முதல் பதிவின் சந்தோஷம் - தொடர்பதிவு
Tuesday, August 06, 2013
Posted by கார்த்திக் சரவணன்
வணக்கம் நண்பர்களே....
தொடர்பதிவுகள் பதிவுலகில் மீண்டும் ஓர் உற்சாகத்தைக் கொடுத்துவருகிறது. பல நாட்களாக எழுதாத பதிவர்கள் கூட சுறுசுறுப்பாக எழுதுகிறார்கள். பதிவுலகம் மீண்டும் களைகட்டியிருப்பதில் மகிழ்ச்சி. இதன்மூலம் நட்பு வட்டங்கள் பெருகி வருகின்றன, பழைய நட்புக்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
தொடர்பதிவு இவ்வளவு பிரபலமாக காரணம் தொடங்கி வைப்பவரின் தலைப்பு தான் என்றே நினைக்கிறேன். "எனது முதல் கணினி அனுபவம்" மற்றும் "முதல் பதிவின் சந்தோசம்" என்ற தலைப்புகளில் எழுதவேண்டும் என்றால் ஐந்து நிமிடங்களில் எழுதிவிடலாம், தவிர பழைய சந்தோஷத்தை அசைபோடுவது அலாதி சந்தோஷம்.
இந்த தொடர்பதிவை எழுத அளித்த சகோதரி தென்றல் சசிகலாவுக்கு என் நன்றிகள்.
நான் எழுதிய முதல் பதிவு "திருப்பதி பாத யாத்திரை". கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று எழுதினேன்.
கீழ் திருப்பதியில் இருந்து 3550 படிகள் ஏறி மேல் திருப்பதி அடைந்து பெருமாளை தரிசனம் செய்த அனுபவத்தை எழுதியிருந்தேன். இதே நாளில் தான் நண்பர் மெட்ராஸ்பவன் சிவகுமார் அவர்களும் "திருப்பதி அனுபவம்லு" என்ற பதிவை எழுதியிருந்தார். அதைப்பர்த்தவுட்ன எனக்கு ஒரு ஆச்சரியம். அவருக்கு இப்படி ஒரு பின்னூட்டம் இட்டேன்.
"அண்ணா வணக்கம். நமக்குள் என்ன ஒரு ஒற்றுமை, சற்று முன்பு தான் திருப்பதி பதிவு எழுதினேன்
அப்போதெல்லாம் சிவகுமாரை எனக்கு யாரென்றே தெரியாது.
இந்தப் பதிவுக்கு முதன்முதலாக பின்னூட்டம் அளித்தவர் "Chilled Beers" என்ற பெயரில் எழுதிவரும் நண்பர். அவரையும் யாரென்றே தெரியாது, அவரது பதிவுகளைப் படித்ததில் அவர் பெங்களூரில் இருக்கிறார் என்று தெரிந்துகொண்டேன்.
இரண்டாம் பின்னூட்டம் அளித்தவர் நம் நண்பர், காதல் மன்னன் "திடங்கொண்டு போராடு சீனு". அவர் கீழ்க்கண்டவாறு பின்னூட்டம் எழுதியிருந்தார்.
"முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா... முதல் பதிவே திருப்பதியில் இருந்து தொடங்கி உள்ளீர்கள்.. பதிவுலக பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Refer this site
www.bloggernanban.com
முக்கியமான வேண்டுகோள்;
In settings -> Post comments -> Show word verification -> No
என்று மாற்றுங்கள்...இல்லையேல் பல பின்னூட்டங்களை நீங்கள் இழக்க நேரிடும்... பெரும்பாலும் பின்னூட்டம் இடுபவர்கள் இதை விரும்புவதில்லை "
சீனுவின் பின்னூட்டம் மிகவும் உற்சாகம் கொடுப்பதாக இருந்தது. அவர் சொன்னபடி பின்னூட்ட செட்டிங்கை மாற்றிவிட்டேன்.
அதற்குப் பிறகு பின்னூட்டம் எழுதியவர்கள்
பதிவுலகின் குறும்புத் தலைவன் நம் மதுரைத் தமிழன்
முதல் பதிவு எழுதிவிட்டு உடனே நூறு பின்னூட்டங்களும் ஆயிரம் ஹிட்சும் வரும் என்று நினைத்துக்கொண்டு டாஷ்போர்டை refresh செய்து பார்த்துக்கொண்டே இருந்தேன். ஹா ஹா ஹா... இன்னும் நினைத்தாலே சிரிப்பாக வருகிறது. நான் மட்டும் தான் இப்படியா, இல்லை எல்லோரும் இப்படித்தானா.
This entry was posted by school paiyan, and is filed under
அனுபவம்,
தொடர்பதிவு
.You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
நீங்க பரவாயில்ல நண்பா.. என் முதல் பதிவுக்கு நானே எல்லோருக்கும் போன் போட்டு படிக்க அழைத்த நிகழ்வுகள் இருந்ததே..
ReplyDeleteஹா ஹா... சுவாரஸ்யமா இருந்திருக்குமே....
Deleteயோவ் ஆவி இப்ப பின்னூட்டவும் ஆரம்பிச்சாச்சா... டோன்ட் ஸ்ட்ரைன்
Deleteஒரு பதிவும் போட்டுட்டேன் சீனு.. ஆபரேட் பண்ணின கை கொஞ்சம் தேறிட்டுது.. அதான்..
Deleteஆவிப்'பா' எப்ப வெளிவரும்
Deleteபட்டம் கொடுத்து என்னை ஒழிச்சு கட்ட வழி பார்கிறாயா ஸ்கூல் பையா? எனக்கு பட்டம் கொடுத்து கிண்டல் பண்ணியதற்க்கு உனக்கு தண்டனை தரப்போறேன் நீ சென்னை பதிவர் விழாவிற்கு மேடை ஏறியதும் 100 தோப்புகரணம் போடனும் என் பதிவின் பெயரை சொல்லி எப்படி என் தண்டனை விழாவிற்கு வராமலேயே நம்ம பதிவிற்கு விளம்பரம் தேடுவது ஹீ.ஹீ
ReplyDeleteஏம்பா இப்படி... ஏன்....
Deleteநூறு பின்னூட்டங்களும் ஆயிரம் ஹிட்சும் வரும்//கவலைப் படாதீங்க தம்பி நிச்சயம் நிறைவேறும்
ReplyDeleteஇப்பல்லாம் அதப்பத்தி கவலைப்படுறதே இல்லை க.க.அவர்களே...
Deleteநான் ஒருபடி மேலே போயி எனக்கு நானே கமெண்ட் போட்டேன் ஹா ஹா ஹா ஹா - சுவாரஸ்யம்.....!
ReplyDeleteஓ, நீங்க அப்படியா?
Deleteஸ்வாரசியமான நினைவுகள்..... ரசித்தேன்....
ReplyDeleteஇன்னிக்கு நம்ம பக்கத்திலும் முதல் பதிவு அனுபவம் தான்......
http://venkatnagaraj.blogspot.com/2013/08/blog-post_6.html
தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட் அண்ணா..
Deleteஉங்கள் முதல் பதிவு எனக்கும் நன்றாக நியாபகம் உள்ளது சார், மெட்ராஸ் பதிவும் உங்கள் பதிவும் ஒரே நேரத்தில் வந்திருந்தது, நான் நினைகிறேன் மெட்ராஸ் பதிவில் உங்கள் பின்னூட்டம் பார்த்து தான் உங்கள் பதிவுக்கு வந்து படித்தேன் என்பதை.
ReplyDeleteஏன் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை... எல்லாருமே எழுதிடாங்களா என்ன ?
ஆமா, நாம் இதை தொலைபேசியில் பேசியிருக்கிறோம்.... மலரும் நினைவுகளை கிளப்பியதற்கு நன்றி...
Deleteஎன்னன்னே தெரியல, யாரையும் எழுத கூப்பிடனும்னு தோணலை...
Deleteநீங்க கூப்பிடாட்டி பரவாயில்லே.. நான் உங்களையும் சீனுவையும் ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்..
Deletehttp://www.kovaiaavee.com/2013/08/blog-post.html
என் சார் இப்படி ?
Delete@கோவை ஆவி - யோவ் எனக்கு கவிதையே எப்பவாச்சும் தான் வரும்.... அதுக்கு ஒரு தொடர்பதிவா....ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ....
Deleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteஉங்கள் முதல் பதிவை சென்று பார்த்தேன். அங்கும் ஒரு கருத்துரை இப்போழுது தந்துள்ளேன். முதல்பதிவு போலவே தெரியவில்லை. சென்ட்டிமென்டாக திருப்பதியிலிருந்து தொடங்கி இருக்கிறீர்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்!
திருப்பதி சென்டிமென்டே தான்..... நன்றி ஐயா...
Deleteசிறப்பாக உள்ளது. தொடர்ந்து பல பதிவுகள் தர வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி சகோதரி....
Deleteதொடர்ந்து பதிவுலகில் கலக்குங்கள் தல
ReplyDeleteநன்றி அண்ணே...
Delete//இதே நாளில் தான் நண்பர் மெட்ராஸ்பவன் சிவகுமார் அவர்களும் "திருப்பதி அனுபவம்லு" என்ற பதிவை எழுதியிருந்தார்.//
ReplyDeletegreat men think alike!
இது வஞ்சப்புகழ்ச்சி அணி இல்லையே...
Deleteமுதல் பதிவு பற்றி ரசித்து
ReplyDeleteஎழுதியமைக்குப் பாராட்டுக்கள்..
நன்றி அம்மா...
Deleteசார் லட்டு.........
ReplyDeleteநேர்ல வாங்க ((செப்-1)...
Deleteமுதல் பதிவின் உற்சாகம் கரை புரள்கிறது தங்கள் எழுத்தில் நன்றி நண்பரே
ReplyDeleteஇது போல் பதிவிலும் ஏன் ஐநூறாவது பதிவிலும் இதே உற்சாகம் தொடரட்டும் வாழ்த்துக்கள். நான் எழுதிய முதல் பதிவும் திருப்பதி பற்றியது தான் என்ன ஒற்றுமை நண்பரே
ஓ, நீங்கள் எழுதிய முதல் பதிவும் திருப்பதி பற்றியது தானா... சூப்பர்...
Deleteஅருமையான நினைவுகள்..வாழ்த்துகள்!
ReplyDeleteநன்றி சகோதரி....
Delete