கலர் பென்சில் - 25.10.2013
Friday, October 25, 2013
Posted by கார்த்திக் சரவணன்
அனைவருக்கும் வணக்கம்.
அவியலா, மிக்சரா கொத்துபுரோட்டாவா என்று பதிவிட்டதில் ஒரு பரிசுப்போட்டி அறிவிக்கும் அளவுக்கு நல்ல ரெஸ்பான்ஸ், கடைசியில் கலர் பென்சில் என்று பெயர் வைத்தாயிற்று. பலரும் பல பெயர்கள் பரிந்துரைத்திருக்க எனக்கு இரண்டு பெயர்கள் மனதில் இதுவா அதுவா என ஊசலாடிக்கொண்டிருந்தன. ஒன்று அதிகம் பேரால் பரிந்துரைக்கப்பட்ட "ஹோம்வொர்க்ஸ்", மற்றொன்று Madhu Sridharan அவர்கள் பரிந்துரைத்த "ஸ்பெஷல் கிளாஸ்". இருந்தாலும் "கலர் பென்சில்" என்ற பெயர் நேற்று இரவு தான் முடிவு செய்தேன். சிம்பிளாக இருக்கிறது. என்னை மதித்து பின்னூட்டத்தில் பெயர்களைத் தேர்ந்தெடுத்து பரிந்துரைத்த அனைவருக்கும் நன்றி.
மேலே படத்தில் காணும் இடம் வேளச்சேரி ரயில் நிலைய பார்க்கிங். நாளொன்றுக்கு மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் வந்துசெல்கின்றன. தினமும் காலையிலும் மாலையிலும் பார்த்துப் பழக்கப்பட்ட இடம் என்றாலும் எந்நாளும் என்னால் மறக்க முடியாத இடம். காலை ரயிலைப் பிடிக்கும் அவசரத்தில் என் வண்டியை நிறுத்திவிட்டு நிறுத்திய இடத்தை மறந்துபோன சம்பவங்கள் உண்டு. அவ்வாறு மறந்த நாட்களில் மாலையில் வண்டியைத் தேடி சுற்றிய அனுபவமும் உண்டு. நான் மட்டுமல்ல, பலரும் இவ்வாறு தேடுவதை தினமும் பார்க்கலாம். ஹெல்மெட்டைப் பூட்டிவைக்க சோம்பல்பட்டு கண்ணாடியில் சொருகி வைத்திருக்க அதுவே பழகிப்போனது. ஒரு நல்ல நாளில் ஹெல்மெட் திருடுபோக அன்று முதல் அவசரத்தைக் கைவிட்டேன். ஹெல்மெட்டை நன்றாகப் பூட்டிவிட்டு வண்டி நிறுத்திய இடத்தை வரிசை எண் கொண்டு மனதில் வைத்துக்கொள்கிறேன். ரிமோட் அலாரம் ஒன்று வாங்கி மாட்டினால் சௌகர்யமாக இருக்கும்.
சமீபத்தில் நண்பர் ஒருவர் புதிய போஸ்ட்பெய்டு கனெக்சன் வாங்கவேண்டும் என்று சொல்ல,பிரபல மொபைல் நிறுவனத்தின் பிரதிநிதியை அலுவலகத்துக்கு வரவழைத்தோம். பிளான் பற்றிய விபரங்களைக் கேட்டுக்கொண்டு அவரிடம் ஒரு பேன்சி எண் வேண்டும் என்று நண்பர் கேட்க, அவர் தனது அலுவலகத்துக்குத் தொலைபேசிவிட்டு, "சார் அதுக்கு இருபதாயிரம் ரூபாய் ஆகும்" என்றார். அதிர்ந்து போனோம். லட்சக்கணக்கில் விலைபோகும் பேன்சி எண்களும் உண்டு என்றாரே பார்க்கலாம். அப்படியென்றால் தினந்தோறும் புதிதுபுதிதாக முளைக்கும் கால் டாக்சி முதல் அமேசான் காடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் விற்கும் நிறுவனங்கள் வரை எவ்வளவு கொடுத்திருப்பார்கள்?
பதிவர் என் ராஜபாட்டை ராஜா http://www.rajatricks.com/ என்ற பெயரில் ஆங்கிலத் தளம் ஒன்று தொடங்கியிருக்கிறார். ஆண்டிராய்டு அப்ளிகேஷன், மொபைல் டிரிக்ஸ் என்று எழுதுகிறார். கூகிள் ஆட்சென்ஸ் மூலம் பணம் வரும் என்பதால் அவருக்கு நம் ஆதரவைத் தெரிவிப்போம். ராஜா, நீங்களும் தினம் தினம் பதிவெழுதிக் கலக்கவேண்டும்.
நண்பர் ஒருவரின் தந்தை துணிகளை மொத்தமாகக் கொள்முதல் செய்து விற்பனை செய்யத் தொடங்கியிருக்கிறார். அவருக்கு சொந்தமாக கடையோ அலுவலகமோ கிடையாது. பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் முன்னரே அனுமதி பெற்று அங்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே விற்பனை செய்துவருகிறார். பெண்களுக்கான சுடிதார், நைட்டி மற்றும் புடவைகள் அதிகமான அளவில் வைத்திருக்கிறார், விலையும் குறைவாகவே இருக்கிறது. சென்னையில் எங்கிருந்தாலும் வீட்டுக்கே எடுத்து வருகிறார், கணிசமான அளவு விற்பனை இருப்பின் வெளியூர்களுக்கும் வந்து விற்பனை செய்யத் தயாராய் இருக்கிறார். கடந்த வாரம் ஒரு நாள் ராஜ கீழ்பாக்கத்தில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் என் நண்பர், தாய் தந்தை மற்றும் மனைவியுடன் சேர்ந்து வியாபாரம் செய்தது மனதுக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. என்னாலான சிறு உதவி - ஒரு சிறு விளம்பரம். மேலும் இந்த வருடத்துக்கான தீபாவளி துணிகளை அவரிடமே எடுக்கவிருக்கிறேன். விருப்பமிருப்பின் தொடர்பு கொள்க.
என் அம்மா - எனக்காகக் கஷ்டப்பட்டு ஒவ்வொன்றையும் செய்யும்போது - அம்மா, நீங்கள் அடுத்த ஜென்மத்தில் எனக்கு மகளாகப் பிறக்கவேண்டும் - நான் உங்களுக்குப் பணிவிடை செய்யவேண்டும் - உங்களது சேவைகளுக்கு ஈடு செய்யவேண்டும் - என்று தோன்றுகிறது. என் மகள் - ஒவ்வொரு சேட்டை செய்யும்போதும் - ஏய், இதை எடுக்காதே, அதை செய்யாதே - அடுத்த ஜென்மத்தில் நான் உனக்கு மகனாகப் பிறந்து உன் உயிரை வாங்க வேண்டும் என்றும் தோன்றுகிறது.
என்ன நண்பர்களே, கலர் பென்சில் எப்படி? எல்லாவற்றையும் பற்றி கருத்து சொல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை, உங்களுக்கு எதைப்பற்றி கருத்து சொல்ல விருப்பமோ அதை மட்டும் சொன்னாலும் போதும். கருத்து சொல்ல வேண்டும். அவ்வளவே.
நன்றி.
This entry was posted by school paiyan, and is filed under
கலர் பென்சில்
.You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை, என்ன காரணம் என்று தெரியவில்லை. நண்பர்கள் கவனியுங்களேன்....
ReplyDeleteஹலோ.. நீங்களே முதல் கமென்ட் போட்டா எப்படி?
ReplyDeleteகலர் பென்சில் - 25.10.2013/// nallave ezutha arampichu irukku... tamil manam nanun inaikka try pani irunthen problem ennanu enakkum theriyala sir...
ReplyDelete//அடுத்த ஜென்மத்தில் நான் உனக்கு மகனாகப் பிறந்து உன் உயிரை வாங்க வேண்டும் என்றும் தோன்றுகிறது.//
ReplyDeleteநீங்க பண்ணின சேட்டைகள் தான் உங்களுக்கு திரும்ப வருகிறது.. ஹஹ்ஹா..
த.ம. ன்னா DD பாஸுக்கு தெரியுமே? என்ன இன்னைக்கு இன்னும் காணோம்?
ReplyDeleteநல்லவேளை புள்ளி (த.ம.) வைத்தீர்கள்... நன்றி... ஹிஹி...
Deleteஹஹஹா..
Deleteசக பதிவர் அறிமுகத்தோடு கலர் பென்சில் நல்லா இருக்குங்க... வாழ்த்துக்கள்...
ReplyDeleteதமிழ்மணம் இணைத்து விட்டேன்... +1 நன்றி...
ReplyDeleteபாவம் உங்கம்மா
ReplyDeleteபோட்டாச்சு.. போட்டாச்சு..
ReplyDeleteஎன் அம்மா - எனக்காகக் கஷ்டப்பட்டு ஒவ்வொன்றையும் செய்யும்போது - அம்மா, நீங்கள் அடுத்த ஜென்மத்தில் எனக்கு மகளாகப் பிறக்கவேண்டும் - நான் உங்களுக்குப் பணிவிடை செய்யவேண்டும் - உங்களது சேவைகளுக்கு ஈடு செய்யவேண்டும் - என்று தோன்றுகிறது. என் மகள் - ஒவ்வொரு சேட்டை செய்யும்போதும் - ஏய், இதை எடுக்காதே, அதை செய்யாதே - அடுத்த ஜென்மத்தில் நான் உனக்கு மகனாகப் பிறந்து உன் உயிரை வாங்க வேண்டும் என்றும் தோன்றுகிறது.
ReplyDeleteரசிக்கவைத்த வானவில்லின் வண்ணம் ....!
கலர் பென்சில் கலக்குது , தொடரட்டும் .வாழ்த்துக்கள்
ReplyDeleteசக பதிவர் ராஜாவுககாக சிபாரிசு, நண்பரின் தந்தைக்கு உதவின்னு கலக்கறே ஸ்.பை.! பார்க்கிங் லாட்டிங் இந்த மாதிரி வாகனத்தை நிறுத்தின இடம் தெரியாம திருதிருன்னு முழிச்ச அனுபவம எனக்கும் உண்டு. இப்பல்லாம் அவங்க தர்ற டிக்கெட்டுக்குப் பின்னால எத்தனாவது வரிசைன்னு எழுதிக்குறதால குழம்பறதில்ல. குறும்பு செய்யாத மகள் இருந்துட்டா உனக்கே போரடிச்சுடும்/பிடிக்காது. அதனால அதை ரசிககணுமாக்கும்...! கலர்பென்சில்&ங்கற இந்தத் தலைப்பு ரொம்பவே நல்லாருக்கு. நிறைய கலர் பென்சிலை யூஸ் பண்ணி, வண்ண வண்ணமா படைப்புகளைத் தந்து அசத்த வாழ்த்துக்கள்!
ReplyDeleteகலர் கலராய் உள்ளது வாழத்துக்கள்
ReplyDeleteஇது கலர் பென்சிலா? அவ்வவ்வ்வ்வ் எனக்கு மிக்சர் நியாபகம் தான் வருது. ஒண்ணொண்ணா படிச்சுட்டு அப்புறம், பிடிச்சதா, கடலை, ஓமப்பொடி, காரா பூந்தி னு தேவப்படுரத பொறுக்கிக்கலாம். வரிசை எப்படி இருந்தாலும் கடைசியில மிக்சர் காலியாகிடும். அப்படி தான் இருக்கு இது
ReplyDeleteகலர் பென்சில் பேர் நல்லா இருக்கு.. ஒவ்வொரு பென்சிலுக்கும் ஒவ்வொரு கலர் குடுங்க (அதான் தலைப்பு குடுத்தா நல்லா இருக்குமே)
ReplyDeleteஅது என்ன தீபாவளி துணிக்கு பொண்ணுங்க போட்டோ.. அப்போ நாங்க துணிமணி எடுக்க வேணாமா....?
அவ்வளவு பாதுகாப்பான எங்க ஆபீஸ்லையே ஹெல்மட்ட ஆட்டைய போட்டாய்ங்க... இங்க போட மாட்டாங்களா என்ன ?
என்றும் ;நிறம் மாறாத கலராக இருக்க வாழ்த்துகிறேன்!
ReplyDeleteஇது தானய்யா பதிவருக்கான அடையாளம்... ரெகுலராக எழுதுங்க கலக்குங்க...
ReplyDeleteபல விசயங்களை இதில் நீங்கள் தர விரும்புவதால் ஒவ்வொரு சப்ஜெக்டிற்கும் ஒவ்வொரு சின்ன தலைப்பு கொடுங்க.., அது ஒரு தெளிவான பிம்பத்தை கொடுக்கும்.
ReplyDeleteகலர் பென்சில் நல்லாருக்கு.. தெரிந்த ஒருவரை ஏற்றி விடுவது நல்ல உதவி... தீபாவளி பர்ச்சேஸ் கலக்குங்க... !
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteஇருவேறு மனங்களின் அலசல் கண்டு ரசித்தேன் சகோதரா .வாழ்த்துக்கள் .
ReplyDeleteஇன்று என் வலைத் தளத்தில் எல்லோருக்கும் விருந்து காத்திருக்கின்றது :)
http://rupika-rupika.blogspot.com/2013/10/700.html
கலர் பென்சிலில் உள்ள எல்லா விஷயங்களுமே வண்ணமயமாய் ஜொலித்தது. கலர் பென்சில் என்ற பெயர் கூட யாரோ சொல்லியிருந்தாங்கன்னு நினைக்கிறேன்...
ReplyDeleteஒவ்வொரு செய்திக்கும் ஒரு சின்ன தலைப்பு குடுத்து அதை போல்ட் பண்ணி எழுதினால் நல்லாயிருக்கும்... அல்லது வரிசை எண் கொடுங்க....:)
பலதரப்பட்ட நிறங்களுடன்
ReplyDeleteநிறத்தூரிகை கொண்டு அலங்கரிக்கப்பட்ட பதிவு.
அருமை..
நண்பர் ராஜபாட்டையின் தளம் பற்றிய அறிமுகமும் நன்று.
ReplyDeleteகலர் பென்சில் அருமை ..........செய்திகள் பகிர்ந்த விதமும் அருமை வாழ்த்துக்கள்
சிறப்பான தொடக்கம். கலர் பென்சில் தொடர்ந்து பல விதமான தகவல்களைத் தரட்டும். வாழ்த்துகள் சரவணன்.....
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteபதிவு அருமை வாழ்த்துக்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கலர் பென்சிலால் நல்ல வண்ண ம்யமாக்கியிருக்கிரீர்கள் உங்கள் பதிவை.
ReplyDeleteநீங்கள் உங்கள் அம்மாவையும் மகளையும் பற்றிக் குறிப்பிட்டது மனதை நெகிழ வைத்து விட்டது.
கலக்கலான கலர் பென்சில்...
ReplyDeleteசூப்பர் சிங்கர் நான் பார்க்கும் இணைப்பு இதுதான்... எனது பகிர்வில் கேட்டதற்கு அங்கயே போட்டிருக்கிறேன்... இருந்தும் இங்கும் உங்கள் பார்வைக்காக...
http://www.youtube.com/watch?v=TnkOEUMfwds&feature=c4-overview-vl&list=PLsSTkBgqx7ovRwlVocNa6SFEDaKsUow4H
கலர் பென்சிலின் எல்லா நிறங்களுமே அருமை...உங்களுக்கு தீபாவளிப் பரிசாக ஒரு க்ரேயான்ஸ் பேஸ்டல்ஸ் அனுப்பி வைக்கிறேன்...
ReplyDeleteகலர் பென்சிலின் வண்ணங்கள் அருமை! சீனு சொல்வது போல தலைப்பு கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDelete//புதிதுபுதிதாக முளைக்கும் கால் டாக்சி முதல் அமேசான் காடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் விற்கும் நிறுவனங்கள் வரை எவ்வளவு கொடுத்திருப்பார்கள்?//
ReplyDeleteசமீபத்தில் இது பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் படித்தேன் ;சரியாக நினைவில்லை;ஆனால் லட்சக்கணக்குதான்!
கலர்பென்சில் – நல்ல தேர்வு. வரைந்து தள்ளுவதும், வார்த்தைளால் விளையாடுவதும் உங்கள் விருப்பம்.
ReplyDeleteஎனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றி. . .
ReplyDeleteகலர் பென்சில் கலக்கல். . . இரண்டு செய்திகளுக்கு இடையே ======= இது போல் கோடு போடலாமே??
ReplyDeleteஅன்பின் ஸ்கூல் பையன் (சரவணன் ) - கலர் பென்சில் சும்மா ஜக ஜோதியா ஜொலிக்குது - நல்லதொரு சிந்தனை - தொடர்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete