எங்க குலதெய்வம்
Wednesday, November 27, 2013
Posted by கார்த்திக் சரவணன்
எப்போ பாத்தாலும் ஹோட்டல், சினிமான்னு எழுதி ரொம்ப போர் அடிக்குது. எனக்கே இப்படின்னா படிக்கிற உங்களுக்கு எப்படி இருக்கும்? அதனால இன்னிக்கு ஒரு மாற்றத்துக்கு எங்க குலதெய்வ சாமி பத்தி பாக்கலாம்.
எங்க அப்பாவின் மடியில் என் மகள் |
எங்க குல தெய்வ சாமி பேரு கற்பக நாச்சியார் அம்மன். இதோ, மேல படத்துல பின்னணியில சீரியல் லைட் வெளிச்சத்துக்கு நடுவுல இருக்கிறது தான் அந்த சாமி. தெளிவான படம் கேக்காதீங்க, சாமியை போட்டோவே எடுக்கக்கூடாதுன்னு எங்க அப்பா உத்தரவு. இருந்தாலும் என் மகளுக்கு முதல் மொட்டை எடுக்கும் சமயத்தில் சில கிளிக்குகள் அம்மனையும் சேர்த்து எடுத்துட்டதால அதில ஒண்ணு உங்க பார்வைக்கு.
எங்க இருக்கு? நம்ம ஊர் ராஜபாளையத்தில் இருந்து தென்காசி போற வழியில புளியங்குடி தாண்டி நாலு கிலோமீட்டர் போனா புன்னையாபுரம்னு ஒரு சின்ன கிராமம் இருக்கு. அங்கிருந்து வலது பக்கம் திரும்பி இரண்டு கிலோ மீட்டர் நடந்தா மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்துல இயற்கை எழில் சூழ்ந்த எடத்துல கோவில்.
கோவில் தொடங்கும் இடம் |
முன்னெல்லாம் வெறும் மண் ரோடு மட்டும்தான் இருக்கும், நடந்து மட்டும் தான் வரமுடியும். புளியங்குடியில் இருந்து புன்னையாபுரம் வரை ஆட்டோல வந்து மண் ரோட்டில இறங்கிருவோம். அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் புளியோதரை, தயிர் சாதம் போன்ற சாப்பாடு, துணிமணிகளை சுமந்துட்டு ஊர்க்கதைகளைப் பேசிக்கிட்டு நடந்து வருவோம். இப்போ சில வருஷங்களுக்கு முன்னால தார் ரோடு போட்டாங்க. அதனால கோவில் வரைக்கும் ஆட்டோ வரும்.
வரவேற்கும் விநாயகர் |
வனப்பகுதி தொடங்கும் இந்தக் காட்டுக்குள்ள நுழைஞ்சதும் நம்மை வரவேற்கிறது அரச மரமும் அதுக்குக் கீழே உட்கார்ந்திருக்கிற பிள்ளையாரும் தான். அதுக்குப் பின்னால சில பல படிகள் ஏறிப்போனா அம்மன் இருக்கிற கோவில்.
மேல ஒரு மஞ்சள் கட்டிடம் தெரியுதே, அது தான் கோவில் |
தல வரலாறு: இதைப்பத்தியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. இணையத்துல தேடிப்பாத்தேன், கிடைக்கலை. ஒரு அழகான பொண்ணு தீய சக்திகளிடம் இருந்து தப்பித்து ஓடும்போது இரண்டு மலைகளுக்கு நடுவே சிலையாக மாறியதாக சிலர் சொல்றாங்க. இருந்தாலும் அடுத்தமுறை ஊருக்குப் போகும்போது பெரியவர்கள் யார் கிட்டயாவது கேட்டு சொல்றேன்.
குளிக்கும் இடம் |
கோவிலுக்கு இடது புறத்தில் பக்தர்கள் குளிக்கறதுக்குன்னு தொட்டி கட்டி வச்சிருக்காங்க. என்ன விசேஷம்னா மலையில ஓடுற ஆத்துத் தண்ணி இங்க வர்ற மாதிரி மலையைக் குடைந்து பாதை அமைச்சிருக்காங்க. கூட்டம் அதிகமா இருக்கிற நாட்கள்ல மரத்தாலான மறைப்பு வச்சு ஆண், பெண் தனித்தனியா குளிக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணியிருக்காங்க. வருஷத்துல ஆறு மாசம் தண்ணி வந்துட்டே இருக்கும். கோடை காலத்துல தண்ணியே இருக்காது. மழை கொஞ்சம் அதிகமா பெஞ்சதுன்னா மேல இருக்கிற பாறை மேலருந்து தண்ணீர் கொட்டும். நாங்க போனப்ப கூட அப்படித்தான் இருந்தது. பார்க்க படம்.
மலை மீதிருந்து கொட்டும் அருவி |
பக்கவாட்டிலிருந்து |
ஒவ்வொரு வருஷமும் மாசி மாத சிவராத்திரி மிகவும் பிரசித்தம். பல ஊர்கள்ல இருந்தும் ஆட்கள் வந்து சாமி கும்பிட்டுப் போவாங்க. சிவராத்திரி நாள் சாயங்காலத்தில் இருந்து அடுத்த நாள் மதியம் வரைக்கும் தொடர்ந்து பூஜைகள் நடந்துக்கிட்டே இருக்கும். மற்றபடி விசேஷ நாட்கள்ல மட்டும் கோவில் திறப்பாங்க. நமக்கு வீட்டில ஏதும் விசேஷம்னா பூசாரியைக் கூப்பிட்டு கோவிலைத் திறக்கச் சொல்வோம்.
கூட்டமே இல்லாதப்போ அங்க போய், ஏதாவது ஒரு பாறை மேல படுத்துக்கிட்டே குயில் மற்றும் மற்ற பறவைகளோட சத்தத்தையும் தண்ணீர் ஓடுற சலசலப்பையும் கேட்டுக்கிட்டே இருக்கலாம்.
This entry was posted by school paiyan, and is filed under
ஆலயம்,
கோவில்
.You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
சாமி போட்டோவை சாமி போடாம வேற யாரு போடுறது ஹி ஹி....அந்த அருவி சூப்பரய்யா....!
ReplyDeleteவாங்க மனோ அண்ணே, முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....
Deleteகோவில் சூப்பரா இருக்கு அண்ணா... அதுலயும் அந்த அருவி சூப்பர்
ReplyDeleteநேரில் பார்க்க இன்னும் அழகா இருக்கும்... நன்றி சகோதரி....
Deletearampathil ningal eluthiya payana katturaikalum, sirukadhaikalum rompa nalla irukkum sir. piraku vimarsanam thavaramal padikkuren. hotel unavu pathivum ok. ithu vithyasamana pathivu tan sir. mudinthal antha kovil vara karranamana kadhai adutha murai urukku senrapothu kettu eluthavum sir.
ReplyDeleteவித்தியாசம்னு சொல்லி சிறப்பித்த மகேஷ்க்கு மிக்க நன்றி...
Deleteவாவ்.. பக்தி ஸ்பெஷலா.. சூப்பர்ப்!!
ReplyDeleteசாமி சரணம், ரொம்ப நாள் ஆச்சு, அதான்....
DeleteSaamy saranam.................nice
ReplyDeleteநன்றி இளங்கோ...
Deleteபதிவர்கள் எல்லோரும் எழுதுங்கள் உங்கள் குலதெய்வம் பற்றி!
ReplyDeleteஉங்கள் முன்னோர்கள் பற்றி நாங்களும் தெரிந்து கொள்ளலாம்!
நம் மக்கள் எப்படி குலதெய்வம் சாமியை விட்டு மற்ற சாமிகளை கும்பிட ஆரம்பித்த கதையும் நமது சந்ததியினருக்கு தெரியவேண்டும்!
எதற்கு வேறு சாமிகளையும் கும்பிட ஆரம்பித்தோம் என்று கொஞ்சம் நினைத்து பாருங்கள்...
உங்கள் குலதெய்வம் இருக்க மற்ற சாமிகள் எதற்கு?
மற்ற சாமிகளை கும்பிடுவதில் தவறில்லை என்றாலும் குல தெய்வத்துக்கு முதலில் நேர்ந்துகொள்ளும் பழக்கம் இன்றும் மாறாமல் இருக்கிறது. எதற்கு வேறு சாமிகளையும் கும்பிட ஆரம்பித்தோம் என்று ஆராய்ச்சியில் இறங்கினால் தலை கிறுகிறுத்துப் போகும்..
Deleteஅண்ணன்...!! எனக்கு உங்க ஊர் பக்கம் தான்.. பாம்புகோவில்சந்தைக்கு பக்கத்தில் இருக்கும் அரியநாயகிபுரம் தான் என்னோட சொந்த ஊர்... இந்த மலையை நாங்கள் மொந்தல் மலை என்று சொல்லுவோம்.. உண்மையிலே ரொம்ப நல்ல இடம்... நண்பர்களோட vacation போறதுக்கு நல்ல இடம்... நான் ரெண்டு மூன்று முறை வந்து பாத்துள்ளேன்...
ReplyDeleteமுதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அன்பு.... இந்தப் பதிவு எங்க குல சாமிக்கு பக்கத்து ஊர்க்காரரை நம் தளத்துக்கு வரவழைத்துவிட்டது...
DeleteThis comment has been removed by the author.
ReplyDeletePlus + 1. Tamil manam.
ReplyDeleteநீங்கள் எனக்கு மறு மொய் வைக்க வேண்டும் என்று +1 வோட்டு போடவில்லை. உண்மையில் இந்த குலதெய்வம் பற்றிய நல்ல பதிவு. அதானால், +1.
என் [காதல்] மனைவி எப்ப இந்தியா வந்தாலும் எங்கள் குலதெய்வம் கோவிலுக்கு போகாமல் வந்தது இல்லை; எங்கள் முன்னோர்கள் எங்கள் வம்சத்தை வளர வைப்பார்கள் என்பது என் மனைவியின் நம்பிக்கை!
அமெரிக்காவில் மனைவியின் சாமி நம்பிக்கையில் எவனும், எந்த நாயும், அது அவன் கணவனே ஆனாலும் குறிக்கிட முடியாது! அப்படி குறிக்கிட்டால் அது பெருங்குற்றம். இந்தியாவில் பெண்கள் கணவனுக்கு அடிமை! அங்கு கதை வேற!
என் மனைவி திருப்பதி பாலஜியைப் பார்த்து, முப்பது வருடங்கள் ஆகிறது. திருமணம் ஆன பொது போனதுடன் சரி! அவர்களுக்கு இப்போ பாலாஜி டோட்டலா தேவையில்லையாம்!
எழுதுங்கள்...உங்கள் குலதெய்வம் பற்றி. நாங்கள் படிப்போம்!
நம்பள்கி சார், முதல்ல வணக்கம் வச்சிக்கறேன்... சில நாட்களுக்கு முன் நீங்க நிறைய பேருடைய பதிவுகளுக்கு +1 வோட்டு போட்டு மறுமொய் வைக்கனும்னு சொல்லணுமான்னு கமென்ட் போட்டிருந்தீங்க... அதனால தான் உங்க பதிவுல நான் அதை சுட்டிக் காட்டியிருந்தேன். மற்றபடி தமிழ்மண வாக்கு பற்றி நான் கவலைப்படறது இல்லை. அவ்வ்வ்வ்...
Delete//எங்கள் முன்னோர்கள் எங்கள் வம்சத்தை வளர வைப்பார்கள் என்பது என் மனைவியின் நம்பிக்கை!//
மதம் சம்பந்தப்பட்ட நம்பிக்கைகள் அவரவர் விருப்பம், எனக்கும் இதே நம்பிக்கை உண்டு, அதனால் தான் என் குழந்தைகளுக்கு முதல் மொட்டை குலதெய்வம் கோவிலில்...
உங்களுக்கு சுமார் இருபத்தைந்து வயதில் திருமணம் நடந்திருந்தால் தற்போது ஐம்பத்தைந்து வயது... என் தந்தையை ஒத்த வயது... ஹிஹி... திருப்பதி பாலாஜி கோவில் எனக்குப் பிடித்தமான ஒன்று. அடிக்கடி கீழ் திருப்பதியிலிருந்து மேலே 3350 படிகள் ஏறிச்சென்று பாலாஜியை தரிசனம் செய்துவருகிறேன். இதோ, வரும் சனிக்கிழமை கூட போகிறேன்...
உங்களுக்காகவாவது தல வரலாறு அறிந்து ஒரு தனிப்பதிவு எழுதுகிறேன் சார், உங்கள் பின்னூட்டம் எனக்கு மிகவும் உற்சாகத்தை அளிக்கிறது... (பின்னூட்டங்களில் கிண்டல் இருந்திருந்தால் மன்னிக்கவும்... நாம எப்பவுமே இப்படித்தான்)
//தென்காசி // ஐ தென்காசி தென்காசி தென்காசி
ReplyDelete//ஏதாவது ஒரு பாறை மேல படுத்துக்கிட்டே குயில் மற்றும் மற்ற பறவைகளோட சத்தத்தையும் தண்ணீர் ஓடுற சலசலப்பையும் கேட்டுக்கிட்டே இருக்கலாம்.// படங்கள பார்த்தாலே தெரியுது கோவில் ஒரு ரம்யமான பகுதில அமைந்து இருக்குன்னு
வருக வருக சீனு... இங்க பாம்பு, குரங்குகளும் அதிகம் உண்டு... ஹிஹி...
Delete//நம்ம ஊர் ராஜபாளையத்தில் இருந்து தென்காசி போற வழியில புளியங்குடி தாண்டி நாலு கிலோமீட்டர்///
Deleteயோவ் என் ஊர் பெயரை போடாதற்கு கண்டணம் தென் காசியே எங்க ஊரான செங்கோட்டைக்கு போற வழியில்தான் இருக்கு..
நேர்ல போன மாதிரி ஒரு ஃபீல் வந்திடுச்சு சாமி!
ReplyDeleteவாங்க செங்கோவி அண்ணே, நீங்க இந்தியா வரும்போது ஒரு நாள் போவோம்...
DeleteOru murai avasiyam poganumnnu thona vaichduchu. particular aga antha water falls...! Marvellous ya!
ReplyDeleteஒரு தடவை ப்ளான் பண்ணிட்டு தண்ணீர் அதிகமா வர்ற நேரம் பாத்து போலாம் வாத்தியாரே...
Deleteகாலையில அருமையான பகிர்வு.சூப்பரு!இயற்கையை இன்னி வரைக்கும் விட்டு வச்சிருக்காங்களே?ஆச்சரியம் தான்!அம்மன் அருள் கிட்ட வேண்டுகிறேன்!!!
ReplyDeleteவணக்கம் சார், உங்கள் காலை அருமையாக விடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி... நன்றி சார்...
Deleteவணக்கம்
ReplyDeleteபதிவு அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரூபன்...
Deleteஆஹா! என்ன சொல்றது உங்களை. இன்னைக்கு நிறைய பேருக்கு அவுங்க குல தெய்வ சாமியையே தெரிய மாட்டேங்குது. நீங்க இந்த பதிவை போட்டு, எல்லோரும் குல தெய்வ சாமிய நினைச்சுக்குங்கன்னு சொல்லாமா சொல்லிட்டீங்க. முதல்ல அதுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். "நம்பள்கி" சொன்ன மாதிரி, அடுத்த சங்கதியினருக்கு கண்டிப்பா நம்ம குலதெய்வ சாமியை பற்றி தெரியப்படுத்தனும். அதே மாதிரி எல்லா பதிவர்களும் அவுங்க அவுங்க குல தெய்வ சாமியைப் பற்றி ஒரு பதிவு போட்டா, மற்றவங்களும் அந்த சாமியைப் பற்றி தெரிஞ்சுக்க முடியும். கண்டிப்பா அடுத்த முறை தல வரலாறைப் பற்றி சரியா தெரிஞ்சுக்கிட்டு வந்து எழுதுங்க.
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே.
கரெக்ட் சார், நிறைய பேர் குலதெய்வம் பெயர் தெரியாமலே இருக்கிறார்கள், கேட்டால் திருப்பதி பாலாஜி அல்லது திருச்செந்தூர் முருகன் என்று சொல்கிறார்கள்... அடுத்த சந்ததியினருக்கு நம் குல தெய்வத்தைக் காட்டுவது நம் கடமை... கண்டிப்பா தல வரலாறு பற்றி தனிப்பதிவு எழுதறேன் சார்...
Deleteவருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சார்..
இயற்கை எழில் கொஞ்சும் அழகான கோயில்! புகைப்படங்களை பார்க்கும்போதே நேரில் தரிசிக்க தோன்றுகிறது! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteவாங்க சுரேஷ் அண்ணா, கருத்துக்கு மிக்க நன்றி..
Deleteஇயற்கைச் சூழலில் அருமையான கோயில். குற்றாலம் செல்லும்பொழுது புளியங்குடியினைக் கடந்து சென்ற நினைவுகள் வருகின்றன.
ReplyDeleteத.ம.6
வாங்க சார், தங்களது நினைவுகளை மீட்டெடுத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி சார்...
Deleteஸ்.பை. சில படங்கள் பார்த்ததுமே அங்கே போகத் தோன்றுகிறது.... அடுத்தது எப்ப போறீங்க ஊருக்கு! நானும் வரேனே!
ReplyDeleteகண்டிப்பா போலாம் வெங்கட் அண்ணா....
Deleteகுலதெய்வம் கோவில்களுக்கெல்லாம் ஒரே இலக்கணம். பெரும்பாலும் நம் முன்னோர்களின் ஊர்க் காவல் தெய்வங்கள்தான் குல தெய்வம். உங்கள் குலதெய்வம் கோவில் லொகேஷன் ரம்மியமாய் இருக்கிறது.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்....
Deleteஆன்மிகத்தில் விருப்பம் இருப்பவர்களை குலதெய்வம் பற்றி தொடர் பதிவு எழுத அழைப்பு விடுவிக்கலாமே..
ReplyDeleteலாமே, ஆமா... இதுக்கு முன்னாடி ஒரு கமென்ட் போட்டீங்களே, மெயில்ல இருக்கு, ஆனா இங்க காணாம போச்சு... நீங்க செங்கோட்டைக்காரர்னு உங்க பழைய பதிவுல படிச்சிருக்கேன், நீங்க சீனுவுக்கோ அல்லது சீனு உங்க பதிவுக்கோ எழுதிய பின்னூட்டத்தில் பார்த்திருக்கேன்....
Deleteஉங்கள் குலம் தழைக்க நாச்சியாரின் அருள் என்றென்றும் கிடைக்கட்டும்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கவியாழி ஐயா....
Deleteஅழகான இடத்துல உங்க குலதெய்வம் இருக்கு. கிடா வெட்டுலாம் உண்டா. ஏன்னா, அடுத்த தரம் போகும்போது ஒரு பஸ் வச்சு பதிவர்லாம் கூட்டிப் போய் வாங்க. இட வசதி இல்ல, தண்ணி இல்ல, காத்து இல்லன்னு விமர்சனம்லாம் வராத இடம் போல இருக்கு.
ReplyDeleteஅட, அங்கயும் பதிவர் சந்திப்பா... சூப்பர் அக்கா...
Deleteஅழகான இடமா இருக்கே....ஸ்தல வரலாறு அடுத்த முறை போகும் போது தெரிந்த பின் இன்னொரு வாட்டி எழுதுங்க...
ReplyDeleteகண்டிப்பா எழுதறேன் சகோதரி...
Deleteஉங்கள் குல தெய்வம் குடிகொண்டிருக்கும் சூழல் மிகவும்
ReplyDeleteரம்மியமாக காட்சி தருகின்றது !! வாழ்த்துக்கள் சகோதரா
அம்பாளின் அனுக்கிரகம் என்றென்றும் தங்களுக்கும் குடும்பத்தினர்
அனைவருக்கும் கிட்டட்டும் .அழகிய படங்களுடன் இட்ட பகிர்வுக்கு
மிக்க நன்றி .தங்கள் மகளின் வாழ்வும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி...
Deleteஎங்களது குலதெய்வத்தை நான் ஐந்து வருடத்திற்கு முன்புதான் பார்த்தேன்..... அது ஊரில் இருந்து பல மைல் தள்ளி இருந்தது, போக்குவரத்து வசதியும் இல்லை. ஆனால், சென்று பார்த்தபோது மனதுக்கு நிம்மதியாக இருந்தது. பதிவு அருமை நண்பரே !
ReplyDeleteவருடத்துக்கு ஒரு முறையாவது குலதெய்வ கோவிலுக்குப் போகவேண்டும் என்று பெரியோர் சொல்வதுண்டு... வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே..
Delete