அவியலா, மிக்சரா, கொத்து புரோட்டாவா? என்னது இது?
Monday, October 14, 2013
Posted by கார்த்திக் சரவணன்
அனைவருக்கும் வணக்கம்,
மேலே காணும் படத்தை அழகாக டிசைன் செய்து தந்த திரு.பாலகணேஷ் அவர்களுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தனிப்பட்ட முறையில் நன்றி சொல்லியிருந்தாலும் பொதுவில் சொன்னால் அதற்கு மதிப்பு இன்னும் அதிகம். நிறைய படங்களைப் பார்த்து தேர்ந்தெடுத்து பொறுமையாக வெட்டி ஒட்டி எனக்காக முக்கால் மணி நேரம் செலவு செய்திருக்கிறார். இடையில் ஆலோசனை என்ற பெயரில் என்னுடைய இம்சைகளையும் தாங்கி படத்துக்கு இறுதி வடிவம் கொடுத்திருக்கிறார். மீண்டும் நன்றி.
நான் பொதுவாக எந்த நிறுவனத்தில் வேலை செய்கிறேன் என்பதை பிளாக்கர் நண்பர்கள் யாரிடமும் சொல்வதில்லை. கேட்டாலும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன் என்றுதான் சொல்வேன். இருந்தாலும் பல இடங்களில் மறைக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடுகிறது. முக்கியமாக சீருடை காட்டிக் கொடுத்துவிடுகிறது. இதில் என்ன பிரச்சனை என்கிறீர்களா? நான் வேலை செய்யும் நிறுவனத்துக்கு நான் பிளாக் எழுதுவதோ (என்னத்த எழுதிக் கிழிச்சே!) முகநூல் அரட்டையில் இருப்பதோ தெரியாது. தெரிந்தாலும் குற்றமில்லை, ஏதாவது சிறு பிரச்சனை வந்தால் கூட "ஆமா சார், இவன் எப்ப பாத்தாலும் பேஸ்புக்கில பிசியா இருக்கான், ப்ளாக் படிக்கிறான்" என்று "போட்டுக்கொடுக்கும்" கூட்டம் உண்டு. எனது சொந்தப் பெயரிலும் எனக்கு முகநூல் ஐடி இருக்கிறது, ஆனால் அங்கே அனைவரும் அலுவலக நண்பர்களே இருக்கிறார்கள், பெருந்தலைகள் உட்பட. அதனால் அலுவலக ஒழுக்கத்துடனே அந்த நட்பு வட்டம் இயங்கி வருகிறது. ஆகவே ஸ்கூல் பையன் என்னும் முகமூடி அணிந்துகொண்டே நான் பதிவுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறேன். தெரிந்தவர்கள் பொதுவில் சொல்லாதீர்கள் நண்பர்களே.
கடந்த வாரம் பதிவர் ஜோதிடர் சித்தூர் முருகேசன் ஒரு தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்தார். ஒரு அரைமணி நேரம் எனக்காக ஒதுக்க முடியுமா என்று கேட்டிருந்தேன். அவரை சந்திக்க இன்னொரு நண்பருடன் செல்லலாம் என்று நினைத்திருந்தேன். இந்த நண்பர் திரைத்துறையில் உதவி இயக்குனராகப் பணியாற்றி வருகிறார், ஜோதிடத்தில் கரை கண்டவர், பல புத்தகங்களைக் கரைத்துக் குடித்தவர், பல பிரபலங்களுக்கு ஜாதகம் பார்த்தவர். ஒரே ஒரு பிரச்சனை, இரவு பகல் பாராது எப்போதும் "மகா தியானத்தில்" இருப்பவர். அண்ணன் முருகேசன் அழைத்தபோது நண்பருக்கு தொலைபேசினேன். கோவிலில் இருப்பதாகத் தெரிவித்தார், வார்த்தைக் குழறல்கள் இல்லை, பின்னணியில் கோரஸாய் பக்திப் பாடல் பாடும் சப்தம் வேறு. சரி இன்று இவர் சுத்தபத்தமாகத்தான் இருக்கிறார், இவரையும் அவரையும் பேசவிட்டு வேடிக்கை பார்க்கலாம் என்று அவரை தி.நகர் பேருந்து நிலையம் அருகே வரச்சொல்லிவிட்டுக் காத்திருந்தேன். வந்தார், ஆஹா, செம வாடை. காலை முதல் குடித்துக் கொண்டிருக்கிறாராம். தெரியாமல் கூப்பிட்டு விட்டோமே என்று என்னை நானே நொந்துகொண்டு பைக்கில் ஏற்றிக்கொண்டு சென்றேன். சித்தூர் முருகேசனிடம் பேசும்போது ஜோதிடம் சம்பந்தப்பட்ட சிலவற்றுக்கு தர்க்க ரீதியாக வாதிக்கத் தொடங்கினார். அய்யோடா, இந்த ஆளைக் கூப்பிட்டிருக்கவே கூடாது என்று நினைக்கையில் அவருக்கு இன்னொரு நண்பரிடமிருந்து அழைப்பு. பக்கத்தில் இருக்கும் ஒயின் ஷாப்பில் அவரது நண்பர் வருவதாகக் கூற, அவர் என்னையும் அழைத்தார். யோவ், உம்மை எப்ப வேணும்னாலும் பாத்துக்கலாம், இவரை இப்போ பாத்தாதான் உண்டு, சீக்கிரம் கிளம்புங்க, நண்பர் வெயிட் பண்றாரு என்று அடிக்காத குறையாக அவரை விரட்டினேன். அதன்பிறகு சித்தூர் முருகேசனுடனான சந்திப்பு இனிமையாக இருந்தது.
பதிவர் சந்திப்பில் சித்தூர் முருகேசனுடன் |
நேற்று மாலை புனித தோமையார் மலைக்கு பாலகணேஷ், கோவை ஆவி, திடங்கொண்டு போராடு சீனு மற்றும் ஆவியின் உறவினர் ஒருவருடன் சென்றிருந்தேன், அங்கே ஜெப வீட்டின் முன் நெற்றி நிறைய சந்தானம், குங்குமம் விபூதியுடன் என் போஸ். முரண்பாடாக இல்லை?
கோவை ஆவி சென்னை வந்திருப்பதால் கடந்த ஒரு வாரமாக அலுவலகத்திலும் வீட்டிலும் சிறு சிறு இடைவேளைகள். சிலபல வேலைகள் பெண்டிங் ஆகியிருப்பதால் அதை இந்த வாரத்தில் சமன் செய்யவேண்டும். அச்சச்சோ, நான் ஆவியைக் குறை சொல்லலை.
ஐஞ்சுவை அவியல், மொறுமொறு மிக்சர், கொத்து புரோட்டா, ஜஸ்ட் ரிலாக்ஸ், கரம், அஞ்சறைப் பெட்டி, ஒயின்ஷாப் என்று நம் நண்பர்கள் கலந்துகட்டி அடிக்கிறார்கள். நானும் அவ்வப்போது எழுதலாம் என்று நினைக்கிறேன், ஆனால் என்ன பெயர் வைப்பது என்று தெரியவில்லை. கோவை ஆவி "ஸ்டேஷனரி" என்று வைக்கலாம் என்கிறார், பாலகணேஷ் "பலப்பம்" என்று வைக்கலாம் என்கிறார். என்ன பெயர் வைக்கலாம் என்று குழப்பமாக இருக்கிறது. ஸ்கூல் பையன் என்ற பெயருக்கு ஏற்றாற்போல் நல்ல பெயர் பரிந்துரையுங்களேன்.
This entry was posted by school paiyan, and is filed under
அவியல்,
கொத்து புரோட்டா,
பதிவர்கள்,
மிக்சர்
.You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
வடிவமைப்பு அசத்தலா இருக்கே....!
ReplyDeleteவாத்தியாருக்கு நன்றி...
Deleteஜாமென்ட்ரி பாக்ஸ் என்று வைக்கலாம் ...ஆனால் அதில் சமந்தா பாக்ஸ் சம்பந்தமாக கில்மாவா எழுத முடியாது !
ReplyDeleteஹிஹி... நாம எப்பவுமே அந்த மாதிரி எழுதறதில்லையே...
Deleteநாமன்னு என்னையும் சேர்த்துக்காதீங்க ,பாஸ் !
Deleteமாத்திக்கிறேன் பகவான்ஜி... நானு....
Deleteலைப்ரரி ?
ReplyDeleteTyped with Panini Keypad
நல்லாத்தான் இருக்கு கவியாழி ஐயா...
Deleteநான் பொதுவாக எந்த நிறுவனத்தில் வேலை செய்கிறேன் என்பதை பிளாக்கர் நண்பர்கள் யாரிடமும் சொல்வதில்லை.//
ReplyDeleteநான் மட்டும்தான் எல்லாத்தையும் சொல்லிகிட்டு இருக்கேனா ?
ஹிஹி... அன்னிக்கு வந்த உங்க பிரெண்ட் கிட்ட கூட சொல்லலை...
Deleteவணக்கம்
ReplyDeleteநல்ல யோசனை சந்திப்பும் அருமை பதிவும் அருமை வாழ்த்துக்கள்.....
நல்ல ஜோதிடரைப் பார்த்து பெயர்வைத்தால் நன்று அப்பத்தான் கருத்துக்கள்.குவியும்.......
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரூபன்...
Delete"அதிரசம்" னு வைங்களேன்!(நான் ஒரு ப்ளாக் ஆரம்பிக்கலாம் னு பேர் {அதிரசம்}சூட்டலோட முடிஞ்சுது,ஹி!ஹி!!ஹீ!!!)
ReplyDeleteம்.... அதிரசம்னா தித்திப்பாத்தான் இருக்கும்...
DeleteCRAYON box - suggestion frm bala
ReplyDeleteGanesh sir
ஆமா... கலர் கலரா பென்சில் இருக்குமே.... ஆமா, கலர் பென்சில்னு கூட வைக்கலாமே....
Deleteநொறுக்கு தீனி ன்னு வைங்க... ஸ்கூல் பசங்களுக்கு ரொம்ப பிடிக்குமே
ReplyDelete
Deleteஸ்கூல் பையனுக்கு ஏற்ற தலைப்பு குட்
நொறுக்குத்தீனி நல்லாத்தான் இருக்கு.... திங்கரதிலேயே இருக்கியேன்னு கிண்டல் பண்ணுவாங்களோ? மனசில வச்சிக்கறேன்...
Deleteஸ்கூல் பையன் என்ற பெயருக்கு ஏற்றாற்போல் நல்ல பெயர் பரிந்துரையுங்களேன்.
ReplyDeleteஹோம் வொர்க்ஸ்....!
சூப்பர் அம்மா.... நான் கூட வீட்டுப்பாடம்னு நினைச்சு நல்லா இல்லையேன்னு யோசிச்சிட்டிருந்தேன்.....
Deleteஅங்கே ஜெப வீட்டின் முன் நெற்றி நிறைய சந்தானம், குங்குமம் விபூதியுடன் என் போஸ். முரண்பாடாக இல்லை?
ReplyDelete>>
இதிலென்ன இருக்கு!? எல்லோரும் சேரும் இடம் இறைவனின் பாதம் ஒன்றே! போகும் பாதை மட்டும் வேறு வேறு!!
உலகின் அனைத்து மதங்களும் அன்பையே போதிக்கின்றன என்று எடுத்துரைத்த அக்காவுக்கு மிக்க நன்றி.....
Deleteதள வடிவமைப்பு மிகவும் அருமை... வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteபஞ்சாமிர்தம்...?!!!
இராஜராஜேஸ்வரி அம்மா கூறிய "ஹோம் வொர்க்ஸ்....!" தான் முதலில் ஞாபகம் வந்தது... கருத்துரை இட்டு பார்த்தால்... எனக்கும் முன் இரண்டு கருத்துரைகள்... அதே "ஹோம் வொர்க்ஸ்....!" வியப்பாக இருந்தது...
Deleteபஞ்சாமிர்தம் கூட நல்ல டைட்டில் தான்.... வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி DD அண்ணே...
Deleteகூட்டுன்னு பேர் வைக்கலாமே! கூட்டாஞ்சோறு,
ReplyDeleteநீங்க அவியல்னு வசிருக்கீங்கன்னா அதுக்கு நான் கூட்டுன்னு வைக்கணுமா.... இருந்தாலும் நல்லாருக்கு....
Delete'Rough Note' .....
ReplyDeleteசூப்பர்....
Deleteகொசின் பேப்பர்...ஹஹ
ReplyDeleteஹிஹி.... அடுத்து உங்களை நேர்ல பாக்கும்போது வச்சிக்கறேன்....
Deleteஅட.....நம்மள மாதிரி முகமூடி பதிவர்ர்ர்ரர்ர்ர்ர்....
ReplyDeleteநீங்களுமா...
Deleteகதம்பம் ன்னு வைக்கலாம் ...
ReplyDeleteபட் ஸ்பை க்கு ஏற்றது ண்ணா ....
கலர் டப்பி ( இன்ஸ்பிரேசன் பிரம் உள்டப்பி OR ஸ்கெட்ச் பாக்ஸ் / ன்னு வைக்கலாம் ....
எம்மோட செலக்சன வச்சா ராயல்டி தரோணும் ....!
கதம்பம்னு வேற யாரோ வச்சிருக்காங்க... கலர் டப்பி ஸ்கெட்ச் பாக்ஸ் நல்லாருக்கு.... ராயல்டி வேணும்னா கோவைக்கு வரும்போது தர்றேன்...
Deleteஉங்க பேருக்கேத்த மாதிரி ஜியாமெண்ட்ரி பாக்ஸ்
ReplyDeleteஇது நல்லாருக்கு....
Deleteலஞ்ச் பாக்ஸ்
ReplyDeleteஇதுவும் நல்லாருக்கு...
Deleteஎல்லோரும் சொல்லிவிட்டார்கள். :))
ReplyDeleteபரவாயில்லை மேடம்...
Deleteஅன்பின் ஸ்கூல் பையன் - எண்ணச் சிதறல்கள் - வண்ணக் கலவைகள் - மெயில் பாக்ஸ் - கூட்டுக் குடும்பம் - போதுமா ? நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஆஹா... நன்றி ஐயா...
Deleteவளர்ந்த ஸ்கூல் பையனாக கற்பனை பண்ணி நான் சொல்லும் பெயர் " பிட் "-பிரிக்க முடியாதது எதுவோ என்றால் அது மாணவனும் பிட்டும் தான் .
ReplyDeleteஉலகின் பல நாடுகளிலும் மாணவர்கள் பிட் அடிக்கும் வழக்கம் உண்டு என்ற விஷயத்தை அவர்களுடன் மொழி பெயர்ப்பு செய்யும்போது கேட்டு அறிந்தேன்.
மேலும் இது ஒரு காரணப் பெயர் . குறள் மாதிரி சைஸு.ஆனால் பரீக்ஷைக்கு தேவையான அநேக விஷயங்களை உள்ளடக்கியது. . அது சரி . நல்ல தலைப்பு சொன்னவர்களுக்கு பரிசு உண்டா?
சூப்பர் மேடம்... பிட் பற்றிய குறிப்பு ஒத்துப் போகிறது...
Deleteபரிசு பற்றி எதுவுமே சொல்லலியே ........?
Deleteபின்னுட்டமே அதிரடியாக இருக்கு .
ஹா ஹா ஹா... நம்ம தளத்தில பின்னூட்டம் எல்லாமே அதிரடியாத்தான் இருக்கும்.... இவ்வளவு ரெஸ்பான்ஸ் இருக்கும்னு தெரிஞ்சிருந்தா பரிசுப்போட்டியா அறிவிசிருக்கலாம்....
Delete
ReplyDeleteஸ்கூல் பையனுக்கு நல்ல வாத்தியார் கிடைச்சு இருக்கிறார் அதனால் ஸ்கூல் பையன் இப்ப நல்லா ஜொலிக்கிறான். வாத்தியாருக்கும் ஸ்டுடெண்டுக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
நன்றி மதுரைத்தமிழன்...
Delete
ReplyDeleteவடிவமைப்பு அருமை. வாழ்த்துக்கள். வாத்யாருக்கும்.....
என்ன வெங்கட்... நீங்களும் வாத்தியார்ங்கறீங்க...!
Deleteஹா ஹா.,....
Deleteரப்நோட் நல்லா இருக்கு.. இன்னும் கொஞ்சம் யோசிச்சிப் பாக்குறேன்...
ReplyDeleteபை தி வே ஜஸ்ட் ரிலாக்ஸ் பற்றி கூறியதற்கு நன்றி என்ற வார்த்தையை வீணாக்க விரும்பவில்லை (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)
அதான் சொல்லிட்டியே!! ஹஹஹா..
Deleteநிதானமா யோசிச்சு அடுத்த வருஷம் சொன்னா போதும்....
Delete‘போட்டுக் குடுக்கற கும்பல்’ உங்க ஆபீஸ்லயும் இருக்க்கா...? நிறைய அதுமாதிரி ஜீவன்களை சந்ந்திச்சு நொந்து போய் இப்பத்தான் நிம்மதியா இருக்கேன் ஸ்.பை.! அதனால உங்களை நாங்க யாரும் மாட்டிவுட மாட்ட்டோம். ரைட்ட்டா? அப்புறம்... நிறைய சஜஷன்ஸ் வந்து குவிஞ்சிருக்கு இங்க தலைப்புக்கு. எதை செலக்ட் பண்ணப் போறீங்கன்னு பாக்க ஆவலோட வெயிட்டிங்!
ReplyDeleteநன்றி வாத்தியாரே...
Delete//ஜீவன்களை //
Deleteமீ யா ........!
என்னாது ஸ்பை ... வேலை பார்க்குரார்ர்ர்ர்ர்ர்ரா ..............?
ஒருநாளைக்கு எட்டு மணி நேரம் மூஞ்சி புக்குலயும் சொச்ச நேரத்துக்கு பிலாக்குளையும் தானே இருக்குறாரு ....!
//என்னாது ஸ்பை ... வேலை பார்க்குரார்ர்ர்ர்ர்ர்ரா ..............?
Deleteஒருநாளைக்கு எட்டு மணி நேரம் மூஞ்சி புக்குலயும் சொச்ச நேரத்துக்கு பிலாக்குளையும் தானே இருக்குறாரு ....!//
யோவ் ஜீவன் சுப்பு... மீதி பதினாறு மணி நேரம் இருக்கே.... அந்த நேரத்தில எவ்வளவு வேலை பாக்கலாம்....
ரப் நோட்டு ...ஜாமென்ட்ரி பாக்ஸ் ....ரெண்டும் பொருத்தமா இருக்கு..ஆனா தமிழ்ல வைச்சா நல்லாருக்குமே....இப்படித்தான் குழப்பி விடுவோம் ...யோசிங்க....வீதிப்பாடம் னு வைக்கலாமோ? கீச்சு மச்சுத் தம்பலம்,கள்ளன் காவல் ,பருப்பு கடிதல்,பல்லாங்குழி, இப்படி எதுனாச்சும் விளையாட்டுப் பெயரும் வைக்கலாமே..நன்னா குழம்புங்க.....
ReplyDeleteகுழப்பி விடுறதில தீவிரவாதி கில்லாடி தான்....
Delete@சத்தீதீதீதீதீதீதீதீதீதீதீஷுஷுஷுஷு........................!
Delete//
மிடில .... தீயா யோசிக்குறீங்களே....!
BTW இந்த , கீச்சு மச்சுத் தம்பலம் , பருப்பு கடிதல் இது ரெண்டுக்கும் விம் போடவும் ....!
//கீச்சு மச்சுத் தம்பலம் , பருப்பு கடிதல் // சின்னக் குழந்தைகள் விளையாடும் விளையாட்டு, அது பருப்பு கடிதல் இல்ல பருப்பு கடைதல்
Deleteகடைந்ததற்கு நன்றி தி.கொ.போ.சீ....!
Deleteகிச்சு கிச்சு தாம்பலம் இல்லியா .....?
ம்ம்ம்ம்.... அடிச்சு ஆடுங்க...
Deleteஒன் மோர் தலைப்பு தோணிங் - பிளாக் போர்டு அல்லது கரும்பலகை.. (எல்லா விஷயங்களையும் எழுதும் இடம் இங்கேதான்.. எப்புடி)
ReplyDeleteஇதுவும் நல்லாத்தான் இருக்கு.... பாக்கறேன்....
DeleteTitle: ஸ்பெஷல் க்ளாஸ்...
ReplyDeleteexcellent...
DeleteMadhu Sridharan சார்... அனேகமா உங்க தைட்டிலைத்தான் வைப்பேன்னு நினைக்கிறேன்.... இது என் தளத்துக்கு தங்களது முதல் வருகைன்னு நினைக்கிறேன்....
Deleteபாலகணேஷ் சாரின் வலை வடிவமைப்பு ரொம்ப நல்லாருக்கு! போட்டு கொடுக்கிற ஆட்கள் எல்லா இடத்திலயும் இருப்பாங்க. எல்லாத்துக்கும் வாய்தான் காரணம்.. நாமும் எந்த எந்த இடத்தில் எந்த அளவுக்கு உளறனுமோ அந்தளவுக்குதான் உளறனும்... ! பத்திரிக்கைகளில் நிறைய எழுதி இருந்தாலும் நான் பணிபுரியும் அலுவலகத்தில் அதை பற்றி யாருக்கும் தெரியாது. அலுவலகம், நட்பு, உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் இப்படி தனி தனி சர்க்கிளா அவங்க கிட்ட ஒரு லிமிட்டை வச்சு பழகினா நமக்கு நாம boss !
ReplyDeleteஅப்புறம் ரப் நோட்டு தலைப்பு நல்லாருக்கு...ஏன்னா ரப் நோட்டிலதான் எது வேணா கிறுக்கலாம்... பிடிக்கலைன்னா கிழிச்சும் போட்டுடலாம்..
//நாமும் எந்த எந்த இடத்தில் எந்த அளவுக்கு உளறனுமோ அந்தளவுக்குதான் உளறனும்... !// :_)
Deleteஉளறல் தத்துவம் சொன்ன உஷா ஜி க்கு நன்றிகள் ...!
உஷா மேடம் பின்னூட்டம் சூப்பர், நான்தான் கொஞ்சம் உளருவாய்னு நினைக்கிறேன்.... உங்க தலைப்பு கூட நல்லாருக்கு....
DeleteCrayon Box is not a good name somebody may pronounce it as KARAYAN BOX.
ReplyDelete// KARAYAN BOX. //
Deleteஹா ஹா ஹா ஹா ....!
ஹா ஹா ஹா ஹா ....!
Deleteமோகன் சார்... நீங்க முதல் தடவை வந்திருக்கீங்க.... வாங்க வாங்க.... நீங்க சொன்ன மாதிரி கரையான் பாக்ஸ்-னு கிண்டல் பண்ணும் வாய்ப்பும் இருக்கு... நன்றி சார்...
Deleteஸ்கூல் பியரே...! ( நான் பையர் ன்னு தான் அடிச்சேன் ) .
ReplyDelete"ஸ்கூல் பேக்"குன்னு வைங்களே ....!
( @ ஆவி , தி.கொ.போ.சி - குண்டக்க மண்டக்க யோசிக்கப்புடாது. நா ஸ்கூல் பையன் பேக்குன்னு சொல்லல , ஸ்கூல பையன்னோட பேக்குன்னு அர்த்தத்துல கொல்லோணும்....! )
அட ஆமா... பையர்னு அடிச்சா பியர்னு தான் வருது... நீங்களும் கூகிள் இன்புட் டூல்ஸ் தான் பயன்படுத்துறீங்களா... ம்ம்ம்ம்... ஓட்டுங்க, ஓட்டுங்க...
Deleteஸ்கூல் பையன் ஃபேன்சி ஸ்டோர்
ReplyDeleteநல்லாருக்கு கோகுல்... ஆனா ரொம்ப பெரிசா இருக்கிற மாதிரி இருக்கே....
Deleteபரிசு பற்றி எதுவுமே சொல்லலியே ........?
ReplyDeleteபின்னுட்டமே அதிரடியாக இருக்கு .
ம்ம்ம்... ஒரு பரிசுப்போட்டியே வச்சிருக்கலாம்.... பரவாயில்லை... அடுத்து அதுவும் இருக்கு....
DeleteTopic lam enaku vaikatheriyathu sir.... unga son photo design super.
ReplyDeleteடிசைன் செய்தது வாத்தியார் பாலகணேஷ் சார்... அவரது தளமுகவரி http://minnalvarigal.blogspot.com/ சென்று பார்க்கவும்.... பல நகைச்சுவை விஷயங்கள் இருக்கின்றன....
Delete”ஸ்கூல் பேக்”னு வெச்சுக்கோங்க....
ReplyDeleteநல்லாருக்கு.... முடிவு நாளை...
Delete