பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாத்தியாரே!!!
Tuesday, May 26, 2015
Posted by கார்த்திக் சரவணன்
வாத்தியார்! எல்லாருக்கும் எம்.ஜி.ஆர். தான் ஞாபகத்துக்கு வருவார். ஆனால் எங்களுக்கு எங்க வாத்தியார் பாலகணேஷ் தான் ஞாபகத்துக்கு வருவார். எங்களுக்கு என்றால்? நாங்கள் ஒரு ஐந்து பேர் இருக்கிறோம். பதிவர்கள் தான். பல நாட்களாக அவரை நாங்கள் வாத்தியார் என்று அழைத்தே பழக்கமாகிவிட்டது.
உத்தம வில்லன்
Wednesday, March 11, 2015
Posted by கார்த்திக் சரவணன்
கொஞ்சம் தவறியிருந்தால் விழுந்திருப்பேன். மூடப்படாத டிரைனேஜ் அது. யாரோ ஒரு பெரியவர், "தம்பி தம்பி, பாத்து" என்று குரல் கொடுத்திருக்கவில்லையென்றால் உள்ளே விழுந்திருப்பேன். போனில் பேசியபடியே நடந்ததால் வந்த வினை. மூடியைக் காணவில்லை. யாரும் அங்கே நடக்காமலிருக்க மாநகராட்சி ஊழியர்கள் இரண்டு பெரிய கற்களை வைத்து நடுவே ஒரு மரக்கிளையை செருகியிருந்தார்கள். யாரோ விஷமிகள் அவற்றை அகற்றியிருந்தார்கள். வேறு யாராவது விழுவதற்குள் ஒரு பாதுகாப்பு வளையம் ஏற்படுத்த வேண்டும். சுற்றிலும் தேடிப்பார்த்தேன். கல்லோ மரக்கிளையோ எதுவுமின்றி சாலையே சுத்தமாக இருந்தது. பக்கத்தில் எங்கிருந்தாவது எடுத்து வரவேண்டும். இப்போது என் போன் அடிக்கத் தொடங்கியது. நாராயணன்.
கருத்து சுதந்திரம் இருக்கிறதா இல்லையா?
Monday, March 09, 2015
Posted by கார்த்திக் சரவணன்
புதிய தலைமுறை சேனலின் “உரக்கச் சொல்லுங்கள்” நிகழ்ச்சியில்
பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. பேசுவதற்கான தலைப்பு “கருத்து சுதந்திரம்
இருக்கிறதா இல்லையா” என்பதுதான். நான், அஞ்சா சிங்கம் செல்வின், ஆரூர் மூனா
செந்தில், போலி பன்னிக்குட்டி, குடந்தை ஆர்.வி.சரவணன், ஜூபிளி நடராஜன் உள்ளிட்ட
இருபதுக்கும் மேற்பட்டோர் கருத்து சுதந்திரம் இல்லை என்று பேசும் குழுவில்
அமர்ந்திருந்தோம்.
காதல் போயின் காதல் - குறும்படம்
Monday, February 23, 2015
Posted by கார்த்திக் சரவணன்
சில நொடி சிநேகம் முடிந்தவுடன் கோவை ஆவி என்னிடம் சொன்னார் - "பாஸ், அடுத்து நம்ம படம்தான், கண்டிப்பா நீங்க கூட இருக்கணும்" என்று. ஏற்கனவே சில நொடி சிநேகத்தில் என்னால் கலந்துகொள்ள முடியாமல் போனதால் கண்டிப்பாக இருக்கிறேன் என்று ஒப்புக்கொண்டேன். என்ன கதை என்று கேட்டபோது "காதல் போயின் காதல், நான் ஏற்கனவே ப்ளாக்ல எழுதியிருக்கும் கதை தான்" என்றார்.
எலக்ட்ரானிக் அடிமைகள்
Thursday, January 29, 2015
Posted by கார்த்திக் சரவணன்
வேளச்சேரியிலிருக்கும்
அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தபோது மணி இரண்டைக் கடந்திருந்தது. அனிச்சைச் செயலாய் சல்யூட்
அடித்து கதவைத் திறந்துவிட்டார் காவலாளி. உள்ளே நுழைந்ததும் முகத்திலறைந்த காற்று வெயிலில்
வண்டி ஓட்டி வந்த களைப்பிற்கு இதமாக இருந்தது. வெளிர் நீல நிற சபாரி அணிந்திருந்த
ஒருவர் என்னையும் என் மனைவி குழந்தைகளையும் பார்த்துவிட்டு எத்தனை பேர் சார்?
என்றார். ரெண்டே முக்கால் என்று சொல்ல வாயெடுத்தவன் கடைசி நேரத்தில் முடிவை
மாற்றிக்கொண்டு நாங்க மட்டும்தான் என்றேன். அந்த லாஸ்ட்ல போயிருங்க சார் என்றார்.
ஜீரோ பட்ஜெட்டில் ஒரு குறும்படம்
Wednesday, January 21, 2015
Posted by கார்த்திக் சரவணன்
இயக்குநர் கேபிள் சங்கருடைய தொட்டால் தொடரும்
திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது. அவர் சில நாட்களுக்கு முன் ஒரு
குறும்படப் போட்டி ஒன்றை அறிவித்திருந்தார். அதாவது, "தொட்டால்
தொடரும்" என்ற தலைப்புக்கு ஏற்றவாறு ஒரு நிமிடத்தில் ஒரு நல்ல கருத்துள்ள குறும்படம்
எடுக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தார். இதையொட்டி என் மனதில் தோன்றிய ஐடியா ஒன்றை
நண்பர் ஒருவரிடம் தெரிவிக்க, அவருக்கும் இது பிடித்துப் போனது. உடனே அவர் நீயே எடு என்று
கூறி தனது கேமராவையும் கொடுத்து உதவினார்.
காதல் போயின் (சிறுகதை)
Tuesday, December 16, 2014
Posted by கார்த்திக் சரவணன்
அவள் பெயர் சந்தியா. எனக்கு எதிர் பிளாட்டில்தான் குடியிருக்கிறாள். நான் அலுவலகம் போகும்போதோ வரும்போதோ அவளைக் காண்பதுண்டு. என்னைப் பார்த்தால் அவள், "ஹாய்" என்பாள். நானும் பதிலுக்கு ஹலோ என்ற ஒற்றை வார்த்தையை உதிர்த்துவிடுவேன் அல்லது ஒரு சிறு புன்னகையுடன் கடந்துவிடுவேன். சில நேரங்களில் நான் வீட்டுக்கு வரும்போது அம்மாவுடன் பேசிக்கொண்டிருப்பாள். பை த பை என் பெயர் அருண்.
Subscribe to:
Posts (Atom)