கலர் பென்சில் - ௦02.12.2013
Monday, December 02, 2013
Posted by கார்த்திக் சரவணன்
சென்னையின் சாலை வலி
கடந்த வாரத்தில் ஒரு நாள் - காலை அலுவலகத்துக்கு மிக அவசரமாகச் சென்றுகொண்டிருந்தேன். நந்தனம் நோக்கி சீறிப்பாய்ந்து கொண்டிருந்த என் காதுகளில் அந்த சத்தம் தூரத்தில் ஒலித்தது. அது ஆம்புலன்ஸ் - வண்டியின் வேகத்தைக் குறைத்து ஓரமாகச் செல்ல ஆரம்பித்தேன், என்னைப்போலவே பலரும். யாருக்கு என்னவோ என்று மனதில் உச்சு கொட்டிக் கொண்டிருக்கும்போதே அந்த சத்தம் நெருங்கிவந்து என்னைக் கடந்துசென்றது. பரவாயில்லை, நம் மக்கள் ஆம்புலன்சுக்கு வழிவிடுகிறார்கள் எனும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது - மனித நேயம் செத்துவிடவில்லை. ஆம்புலன்ஸ் கடந்து சென்றதும் என் முன்னாலும் பின்னாலும் இரு சக்கர வாகனங்களில் வந்துகொண்டிருந்தவர்களில் சிலர் அந்த வாகனத்தை வால் பிடித்தாற்போல் பின்தொடர ஆரம்பித்தனர். ஏற்கனவே ஒரு இருபது இருபத்தைந்து டூவீலர்கள் ஆம்புலன்சைத் தொடர்ந்து கொண்டிருந்தன. அவர்களுடனான போட்டியில் இவர்களும் கலந்துகொண்டனர். அப்போது தான் என் மண்டையில் உறைத்தது. அடப்பாவிகளா, ஆம்புலன்சுக்கு வழிவிடுதல் பொது நலம், மனித நேயம் என்றெல்லாம் நினைத்திருந்தேன், சிலருக்கு முழுக்க முழுக்க சுயநலமாகவே இருக்கிறது.
பதிவர்கள் அறிமுகம்
இனி ஒவ்வொரு கலர் பென்சில் பதிவிலும் ஒரு பதிவரை அறிமுகம் செய்யலாம் என்றிருக்கிறேன். முதல் முறை என்பதால் இன்று மூன்று பேர்.
1. உண்மையானவன்
இவரைப் பற்றி முகநூலில் பல பதிவுகள் மூலம் அறிமுகம் செய்துவிட்டேன். இருந்தாலும் மற்றவர்களுக்காக இங்கே. இவரது இயற்பெயர் சம்பந்தம். தஞ்சாவூர் (தஞ்சாவூரா கும்பகோணமா மறந்து போச்சே) பகுதியைச் சேர்ந்த இவர் ஆஸ்திரேலியாவில் IBM நிறுவனத்தில் இரண்டரை ஆண்டுகள் வேலை செய்து தற்போது சிட்னி மாநகரில் தமிழாசிரியராகப் பணி புரிகிறார். தலைவா படம் பார்த்தவர்கள் இவரையும் பார்த்திருக்கக் கூடும். சிறுகதைகள், அனுபவங்கள் என்று நூற்று முப்பது பதிவுகளுக்கும் மேல் எழுதியுள்ளார், இதுவரை நம் சக பதிவர்கள் யாரும் பார்வையிடவில்லை. கூகிள் ஆண்டவர் உதவியால் இவருடன் நேருக்கு நேர் தொலைபேசியில் பார்த்துப் பேசும் பாக்கியம் கிடைத்தது. இவருடைய பதிவுகள் ஒரு சில உங்கள் பார்வைக்கு:
மஞ்ச மாக்கான் என்று தலைப்பு வைத்திருக்கும் இவர் வலைப்பூ தொடங்கி அறிமுகம் மட்டும் செய்திருக்கிறார். மேலும், முகநூல் கணக்கும் தொடங்கி சில பதிவர்களுடன் நண்பர் வட்டத்தில் இணைந்துள்ளார். இன்னும் எழுத ஆரம்பிக்கவில்லை. எழுதுங்கள் நண்பரே. உற்சாகப்படுத்த நாங்கள் இருக்கிறோம்.
இந்தப் பதிவரும் அறிமுகப் பதிவு மட்டுமே எழுதியிருக்கிறார். இவர் ஒருவரா அல்லது பலரா என்று தெரியவில்லை, வரிக்கு வரி நாங்க நாங்க என்று சொல்கிறார். சமர்த்தாக இருக்கையில் தான் கணேஷ் என்றும் லூட்டி அடிக்கையில் வசந்த் என்றும் சொல்கிறார். உற்சாகம் கரைபுரண்டோடும் இவரது அறிமுகப்பதிவில் மற்ற பதிவர்களுக்கு தன்னை அறிமுகப்படுத்தும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார். என் கடமை முடிந்தது. வாருங்கள் கணேஷ்-வசந்த்.
மிஸ்டு கால் மன்னர்கள்
சில நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தாங்கள் தொலைபேசியில் என்னை அழைத்திருந்தால் பேசவேண்டிய விஷயங்களை பட்டென்று பேசி தொடர்பைத் துண்டிப்பதுண்டு. நாம் வேறு ஏதாவது விஷயங்கள் கேட்க நேர்ந்தால் ஏதேனும் சாக்கு போக்கு சொல்லிவிடுவார்கள். இதே நாம் அவர்களை அழைத்திருந்தால், அப்புறம் வேற என்ன விஷயம் என்று கடலை போடுவதும் உண்டு. என் நண்பர் ஒருவர் எப்போது என்னிடம் பேசவேண்டும் என்றாலும் மிஸ்டு கால் மட்டுமே கொடுப்பார். அது எப்படியென்றால் எவ்வளவு நேரம் போன் அடித்தாலும் சரியாக பக்கத்திலிருந்து பார்ப்பவர் போல நான் எடுக்கப் போகையில் கட் செய்வார். இந்த மாதிரி ஆட்கள் இருப்பதால் தான் பிரபல காபி நிறுவனம் முதல் உடற்பயிற்சி இயந்திரம் விற்கும் நிறுவனம் வரை அனைவரும் மிஸ்டு கால் கொடுக்கச் சொல்கிறார்கள்.
வடா பாவ்
சில நாட்களுக்கு முன் வேளச்சேரியில் இருக்கும் GOLI என்ற பெயரில் இயங்கும் அந்தக் கடைக்குச் செல்ல நேர்ந்தது. நேர்ந்தது என்றால் "மெட்ராஸ் பவன் சிவாவின் அழைப்பின்பேரில் மின்னல்வரிகள் பாலகணேஷ் அவர்களுடன் சென்றிருந்தேன், Classic Vada Pav, Mix Veg Vada Pav, Masala Vada Pav, Aloo Tikki Vada Pav, Cheese Vada Pav, Schezwan Vada Pav, Makka Palak Vada Pav, Cheese Ungli மற்றும் sabudana Vada ஆகியவை கிடைக்கின்றன. வெறும் பெயரை மட்டும் படித்தால் ஒன்றும் புரியாது, பதார்த்தங்களைப் படத்தில் பார்க்கும்பொது வாயில் ஊறுகிறது. மூன்று பேருக்கு மேல் உட்கார்ந்து சாப்பிடும் வசதி இல்லாததால் சென்ற வாரம் நான் அந்தப்பக்கமாகச் சென்றிருந்தபோது பார்சல் வாங்கிக்கொண்டேன்.
சுடர்விழியுடன் ஓர் நேர்காணல்
திருப்பதி ஏழுமலையானின் தரிசனம் முடிந்து நேற்று காலை பதிவர் மகேஷ் அவர்களை சந்தித்தேன். ஏற்கனவே அவருடன் தொலைபேசியில் பேசியிருக்கிறேன். தான் திருப்பதியில் வசிப்பதாகத் தெரிவித்திருந்த அவரை அடுத்த முறை பாத யாத்திரை வரும்போது சந்திப்பதாகச் சொல்லியிருந்தேன். சொன்னபடியே நேற்று காலை அவரது இல்லத்தில் சந்தித்தேன், பல விஷயங்கள் பேசினோம், நேரமின்மையால் உடனடியாகப் புறப்பட வேண்டியதாயிற்று. அடுத்த முறை வரும்போது கண்டிப்பாக சாப்பிடவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். நன்றி மகேஷ்.
ஒரு சந்தேகம்
மெட்ராஸ்பவன் சிவா: சாதா போனுக்கும் ஸ்மார்ட் போனுக்கும் என்ன வித்தியாசம்?
நான்: மூணு நாளைக்கு பேட்டரி நின்னா அது சாதா போன், மூணு மணி நேரத்துக்குள்ள சார்ஜ் போயிருச்சுன்னா அது ஸ்மார்ட் போன்.
அனைவருக்கும் பின்னூட்டம்
சைலன்ட் ரீடர்கள் பலரும் என்னுடைய பதிவுகள் நன்றாக இருப்பதாகவும் ஆனால் தங்களால் கருத்து சொல்ல முடியவில்லை என்றும் போனிலும் பேஸ்புக்கிலும் குறைபட்டிருந்தார்கள். இதனைப்போக்க பின்னூட்டப்பெட்டியைத் திறந்துவிட்டிருக்கிறேன். யார் வேண்டுமானாலும் கருத்துரையிடலாம். ஆனால் தயவுசெய்து உங்களது பெயரைச் சொல்லவும். வரைமுறையின்றியோ அல்லது தனிநபரைத் தாக்கும் விதமாகவோ வரும் கருத்துக்கள் நீக்கப்படும்.
நன்றி.
This entry was posted by school paiyan, and is filed under
.You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
அறிமுகம் அருமை மற்றும் அவர்களுக்கு நாஞ்சில்மனோ'வின் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவடாபாவ்...கூடவே ஒரு பச்சை மிளகாய் கடிச்சு சாப்பிடனும் சூப்பராக இருக்கும்.
வாங்கண்ணே... வாழ்த்தியமைக்கு நன்றி.... வடா பாவ்க்கு பச்சை மிளகாயா? புதுசா இருக்கே.... அடுத்த தடவை சாப்பிட்டுப் பாக்கறேன்...
Deleteவணக்கம்
ReplyDeleteசிறப்பான தொகுப்பு வாழ்த்துக்கள்
புதிய பதிவாக தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப்போட்டி...வந்து ஆதரவு தாருங்கள்...
http://2008rupan.wordpress.com/2013/12/02/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d/
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க ரூபன், கவிதைப் போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை. கட்டுரைப் போட்டியில் கலந்துகொள்கிறேன்.... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
Delete////பின்னூட்டப்பெட்டியைத் திறந்துவிட்டிருக்கிறேன்///
ReplyDeleteபணப் பெட்டியை திறந்து வைச்ச மாதிரில எழுதி இருக்கீங்க....ஆமாம் பணப் பெட்டியை திறக்கும் போது ஒரு வார்த்தை சொல்லிட்டு திறங்க
ஹிஹி... திறந்து வச்சுத்தான் பாப்போமே...
Delete
ReplyDeleteநீங்கள் அறிமுகப்படுத்தியவர்களை எல்லாம் பின் தொடர ஆரம்பித்து இருக்கிறேன் . அவங்கிட்ட சொல்லிவையுங்க இந்த மதுரைத்தமிழன் ரொம்ப கலாய்ப்பான் என்று....tha.ma2
சூப்பர்... உங்க கமெண்ட்ஸ் பார்த்தேன்... சக பதிவர்களை உற்சாகப்படுத்தியதற்கு மிக்க நன்றி...
Deleteகலர்பென்சில் ஜொலிக்குது. தலைவா படட்துல நடிச்சவர் தவிர மத்தவங்க புதுசு. போய் பார்த்துட்டு வரேன். அரையாண்டு பரிட்சை லீவுக்கு வரும்போது வடாபாவ் வாங்கித்தரனும்.
ReplyDeleteஜொலிக்குதுன்னு சொல்லிட்டீங்க.... கண்டிப்பா வாங்கித்தரேன்.... நன்றி அக்கா...
Deleteஅறிமுகங்கள் அருமை.//மூணு நாளைக்கு பேட்டரி நின்னா அது சாதா போன், மூணு மணி நேரத்துக்குள்ள சார்ஜ் போயிருச்சுன்னா அது ஸ்மார்ட் போன்.
ReplyDelete//அடடா..
வருக வருக ஸாதிகா அக்கா... உங்கள் பின்னூட்டம் எனக்கு உற்சாக டானிக்....
Deleteநல்லதொரு அறிமுகம்... நன்றி...
ReplyDeleteகட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html
வணக்கம் அண்ணே... கட்டுரைப் போட்டியில் கண்டிப்பாகக் கலந்துகொள்கிறேன்... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....
Deleteஅறிமுகங்கள் அருமை
ReplyDeleteரசித்த கவியாழிக்கு மிக்க நன்றி சார்...
Deleteஅமலா பாலால் அண்ணா எனஅழைக்கப் பட்டு நொந்து நூடுல்ஸ் ஆகியிருக்கும் உண்மையானவனுக்கு உங்கள் அறிமுகம் ஆறுதல் தரட்டும் !
ReplyDeleteத.ம 5
ஹா ஹா.. உண்மையானவன் உள்ளது உள்ளபடி எழுதுகிறார்... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பகவான்ஜி....
Deleteகலர் பென்சிலில் வந்த எல்லா விஷயங்களுமே சிறப்பு...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி....
DeleteColour pencil seems to be a good one. I think you are having a good relationship with other bloggers. The shop about "Vada Pav" is a new one. Carry on.
ReplyDeleteArumugam, Vadapalani
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆறுமுகம் சார்...
Deleteஅதான் திறந்து விட்டாச்சே, அப்ப சரி. இனி கெடா வெட்டு தான்.
ReplyDeleteபாத்து வெட்டுங்க நண்பா, நான் கொஞ்சம் பயந்த சுபாவம். தவிர அந்த அளவுக்கு ஒர்த் இல்ல...
Deleteஹஹஹா.. இனி சிவராத்திரி தான்..
Deleteஎன்னை உங்கள் வலைப்பூவிலும், முகநூலிலும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி தலைவரே!!
ReplyDeleteஒரு சிறிய திருத்தம் எனது சொந்த ஊர் காரைக்குடி. மேலும் நான் "கழுதை கெட்டா குட்டிச்சுவரு" என்கிற மாதிரி ஒரு கணினி அலுவலகத்தில் தான் வேலை பார்க்கிறேன். தன்னார்வ சேவையாக சனிக்கிழமைகளில் மட்டும் இயங்கும் தமிழ் பள்ளியில் தமிழாசிரியராக இருக்கிறேன்.
தங்களின் அறிமுகத்தால் நிறைய பதிவர்களை பின் தொடர ஆரம்பித்துள்ளேன்.
சாதா போனுக்கும், ஸ்மார்ட் போனுக்குமான விளக்கம் அருமை.
கரெக்ட் சார், நீங்க காரைக்குடின்னு போனில் சொல்லியிருந்தீங்க... நான் தான் மறந்துட்டேன். அப்புறம் உங்க பதிவுகளைப் படிச்சிட்டு நீங்க முழுநேர தமிழாசிரியரா வேலை செய்றீங்கன்னு நினைச்சிட்டேன்.... தவறாமல் வந்து கருத்துரையிட்டதுக்கு மிக்க நன்றி சார்...
Deleteபுதிதாய் மூன்று பதிவர்கள்...! கணேஷ்&வசந்த் என்ற பெயரே மிகப் பிடித்தமானது எனக்கு. பாக்கறேன்...! வடாபாவ் டேஸ்ட் இன்னும் மனதில் இருக்கிறது. மறுபடி ஒரு முறை போகணும். சாலைப் போக்குவரத்து விஷயத்தில் கவனித்தவற்றை எழுதுவதென்றால் பல பதிவுகள் தேவைப்படும் நமக்கு. கலர் பென்சில் விதவிதமான வண்ணங்களை அழகாக வாரியிறைக்கிறது. தொடருங்கள் ஸார்...!
ReplyDeleteவாத்தியார் சொன்னது போல, வாத்தியார் வைத்த பெயர் என்பதால் கணேஷ் வசந்த் என்ற பெயரே கவர்ச்சிகரமானது... அதனுள் ஒருவித ஈர்ப்புவிசை உள்ளது.. சுஜாதா நாவல்களை நான் கையில் எடுத்ததும் முதலில் பார்ப்பது அதில் கணேஷ் வசந்த் என்ற பெயர் எதுவும் அடிபடுகிறதா என்று தான்
Deleteகணேஷ் வசந்த் என்ற பெயரில் எழுதியிருப்பவரின் எழுத்தில் ஒரு நக்கல் கலந்த குறும்பு தெரிகிறது. அப்புறம் என்னை சார்னு கூப்பிடாதீங்க வாத்தியாரே....
Delete@சீனு : //அதனுள் ஒருவித ஈர்ப்புவிசை உள்ளது// கண்டிப்பாக உள்ளது. அந்தப்பதிவர் நிறைய சுஜாதா நாவல்கள் படித்திருக்க வேண்டும். அதனால் தான் இந்தப்பெயர் தேர்ந்தெடுத்திருக்கிறார்... கணேஷ் வசந்த் இருக்கும் நாவல்கள் கொஞ்சம் இளமைத் துள்ளலோடு இருக்கும் என்பது உண்மைதான்...
Deleteகலர் பென்சிலின் வண்ணங்கள் அழகு! பதிவர் அறிமுகம் சிறப்பு! சென்று பார்க்கிறேன்! ஜோக் சூப்பர்! தொடருங்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநல்ல முயற்சி தொடரட்டும் உமது பணி !!!!!!
ReplyDeleteமுதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.....
Deleteகலர் பென்சில் தலைப்பு நல்லா இருக்கு.
ReplyDeleteகன்டென்ட்டும் நல்லாவே இருக்கு வாழ்த்துக்கள்
ரொம்ப கஷ்டப்பட்டு வச்ச தலைப்பாக்கும்.... நல்லா இருக்குன்னு சொல்லி வாழ்த்திட்டீங்க.... மிக்க நன்றி முரளி அண்ணா..
Deleteகலர் பென்சில் -- ரசித்தேன் ஸ்.பை.....
ReplyDeleteதொடரட்டும் அறிமுகங்கள்!
ரசித்தமைக்கு மிக்க நன்றி வெங்கட் அண்ணா... இனி ஒவ்வொரு கலர் பென்சில் பதிவிலும் ஒவ்வொரு புதிய பதிவரை அறிமுகம் செய்யலாம்னு இருக்கேன்.....
Deleteஆம்புலன்ஸை பின்தொடர்பவர்களுக்கு இன்னொரு ஆம்புலன்ஸ் அவர்களுக்காக வரவேண்டி இருக்கும் என்பதை ஏனோ மறந்து விடுகிறார்கள்.
ReplyDeleteகலர்பென்சில் பகுதியில் பதிவர்கள் அறிமுகம். இன்னொரு வலைச்சரம்! அங்கு பலர். இங்கு நீங்கள்தான். தொடருங்கள்.
ஹா ஹா.... ஆம்புலன்ஸ் பத்தி ரொம்ப சரியா சொன்னீங்க சார், வலைச்சரத்தோடு ஒப்பிட்டு பெருமைப்படுத்திட்டீங்க, மிக்க நன்றி சார்..
Deleteஅறிமுகங்கள் அருமை
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சார்....
Deleteநல்ல அறிமுகங்கள்.. ஸ்மார்ட்போன் சிரிக்க வைத்தது.. கலர்பென்சில் ஒளிரத் தொடங்கியுள்ளது.
ReplyDeleteகலர் பென்சில் ஒளிருதா? நன்றி ஆவி...
Deleteவணக்கம் அண்ணே ... (ஸ்கூல் பையனை அண்ணன் என்று சொல்வது குற்றமா ?)
ReplyDeleteகலர் பென்சில் வண்ணம் வீசுது ... ஆம்புலன்ஸ் மேட்டரில் தெரிந்துவிடும் நமது மக்களின் மாந்தநேயம் .. படித்தவன் பண்ணும் தவறுகள் தான் படு மோசமாக இருக்கிறது ...
அறிமுகங்கள் நன்று வரும் பதிவுகளில் நறுக்கென்று இருக்கட்டும் கூடவே அவரின் பதிவில் அட்டகாசமான ஒரு பதிவை அறிமுகமாக கொடுக்கலாம் என்பது என் விருப்பம் , பரிசீலனை செய்யுங்கள் ...
முடிந்தவரை சொந்த விசயங்களை தவிருங்கள் அனைவரும் செய்யும் தவறு இது, நீங்கள் அதிகம் பதிந்ததில்லை இருப்பினும் எண்ணம் இருப்பின் தவிர்க்கவும் ..
ஹிஹி... வயதில் பெரியவர்களை அண்ணே என்று அழைக்கலாம் தவறில்லை... ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி அரசன். புதிய விஷயங்களை சேர்த்துக்கொள்கிறேன்.
Deleteஅனுபவப் பதிவுகளுக்கு எப்போதுமே மவுசு அதிகமாச்சே, அதை ஏன் தவிர்க்கச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. விம் பிளீஸ்.
கலர் பென்சில் கல(ர்)க்கல்.
ReplyDeleteஅப்புறம் நீங்கள்
சென்று வந்த,
கண்டு வந்த,
உண்டு வந்த
-அனைத்தையும் சுவைபட தொகுத்துள்ளீர்கள்.
நன்று.
வருக வருக, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நிஜாமுதீன்
Deleteஅமலா பாலூ வந்து அண்ணன்னு சொன்னாத்தான் நமக்கெல்லாம் தெரியுது...நல்ல அறிமுகம் ஸ்பை.
ReplyDeleteஹா ஹா... ஆமா செங்கோவி அண்ணே... தலைவா படத்தில நடிச்சதினால அவர் இன்னும் பேமஸ் ஆகிட்டாரு....
DeleteSir, intha pathivu arumaiya iruku.,
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இளங்கோவன்...
DeleteNice Post. Try sabudana vada next time :-)
ReplyDeleteஉங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன் . . நேரமிருந்தால் தொடருங்கள்
ReplyDeleteஇந்த வருடம் : திரும்பி பார்க்கிறேன் (தொடர்பதிவு )
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !
ReplyDeleteநீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..... ஆரோக்கியமும், வளமும் பெருகட்டும் இந்த ஆண்டில் !!
ஆம்புலன்சுடன் போட்டி போடும் வழக்கம் இங்கும் உண்டு.
ReplyDeleteபதிவர்கள் அறிமுகம் தேவையான ஒன்று. நாம் எப்போதும் போகும், படிக்கும் பதிவர்களை தவிர மற்றவர்களைத் தெரிந்து கொள்ள உதவும்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்பின் ஸ்கூல் பையன் - வலைச்சரத்திற்குப் போட்டியா - மிக்க மகிழ்ச்சி - வாழ்க வளமுடன் - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete