ஹோட்டல் - ZAATAR



சென்னையில் புதிதாகத் தொடங்கப்பட்டு கவனிப்பாரின்றி இருக்கும் சில ஹோட்டல்களில் முக்கியமானது இது.  இவர்கள் தரும் சுவை மற்றும் வெரைட்டியான உணவு வகைகள்.  இந்த ஹோட்டலுக்குச் சென்று நான் குடும்பத்துடன் சாப்பிட்ட அனுபவத்தை இங்கே பகிர்கிறேன்.


சிக்கன் லாலிபாப்புடன்


கடந்த மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை.  நம்ம வீட்டு ஸ்கூல் பையன் சிக்கன் லாலிபாப் சாப்பிடவேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டு அடம்பிடித்ததால் சரி இருக்கவே இருக்கிறது வீட்டுக்குப் பக்கத்திலேயே என்று கிளம்பிவிட்டோம்.  ஹோட்டல் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் யெல்லோ பேஜஸ் எதிரே உள்ள வி.எம். தெருவில் திரும்பியவுடன் இடதுபுறத்தில் இருக்கிறது.  இந்த அமைப்பு தான் இந்த ஹோட்டலுக்கு ஒரு மிகப்பெரிய மைனஸ் என்றே கூறலாம்.  காரணம் மெயின் ரோட்டில் இல்லாத காரணம் மற்றும் அந்த இடத்தில் ஹோட்டல் இருப்பதற்கான அறிகுறியே இல்லாதது.  இருந்தாலும் தற்போது மவுத்டாக் மூலம் ஓரளவு கூட்டம் சேர்ந்துவருகிறது.




நம்ம ஸ்கூல் பையனுக்கு ஆர்டர் செய்தது சிக்கன் லாலிபாப், மற்றும் ஒரு சிக்கன் நூடுல்ஸ்.  எனக்கு ப்ரான் பிரைட் ரைஸ் கேட்டேன், ப்ரான் பிரைட் ரைசை விட ப்ரான் செஸ்வான் பிரைட் ரைஸ் மிகவும் ஸ்பைசியாக இருக்கும் என்று சர்வர் சொல்ல அதையே எடுத்துக்கொள்ளச் சொன்னேன்.  வீட்டம்மா வழக்கம்போல குல்ச்சாவும் பனீர் பட்டர் மசாலாவும் ஆர்டர் செய்தார்கள்.



சிக்கன் லாலிபாப்


முதலில் வந்தது சிக்கன் லாலிபாப்.  எலும்பின் ஒரு பகுதியில் மட்டும் சதை இருப்பதுபோல வெட்டி மசாலா சேர்த்து பொரித்திருந்தார்கள்.  மறுபகுதியில் கையில் எண்ணெய் படாமல் இருக்க பேப்பர் சுற்றியிருந்தார்கள்.  தொட்டுக்கொள்ள சில்லி சாஸ் மற்றும் தக்காளி சாஸ்.  மிகவும் மொறுமொறுவென்று இருந்தது.



ப்ரான் செஸ்வான் பிரைட் ரைஸ்


அடுத்ததாக ப்ரான் செஸ்வான் பிரைட் ரைஸ்.  மிகவும் அருமை.  சாதாரண பிரைட் ரைஸ் சாப்பிட்டிருந்தால் கூட இந்த அளவுக்கு உணர்ந்திருக்க மாட்டேன்.  சும்மா நாக்கில் பட்டதும் சுளீர் என்றிருந்தது. சர்வரின் ஆலோசனைக்கு மிகவும் நன்றி சொல்லிக்கொண்டேன்.  தொட்டுக்கொள்ள சிக்கன் மசாலா மற்றும் ஆனியன் ரைத்தா கொடுத்தார்கள்.  மசாலா மற்றும் ரைத்தா வகைகளை எவ்வளவு வேண்டுமானாலும் முகம் சுளிக்காமல் கொடுக்கிறார்கள்.



சிக்கன் நூடுல்ஸ்

சிக்கன் நூடுல்ஸ்.  சிக்கனை நன்றாக வேகவைத்து நூடுல்ஸ் சமைக்கும்போது கலந்து சமைத்திருந்தார்கள்.  கொஞ்சம் எண்ணெய் அதிகமாக இருந்தது.  இருந்தாலும் சுவையில் குறைவில்லை.









குல்ச்சாவுடன் பனீர் பட்டர் மசாலா









இறுதியாக பையனுக்கும் வீட்டம்மாவுக்கும் ஆளுக்கொரு ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீமும் எனக்கு ஒரு ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்கும் ஆர்டர் செய்தோம்.  ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் என்பது ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீமில் பாலைக் கலந்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றித் தந்தது போல் இருந்தது.  சுவையோ பிரமாதம்.  இவையனைத்தையும் சாப்பிட்டு முடிப்பதற்குள் வயிறு நிறைந்திருந்தது.






இவ்வளவு சாப்பிட்டும் மொத்த பில் ரூபாய் 852 மட்டுமே (!).  கொஞ்சம் அதிகம் என்றாலும் தரத்துக்காகவும் சுவைக்காகவும் தாராளமாகக் கொடுக்கலாம்.  இங்குள்ளவர்களின் உபசரிப்பும் அருமை.  ஆர்டர் எடுப்பதிலும் சரி, பரிமாறுவதிலும் சரி, மற்ற ஹோட்டல்களைப் போல ஏனோ தானோவென்று செய்யாமல் கொஞ்சம் டெடிகேட்டடாகச் செய்வது சிறப்பு.




மொத்தத்தில் ஒருமுறை வந்தவர்கள் மீண்டும் அந்தப்பக்கம் போனால் இந்த ஹோட்டலை விசிட் அடித்துவிட்டே வருவார்கள் என்பது உறுதி.


இந்த ஹோட்டலின் மற்றுமொரு சிறப்பு கிரில் சிக்கன்.  ஹோட்டலுக்கு வெளியே எண்ணெய் வடிய சுற்றிக்கொண்டு வருவோர் போவோரை சுண்டி இழுக்கும் ஒரு காட்சி.  இங்கே நான் சென்று சாப்பிட்டதை விட பார்சல் வாங்கி சாப்பிட்டதே அதிகம்.  இவ்வாறு நான் பார்சல் வாங்கி சாப்பிட்ட ஐட்டங்கள் சில உங்கள் பார்வைக்காக.  அசைவம் பிடிக்காதவர்கள் மன்னிக்க.



கிரில் சிக்கன்





சிக்கன் பிரியாணி





சிக்கன் பிரைட் ரைஸ்

சிக்கன் 65





சில்லி சிக்கன்



சிக்கன் ஸ்பிரிங் ரோல்





கிரில் சிக்கன்



தொட்டுக்கொள்ளும் ஐட்டங்கள்






தொட்டுக்கொள்ளும் ஐட்டங்கள்




கருத்துரையிட்டு ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே....



நன்றி...