கலர் பென்சில் - 25.10.2013
Friday, October 25, 2013
Posted by கார்த்திக் சரவணன்
அனைவருக்கும் வணக்கம்.
அவியலா, மிக்சரா கொத்துபுரோட்டாவா என்று பதிவிட்டதில் ஒரு பரிசுப்போட்டி அறிவிக்கும் அளவுக்கு நல்ல ரெஸ்பான்ஸ், கடைசியில் கலர் பென்சில் என்று பெயர் வைத்தாயிற்று. பலரும் பல பெயர்கள் பரிந்துரைத்திருக்க எனக்கு இரண்டு பெயர்கள் மனதில் இதுவா அதுவா என ஊசலாடிக்கொண்டிருந்தன. ஒன்று அதிகம் பேரால் பரிந்துரைக்கப்பட்ட "ஹோம்வொர்க்ஸ்", மற்றொன்று Madhu Sridharan அவர்கள் பரிந்துரைத்த "ஸ்பெஷல் கிளாஸ்". இருந்தாலும் "கலர் பென்சில்" என்ற பெயர் நேற்று இரவு தான் முடிவு செய்தேன். சிம்பிளாக இருக்கிறது. என்னை மதித்து பின்னூட்டத்தில் பெயர்களைத் தேர்ந்தெடுத்து பரிந்துரைத்த அனைவருக்கும் நன்றி.
மயிலை பிரியாணி
Thursday, October 24, 2013
Posted by கார்த்திக் சரவணன்
சென்னையில் பல இடங்களில் ஒரு அண்டா நிறைய பிரியாணி வைத்து கையிலிருக்கும் சிறு தட்டு கொண்டு டங் டங் என்று தட்டிக்கொண்டே வியாபாரம் செய்யும் பல கடைகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அவற்றிலேயே தரமான, சுவையான பிரியாணி தருவதில் எனக்குத் தெரிந்து முதலிடம் "மயிலை பிரியாணி" மட்டுமே.
எதிர்பாராத இனிய சந்திப்பு
Wednesday, October 16, 2013
Posted by கார்த்திக் சரவணன்
எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வழக்கமான ஞாயிறாகவே அந்த நாள் விடிந்தது. ஜிமெயிலையும் முகநூலையும் மேய்ந்துகொண்டிருந்த எனக்கு ஒரு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. Truecaller அது கேரளத்து எண் என அடையாளம் காட்டிற்று. எடுத்து "ஹலோ" என்றேன், எதிர்முனையில் உடைந்த தமிழில் ஒருவர் பேச பின்னணியில் பல வாகனங்களின் அலறல்கள் கேட்டன. அதனிடைய அவருடைய பேச்சை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை, அவர் தவறான எண்ணுக்குப் பேசுகிறார் என்று மட்டுமே புரிந்துகொண்டேன். "ராங் நம்பர்" என்று சொல்ல எத்தனித்தபோது "மனோஜ் சொல்லியிருக்கு இல்லையா" என்றதும் எனக்கு மண்டையில் உறைத்தது. அடடா, இவர் நாஞ்சில் மனோவின் நண்பராச்சே என்று.
அவியலா, மிக்சரா, கொத்து புரோட்டாவா? என்னது இது?
Monday, October 14, 2013
Posted by கார்த்திக் சரவணன்
அனைவருக்கும் வணக்கம்,
மேலே காணும் படத்தை அழகாக டிசைன் செய்து தந்த திரு.பாலகணேஷ் அவர்களுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தனிப்பட்ட முறையில் நன்றி சொல்லியிருந்தாலும் பொதுவில் சொன்னால் அதற்கு மதிப்பு இன்னும் அதிகம். நிறைய படங்களைப் பார்த்து தேர்ந்தெடுத்து பொறுமையாக வெட்டி ஒட்டி எனக்காக முக்கால் மணி நேரம் செலவு செய்திருக்கிறார். இடையில் ஆலோசனை என்ற பெயரில் என்னுடைய இம்சைகளையும் தாங்கி படத்துக்கு இறுதி வடிவம் கொடுத்திருக்கிறார். மீண்டும் நன்றி.
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
Friday, October 04, 2013
Posted by கார்த்திக் சரவணன்
வேலை வெட்டி இல்லாமல் குடித்துவிட்டு சும்மா ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கு தன் எதிர்வீட்டு நந்திதா மீது ஒருதலைக் காதல். அதிகாலை எழுந்து பல் கூட விளக்காமல் வாசலில் கோலம் போட வரும் நந்திதாவை ரசிப்பதற்காக காத்திருக்கிறார். தினம் தினம் இம்சை செய்கிறார். இதைப் பொறுக்க முடியாத இவர் தன் தந்தையின் மூலம் சுகர் பேஷன்ட் அண்ணாச்சி பசுபதியிடம் பஞ்சாயத்து செய்கிறார். இது ஒரு கதை.
Subscribe to:
Posts (Atom)