பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாத்தியாரே!!!
Tuesday, May 26, 2015
Posted by கார்த்திக் சரவணன்
வாத்தியார்! எல்லாருக்கும் எம்.ஜி.ஆர். தான் ஞாபகத்துக்கு வருவார். ஆனால் எங்களுக்கு எங்க வாத்தியார் பாலகணேஷ் தான் ஞாபகத்துக்கு வருவார். எங்களுக்கு என்றால்? நாங்கள் ஒரு ஐந்து பேர் இருக்கிறோம். பதிவர்கள் தான். பல நாட்களாக அவரை நாங்கள் வாத்தியார் என்று அழைத்தே பழக்கமாகிவிட்டது.
சிஷ்யர்கள் |
வாத்தியாரை நான் எப்போது முதன்முதலில் பார்த்தேன் என்று இன்னும் ஞாபகம் இருக்கிறது. பேஸ்புக்கில் அப்போது நான் இருந்திருக்கவில்லை. ப்ளாக் மட்டும் தான். ஒரு தொழில்நுட்ப சந்தேகம் கேட்பதற்காக என்னை போனில் அழைத்திருந்தார். பின்னர் ஒரு நாள் சீனுவுடன் தி.நகர் நடேசன் பார்க்கில் சந்தித்தோம்.
எங்களுக்கு (சிஷ்யர்களுக்கு) வாத்தியார் பதிவு எழுதிய அடுத்த நிமிடம் படித்துவிட்டு பின்னூட்டம் எழுதிவிட வேண்டும். அதில் சில நாட்களில் நான் முந்தி நீ முந்தி என போட்டியெல்லாம் கூட வந்திருக்கிறது.
எல்லாருக்கும் தெரிந்திருக்கும். வாத்தியாரின் எழுத்துக்கள் அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக ஹாஸ்யப்பதிவுகள். சில பதிவுகளைப் படித்துவிட்டு நானே வாய்விட்டு சிரித்திருக்கிறேன். காமெடியில் கலக்குபவர். இங்கே கலக்குபவர் என்று சொல்வதை விட கலக்கியவர் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.
முன்னூறுக்கும் மேற்பட்ட பதிவுகளை எழுதியவர் ஏனோ தெரியவில்லை சில நாட்களாக எதுவுமே எழுதுவதில்லை. சுஜாதாவுக்கு அஞ்சலி செலுத்திய பதிவுதான் அவர் எழுதிய கடைசிப் பதிவு. நேரமின்மை என்று சப்பைக்கட்டு கட்டினாலும் இருபத்து நான்கு மணி நேரத்தில் அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ ஒதுக்குவது சாதாரணம் தான். மனது வைத்தால் சாத்தியம் தான். பல நாட்களாக நீங்கள் தொடர்ந்து எழுதவேண்டும் என்று வலியுறுத்திக்கொண்டே இருக்கிறேன். மீண்டும் தொடர்ந்து எழுதுவார் என்று நம்புகிறேன்.
இது கவர்ச்சி போஸ் இல்லை, போன் பேசுகிறார் |
//அதுமாதிரி நான் காணாமப் போயி திரும்ப வந்ததுக்கு நம்ம ஸ்.பை. சரவணன் உங்க எல்லாருக்கும் விருந்து வெக்காட்டியும் அட்லீஸ்ட் எனக்கு மட்டுமாவது மெகா விருந்து ஒண்ணு வெப்ப்பாருன்னு நெனக்கிறேன். ஹி... ஹி...!//
இது முன்னொரு முறை வாத்தியார் காணாமல் போனபோது நான் எழுதிய பதிவுக்கு பதிலாக எழுதினார். அதே மாதிரி மீண்டும் வலைக்கு பழைய புத்துணர்வோடு வரவேண்டும் வாத்தியாரே!
இன்றைக்கு வாத்தியாருக்குப் பிறந்த நாள். போன வருடத்துக்கு முந்தைய வருடம் எங்கள் வீட்டில் கேக் வெட்டி கொண்டாடியது ஞாபகம் வருகிறது. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாத்தியாரே!!!
This entry was posted by school paiyan, and is filed under
பதிவர்கள்,
பாலகணேஷ்,
மின்னல் வரிகள்
.You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
எங்கள் அன்பு வாத்தியாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
ReplyDeleteஅன்பு வாத்தியாருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...
ReplyDeleteவலைப்பக்கம் நீங்கள் வந்தமைக்கும் பாராட்டுகள்...
ReplyDeleteஹா ஹா... நான் என்றைக்குமே விட்டுப் போக மாட்டேன்...
Deleteஅன்புத் தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! என்னை மறந்தாலும் நான் மறக்க மாட்டேமால்!
ReplyDeleteவலையுலக வாத்தியார், ’மின்னல் வரிகள்’ பால கணேஷ் அவர்களுக்கு, உங்கள் பதிவின் வழியே, பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அவர் மீண்டும் வலைப்பக்கம் வர வேண்டும்.
ReplyDeleteஅவர் (போன் பேசுவது போல) கவர்ச்சியான போஸ் கொடுக்கிறார் என்பதாலோ என்னவோ , வயது தெரிந்து விடக் கூடாது என்று, அவருக்கு எத்தனையாவது பிறந்தநாள் இது என்பதை நீங்கள் சொல்லவில்லை போலிருக்கிறது.
பதிவுக்கு நன்றி.
த.ம.3
வயதை மறைக்க நானென்ன கவர்ச்சி நடிகையா இளங்கோ சார? இதே நாளில் 1966ல் பிறந்தேன் என்றால் நீங்களே கணக்கிட்டுக் கொள்ளலாமே என் வயதை.
Deleteநிஜம்தான். மனமிருந்தால் மார்க்கபந்து... ச்சே. மார்க்கமுண்டு. இனி வரும் ஞாயிறுகளில் இரண்டு மணி நேரத்தை ஒதுக்கி மூன்று பதிவுகள தயாரித்து வைத்து விட்டால் அங்கும் தொடரலாம். நிச்சயம் செய்கிறேன் உனக்காகவே.
ReplyDeleteஇ.பி.வா கணேஷ்!
ReplyDeleteகவர்ச்சிப்படம் ஸூப்பர்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், கணேஷ். உங்க சிஷ்யப் பிள்ளைகள் உங்கள் பிறந்தநாளை பிரமாதமாகக் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கும் பாராட்டுக்கள்! இந்த மாதிரி வாத்தியார் அமையவும், இந்த மாதிரி சிஷ்யப் பிள்ளைகள் அமையவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். பாராட்டுக்கள்!
ReplyDeleteஎனது வாழ்த்துக்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் நண்பரே
ReplyDeleteஇனிமையான பண்பாளர் வாத்தியார்..
ReplyDeleteஎனக்கும் அவர் எழுதாத வருத்தம் இருக்கு
விரைவில் வருவார் என்று நினைக்கேன்..
தம +
ReplyDeleteதிரு பால கணேஷ் சார் மீண்டும் வலையில் எழுதிட +
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துகள்!
வாங்கய்யா வலையுலக வாத்தியார் அய்யா!
ReplyDeleteவரவேற்று மகிழ வந்தேன் அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
த ம +1