காதல் போயின் காதல் - குறும்படம்
Monday, February 23, 2015
Posted by கார்த்திக் சரவணன்
சில நொடி சிநேகம் முடிந்தவுடன் கோவை ஆவி என்னிடம் சொன்னார் - "பாஸ், அடுத்து நம்ம படம்தான், கண்டிப்பா நீங்க கூட இருக்கணும்" என்று. ஏற்கனவே சில நொடி சிநேகத்தில் என்னால் கலந்துகொள்ள முடியாமல் போனதால் கண்டிப்பாக இருக்கிறேன் என்று ஒப்புக்கொண்டேன். என்ன கதை என்று கேட்டபோது "காதல் போயின் காதல், நான் ஏற்கனவே ப்ளாக்ல எழுதியிருக்கும் கதை தான்" என்றார்.
வீட்டுக்கு வந்ததும் அவரது சிறுகதையைத் தேடிப்படித்தேன். குறும்படம் எடுக்கும் அளவுக்கு அந்தக்கதை என்னை ஈர்க்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். இருந்தாலும் அந்தக் கதையை screenplay-யாக எழுதி மாற்றி மாற்றி மெருகேற்றி மெருகேற்றி தந்த கடைசிக் கதையைப் படித்ததும் எனக்குள் ஒரு நம்பிக்கை பிறந்தது. கூடவே இன்னொன்றையும் கவனித்திருந்தேன், அது - கதையின் கிளைமாக்ஸ்.
சீனு - இவருக்குள் இப்படி ஒரு நடிகர் ஒளிந்திருக்கிறார் என்கிற விஷயமே இப்போதுதான் தெரிகிறது. இவர்தான் கதையின் நாயகனாக நடிக்கப்போகிறார் என்றதுமே இணையத்தில் ஒரு கூட்டமே அவருக்கு ரசிகர்களானார்கள். மிக அருமையாக நடித்திருக்கிறார். அதைவிட முக்கியம் - கதைக்குத் தேவையான முகபாவங்களை கோவை ஆவி இவரிடமிருந்து வாங்கியிருக்கிறார்.
மதுவந்தி - நாயகியை ஒத்திகை பார்க்கும் நாளன்று தான் சந்தித்தேன். ஒத்திகை பார்ப்பதற்கும் முன்னரே வீட்டிலேயே பயிற்சி எடுக்கத் தொடங்கியிருந்தார். அவரது ஆர்வமும் உழைப்பும் என்னை வெகுவாக ஈர்த்தது.
ரக்ஷித் - என் மகன். இதை தட்டச்சு செய்யும்போதே கொஞ்சம் பெருமையாகத்தான் இருக்கிறது. கதையில் நாயகியுடன் வருவான், காகிதத்தில் கப்பல் செய்துகொண்டிருப்பான். கிளைமாக்ஸ் - கடைசி திருப்புமுனைக் காட்சியில் கொஞ்சம் வசனம் பேசுவான். அவ்வளவே. ஆனாலும் படம் முழுவதும் அவனும் இருப்பதுபோலவே ஒரு உணர்வு இருக்கிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நாயகன், நாயகி உட்பட நடித்திருக்கும் அத்தனைபேருமே எந்தக் காட்சிக்கும் ஒரே முறையில் எடுத்து முடிக்கவில்லை. ஆனால் இவன் மட்டும் ஒரே முறையில் வசனம் பேசி படப்பிடிப்பு நடக்கும் இடத்திலேயே அனைவரது கை தட்டலையும் வாங்கிவிட்டான்.
மிக முக்கியமான ஒன்று - பதிவர் கீதா ரங்கன். கோவை ஆவிக்கு நிகராக பின்னணியில் உழைத்திருக்கிறார். இவர் மட்டும் இல்லையென்றால் இந்தப் படம் சாத்தியப்பட்டிருக்காது. என்ன செய்தார்? ஆரம்பம் முதல் கடைசி வரை எல்லாவற்றையும் பொறுமையாக கவனித்து வேண்டிய அனைத்தையும் செய்துகொடுத்தார்.
பதிவர் நண்பர்கள் திரு. துளசிதரன் அவர்களும் அரசன், குடந்தை ஆர்.வி.சரவணன் ஆகியோருடன் என்னுடைய ஹீரோ ரூபக் ராம் நடித்திருக்கிறார். மிக மிக முக்கியமான ஒருவர் - நான் தான். முதல் காட்சியில் முதல் வசனம் நான் தான் பேசுகிறேன். படத்தைப் பாருங்கள் - கருத்துக்களைக் கூறுங்கள்.
This entry was posted by school paiyan, and is filed under
காதல் போயின் காதல்,
குறும்படம்
.You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
இன்னிக்கு முகநூல்ல படத்தப் பாத்துட்டு கருத்துச் சொன்ன பெரும்பாலானவங்க ரக்ஷீத் மனசைக் கவர்ந்துட்டான்னு சொல்லிருக்காங்க, கவனிய்யா. படிக்கவே ஹாப்பியா இருக்கு. (முதல் செஞ்சுரிய நெருங்கிட்ட போலயே... சட்னு செஞ்சுரி அடி. நல்வாழ்த்துகள்)
ReplyDeleteSame here. :)
Delete//ரக்ஷீத் மனசைக் கவர்ந்துட்டான்னு சொல்லிருக்காங்க// சரவணன் ஹேப்பி வாத்தியாரே...
Deleteஇந்த வாரமே ஒரு சிறுகதையோட செஞ்சுரி அடிச்சிருவோம்....
உங்கள் வாழ்க்கையைப் பற்றி நாயகி கேட்கும் போது, காகிதக்கப்பலை காட்டும் இடம்...! அட...! ஆவி டச்...!
ReplyDeleteநீங்கள் சிரித்தது போலவே பையனும்... வாழ்த்துக்கள்...
Thanks DD.
DeleteThanks DD.
Deleteஉடன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டிடி....
Deleteநம்ம சீனுவை சொல்லா விட்டால் எப்படி...?
ReplyDelete"நீயா...?" என்பது "நீங்களா...?" என்று மாற்றும் போது, நாயகனின் கண்களில் என்னவொரு பரிதாப (நினைவுகளுடன்) திகைப்பு...!
சின்னதாக தலை ஆட்டல் - ஷைனிங் ஸ்டார் சீனு...!
மற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ஹா ஹா ஹா டிடி... உங்களுக்கு ஆயிரம் நன்றிகள் ;-)
Deleteஹா ஹா.. படம் பற்றிய கருத்துக்கு மிக்க நன்றி டிடி...
Deleteபடம் பார்த்து நானும் உங்கள் அனைவரையும் ரசித்தேன். பாராட்டுகளும், வாழ்த்துகளும். உங்கள் குட்டிப் பையனுக்கு எங்கள் ஸ்பெஷல் வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் பதிவுலக குறும்பட குறும்படைக்கு!
ReplyDeleteசிறப்பாக படத்தை இயக்கி இருக்கிறார்.பிளாஷ் பேக்கும் லைவும் மாற்றி மாற்றி அமைத்த காட்சிகள் அருமை.அக்கா கீமோ தெரபி என்றதுமே புரிந்து போனாலும் காட்சி நகர்த்தல்களில் சுவாரசியம் கூடவே செய்கிறது.
ReplyDeleteரக்ஷித் --அருமையான நடிப்பு .
வலையுலக ஒளிர் நாயகன்-அதாங்க ஷைனிங் ஸ்டார் முதல் படம் மாதிரியே தெரியல. ஓடிப் பாய்ந்து குழந்தையை காப்பாத்தறது அட்டகாசம்
.மதுவந்தி வெகு இயல்பான நடிப்பு -க்ளைமாக்சில் நல்ல முகபாவம் காட்டி இரக்கம் பெறுகிறார் .
குடந்தை சரவணன் ரியல் டாக்சி டிரைவர் மாதிரியே திட்டியது யதார்த்தம் துளசிதரன் சாரின் நடிப்பும் அருமை.
மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஆவிக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.
Deleteசகா! ரக்ஷித் மிக அழகாக நடித்திருக்கிறார். நானும் இந்த குறும்படம் பற்றிய என் பதிவில் அதை குறிப்பிட்டிருக்கிறேன். வாழ்த்துகள் இருவருக்கும். நேரம் கிடைக்கும்போது அந்த பதிவை வாசித்துப்பாருங்கள்:)
ReplyDeleteநண்பரே! மன்னித்து விடுங்கள் இன்றுதான் பார்த்தோம். உங்கள் வலைத்தளத்தில் நீங்கள் பகிர்ந்து சொல்லியிருப்பதை.
ReplyDeleteமிக்க மனமார்ந்த நன்றி எங்கள் இருவரிடமிருந்தும். ஆவிக்கும் எங்கள் நன்றிகள்.
சரவணன், எங்கள் தளத்தில் படத்தைப் பகிர்ந்ததற்கு வந்த கருத்துக்களில் ரக்ஷித் பேசப்பட்டுள்ளதை இங்கு சொல்லியே ஆக வேண்டும். அதுவும் பதிவர் சகோதரி சித்ரா சுந்தர் அவர்கள் //றும்படம் அருமையாக இருந்தது. அதிலும் அந்தக் குட்டிப்பையன் கொள்ளை அழகு. கடைசியில் 'சித்தி'ன்னு சொல்லிட்டு 'அம்மா' எனும் இடம் சூப்பர்.// என்று குறிப்பிட்டுள்ளார்.
மிக்க நன்றி!
கீதா: சகோதரரே! என்ன இது இப்படிச் சொல்லி எனக்குக் கூச்சமாகிவிட்டது! சகோதரரே. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ஆவிக்குத்தான் நான் பல நன்றிகள் சொல்ல வேண்டும். என்னை நம்பி பொறுப்பு கொடுத்ததிலிருந்து, எனக்குப் பாட வாய்ப்பு அளித்தது வரை, இதோ இப்போதும் கூட எங்களின் பகிர்தல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இதோடு இங்கு முற்றுப் புள்ளி ஏனென்றால் எங்கள் தளத்தில் தொடர வேண்டும்...
எனவே, இது ஒரு குழு சார்ந்தது அல்லாமல் எனது பங்களிப்பு என்று சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை என்பதே எனது தாழ்மையான கருத்து. நன்றி உங்களுக்கு.
மிக்க நன்றி குழுவினருக்கும், என் தம்பி ஆவிக்கும். இந்த வாய்ப்பு அளித்தமைக்கு...