எதிர்பாராத இனிய சந்திப்பு
Wednesday, October 16, 2013
Posted by கார்த்திக் சரவணன்
எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வழக்கமான ஞாயிறாகவே அந்த நாள் விடிந்தது. ஜிமெயிலையும் முகநூலையும் மேய்ந்துகொண்டிருந்த எனக்கு ஒரு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. Truecaller அது கேரளத்து எண் என அடையாளம் காட்டிற்று. எடுத்து "ஹலோ" என்றேன், எதிர்முனையில் உடைந்த தமிழில் ஒருவர் பேச பின்னணியில் பல வாகனங்களின் அலறல்கள் கேட்டன. அதனிடைய அவருடைய பேச்சை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை, அவர் தவறான எண்ணுக்குப் பேசுகிறார் என்று மட்டுமே புரிந்துகொண்டேன். "ராங் நம்பர்" என்று சொல்ல எத்தனித்தபோது "மனோஜ் சொல்லியிருக்கு இல்லையா" என்றதும் எனக்கு மண்டையில் உறைத்தது. அடடா, இவர் நாஞ்சில் மனோவின் நண்பராச்சே என்று.
ஒரு மாதத்துக்கு முன் மனோ அண்ணன் முகநூலில் கேட்டிருந்தார், மதுரையில் சிறந்த கண் மருத்துவமனை எது என்று. மதுரையைப் பொறுத்தவரை அரவிந்த் தான் மிகச்சிறந்த கண் மருத்துவமனை என்று பதிலளித்திருந்தேன். நண்பர் ஒருவர் பஹ்ரைனிலிருந்து வரவிருப்பதாகவும் தனது மகளுக்கு கண் சிகிச்சை இருப்பதாகவும் தெரிவித்து, அங்கே நல்ல மருத்துவரின் அப்பாயின்ட்மென்ட் வாங்கித்தர முடியுமா என்றும் கேட்டிருந்தார். நானும் அன்றே மதுரையில் இருக்கும் எனது நெருங்கிய நண்பர் ஒருவரிடம் சொல்லி அப்பாயின்ட்மென்ட் வாங்க முடியும் என்பதை உறுதி செய்திருந்தேன். ஓ, வந்துவிட்டார் போலும். மேலும் விசாரித்ததில் அவர் சென்னையில் இருப்பதாகவும், எழும்பூரில் ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருப்பதாகவும், சங்கர நேத்ராலயாவில் சிகிச்சைக்காக வந்திருப்பதாகவும் தெரிவித்தார். சென்னையைப் பொறுத்தவரை சங்கர நேத்ராலயா நல்ல மருத்துவமனை தான். மொழி தெரியாத ஊரில் யாரும் துணைக்கு இல்லாமல் வந்திருக்கிறார்கள், கூடமாட ஒத்தாசைக்கு இருப்போம் என்று கிளம்பினேன், அதற்குள் மனோஜ் அண்ணன் வேறு போன் செய்து வந்துட்டாங்களாமே, இப்பதான் பேசினாங்க என்றும் சொல்ல, எட்றா வண்டிய என்று கிளம்பிவிட்டேன்.
அவரது பெயர், முகம்மது ஷாபி. கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். பஹ்ரைனில் மனோ அண்ணன் வேலை செய்யும் ஹோட்டலில் ஆப்பரேஷன்ஸ் மேனேஜராக இருக்கிறார் (சரிதானே மனோ அண்ணே?). மனைவி, இரு மகள்கள் இங்கே சொந்த ஊரில் வசிக்கிறார்கள். குடும்பத்துடன் பஹ்ரைனில் இருந்தவர் மகள்களின் படிப்புக்காக அவர்களை இங்கேயே விட்டுவிட்டு தற்போது தனியாக இருக்கிறார்.
நான் வண்டியில் எழும்பூர் நோக்கிப் போய்க்கொண்டிருக்கும்போதே அவரிடமிருந்து போன் வந்தது, அவர்கள் சங்கர நேத்ராலயா செல்வதாகவும் என்னை நேரடியாக அங்கேயே வரவும் சொன்னார். அதேபோல் நுங்கம்பாக்கம் சங்கர நேத்ராலயா சென்று பார்க்கிங் தேடி என் வண்டியை நிறுத்தும்போதே மீண்டும் போன் ஒலிக்க, அவரே. "பார்க்கிங்ல இருக்கேன் சார்" என்றேன். "நான் உன்னைப் பார்த்துவிட்டேன்" என்றார். திரும்பினேன், ஒல்லியாக ஒருவர் என்னை நோக்கி கைகாட்டுவது போல் இருந்தது. "கை காட்டுறீங்களா?" என்றேன். "ஆமா" என்றார். அவரிடம் சென்று அறிமுகப்படுத்திக் கொண்டு நலம் விசாரித்தேன். அப்பாயின்ட்மென்ட் ஏற்கனவே வாங்கிவிட்டாராம். உள்ளே செல்வதற்காகக் காத்திருந்த தன் மகளையும் உடன் வந்திருந்த மனைவி, மற்றொரு மகளையும் அறிமுகப்படுத்திவைத்தார்.
இந்த மருத்துவமனையின் உள்ளே யாரும் செல்ல முடியாது. நோயாளி மற்றும் உடன் வந்தவர் ஒருவருக்கு மட்டுமே அனுமதி. இருவருக்கும் கையில் ஒரு பட்டை (TAG) சுற்றி ஒட்டிவிடுகிறார்கள். மற்றவர்கள் வெளியேதான் காத்திருக்கவேண்டும். நேரமாகிவிட்டதால் தந்தையும் மகளும் உள்ளே செல்ல, நானும் காவலாளியிடம் அனுமதி பெற்று உள்ளே சென்றேன். அப்போதுதான் Register செய்கிறார்கள் என்பதால் தேவையான படிவங்களைப் பூர்த்தி செய்து கொடுத்தேன். பணம் கட்டி ரசீது வாங்கியதும் எதிரில் இருந்த இருக்கைகளில் அமர்ந்தோம். அவரிடம் பேசியதில் ஒன்று மட்டும் புரிந்தது. நமக்கு இங்கேயும் ஆள் இருக்கிறார்கள் என்கிற தார்மீக ஆதரவு தேவைப்படுகிறது என்று. "சீக்கிரம் வந்திருங்க சார், யாராச்சும் பாத்தாங்கன்னா திட்டுவாங்க" என்ற காவலாளியின் வார்த்தைக்காக ஷாபியிடம் சொல்லிவிட்டு வெளியேறினேன்.
அலுவலகத்தில் சிறு வேலை இருந்ததால் முடித்துவிட்டு போன் செய்கிறேன் என்றிருந்தேன், நான் கிளம்பும் முன்னரே அவர் எனக்கு போன் செய்தார். கண் பரிசோதனைகள் செய்துள்ளதாகவும் மீண்டும் அடுத்தநாள் (திங்கட்கிழமை) காலை எட்டு மணிக்கு வேறு ஒரு டாக்டரின் அப்பாயின்மென்ட் இருப்பதாகவும் தெரிவித்தார். எழும்பூரில் ஒரு சிறிய காம்ப்ளெக்சில் ஷாப்பிங் செய்துகொண்டிருந்த அவர்களை மீண்டும் நேரில் சந்தித்தேன். மேலும் நிறைய வாங்க வேண்டும் என்றும், சரவணா ஸ்டோர்ஸ் போத்திஸ் போன்ற கடைகளுக்குச் செல்லவேண்டும் என்றும் கேட்டார்கள். தாராளமாகச் செல்லலாம் என்று சொல்லி அவர்களை ஒரு ஆட்டோவில் ஏற்றிவிட்டுப் பின்தொடர்ந்தேன்.
அவர்கள் போத்திஸ் வாசலில் காத்திருக்க நான் என் வண்டியை பார்க் செய்துவிட்டு சென்றேன். அப்போது ஷாபி என்னிடம், "சாப்பிட்டியா" என்று கேட்டார், "ம், சாப்பிட்டேனே" என்றேன். "நீங்க சாப்பிடலையா?" என்றேன், "இல்லை, உனக்காகத்தான் காத்திருந்தோம்" என்றார். எனக்கு லேசான குற்ற உணர்வு எட்டிப்பார்த்தது. "இல்ல, நான் உங்களுக்கு லேட்டாகுமோன்னு நினைச்சு சாப்பிட்டேன்" என்றேன். "பரவால்லை, இங்க பக்கத்துல ஹோட்டல் எதுவும் இருக்கா" என்று கேட்டு அருகில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றேன். போகும் வழியில் என் மனைவியிடமிருந்து அழைப்பு வரவே அதைப் புரிந்துகொண்ட அவர் என்னை வலுக்கட்டாயமாக வீட்டுக்கு அனுப்பினார்.
அடுத்த நாள் காலை அவர்கள் வரும் முன்னரே நான் ஆஸ்பத்திரியில் ஆஜர். இம்முறை ஷாபியும் அவரது மகளும் மட்டுமே, மனைவியும் மற்றொரு மகளும் வந்திருக்கவில்லை. வந்திருந்தாலும் வெளியேதான் காத்திருக்கவேண்டும். எனக்கு அலுவலகம் இருந்ததால் பரிசோதனைகள் முடிந்ததும் போன் செய்யுமாறு கூறிவிட்டு புறப்பட்டேன். அதேபோல் அவரும் பரிசோதனைகள் முடிந்ததும் எனக்கு தொலைபேசினார். கண்களில் ஆபரேஷன் செய்யவேண்டும் என்றும் அதற்கான தேதி மூன்று வாரங்கள் கழித்து கொடுக்கப்பட்டிருப்பதாகவும் ஆனால் அந்த சமயத்தில் மகளுக்கு பள்ளியில் தேர்வுகள் இருப்பதால் முடிவெடுக்க முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்தார். மாலை மெரீனா கடற்கரை செல்வதாகவும் எனக்கு அலுவலகம் முடிந்ததும் கட்டாயம் வரவேண்டும் என்றும் சொல்லியிருந்தார்.
அதேபோல் மாலை அண்ணா சமாதி, எம்.ஜி.ஆர். சமாதி, கண்ணகி சிலை, கடற்கரையோர பானிபூரி என்று சுகமாய் கழிந்தது. இடையிடையே அவர் பலதரப்பட்ட விஷயங்களைப் பேசினார். அடுத்த நாள் மாலை ஐந்து மணிக்கு சென்னையிலிருந்து புறப்படும் ரயிலில் புறப்படுவதாகவும் அதற்கான டிக்கட்களை ஊரிலிருக்கும் தன் மகன் எடுத்துவிட்டதாகவும் தெரிவித்தார். அப்படின்னா நாளைக்கு வீட்டுக்கு வாங்களேன், என்றேன். கண்டிப்பா வரோம், நீ ஆபிஸ்ல பிரேக் எடுத்துக்கோ என்றார். சரியென்று அன்றைய சந்திப்பை அங்கேயே முடித்துக்கொண்டு கிளம்பினோம்.
மெரீனா கடற்கரையில் |
அடுத்த நாள் அவர்கள் மதியம் சாப்பிடும் வகையில் வருவார்கள் என்று முன்னரே சொல்லியிருந்ததால் நான் காலை வழக்கம்போல அலுவலகம் சென்றுவிட்டேன். அவர்கள் ஒரு கால் டாக்ஸி எடுத்துக்கொண்டு ராதாகிருஷ்ணன் சாலை வர நான் அங்கிருந்து ஏறிக்கொண்டேன். என் மனைவிக்கோ தமிழ், இந்தி, ஆங்கிலம் தவிர வேறு மொழிகள் தெரியாது. அவர்களுக்கோ மலையாளம் தவிர வேறு மொழிகள் தெரியாது. ஒருவாறாக பரஸ்பரம் பேசுவதைப் புரிந்துகொண்டு உரையாடினார்கள். அவரது மூத்த மகளின் பெயர் ரிஸானா (Rizana) என்றும் இளைய மகளின் பெயர் ரிஸ்வானா (Rizwanaa) என்றும் மனைவியின் பெயர் ...... (அச்சச்சோ மறந்துபோச்சே) அறிமுகப்படுத்தினார். என் மகன் அவர்களிடம், "நான் எத்தனையாவது படிக்கிறேன்னு சொல்லுங்க" என்று கேட்க அவர்கள் யு.கே.ஜி.யா என்று கேட்க, அவன் முகம் மாறிப்போனது. "அவனுக்கு பொக்கம் குறவாணு என்னுள்ள விஷமம் உண்டு" என்றேன்.
தரையில் அமர்ந்து சாப்பிடுகிறோம் |
சாப்பிட அமர்ந்தோம். வெஜிடபிள் பிரியாணியும் தயிர் சாதமும் மட்டுமே சமையல். அது போதும் என்று முன்னரே சொல்லியிருந்தேன். என் மகள்கள் தரையில் உட்கார்ந்து சாப்பிட்டதே இல்லை, நான் சிறு வயதில் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறேன், என்றார் ஷாபி. எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமே சாப்பிட்டார்கள். கேரளா வந்தால் கண்டிப்பாக அவர்களது வீட்டுக்கு வரவேண்டும் என்று சொன்னார்கள். அவர்கள் ஐந்து மணி ரயிலைப் பிடிக்க வேண்டும் என்பதால் சாப்பிட்டு ஐந்து நிமிடங்கள் மட்டுமே இருந்துவிட்டு கிளம்பிவிட்டார்கள்.
அவர்கள் வந்த வேலை முடியவில்லை என்றாலும், சந்திப்பு அவசரகதியில் இருந்தாலும் இன்னும் நினைவை விட்டு அகல மறுக்கிறது.
This entry was posted by school paiyan, and is filed under
அனுபவம்,
சந்திப்பு
.You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
ellam nalla padiya nadanthu mudiya vazthukkal sir.
ReplyDeleteமுதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மகேஷ்...
Deleteவணக்கம்
ReplyDeleteசந்திப்பு இனிதாக அமைந்தமைக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்...
Deleteதங்களின் உதவும் மனப்பான்மை கண்டு உள்ளம் பூரித்தேன்!
ReplyDeleteஉதவி தானே ஐயா... செய்தால் போச்சு... நன்றி ஐயா..
Deleteமுகமறியா ஒருத்தருக்கு உதவுவதுதான் உண்மையான உதவி. நல்ல மனம் படைத்த உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் எந்த குறையும் இல்லாம நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்குறேன். ஸ்பை
ReplyDeleteநன்றி அக்கா...
Deleteதமிழன்.....தமிழன்....அவன் குணம் அதுதான் தங்கச்சி....
Deleteபசங்க வீட்டுக்கு வந்தா ரொம்ப அமைதியா இருந்தாங்களா? ஆச்சர்யமா இருக்கே... நம்மள மாதிரி இல்ல போல, நல்ல பசங்களா இருக்காங்க.... அந்த பொண்ணுக்கு கண்ணு சீக்கிரம் சரியாகிடணும். அடுத்த தடவ பேசும்போது நான் ப்ரே பண்ணினேன்னு சொல்லிடுங்க....
ReplyDeleteப்ரே பண்றதுக்குக் கூட ஒரு நல்ல மனசு வேணும்... நல்ல மனம் வாழ்க...
Deleteரொம்ப பெருமையா இருக்கு ஸ்.பை.. குட் பாய் நீங்க!! :-)
ReplyDeleteநான் எப்படிப்பட்ட பாய்னு உங்களுக்கே தெரியுமே ஆனந்த்.....
Deleteஇணைய நட்புகள் அருமையான சொந்தங்களை படைகிறது.......குட் பாய் ஸ்பை....சென்னையில் மனதிருந்தால் கூட உதவி செய்ய இயலாத படி நேரமும் போக்குவரத்தும் நம்மை கட்டுப்படுத்திவிடும்...அதை மீறி அவர்களுக்கு உதவி செய்த ஸ்பைக்கும் அதற்கு ஒத்துழைப்பு தந்த (ஸ்கூல் கேர்ள்) தங்கைக்கும் பாராட்டுக்கள்...ஏன்னா அவிங்க முகம் சுளிச்சிட்டா யாருக்கும் உதவி செய்யனும்னா பல தடவ யோசிக்க தோணும்.........வாழ்த்துகள் மக்களே...
ReplyDelete//இணைய நட்புகள் அருமையான சொந்தங்களை படைக்கிறது..//
Deleteகண்டிப்பா... ஆனா பல தீமைகளையும் படைக்கிறது...
//சென்னையில் மனதிருந்தால் கூட உதவி செய்ய இயலாத படி நேரமும் போக்குவரத்தும் நம்மை கட்டுப்படுத்திவிடும்.//
நிறைய பேருக்கு இதனால உதவ முடியாம போயிருக்கு..... உண்மை...
//ஸ்கூல் கேர்ள்//
யப்பா இதென்ன புதுப்பேரா இருக்கே....
//ஏன்னா அவிங்க முகம் சுளிச்சிட்டா யாருக்கும் உதவி செய்யனும்னா பல தடவ யோசிக்க தோணும்//
முகம் சுளிக்காம நாமதான் பாத்துக்கணும்.... பாத்துக்கறேன்....
எனக்கு உங்க பின்னூட்டம் ரொம்ப பிடிச்சிருக்கு....
தங்களின் சேவைக்கு வாழ்த்துக்கள் பல...
ReplyDeleteநன்றி DD அண்ணே....
Deleteமொழி அறியாதவர்களுக்கும் உதவி ,ஒத்துழைக்கும் மனைவி ..உங்கள் இருவருக்கும் என் வாழ்த்துகள் !
ReplyDeleteத.ம 6
எதோ நம்மால முடிஞ்சது... வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி பகவான்ஜி.....
Deleteஅடடா... மனோ என்கிற வலைப்பூ நட்புக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை மெய் சிலிர்க்க வைக்கிறது. அவருடன் சேர்ந்து பணியாற்றும் சக ஊழியர் என்கிற ஒரே தகுதிமட்டும்தான். அதற்காக பரபரப்பான சென்னை வாழ்க்கையில் உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி மொழிதெரியாத அவர்களுக்கு இந்த அளவு உதவி செய்திருப்பது பாராட்டுக்குரியது தம்பி... வாழ்த்துக்கள். இங்கயுந்தான் இருக்கங்களே... வலியமான நட்பு பாராட்டினாலும் வம்பிழுக்கிறாங்க...
ReplyDeleteமனோ நல்ல மனிதர்.... பதிவர் சந்திப்பு நடந்த அன்று செல்போனில் ஸ்பீக்கர் போட்டு மைக்கில் பேசியிருக்கிறார், அதைக் கேட்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை... வந்தவர் அவரது நண்பர் எனும்போது அவருக்குக் கொடுக்கும் அளவுக்கேனும் மரியாதை கொடுத்தாக வேண்டும் என்பது என் எண்ணம்... வந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி மணி அண்ணே... உங்க மேட்டர் படிச்சேன், ஆனா ஒண்ணுமே புரியலை... இதைப்பத்தி அப்புறமா கேட்டுத் தெரிஞ்சிக்கிறேன்...
Deleteசம்பந்தப்பட்ட ஆளு இப்ப வரைக்கும் சபைக்கு வரலை.... மனோ அண்ணனைச் சொன்னேன்....
ஸோ ஸோ ஸாரி ஸாரி மக்கா.......வலைப்பக்கம் வராதால் லேட்டாகிருச்சு ஸாரி....
Deleteஉங்களை ஓட்டி ஒரு பதிவு போட்டிருக்கேன்னு முகநூல்ல சொன்னதுக்கப்புறம் தான் வந்திருக்கீங்க....கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....
Delete(த,ம-7) அடுத்ததா சிங்கையிலிருந்து சென்னைக்கு இது போன்ற மருத்துவ உதவிக்கு நண்பர்கள் வந்தா உங்களை கைகாட்டலாம்னு இருக்கேன்... :-))))
ReplyDeleteஆஹா... சிங்கப்பூரில் இருந்து ஆப்பா.... சூப்பர் ஸ்டாரே இங்கிருந்து அங்கதான வந்தார்....
Deleteஎன்ன சொல்வதென்று தெரியவில்லை அண்ணே ... நட்புக்கு வணக்கங்கள்
ReplyDeleteநன்றி அரசன்....
Deleteதமிழரின் நட்பிற்கும் விருந்தோம்பலுக்கும் இனி ஸ்பை உதாரணமாகக் கடவது :-)))))
ReplyDeleteஇந்த சின்ன வயசுல ஸ்கூல் பையனுக்குள்ள இவ்ளோ பெரிய உதவும் மனப்பான்மையா
நானு பக்கத்து வீட்டுக்காரங்க முதல் பஹ்ரைன்ல இருக்கிறவர் வரை உதவி பண்ணியாச்சு.... எதோ என்னால முடிஞ்சது.... நன்றி சீனு....
Delete//இந்த சின்ன வயசுல //
Deleteஹிஹி... நேத்தோட எட்டு வயசு முடிஞ்சு ஒன்பது ஆரம்பிச்சிருக்கு....
அருமை, அருமை....! நன்றியும் பாராட்டுக்களும்......!
ReplyDeleteவருக வருக.... பாராட்டியதற்கு மிக்க நன்றி பன்னிக்குட்டி ராமசாமி அண்ணே....
Deleteநடந்ததை நேரே பார்த்தது போன்ற பதிவு.
ReplyDeleteஉண்மையிலேயே உள்ளதை உள்ளபடியே எழுதிட்டேன்... இதில மிகைப்படுத்தியோ எதையும் மறைச்சோ எதுவும் இல்லை....
Deleteவலைப் பூவின் மகிமையே இதுதான். புதுப்புது உறவுகளை நட்பபுகளை நமக்கு வழங்கிக் கொண்டே இருக்கும். நன்றி ஐயா.
ReplyDeleteஆமாம் ஜெயக்குமார் அண்ணே... பல புதிய உறவுகளும் நண்பர்களும் கிடைத்திருக்கிறார்கள்... அப்புறம் இந்த ஐயா-ங்கிற வார்த்தைதான் இடிக்குது....
Deleteமுக்கியமான ஆளே லேட்டா வந்துட்டேனே....சபையோரே மன்னிச்சு....
ReplyDeleteஅப்பாலிக்கா உங்களை ஓட்டி ஒரு பதிவு போடுறதுக்காக சங்கம் யோசிக்குது....
Deleteகூடப் பிறந்தவர்களே எட்டிப் பார்க்காத உலகத்தில்தான் வாழ்ந்துட்டு இருக்கோம், அதில் தம்பி மாதிரி மனசு உள்ளவங்க இருக்குறதுனால்தான் கொஞ்சமேனும் மழை பெய்யுது இல்லையா ? மிக்க நன்றிடே தம்பி...!
ReplyDeleteமுகமறியா உதவிய வலைப்பூ மகிமையோ மகிமை...!
ரொம்ப சரி... சொந்தக்காரங்க எல்லாரும் தூரமாகிக்கிட்டே போறாங்க... முகம் தெரியாத நிறைய பேர் நெருக்கமாக வர்றாங்க... சில நேரங்களில் என்ன மாதிரியான சமூகத்தில் வாழறோம்னு நினைக்க வைக்குது....
Deleteஉண்மைதான் (மனோ)உங்களுக்கும் பள்ளி மாணவனுக்கும் வாழ்த்துக்கள்
Deleteஉங்க வீட்டம்மாவுக்கும் சின்ன தம்பிக்கும் என் மனமார்ந்த நன்றிய சொல்லிருங்க தம்பி....
ReplyDeleteசொல்லிட்டேன்....
Deleteஷாபி சேட்டன் இன்னும் பஹ்ரைன் வரவில்லை வந்ததும், இன்னும் முழுமையான அன்புகள் தெரியவரும் நாஞ்சில்மனோ வலைப்பூவில்....
ReplyDeleteஎப்பிடி நன்றி சொல்றதுன்னே தெரியல....கண்ணுல தண்ணி மட்டும் கொட்டுது...!
மலையாளத்தில் இஸ்லாமியர்களை "க்கா" என்னும் அடைமொழி வைத்து அழைப்பார்கள்.... அவ்வகையில் ஷாபிக்கா பஹ்ரைன் வந்ததும் கேட்டுப்பாருங்கள்.... கண்டிப்பாக எதிர்பார்க்கிறேன் உங்க வலைப்பூவில், ஷாபிக்காவும் நிறைய போட்டோக்கள் சுட்டுத் தள்ளியிருக்கிறார்.
Deleteஇங்கிருந்தே நான் கண்ணை துடைச்சு விடுறேன்... அழாதீங்க....
ReplyDeleteஇன்னும் நினைவை விட்டு அகல மறுக்கிறது///மனிதம் இன்னும் இருக்கிறது தம்பி,அருமை,பாராட்டுக்கள்!
ம்ம்ம்ம்... நீங்க மூணு நாள்ல திருச்சிக்கு வந்துட்டு ஓடிட்டீங்க.... நான் மலேஷியா வரும்போது (!?) இருக்கு உங்களுக்கு....
Deleteநன்றி அக்கா....
தங்களின் உதவும் மனப்பான்மைக்கு பாராட்டுகள்.
ReplyDeleteஅவர்களுக்கும் எல்லாம் நல்லபடியாக நடக்க எனது ப்ரார்த்தனைகளும்.
நன்றி சகோதரி....
Deleteபிரதிபலன் பாராமல் உதவி செய்த ஸ்பை க்கு ஆரத்தழுவி ஒரு அணைப்பு ....!
ReplyDeleteஇங்கிருந்தே அணைத்துக்கொள்கிறேன்....
Deleteஒண்ணு ஓட்ட வேண்டியது.. இல்லேன்னா அணைச்சிக்க வேண்டியது... ம்ம்ம்ம்... இருக்கட்டும்....
Deleteமுகமறியா நண்பருக்கு முழு மனதுடன் உதவிய உங்கள் நட்பு பாராட்டத்தக்கது! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி சுரேஷ் அண்ணா....
Delete//நம்ம நாஞ்சில் மனோவுக்கு குழந்தை மனசுய்யான்னு, நாங்களெல்லாம் சொல்லிக்குவோம்.//
ReplyDeleteஆமா சார்... உண்மையிலேயே...
இங்கயும் வந்து கருத்து சொன்னதுக்கும் பாராட்டியதற்கும் ரொம்ப தாங்க்ஸ் சார்....
நல்ல நினைவுகள் மறையாது மாறாது
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கவியாழி ஐயா....
Deleteஉதவும் உள்ளங்கள் இருப்பதால்தான் உலகம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. உங்க விருந்தோம்பல் அழகான மனித உறவுகளை சொன்னது...!
ReplyDeleteஇப்படி வட்டம் கட்டி தரையில் உட்கார்ந்து சாப்பிடற காட்சி எல்லாம் கவிதைங்க... எந்திர வாழ்க்கையில் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு டைமில் நின்னுகிட்டு சாப்பிட்டு ஒட வேண்டியதாயிருக்கு...!
ஏதொ என்னால ஆன உதவிதான் மேடம் செஞ்சிருக்கேன், தரையில் உக்காந்து சாப்பிட்டதேயில்லைனு ஷாபிக்கா சொன்னதும் ஒரு நிமிஷம் மனசுல சுருக்னு குத்திச்சு... சரி அதுக்கு என்ன செய்ய முடியும்னு விட்டுட்டேன்...
Deleteபுதிய உறவுகள் புவகை சந்தோஷம்....வலைப்பூ மூலம் ஒரு நட்பூ...
ReplyDeleteவலைப்பூ மூலம் புதிய நட்புகள் கிடைக்கின்றன... தொடர வேண்டும்... நன்றி நண்பா...
Deleteரொம்ப லேட்டா வந்திருக்கேன் நானு! ஏன்னா... நீ செஞ்ச அந்த உதவிகளை அருகிலிருந்து பாக்கற பாக்கியம் கிடைச்சதால என்ன சொல்றது, எப்படிப் பாராட்டறதுன்னு தெரியாததால... பத்திரிகையில நாம எழுதிக் கிழிச்சிருந்தோம்னாக் கூட இப்படி ஓடிஓடி உதவற நட்புகள் கெடைச்சிருக்காது. இது இணையம் தந்த வரம்! பதிவர்கள் பரஸ்பரம் நட்பும் அன்பும் பூண்டு, உதவிகள் பரிமாறிக் கொள்வது மிகமிக நல்ல விஷயம். அதுக்கு ஒரு நடைமுறை உதாரணமாய் இப்ப ஸ்கூல் பையன்! பெருமையா இருக்குடே!
ReplyDeleteகண்டிப்பாக இது வரமே... லேட்டானாலும் பாராட்டியதற்கு மிக்க நன்றி வாத்தியாரே...
Deleteநட்பின் உதவி. பாராட்டுகள்.
ReplyDeleteஅருமை! நம்மால் ஆன உதவியைச் செய்வதில் உள்ள மகிழ்ச்சி அமோகமா இருக்கும்.
ReplyDeleteநல்லா இருங்க.
This comment has been removed by the author.
ReplyDeleteவாழ்த்துக்கள் !!! பாராட்டுகள் !!!
Delete