நல்ல உள்ளங்கள் இருக்கையிலே
Friday, August 09, 2013
Posted by கார்த்திக் சரவணன்
மாணவன் தளத்துக்கு வந்திடுவீர் - தமிழ்
மணத்தில் வாக்குகள் பலவும் தந்திடுவீர்
சூடான இடுகை ஆவதினால் - ஸ்கூல்
பையன் உள்ளம் குளிர்ந்திடுமே
வாக்குகள் பலவும் பெறுவதினால் - தமிழ்
மணத்தில் மகுடம் சூடிடுவேன்
கருத்துக்கள் பலவும் சொல்லிடுவீர் - எனை
வாழ்த்தி மகிழ்ந்து மகிழ்விப்பீர்
பலவார்த்தை கருத்தைப் பதிந்திடுவீர் - ஒற்றை
வார்த்தை கருத்தை தவிர்த்திடுவீர்
தங்கள் தளத்துக்கும் தான் வந்து - பல
கருத்தைச் சொல்லிச் செல்கின்றேன்
நல்ல உள்ளங்கள் இருக்கையிலே - நான்
நித்தம் கவிதை வெளியிடுவேன்
This entry was posted by school paiyan, and is filed under
கவிதை,
மொக்கை
.You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
தங்கள் கவிதை படித்தேன், உள்ளம் அறிந்தேன். மகிழ்ந்தேன், செய்கிறேன், நன்றி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க....
Deleteகவிதை நல்லா இருக்குங்கோ...
ReplyDeleteநன்றி விக்கி அண்ணே...
Deleteஸ்கூல் பையா இந்த பதிவு நன்றாக இருக்கிறது ஆனால் தினமும் கவிதை முயற்சி மட்டும் வேண்டாமப்பா. ப்ளீஸ் ப்ளீஸ்
ReplyDeleteஇது ஒரு சின்ன முயற்சி.... ஹிஹி. உங்களை நான் அந்த அளவுக்கு படுத்த மாட்டேன்...
Delete/// கருத்துக்கள் பலவும் சொல்லிடுவீர் - எனை
ReplyDeleteவாழ்த்தி மகிழ்ந்து மகிழ்விப்பீர் ///
மகிழ்விப்பது என்றால் கிச்சு கிச்சு மூட்டுவதா
/// பலவார்த்தை கருத்தைப் பதிந்திடுவீர் - ஒற்றை
வார்த்தை கருத்தை தவிர்த்திடுவீர் ///
ஒரே வார்த்தையை பலமுறை வரிசையாக போட்டால் போதுமா
/// தங்கள் தளத்துக்கும் தான் வந்து - பல
கருத்தைச் சொல்லிச் செல்கின்றேன் ///
அப்படியா
/// நல்ல உள்ளங்கள் இருக்கையிலே - நான்
நித்தம் கவிதை வெளியிடுவேன் ///
இது ஒன்றே போதும் இன்னும் ஒரு வருசத்துக்கு தாங்கும்
ஒவ்வொரு வரியையும் உணர்ந்து அனுபவித்துப் படித்திருக்கிறீர்கள்... ரொம்ப நன்றிங்க...
Deleteதங்கள் தளத்துக்கும் தான் வந்து - பல
ReplyDeleteகருத்தைச் சொல்லிச் செல்கின்றேன்
நல்ல உள்ளங்கள் இருக்கையிலே - நான்
நித்தம் கவிதை வெளியிடுவேன்
இனிய வாழ்த்துகள்..!
நன்றி அம்மா...
Delete
ReplyDelete//மாணவன் தளத்துக்கு வந்திடுவீர் //
தல.. 'மாணவன்' என்று ஒரு தளமே இருக்கிறது அதையா சொல்றீங்க...?
இல்லண்ணே... ஸ்கூல் பையன் தளத்தைத்தான் தமிழில் சொன்னேன்...
Deleteஎளிமையான கவிதை.. நல்ல முயற்சி...
ReplyDelete//வாக்குகள் பலவும் பெறுவதினால் - தமிழ்
மணத்தில் மகுடம் சூடிடுவேன்//
tm 19 போட்டாச்சு...போட்டாச்சு...
ஹா ஹா... நன்றி அண்ணே...
Deleteசொல்லவே இல்ல நண்பா. கலக்கறீங்க..
ReplyDeleteசொன்னேனே.... எங்களுக்கு சீக்கிரம் மகுடம் சூடணும்...
Deleteநீங்கள் எப்போதுமே ஆகச்சிறந்த கவிதைகளை எழுதுபவர் என்பது எனக்குத் தெரியும், காலும் அரையும் என்கிற நவீன புதின புதிய கவிதையின் நீட்சியில் இருந்து எழும்பிய விழுமியங்களின் படிமங்களாகத் தான் நான் இக் கவிதையைப் பார்கிறேன்.
ReplyDeleteஇது போல் நாளுக்கு இரண்டு என்ற அளவில் நீங்கள் கவிதை எழுதி சமூக சீர்திருந்தங்களில் இறங்கினால் ஆகச்சிறந்த ஒளிவட்டம் உங்கள் பின்னாலும் வருவதற்கு சாலசிறந்த வாய்ப்பு உள்ளதாக அவதானிக்கிறேன்.
- இவன்
இலக்கிய நயம் கமழும் கவிதைகளைத்
தேடித் தேடித் படிப்பவன்
இப்படி ஒரு இலக்கியம் படைத்ததற்காக உங்களுக்கு சிலை வைக்கவும் தயாராய் இருப்பவன்
என்னை ரொம்ப புகழாதீங்க... வெக்கமா இருக்கு....
Deleteசிலை என்பது தலைவர்களுக்கு மட்டுமே வைக்கக்கூடியது... எங்களைப்போல் கவிஞ்ர்களுக்கு மணத்தில் மகுடம் சூட்டினால் போதும்....
Deleteஎத்தனையாவது த.ம அளித்தேன் என்று மறந்து விட்டேன், மணிக்கு நூறு என்ற விகிதத்தில் உங்களுக்கு த.ம வந்து சேர்ந்து கொண்டுள்ளது, மட்டுமே மணிக்கு பல்லாயிரம் த.மக்களை வாரி வழங்கியிருப்பேன். உங்கள் த.ம இன்னும் பல கோடிகளைத் தாண்ட வேண்டும் ஆர்வத்தில் உள்ளேன்
ReplyDeleteபாராட்டுக்கள் நண்பரே... உங்களைப்போல் த.ம. வழங்கும் வள்ளல்கள் இருப்பதால் தான் கவிஞ்ர்கள் "மணம்" மணம் வீசுகிறது....
Deleteசூப்பர் அப்பு... ஸ்கூலில் படித்தது போல் எளிய கவிதை
ReplyDeleteநன்றி ரூபக்...
Deleteதலைப்பே கவிதை போல் உள்ளது
ReplyDeleteஆஹா... தலைப்பையும் ரசித்திருக்கிறீர்கள்... நன்றி அரசன்...
Deleteஎல்லாம் சரி , படிச்சு ஓட்டுபோட்டா சொன்னது மாதிரி பணத்த என் அக்கவுண்டுல போற்றுவிங்கள்ள ??? :-))))
ReplyDeleteஓட்டுக்கு ஓட்டு மட்டுமே... எனக்கு நீங்க ஒரு ஓட்டு போட்டா நான் உங்களுக்கு ரெண்டு ஓட்டு போடுறேன்... டீலா நோ டீலா....
Deleteநல்ல உள்ளம் ஒன்று உண்டு
ReplyDeleteஆனால் ஓட்டும் ஒன்றுதானே
கள்ள ஓட்டுப் போடுதற்கு
வழியொன்றுசொன்னால் போதும்
சொல்லாமல் போடுவேன்
மகுடத்துக்கான ஓட்டனைத்தும்.
பல்லாண்டு பழக்கம் இது
மொய் வைத்து மொய் எடுப்பதுவே!
தங்களது கருத்தை ஆமோதிக்கிறேன் ஐயா... இந்தப்பதிவு ஓட்டுக்காக அல்ல என்பது தங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைத்திருந்தேன் ....
Deleteவாலியின் இடத்தை கவித இட்டு நிரப்பப் புறப்பட்டிருக்கும் எங்கள் அருமை அண்ணன், கவிதைப்புயல் ஸ்கூல் பையன் அவர்களை வருக வருக என ஆறாம் வட்டம் சார்பாக வரவேற்கிறோம் ....!
ReplyDeleteவாலியின் இடத்தை நிரப்ப நிறைய கவிதை வாளிகள், கண்ணதாசன்கள் என்று நிறைய பேர் புறப்பட்டு மகுடம் சூட்டி வருகின்றனர்.... நான் ஒரு ஓரமா ஒதுங்கிக்கிறேங்க...
Deleteஓ, அது ஆறாம் வட்டமா... வர்றேன்... வர்றேன்....
Delete
ReplyDeleteஇப்படியொரு கருத்து செறிவு மிக்க ஒரு கவிதையை மிகவும் நளினத்துடன், வார்த்தை சாலத்தில் படித்து நான் மயங்கி மயங்கி தெளிகிறேன் ...
தெளியவைத்து தெளியவைத்து அடிப்பது தான் கவிதை வாளிகளின் பழக்கம்...
Delete
ReplyDeleteஉங்களின் பதிவுகளனைத்தும் மனசில் ஏற்றிக்கொள்ள வேண்டிய மனப்பாடங்கள், உங்களின் கவிதைச்சேவை தொடர மன்றாடி கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன்!
கவிதை வாளி, கவிதை லாரி, கவிதை குடோன்... அப்படியே அள்ளிக்கலாம்...
Delete
ReplyDeleteஆழிக்குள் ஒளிந்திருக்கும் முத்துக்கள் போன்றவை உங்கள் கவிதைகள், எக்காரணத்திற்காகவும் நிறுத்தி விட வேண்டாம் பெருங் கவிஞரே ...
கத்தியின்றி ரத்தமின்றி என் தளத்துக்கு வருபவர்கள் அனைவரையும் கவிதை படித்துக் காலி செய்வதே எங்கள் நோக்கம்...
Deleteஅரசரே ...! ஸ்கூல் பையர் நல்லா கவித எழுதுறாரோ இல்லையோ , ஆனா நீங்க பின்னூட்டத்துல பொளந்துகட்டுறீங்க போங்க ....!
ReplyDeleteஅவரும் கவிஞர் தானே... ஒரு கவிஞரின் உள்ளம் கவிஞருக்கே தெரியும்....
Deleteத.ம. 23
ReplyDeleteஎன் உள்ளம் உணர்ந்து தமிழ்மணத்தில் இருபத்துமூன்றாம் வாக்களித்த தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்...
Deletewow... super... continue continue :))
ReplyDeleteகணினி இல்லையென்றாலும் போன் மூலமாகப் படித்து கவிதைகளை ஊக்குவிக்கும் பட்டிக்காட்டானுக்கு நன்றிகள்...
Deleteபலவார்த்தை கருத்தைப் பதிந்திடுவீர் - ஒற்றை
ReplyDeleteவார்த்தை கருத்தை தவிர்த்திடுவீர்
தங்கள் தளத்துக்கும் தான் வந்து - பல
கருத்தைச் சொல்லிச் செல்கின்றேன்//
இந்த ஒப்பந்தம்
நன்றாக இருக்கிறதே!
வாழ்த்துக்கள்.
மொய்க்கு மொய் என்ற ஒப்பந்தம் வலைப்பூ தொடங்கியதில் இருந்தே இருக்கிறதே...
Deleteபட் இந்த டீல் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு! :)
ReplyDeleteகவித... கவித.....
போட்டுத் தாக்குங்க ஸ்.பை.....
என்னோட ஓட்டு 25-வது!
நன்றி வெங்கட் அண்ணா..
Deleteநல்ல குணமும் நிறைந்த மனமுடன்
ReplyDeleteவெல்லலாம் வாழ்வில் விரைந்து!
அருமை! உங்கள் கவிதை!
தொடருங்கள்! வாழ்த்துக்கள்!
இன்றைய வலைச்சரத்தில் என்னை
அறிமுகஞ் செய்தமைக்கும் உளமார்ந்த நன்றி சகோ!
த ம.27
வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி சகோதரி...
Delete