கடந்த பகுதிகள்






மூணாறை விட்டு வெளியேற மனமில்லை என்றாலும் தேனியிலிருந்து சென்னைக்கு பேருந்தில் டிக்கட்கள் முன்பதிவு செய்யப்பட்டிருந்ததால் புறப்பட வேண்டியதாயிற்று. இன்னொரு நாள் கூட தங்கியிருந்திருக்கலாம். தேனிக்கு இறங்கும் வழியில் லாக்ஹாட் கேப் (Lockhart Gap) என்ற இடம் அழகாக இருக்கும் என்பதால் அந்த இடம் நோக்கிப் புறப்பட்டோம். அந்த இடத்தை அடைந்தபோது ஏற்கனவே ஐந்தாறு கார்கள் அங்கு நின்றிருந்தன. பலதரப்பட்ட மக்களும் அங்கு நின்று போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார்கள். இதோ நாங்கள் எடுத்த படங்கள் உங்களுக்காக.










அடுத்து இறங்கும் வழியில் மைனா பாறை என்ற இடத்தை அடைந்தோம். மைனா திரைப்படத்தில் பேருந்து விபத்துக்குள்ளாகி ஒரு பள்ளத்தாக்கில் விழுவதுபோல் ஒரு காட்சி வரும். அந்தக் காட்சி இந்த இடத்தில்தான் எடுக்கப்பட்டது என்கிறார்கள். படத்தில் பார்க்கும்போது இந்த இடம் மிகப்பெரிய பள்ளத்தாக்கு போல காணப்படுகிறது. ஆனால் நேரில் சரிவான பாறையாகத்தான் இருக்கிறது. 






மைனா பாறையையும் பார்த்துவிட்டுச் செல்லும் வழியில் பெரிய ஏரி ஒன்று கண்ணில் படவே வண்டியை நிறுத்தச்சொல்லி இறங்கினோம். 








கேரள எல்லை வரை பசுமையாக இருந்த காடுகள் போடிமெட்டு நெருங்கும்போது காய்ந்து போயிருந்தன. குளிரும் இல்லவே இல்லை. 


வரிவரியாக சாலைகள்



இனி செலவுக்கணக்கு

இரண்டு அறைகள் ஒரு நாள் வாடகை  ரூ.6800
தேனியிலிருந்து மூணாறு, 
இரண்டு நாட்கள் சுற்றிக்காட்டுதல், 
மீண்டும் தேனி கார் வாடகை  ரூ.7000

பேருந்து போக வர   ரூ.6000

சாப்பாடு செலவு ரூ.2000

நுழைவுக் கட்டணம், விளையாட்டுக்கள்,
தேநீர் போன்ற இதர செலவுகள்   ரூ.700

மொத்தம் ரூ.22500

ஒரு ஆளுக்கு ரூ.4500

ஒருவர் மட்டும் வராததால் இந்த செலவு. அவரும் வந்திருந்தால் இன்னும் கொஞ்சம் குறைந்திருக்கும். மூணாறு செல்வதாக இருந்தால் இரண்டு நாட்கள் முழுவதுமாக தங்கும் வகையில் செல்வது நலம். நாங்கள் ஒரு நாள் இரவு மட்டுமே தங்கியதால் சுற்றிப் பார்ப்பதில் அவசரம் காட்டியிருந்தோம். பல இடங்களில் அதிக நேரம் செலவழிக்கமுடியவில்லை.

நன்றி.


அடுத்து வருவது: மீனாச்சி (சிறுகதை)