திருடா திருடா
Thursday, April 03, 2014
Posted by கார்த்திக் சரவணன்
"முருகா, எனக்கு வேலை கிடைச்சிருச்சுடா" மகிழ்ச்சி பொங்கச் சொன்னான் ரவி. இந்தச் செய்தி எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. என் முகம் மாறியதை அவன் கவனித்திருந்தான். "அப்போ இனிமே நீ வரமாட்டியா?" என்றேன். "டேய், வேண்டாம்டா நீயும் ஏதாவது வேலை தேடிக்கோ, அதுவரைக்கும் நான் உனக்கு சோறு போடுறேன். எவ்வளவு நாளானாலும் சரி. நான் பாத்துக்கறேன்" என்றான்.
எனக்கு சமாதானம் ஆகவில்லை. விஸ்கி பாட்டிலை எடுத்து கிளாசில் கவிழ்த்தேன். தண்ணீரை ஊற்றி மடமடவெனக் குடித்தேன். விஸ்கியின் காட்டமும் தண்ணீரின் குளிர்ச்சியும் சேர்ந்து தொண்டை வழியாக குடலுக்குள் இறங்கியது. "இப்ப நாம நல்லாத்தானே சம்பாதிக்கிறோம்? உனக்கு வேலை தேடணும்னு எப்படி மனசு வந்தது?" என்றேன். "முருகா அது தப்பு, பாவம். அப்படி சம்பாதிக்கிற பணம் நமக்கு வேணாம்டா" என்றான். எனக்கு இன்னும் கோபம் வந்தது. இம்முறை வெறும் விஸ்கியை பாட்டிலுடன் கவிழ்த்தேன். நாக்கிலிருந்து தொண்டை வழியாக வயிறு வரை அது பயணித்த பாதையெங்கும் எரிந்தது.
"பாவமா? தப்பா? இத்தனை நாளா இப்படித்தானடா சம்பாதிச்சோம்? அப்ப உனக்கு பாவமா தெரியலையா"
"முருகா உனக்கே தெரியும், நான் எத்தனை நாள் உன்கிட்ட பெண்பாவம் பொல்லாததுன்னு புலம்பியிருப்பேன். எத்தனை பெண்கள் நம்மளை சபிச்சிருப்பாங்க"
"என்னடா பெரிய ஞானி மாதிரி பேசற, உனக்கு இத்தனை நாள் சோறு போட்டதே இந்த பாவப்பட்ட பொழப்புதான். மனசுல வச்சுக்கோ. அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்துராதே, எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம் என்று குழறியபடியே சொல்லிவிட்டுப் படுத்தேன். மின்விசிறி சுழன்றுகொண்டிருந்தது. நான் படுத்திருந்த அறையும். மெல்ல கண்ணயர்ந்தேன்.
ரவியை எனக்கு இரண்டு வருடங்களாகத் தான் தெரியும். திருவல்லிக்கேணி மேன்ஷனில் என் ரூம்மேட். எனக்கு திருநெல்வேலி அவனுக்கு தூத்துக்குடி. இருவருக்குமே வேலையில்லை. அவன் ஒரு பல்சர் பைக் வைத்திருக்கிறான். வேலை தேடி அதில்தான் சுற்றுவோம். ஒரு நாள் மாலை விரக்தியுடன் வண்டியில் திரும்பிக்கொண்டிருந்தோம். ஆள் நடமாட்டம் இல்லாத அந்த சாலையில் தனியாக ஒரு பெண். கழுத்திலிருந்த சிறு சங்கிலி சூரிய ஒளி பட்டு மின்னியது. "டேய், மெதுவாப் போடா" என்றேன். "அந்த பிகரு சைட்டடிக்கிற மாதிரியா இருக்கு" என்றான். "கொஞ்சம் கிட்டப் போடா" நான் சொன்னதைத் தட்டாமல் செய்தான்.
அருகே நெருங்கியதும் திடீரென்று அவள் கழுத்தில் என் கைவைத்து இழுத்தேன். சிறிய சங்கிலிதான். பட்டென்று கையேடு வந்துவிட்டது. ரவியும் சரி, அந்தப்பெண்ணும் சரி, கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை. "அத்துட்டேன், ஓட்ரா, ஓட்ரா". ரவி பதட்டத்திலும் பட் பட்டென்று கியரை மாற்றி ஓட்ட ஆரம்பித்தான். நான் திரும்பிப் பார்த்தேன். அந்தப் பெண் கழுத்தில் கைவைத்தபடி பேந்தப்பேந்த விழித்துக்கொண்டிருந்தாள். இன்னும் சுயநினைவுக்கு வரவில்லை. அடுத்தடுத்து இரண்டு மூன்று திருப்பங்களில் திரும்பி பிரதான சாலையை அடைந்து மக்களுடன் மக்களாகக் கலந்துவிட்டோம்.
இவ்வளவுதான். இதுதான் எங்கள் முதல் திருட்டு. சிறிய சங்கிலிக்கே பல ஆயிரங்கள் கிடைத்தது. ரவிக்கு இதில் துளியும் விருப்பமில்லை. இருந்தாலும் நான் செய்த மூளைச்சலவையில் கொஞ்சம் மயங்கித்தான் போனான். அடுத்தடுத்து திட்டமிட்டோம். இல்லத்தரசிகளாகக் குறிவைத்தோம். தாலிச்செயின் மட்டுமே எங்கள் இலக்கு. மூன்று முதல் ஐந்து சவரன் வரை தேறும். ஆள் நடமாட்டம் இல்லாத தெருக்கள் தான் எங்கள் தேர்வு. சாதாரண வேகத்தில்தான் சென்றுகொண்டிருப்போம். தனியாக நடந்துசெல்லும் பெண்கள் அருகே சென்றதும் வேகம் குறையும், "உஷ்ஷ்ஷ்ஷ்" என்று சப்தம் எழுப்புவேன். திரும்பும் பெண்ணிடமிருந்து பட்டென்று நகையைப் பிடுங்குவேன். உடனே ரவி படபடவென வேகமேடுப்பான். செய்வதறியாது திகைத்து நிற்கும் அவர்கள் சுய நினைவுக்கு வருவதற்கே ஒரு நிமிடம் ஆகும். அதற்குள் நாங்கள் வெகுதூரம் கடந்திருப்போம்.
இப்படியாக திரில்லாகப் போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென குண்டைத் தூக்கிப்போட்டான். கைகட்டி வேலை செய்தோ கஷ்டப்பட்டு தொழில் செய்தோ சம்பாதிக்கும் பணத்தில் எனக்கு கொஞ்சம் கூட உடன்பாடில்லை. அறுத்தோமா, கடையில் கொடுத்தோமா, பணத்தை வாங்கினோமா என்றிருக்கவேண்டாம்? முடிவு செய்துவிட்டேன். இவன் இல்லையென்றால் என்ன? எனக்கு என்மீது நம்பிக்கை இருக்கிறது. என் பிழைப்பை நானே முடிவு செய்துகொள்கிறேன்.
அடுத்த நாள் - ரவி வேலைக்குப் புறப்பட்டான். அவனுக்கு அலுவலகம் தரமணியில். மின்சார ரயில்தான் அவனுக்கு வசதி, எனக்கும். வண்டி இருக்கிறது. இன்றைய களவை நானே தனியாகப் பார்த்துக்கொள்கிறேன். அவன் கிளம்பிய சற்று நேரத்தில் பல்சரைக் கிளப்பினேன். இரண்டு மூன்று தெருக்கள்தான் சுற்றியிருப்பேன். அதோ, தூரத்தில் ஒரு பெண். நாற்பது வயதிருக்கலாம். கொஞ்சம் நெருங்கியதும் தெரிந்தது. நான்கு சவரன் தேறும். வேகத்தைக் குறைத்து அருகில் சென்றேன். சப்தம் எதுவும் எழுப்பவில்லை. கழுத்தில் கைவைத்து பட்டென்று இழுத்தேன். நிலைகுலைந்து விழப்போனாள். செயின் கையேடு வந்துவிட்டது. வேகமெடுத்தேன். அதே சமயம் பின்னல் "திருடன், திருடன்" என்ற சப்தம். கத்தியபடியே ஒருபெண் ஸ்கூட்டியில் என்னைத் துரத்தினாள். எனக்கு உள்ளூர ஓர் உதறல் எடுத்தது. இன்னும் வேகமெடுத்தேன். அந்த ஸ்கூட்டி பெண் என்னை வேகமாக நெருங்கிக்கொண்டிருந்தாள். அவள் கத்துவதைப் பார்த்து யாராவது என்னைப் பிடித்தால் நான் காலி. ஆனால் என் பல்சரின் வேகத்துக்கு அவளால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஆங்காங்கே பல திருப்பங்களில் திரும்பி அவள் கண்களிலிருந்து மறைந்தேன். தனியாக செயின் அறுப்பது இயலாத காரியம் என்று முடிவெடுத்தேன்.
ஒரு வாரம் கழிந்தது. என்னால் சும்மா இருக்கமுடியவில்லை. ரவியுடன் ரயில் நிலையம் சென்றேன். அவன் போனதும் பிளாட்பாரத்திலிருந்த பெஞ்சில் அமர்ந்து யோசித்தேன். பத்து நிமிடத்துக்கு ஒருமுறை ரயில் அங்குமிங்கும் கடந்துகொண்டிருந்தது. அப்போதுதான் அந்த ஐடியா உதித்தது. மகளிர் பெட்டி அருகே போய் போன் பேசுவதுபோல் நின்றுகொள்ளவேண்டும், ரயில் கிளம்பியதும் ஜன்னல் ஓரம் அமர்ந்திருக்கும் பெண்ணிடமிருந்து செயினைப் பறிக்கவேண்டும். அவர்கள் சுதாரித்து ரயிலை நிறுத்துவதற்குள் ஓடிவிடவேண்டும். வெரி சிம்பிள். அதோ, ரயில் வந்துகொண்டிருக்கிறது. நான் இப்போது மகளிர் பெட்டி நிற்கும் இடத்தில்தான் நின்றுகொண்டிருக்கிறேன். நான் அதிர்ஷ்டக்காரன். என் கைக்கெட்டும் தூரத்தில் ஒரு பெண் கனத்த சங்கிலியைப் பறிகொடுக்கப் போவதை அறியாமல் அமர்ந்திருந்தாள். மதிய வேளையாதலால் கூட்டமுமில்லை. முன்னும் பின்னும் சைரன் ஒலிக்க ரயில் கிளம்பியது.
ஜன்னலினூடே கையை நுழைத்தேன் - செயினைப் பிடித்தேன். அதற்குள் என் கையை இரண்டு கைகள் இறுகப் பற்றிக்கொண்டன. அவளே தான். "டேய், திருடவா பாக்கிறே" என்றாள். என் கையை அவளிடமிருந்து விடுவிக்க முயன்றேன். அதற்குள் ரயில் வேகமெடுத்துவிட, மற்றொரு கையால் ஜன்னலைப் பிடித்துக்கொண்டு ஓட ஆரம்பித்தேன். "எக்கா, எக்கா, என்னை விட்ருங்க" என்று பிதற்றினேன். அதற்குள் உள்ளிருந்த மற்ற பெண்கள் கூடிவிட யாரோ செயினைப் பிடிச்சு இழுங்க, இவனைப் போலீஸ்ல பிடிச்சுக் கொடுக்கலாம் என்றார். "ஐயோ, வேண்டாம்கா, போலீசெல்லாம் வேண்டாம், விட்ருங்க" என்று கதறினேன். அதற்குள் ரயில் பிலாட்பாரத்தைக் கடந்துவிட்டிருந்தது. "விட்டுரவா, விட்டுரவா" என்றாள். "வேண்டாம்கா, விட்ராதீங்க, நான் செத்துருவேன், நல்லாப் பிடிச்சுக்கோங்க, என் உயிரே உங்க கைலதான் இருக்கு" என்று அழ ஆரம்பித்தேன். முழுதாய் இரண்டு நிமிடங்கள் ஏதேதோ உளறினேன். அடுத்த ரயில் நிலையம் வந்தது. "உனக்கு உயிர்ப்பிச்சை தரேன், இப்படி ஓடிப்போயிரு" என்று என் கையை அவள் கைகளிலிருந்து விடுவித்தாள்.
மறுநாள் காலை. தினசரியைப் புரட்டிக்கொண்டிருந்தேன். ரவி அப்போதுதான் எழுந்தான். "அடடே, ஆச்சரியமா இருக்கே, என்ன பாக்கறே?" என்றான். "Opportunities பாக்கறேன்டா, நானும் வேலை தேடிக்கலாம்னு இருக்கேன்" என்றேன். "என்னடா ஆச்சு", "அது ஒண்ணுமில்லடா, நீ வேலைக்குப் போனதிலேருந்து உன் கண்ணுல ஒரு நிம்மதி தெரியுது. அதான் நானும் உன்னை மாதிரி நிம்மதியான வாழ்க்கை வாழலாம்னு முடிவு பண்ணிட்டேன்" என்றேன்.
---------------------
அடுத்து வருவது: மனம் மயக்கும் மூணாறு
This entry was posted by school paiyan, and is filed under
சிறுகதை
.You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
Nice!
ReplyDeleteநன்றி சார்.. தங்கள் வருகை எனக்கு மிக்க மகிழ்ச்சி...
Deleteஅருமை ..
ReplyDeleteநன்றி சீனி சகோதரரே...
Deleteபட்டால்தானே தெரிகிறது தொட்டால் சுடுவது பெண்மையென்று...! ஹி... ஹி... ஹி.... சரளமான எழுத்து நடை அருமை. (///இன்றைய கலவை நானே தனியாகப் பார்த்துக்கொள்கிறேன் /// அது களவை—ன்னு வரணும்னு நினைக்கிறேன்.)
ReplyDeleteகரெக்ட் வாத்தியாரே, மாத்திட்டேன்...
Deletekadhai nalla irunthathu sir.
ReplyDeleteinnaikku rompa sikkirama athikalaiyil pathiva veliyittu irukkuringapola.
(nan paarthavara ungal pathivu kalai 6 muthal 8 manikkula tan perumpalum varum)
ஆமா மகேஷ், இதை நடு ராத்திரியில் கண் முழிச்சு எழுதினேன்
Delete// எழுத்துப்பிழை சரிபார்க்களை//
ReplyDeleteஆஹா...இப்ப முழிச்சுக்கிட்டுத்தானே இருக்கீங்க. ஆனாலும் 'ளை' விடலை பாருங்க:-)
ஹா ஹா, இந்த இன்புட் டூல்ஸ் படுத்துது டீச்சர்...
Deleteரவி திருந்தியதோடு அல்லாமல் நல்லதொரு முடிவை உணர்ந்தது சரி...
ReplyDeleteநன்றி டிடி அண்ணே...
Delete'கதைசொல்லி" சரவணர் இந்த முறையும் தூள் கிளப்பியிருக்கிறார்.
ReplyDeleteதூள் கிளப்பிட்டேனா (வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்)
Deleteஅப்புறம் சொல்ல மறந்துட்டேன்... உங்க நேர்மை பிடிச்சிருக்கு ஸ்.பை. (கருத்துரைகளை வெளியிடுவதில்)
ReplyDeleteதுளசி டீச்சர் வெளியிட வேண்டாம்னு சொன்னதால டெலீட் பண்ணிட்டேன்... அவ்வளவுதான்..
Delete#உள்ளிருந்த மற்ற பெண்கள் கூடிவிட யாரோ செயினைப் பிடிச்சு இழுங்க#
ReplyDeleteஅடுத்த ரயில் ஸ்டேசன் வரும் வரை எப்படி ரயில் போகும் ?
கதை நல்லாயிருக்கு ,திருத்தம் செய்யுங்கள் ஸ்பை!
த ம 7
கரெக்ட் பகவான்ஜி, நன்றி....
Deleteஆஹா.. கதை நல்லா இருக்கு
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி..
Deleteநாள் கதை. உங்கள் எழுத்து நடை இன்னும் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteஎன்ன பகவான் ஜீ சொன்னதுபோல், கொஞ்சம் திருத்தம் செய்து கொள்ளுங்கள்.
மற்றபடி முழுமூச்சுடன் படிக்கத் தூண்டும் கதை (நான் ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன்). வாழ்த்துக்கள்
ஒறே மூச்சில் படித்துவிட்டீர்களா, எனில் எனக்கு வெற்றியே...
Deleteமுடிவு யூகிச்சிருந்தாலும் முடிவுக்கான வழியை யூகிக்க முடியவில்லை. வாழ்த்த்துகள் ஸ்.பை
ReplyDeleteநன்றி அக்கா....
Deleteஅருமை! நல்ல கதை!
ReplyDeleteநன்றி சகோதரி...
Deleteகதையை சுவாரசியமாகக் கொண்டு சென்றிருக்கிறீர்கள் .படிக்க ஆரம்பித்தபின் அதை நிறுத்த முடியவில்லை .அதுவே சக்சஸ் தான்
ReplyDelete//அதுவே சக்சஸ் தான்//
Deleteநன்றி அம்மா..
மிக வித்தியாசமான ஒரு கதைக்களம்! அருமையாக இருந்தது கதை! கடைசிவரை விறுவிறுப்பு குறையவில்லை! நன்றி! காலையிலேயே மொபைலில் படித்துவிட்டேன்! இப்போது கமெண்ட் மட்டும் கணிணி வழியில்! நன்றி!
ReplyDeleteவிறுவிறுப்பு குறையாமல் எழுதியிருக்கிறேனா? நன்றி சுரேஷ் அண்ணா...
Deleteகதை ரெம்ப நல்ல இருந்திச்சி பாஸ்....
ReplyDeleteநன்றி பாஸ்... உங்கள் தொடர் வருகைக்கு மிக்க நன்றி...
Deleteகதை நல்லாயிருக்கு...இப்படி திருடனுங்க எல்லாம் திருந்திட்டாங்கன்னா பரவாயில்லை...
ReplyDeleteகதையில் தான் திருடர்கள் திருந்துவார்கள்... நிஜ வாழ்க்கையில் இந்த சமூகம் திருந்தவிடாது... நன்றி எழில் மேடம்...
Deleteஅருமையான கதை. திருடானாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல் திருடரே திருந்தி விட்டார்கள், இனி எல்லாம் நலமே.
ReplyDeleteமிக்க நன்றி கோமதி அரசு மேடம்...
DeleteArumaiyana Kathai,... Kathaiyil thramani,Bike ....Rendum en related....
ReplyDeleteஹா ஹா.. இது முன்பே முடிவு செய்திருந்தேன் இளங்கோ... நன்றி...
Deleteஅருமையான் கதை!
ReplyDeleteநன்றி நேசன்...
Deleteஉங்க நேர்மை பிடிச்சிருக்கு ஸ்.பை. (கருத்துரைகளை வெளியிடுவதில்)//இதைத்தான் எதிர் பார்த்தேன் சார்.
ReplyDeleteகொஞ்சம் புரியற மாதிரி சொன்னா நல்லது....
DeleteNice story. Interesting to read and with a very good ending.
ReplyDeleteதொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்,
Deleteதிருடரே திருந்தி விட்டார்கள் என நல்ல முடிவாக முடித்துள்ளீர்கள்.
ReplyDeleteஆமாம் சகோதரி... இந்தக் கதைக்கு negative முடிவு தேவைப்படவில்லை...
Deleteகதை அருமையாக இருந்தது! முடிவு பலே! திருடர்களும் கூட நன்றாக நடக்கின்றார்கள்! (அதாங்க உங்க எழுத்து நடை!
ReplyDeleteஅப்போ என்னை திருடன்னு சொல்றீங்களா சார்?
Deleteபழைய கதை , புதிய திரைக்கதை :)
ReplyDeleteநல்ல Flow ஆனால் புதுசா எதுனா யோசிங்க ஸ்பை ...
யோவ், உன்னைத் திருப்திப் படுத்தவே முடியாது போல...ம்ம்ம்ம்... அடுத்த கதையில் முயற்சிக்கிறேன்....
Deleteஸ்பை கதை நல்லா இருக்கு ...இண்டேறேச்டிங் ஆஅ சொல்லி இருக்கீங்க ...இவ்வளவு சீக்கிரம் திருடர்கள் மனம் மாறுவார்களா என்ன ....
ReplyDeleteமுடிவு ஓகே தான் ....உங்களின் ஒரு கதை படிச்சது மனசில ஆழமா பதிஞ்சது உடல் ஊனமுற்ற ஒருவரின் கதையில் ...கடைசியில் முடிவை நீங்கள செதுக்கி இருக்கலாம் நு எல்லாருடைய கமெண்ட் படிச்த்தேன் ...உண்மையில் தற்கொலை முடிவு மற்றவர்களுக்கு அபத்தமா தெரிஞ்ச்தாலும் உண்மையில் அந்த முடிவு தான் உண்மைஆகி நின்ன்றது மனதில் ...பட்டவர்களுக்கு தான் காயத்தின் வழியும் வேதனையும் தெரியும்..வலியை உணர்கிறேன் ஸ்பை ..
கலை சகோ சொல்றது "இப்படிக்கு இறந்துபோனவன்". நிறைய நெகட்டிவ் கமென்ட் வந்திருந்தாலும் அந்த முடிவுதான் எனக்கு திருப்தியா இருந்தது... உங்க மனசையும் பாதிச்சிருந்ததுன்னா அது எனக்கு வெற்றியே....
Deleteகதை நல்ல ஸ்பீட் . சுவாரசியமாகவும் இருந்தது வாழ்த்துக்கள்
ReplyDeleteஎனக்கு சமாதானம் ஆகவில்லை.
//விஸ்கி பாட்டிலை எடுத்து கிளாசில் கவிழ்த்தேன். தண்ணீரை ஊற்றி மடமடவெனக் குடித்தேன். விஸ்கியின் காட்டமும் தண்ணீரின் குளிர்ச்சியும் சேர்ந்து தொண்டை வழியாக குடலுக்குள் இறங்கியது.//
சினிமாவில்தான் தண்ணி அடிக்கும் காட்சிகள் தவறாமல் இடம் பெறுகின்றன. சிறுகதைகளில் கூட இது தேவைதானா/
கரெக்ட் முரளி சார், ஒரு திருடனுடைய பழக்கம் என்பதாகத்தான் சொல்லியிருக்கிறேன். இனி கூடுமானவரை இந்த மாதிரி வராமல் பார்த்துக் கொள்கிறேன்...
Deleteஹாஹா ஐயோ! அதான்....Bracket ல போட்ருக்கம்ல......
ReplyDeleteஹா ஹா... சும்மா சார்....
Deleteஇனிய தமிழ்ப் புத்தாண்டு நல வாழ்த்துக்கள்!///நல்ல விழிப்பூட்டும்(எல்லோருக்கும்,ஐ மீன் திருடருக்கும்&பறி கொடுப்பவருக்கும்) கதை.
ReplyDeleteநன்றி யோகா அண்ணே...
Deleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : செல்வி காளிமுத்து அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : என் மன வானில்
வலைச்சர தள இணைப்பு : புதனின் புத்திரர்கள்