அழகுராஜா
Sunday, November 03, 2013
Posted by கார்த்திக் சரவணன்
காதலிக்க நேரமில்லை என்ற பழைய படம் அறுபதுகளில் வெளிவந்து சக்கைபோடு போட்டது. அந்தப்படத்தில் ஒரு காட்சியில் நாகேஷ் சொல்வார், "நான் எடுக்குறது தான் படம், நீ நடிக்கிறது தான் நடிப்பு, இதை இந்த ஜனங்க பாத்தே தீரணும் அது அவங்க தலை எழுத்து" என்று. இந்த வரிகளை இயக்குநர் ராஜேஷ் மனப்பாடம் செய்துவிட்டார் போலும். ஓகே ஓகே கொடுத்த ஓவர் கான்பிடன்சில் தான் என்ன எடுத்தாலும் மக்கள் வந்து கைதட்டி சிரித்து ரசிப்பார்கள் என்று நினைத்துவிட்டார்.
இதுவரை ராஜேஷ் எடுத்த எந்தப்படத்துக்கும் கதை என்ற ஒன்று இல்லவே இல்லை. அதே போல் இந்தப்படமும். கதை சொல்லலாம் என்றால் எதைச் சொல்வது? படம் நெடுக சந்தானமும் கார்த்தியும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இதில் ஒன்றிரண்டுக்கு மட்டுமே சிரிக்க முடிகிறது.
கார்த்தி நிறைவாகச் செய்திருக்கிறார், சந்தானம் கார்த்தியின் ஆபிசர் கெட்டப்பில் சாதாரணமாக வருகிறார். கரீனா சோப்ரா கேரக்டரில் கலக்கலாகவும் பழைய கெட்டப்பில் கேவலமாகவும் இருக்கிறார். அதிலும் அவர் சிரிக்கிறேன் பேர்வழி என்று ஒரு முகசேட்டை செய்கிறார் பாருங்கள், சகிக்கவில்லை.
காஜல் அகர்வால் வழக்கமான லூசு ஹீரோயின். போன வருஷமும் தீபாவளிக்கு வெளிவந்த துப்பாக்கி படத்தில் இதே மாதிரி ஒரு லூசு கேரக்டரில் தான் நடித்திருந்தார். எம்.எஸ்.பாஸ்கரிடம் பரதம் கற்றுக்கொள்ளும் காட்சிகளில் தியேட்டரில் இருக்கும் அத்தனைபேரின் அப்ளாஸ்களை அள்ளுகிறார்.
பிரபு தன் பங்குக்கு நிறைவாகச் செய்திருக்கிறார். சரண்யா கார்த்தியின் அம்மா. மேடம், உங்களுக்கு இருக்கிற திறமைக்கு வேற நல்ல கேரக்டர் பண்ணுங்க. இப்படி லிஸ்ட் போட்டு எல்லா நடிகர்களுக்கும் அம்மாவாக நடிக்கும் பழக்கத்தை தயவு செய்து விடுங்க. இன்னும் நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள், பெயரளவிலேயே.
பிளாஸ்பேக்கில் பிரபுவின் பாத்திரத்தில் கார்த்தியே நடித்திருப்பது சிறப்பு. "உன்னப் பாத்த நேரம்" பாடலும் அதைப் படமாக்கிய விதமும் அருமை. கோட்டா சீனிவாச ராவ், சந்தானம் காட்சிகள் கலகல. பரதம் கற்றுக்கொள்ளும் காட்சியில் வரும் நடன அசைவுகளுக்கு சிரிக்காமல் இருக்க முடியாது. இவை தவிர்த்து படத்தில் ரசிக்கும்படியான காட்சிகள் எதுவும் இல்லை.
நான் இந்தப் படத்தைப் பார்த்தது மடிப்பாக்கம் குமரன் தியேட்டரில். இடைவேளை விட்டதும் நூறுக்கும் மேற்பட்டோர் வீட்டுக்குப் போய்விட்டனர். படம் முடிவதற்கு முக்கால் மணி நேரத்துக்கு முன் மேலும் ஒரு நூறு பேர் கிளம்பிவிட்டார்கள். படம் முடிந்து வெளியே வந்து அடுத்த காட்சிக்காகக் காத்திருக்கும் அப்பாவி மக்களைப் பார்க்கும்போது பரிதாபமாக இருந்தது.
This entry was posted by school paiyan, and is filed under
சினிமா,
சினிமா விமர்சனம்
.You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
இதற்கு மேல் இந்தப் படம் பார்க்கும் எண்ணம் வருமா...?
ReplyDeleteதமிழ்மணம் வேலை செய்யவில்லை என்றால் :-
ReplyDeleteSettings-->Post Feeder URL-->http://feedburner.google.com/<--இதை எடுத்து விட்டு மீண்டும் ஒரு முறை பதிவை Publish செய்யவும்...
வணக்கம்
ReplyDeleteபட விமர்சனம் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கார்த்திக் அடிமேல அடியா வாங்கிட்டு இருக்காரு...அவர் கட்டுல தீபாவளி பட்டாசு விழுந்துடுத்து போல..
ReplyDeleteகாட்டுலனு எழுதறதுக்குப்பதிலா கட்டுலனு எழுதிட்டேன்.
ReplyDeleteஎனக்கு இந்தப் படத்தைப் பொறுமையாப் பாத்துட்டு வந்த ஸ்.பை.யைப் பார்த்தாப் பாவமா இருக்கு. சிரிப்புப் படம் எடுக்கறேன்னு பொழப்பு சிரிப்பா சிரிச்சுப் போச்சாம்ல... தியேட்டர்லயே பல பேர் ரத்தவாந்தி எடுக்காத குறையா அலறி ஓடினதாக் கேள்வி! ஹி... ஹி...!
ReplyDeleteஅவ்வளவு மோசமாகவா இருக்கு? மாடுலேஷனோடு படிச்சிக்கோங்க...
ReplyDeleteநான் தப்பிச்சுட்டேன்!!! ஹஹஹா..
ReplyDeleteYoutube இல் வரும்போது பார்த்தா போதும் என்கிறீங்க. Let's see.
ReplyDeleteஹா...ஹா...ஹா...
ReplyDeleteஇதிலும் கிளைமேக்சில் ஜீவா, ஆர்யா எல்லாம் வர்றாங்களா?
அம்புட்டு பொறுமைசாலி"யாய்யா நீங்க ? அவ்வ்வ்வவ்....
ReplyDeleteவிமர்சனம் படித்ததிலே பாதி படம் பார்த்து போல இருக்கு தம்பி
ReplyDeleteஆகா தப்பித்துவிட்டேன் நன்றி நண்பரே
ReplyDeleteஸ்கூல் எனக்கொரு டவுட்டு
ReplyDeleteஎல்லாரும் நிறைவாக செய்திருகின்றனர்..எல்லாரும் நிறைவாக செய்திருகின்றனர் என்று எழுதிட்டு இடைவேளைல நூறுக்கு மேல வீட்டுக்கு போய்டதா சொல்றீங்க ஏன் ஸ்கூல் ஏன்..
சொல்லுங்க ஸ்கூல் சொல்லுங்க...
பதிவின் கடைசியில் சொன்ன வரிகள் - ரசித்தேன்! :)
ReplyDeleteசொந்த செலவுல சூனியமா!?
ReplyDelete"நான் எடுக்குறது தான் படம், நீ நடிக்கிறது தான் நடிப்பு, இதை இந்த ஜனங்க பாத்தே தீரணும் அது அவங்க தலை எழுத்து" என்று.,,,,,ஹா...ஹா சிரித்து வயிறு வலிக்குதுங்க...படத்த சொல்லவில்லை உங்கள் பதிவை சொன்னேன்
ReplyDeleteஇந்தப் படத்தைப் பார்த்தவர்களைப் பார்க்கும் போது பாவப் பட்ட
ReplyDeleteஸ்கூல் பையனைப் பாக்க முடியாமல் போச்சே :))) பொறுமையின்
சிகரம் வாழிய வாழியவே :))))
ஹஹா நேத்து இந்த படத்த ஒருத்தர் பார்க்க போயிட்டு அஞ்சு நிமிசத்துக்குள்ளயே அய்யோ அம்மான்னு அலற ஆரம்பிச்சுட்டார். அவ்வளவு மொக்கையாவா இருக்கு
ReplyDeleteநான் சிக்கல... ஹா ஹா ஹா
ReplyDeleteஹா ஹா ... தீபாவளி அதுவுமா இப்படியொரு மோசமான அனுபவமா ..?.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇனி தமிழ் பதிவாளர்களும் (Tamil Bloggers), ஆங்கில பதிவாளர்களுக்கு (English Bloggers) இணையாக வருமானம் பெற முடியும்.
ReplyDeleteதமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in ல் பதிவுசெய்து, Ad30days Network விளம்பரங்களை தங்கள் தலத்தில் காண்பிப்பதன் மூலம் மாதம் நிரந்திர வருமாணம் பெற முடியும்.
தமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே உங்கள் தளத்தை பதிவு செய்யுங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php .
பதிவுசெய்துவது முற்றிலும் இலவசம் .
வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம். ( Bank Transfer, Paypal)