தேன். //
ReplyDeleteஇப்ப வரையில அதுதானே பாஸ் படிச்சிகிட்டு இருக்கீங்க...ஏன்னா நீங்கதான் ஸ்கூல் பையனாச்சே... :-)
ஹா ஹா... ஸ்கூல் பையன்கிற பொறுப்ப என் பையன் கிட்ட ஒப்படைச்சிட்டேன்... நன்றி அண்ணே...
Deleteமுதல் கணினி அனுபவம் சுவாரஸ்யமா இருக்கு.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணே...
DeleteHey...ur article was nice....first experience with computer .....
ReplyDeleteயாருன்னே தெரியல... நல்லாருக்குன்னு சொல்றீங்க... நன்றி...
Deleteஎன்னாது பத்தாம் கிளாஸ் முடிச்சு இருக்கீங்களா...?
ReplyDeleteஅனுபவம் அருமை...
ஹா ஹா... நன்றி நண்பா..
Deleteகாம்பாக்ட் டிஸ்க் என்கிற குறுந்தகடை இன்று டிவிடி என்கிற அடர் குறுந்தகடு ஆக்கிரமித்து, அதையும் ப்ளூரே என்கிற நீலவண்ண அடர் குறுந்தகடு சாப்பிட்டுறும் போலருக்கே ஸ்.பை.! கம்ப்யூட்டர் துறை மேல மேல விரிஞ்சுட்டே போகுது... நாமளும் அப்பேட்டாகிர வேண்டியிருக்கு. நல்லவேளையா... நான் கோபாலு பக்கமே போகலை ஃபாக்ஸ் பேஸ்ல நரி மூஞ்சைப் பாத்துட்டு அந்த சாஃப்ட்வேர்லே ஆழ்ந்துட்டேன். ஹா... ஹா...! அனுபவத்தை சுருக்கமா நறுக்குன்னு சுவாரஸ்யமாவே சொல்லிட்டீங்க!
ReplyDeleteஆமாண்ணே... நாம அப்டேட்டா இல்லேன்னா பல்பு வாங்கிருவோம்... ரொம்ப நன்றி அண்ணே...
Delete'முதல் பதிவின் சந்தோசம்' என்ற தொடர் பதிவை எழுத நான் தங்களை அன்புடன் அழைக்கிறேன். (http://rubakram.blogspot.com/2013/08/blog-post.html)
ReplyDeleteஎழுதிருவோம்... நம்மது கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும்...'
Deleteமுதல் தொடர் பதிவை சுருக்கமாக எழுதிய காரணத்தால் சாமி குத்தமாகி போச்சாம் அதனால மறுபடி ஒரு தொடர் பதிவெழுத அழைக்கிறேன் தென்றல் வருக வருக..
ReplyDeleteஆகா... நமக்கு டிமாண்ட் ஜாஸ்தி தான் போல... எழுதிருவோம்....
Deleteஅன்பின் ஸ்கூல பையன் - http://blogintamil.blogspot.in/2013/08/blog-post_6.html - வலைச்சர அறிமுகம் மூலமாக இங்கு வந்தேன் - நல்லதொரு பதிவு - ஆமா - வாத்தியார் சொல்லிக் குடுத்ததயே எழுதி அதோட முடிச்சிட்டீங்களே - போதுமா - ம்ம்ம்ம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteதங்களது வருகை எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா... நன்றி...
Deleteநன்றி அண்ணே...
ReplyDeleteதொடர் பதிவை தொடர்ந்துள்ளேன் :
ReplyDeletehttp://vijayandurai.blogspot.com/2013/08/kannikanini.html