திருமதி தமிழ் - சினிமா விமர்சனம்
Sunday, April 21, 2013
Posted by கார்த்திக் சரவணன்
திருமதி தமிழ் - சினிமா விமர்சனம்
நண்பர்களுடன் சேர்ந்து அதுவும் ப்ளாக்கர் நண்பர்களுடன் சேர்ந்து படம் பார்ப்பதென்பது ஒரு உன்னதமான அனுபவம். அதுவும் இதுபோன்ற புரட்சிகரமான காவியப் படங்களை விசிலடித்து, கத்தி ஆர்ப்பரித்துப் பார்ப்பதில் அலாதி ஆனந்தம். இந்த ஆனந்தத்தை அனுபவிப்பதற்காகவே சென்ற வாரம் சீனு என்னை சனிக்கிழமை மதியக் காட்சிக்கு போகலாம் என்று அழைத்தவுடன் கொஞ்சம் கூடத் தயங்காமல் சம்மதித்தேன். அதன்படி நேற்று மதியம் நானும் சீனுவும் மதியம் 2.15 மணிக்கு ராயப்பேட்டை உட்லேண்ட்ஸ் தியேட்டரில் ஆஜர். எங்களுக்கு முன்பாகவே மெட்ராஸ்பவன் சிவகுமாரும் மின்னல் வரிகள் பாலகணேஷும் வந்து காத்திருந்தார்கள். சிறிது நேரத்தில் அஞ்சா சிங்கமும் அரசனும் வர அரங்கினுள் நுழைந்தோம்.
நீண்ட காலம் கழித்து ராஜகுமாரன் எழுதி இயக்கியிருக்கும் படம் என்பதாலும் தானே கதாநாயகன் என்பதாலும் இது அவரது மனைவி தேவயானியின் 75ஆவது படம் என்பதாலும் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. மேலும் டிரைலர்கள் மற்றும் பேஸ்புக்கில் பார்த்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் திரைப்படம் எப்படி இருக்கும் என்பதற்கான அறிகுறிகளை அறிவித்திருந்தது. சாம்பிளுக்கு இணையத்தில் வந்த படங்களை கவிதை வீதி சௌந்தர் அவர்களின் இந்தப் பதிவைப் பார்க்கவும்.
இனி படத்தைப் பற்றி....
தொண்ணூறுகளில் இயக்குநர் அவதாரம் எடுத்த தொண்ணூறு பேரில் எண்பத்தொன்பது பேர் கதாநாயகனாகி ரிட்டயர் ஆகிவிட கடைசியாகக் களமிறங்கியிருக்கும் நம்ம அண்ணன் சோலார் ஸ்டார் ராஜகுமாரன் அவர்களின் தைரியத்தை மனம் திறந்து பாராட்டியே ஆக வேண்டும். விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தையே தன் காதல் கடிதமாக உபயோகித்து தேவயானியின் ராஜகுமாரனாக ஆனவர் இந்தப்படத்தின் மூலம் தேவதாஸ் ஆனால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
கதையைப் பற்றிச் சொன்னால் சஸ்பென்ஸ் குறைந்துவிடும் என்பதாலும் தியேட்டருக்கு வரும் பத்து பேரும் வராமல் போய்விடும் அபாயம் இருப்பதாலும் மற்ற விஷயங்களைப் பற்றி மட்டும் பார்ப்போம்.
படம் தொடங்கியதும் போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ் அதிகாரிகளிடம் அடி வாங்குகிறார். ஒன்று, இரண்டு, மூன்று என அவர் அடி வாங்குவதைப் பார்க்கும்போது நம் நெஞ்சு பதைபதைக்கிறது. நான்காவது அடிக்குள் அவர் எழுந்து போலீசாரைப் பந்தாடும்போது தியேட்டரிலிருந்த பத்துபேரில் எட்டுபேர் விசிலடிக்கிறார்கள். பின்னர் அவரை துப்பாக்கி முனையில் பிடித்து கட்டி கடலில் வீசி எறிகிறார்கள். இப்படி ஆரம்பமே அதகளப்படும்போது நம்மால் இருக்கை நுனியை விட்டு நகர முடியவில்லை.
கதாநாயகன் ராஜகுமாரன் இரண்டு இன்ச்சுக்கு மேக்கப் போட்டிருக்கிறார், அதிலும் அவர் உபயோகித்திருக்கும் லிப்ஸ்டிக் கருஞ்சிவப்பு நிறத்தில் ஜொலிக்கிறது. படம் முழுவதும் நீலநிற முண்டா பனியன் மேல் திறந்துவிடப்பட்ட சட்டையும் நீல நிற பேண்ட்டுமாக அலைகிறார். சாக்கடையில் நனைந்து கருப்பு நிற சாயத்தில் மிகவும் அழகாக இருக்கிறார். பாடல் காட்சிகளில் பல ரூபங்களில் தோன்றி நம்மை பயமுறுத்துகிறார். அதிலும் அவர் வசனம் பேசும் காட்சிகள்... ஆஹாஹா.. எந்த உணர்ச்சியும் இல்லாமல் உரைநடை வாசிப்பதுபோல் வாசிக்கிறார். அதிலும் புருஷன், வருஷம், விஷயம் என்பதை புருசன், வருசம், விசயம் என்று உச்சரிக்கிறார். ஏண்ணே, உங்களுக்கு "ஷ" வே வராதா?
நாயகியாக தேவயானி மற்றும் கீர்த்தி சாவ்லா. தேவயானி ஸ்கூல் படிக்கும் பெண்ணாம். முகத்தில் சுருக்கங்களை மறைக்க முடியவில்லை, பாவாடை சட்டை போட்டு வலம் வருகிறார், சிரிக்கும்போது தன் முயல் பற்களைக் காட்டி பயமுறுத்துகிறார். மாமா மாமா என்று நாயகனிடம் உருகி வழிகிறார். வக்கீலாக இன்னொரு வேடத்திலும் நடித்து தன் பங்குக்கு கடமையாற்றியிருக்கிறார். அதிலும் நீதிமன்றக் காட்சிகளில் அவர் பேசும் வசனங்களுக்கு அரங்கத்திலுள்ள பத்துபேரும் கைதட்டுகிறார்கள். இன்னொரு நாயகியாக கீர்த்தி சாவ்லா, நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தாலும் படத்தின் ஓட்டத்தில்(!) அவர் கவனிக்கப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
மலேசியா வாசுதேவன், டெல்லி கணேஷ், மதன்பாப், பாத்திமா பாபு, ரமேஷ் கண்ணா, பப்லு, சிங்கமுத்து, மனோகர், தலைவாசல் விஜய், லிவிங்ஸ்டன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஆனால் தேவயானி ராஜகுமாரன் தம்பதியின் ஆளுமையால் யாருடைய நடிப்பையும் ரசிக்க முடியவில்லை. இசை எஸ் ஏ ராஜ்குமர். பாடல்கள் கேட்பதற்கு நன்று, ஆனால் படமாக்கப்பட்ட விதம் பாடல்களை ரசிக்கவைக்கவில்லை. பின்னணி இசையில் லலலா....லாலா மிஸ்சிங்.
படு அபத்தமான கதை, அதைவிட அபத்தமான திரைக்கதை, மோசமான காஸ்டிங், இசை, திடீர் திடீரென வரும் பாடல்கள், சாதாரண கேரக்டர் கூட முழ நீளத்துக்கு வசனம் பேசுவது என்று நம்மைக் கிறங்கடிக்கிறார்கள். இதில் ஒரு புதுமையான கருத்தை வேறு சொல்லியிருக்கிறார்கள். மணமக்களின் தாய் தந்தை தவிர்த்து திருமண மண்டப ஓனர், பாத்திரக்காரர், சமையல்காரர், ஐயர், கக்கூஸ் கழுவுபவர் வரை மணப்பெண்ணுக்கு சம்மதமா என்று விசாரித்த பின்னரே தங்களது பணிக்கு ஒத்துக்கொள்ள வேண்டும் என்று. கொடுமைடா சாமி....
மொத்தத்தில் தூக்கு போட்டோ, விஷம் சாப்பிட்டோ, உயரமான கட்டிடத்தில் இருந்து குதித்தோ அல்லது வேறு வழிகளில் தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பவர்கள் மாற்று வழியாக இந்தப்படத்தைப் பார்த்து முயற்சிக்கலாம்.
திருமதி தமிழ் விமர்சனம் படிக்க
This entry was posted by school paiyan, and is filed under
சினிமா,
சினிமா விமர்சனம்,
தேவயானி,
பதிவர்கள்,
ராஜகுமாரன்
.You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
யப்பா நீங்கதான் சாகனும்னு போனீங்க சரி....கணேஷ் அண்ணன் என்னைய்யா பாவம் செஞ்சாரு.....ஹா ஹா ஹா ஹா...
ReplyDeleteஎல்லாத்துக்கும் காரணம் மெட்ராஸ்பவன் தான்... அவரைப் புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்...
Deleteஜெயில்ல போடுறதா, வந்தேம்னா கொன்னேப்புடுவேன்னு சொல்லி வையுங்க ஹா ஹா ஹா ஹா...
Deleteநல்லது நண்பரே....
ReplyDeleteதங்களது விமர்சனத்தையும் கவிதை வீதியில் லிங்க் கொடுத்திருக்கிறேன்...
நன்றி நண்பரே...
Delete
ReplyDeleteஆனாலும் அசாத்திய தைரியம் உங்களுக்கு எல்லாம்...
எங்களுக்கெல்லாம் திடங்கொண்ட மனம் கொடுத்தது சீனுவும் சிவாவும்...
Delete"உன்னதமான" அனுபவத்தை... சென்ற அனைவரும் பகிர்ந்து கொள்ள திட்டமிட்டதற்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி அண்ணா...
Deleteஇப்படி ஆளாளுக்கு விமர்சனம் போட்டு படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டிட்டிங்க....
ReplyDeleteயாராச்சும் கூட வரீங்களா???????
மெட்ராஸ்பவனைக் கூட்டிட்டுப் போங்க... அவருதான் ரெடியாருக்கார்...
Deleteசாவுரதுக்கும் துணைக்கு ஆள் வேணுமா..? இந்த உலகம் உருப்படுமா?
Delete//மலேசியா வாசுதேவன், டெல்லி கணேஷ், மதன்பாப், பாத்திமா பாபு, ரமேஷ் கண்ணா, பப்லு, சிங்கமுத்து, மனோகர், தலைவாசல் விஜய், லிவிங்ஸ்டன் //
ReplyDeleteகஞ்சா கருப்ப ஏன் விட்டுடீங்க
//தொண்ணூறுகளில் இயக்குநர் அவதாரம் எடுத்த தொண்ணூறு பேரில் எண்பத்தொன்பது பேர் //ஹா ஹா ஹா
இருந்தாலும் படத்த நீங்க லேசா தாக்கி எழுதினது மாதிரி இருக்கு இத நினைக்கும் போது கொஞ்சம் நெஞ்சு வலிக்குது, நீங்க ஏன் காரி துப்பிருக்கக் கூடாது....
நா கூட இன்னொரு தபா விமர்சனம் எழுதலாமான்னு யோசிக்கிறேன்
//கஞ்சா கருப்ப ஏன் விட்டுடீங்க//
Deleteமறந்து போய் தான் விட்டுட்டேன். இருந்தாலும் அந்த ஆளு சொன்ன ஏ ஜோக்குக்காக பேரு சேர்க்கப் போறதில்லை...
//நீங்க ஏன் காரி துப்பிருக்கக் கூடாது//
நானும் துப்பிட்டா ஸ்கூல் பையன் கிட்ட "அசிங்கப்பட்டான்டா ஆட்டோக்காரன்" என்றாகி விடும்....
எல்லோரும் கணேஷ் சாரை அநியாயமாக பழி வாங்கி விட்டீர்களே? ஏன் இந்த கொலைவெறி?
ReplyDeleteஅதனால ஒரு நல்லது நடந்திருக்கு... முதல்முறையா விமர்சனம் எழுதிருக்கார். நன்றி...
Deleteஇந்த படத்துக்கு விமர்சனம் எழுதினது தமிழ்மணத்துக்கே புடிக்கல போலிருக்கு.ஓட்டுப பட்டை வேலை செய்யல.
ReplyDeleteநன்றி நண்பா...
Delete//படம் முழுவதும் நீலநிற முண்டா பனியன் மேல் திறந்துவிடப்பட்ட சட்டையும் நீல நிற பேண்ட்டுமாக அலைகிறார். //
ReplyDeleteஆஹா...என்ன ஒரு கவனிப்பு. இனிமே எல்லா உலக படங்களும் உங்க கூடத்தான் பாக்கணும். ரெடியா இருங்க.
அய்யோ... நான் இந்த ஆட்டத்துக்கு வரலப்பா...
Deleteதற்கொலை செஞ்சுக்கறதுக்காகவே சென்னைக்கு வந்தேன்னு சொல்ற ராகு, தற்கொலை செஞ்சுக்க தைரியமில்லாதவங்களுக்காகவே படத்தை எடுத்திருக்காருங்கறீங்க...! ஹா... ஹா... இதுக்கு சீனு சொன்ன மாதிரி ஸ்கூல்பையன் காறித் துப்பியிருக்கறதே பெட்டர்தான்! படம் பார்த்து விமர்சனம் எழுதினதுக்கு பலன்.... இனிமே எல்லா உஙகப் படங்களையும் உங்களோடதான் பாக்கப் போறதா தளபதி சிவா அறிவிச்சுட்டார். என்ஜாய் மக்கா...! (ஹப்பா... நான் தப்பிச்சுட்டேன்டா சாமி!)
ReplyDeleteஆனா நான் வாழ்றதுக்காகத்தான் சென்னை வந்திருக்கேன் அண்ணா... ரிஸ்க் எடுக்கத் தயாரில்லை...
Deleteபவர்ஸ்டார் மாதிரி இவரும் பேமஸ் ஆயிடுவாரோ
ReplyDeleteஆமா... அவருக்கு தலையில முடி இல்லை, இவருக்கு இருக்கு... அவரு கொஞ்சமாச்சும் நடிக்கிறாரே...
Deleteவீரவணக்கங்கள்!
ReplyDelete//கதையைப் பற்றிச் சொன்னால் சஸ்பென்ஸ் குறைந்துவிடும் என்பதாலும் தியேட்டருக்கு வரும் பத்து பேரும் வராமல் போய்விடும் அபாயம் இருப்பதாலும் மற்ற விஷயங்களைப் பற்றி மட்டும் பார்ப்போம்.//
ReplyDeleteபடம் அடுத்த வாரமும் ஒடுன்ர மாதிரி சொல்றிங்களே. நாட்டுக்கு நல்லது இல்லையே. தீவிரவாதிகள் இந்த படத்த DTHல ரிலீஸ் பண்ணி குடும்பம் கும்பமா கொல்லப் போறாங்கன்னு உளவுத்துறை தகவல் வெளியிட்டிருக்காம்.
நல்லவேளை! பார்க்க வேண்டிய வேலை இல்லை என்று சொன்னதுக்கு நன்றிங்க...:)
ReplyDeleteதொண்ணூறுகளில் இயக்குநர் அவதாரம் எடுத்த தொண்ணூறு பேரில் எண்பத்தொன்பது பேர் கதாநாயகனாகி ரிட்டயர் ஆகிவிட கடைசியாகக் களமிறங்கியிருக்கும் நம்ம அண்ணன் சோலார் ஸ்டார் ராஜகுமாரன் அவர்களின்//
ReplyDeleteசெம செம ... அண்ணே ...
கச்சிதமாய் எழுதி இருக்கீங்க ...
rombathan adichi kilikkiringa ! pavam devayani !
ReplyDeleteஎத்தனை ஸ்டார்கள் வந்தாலும் நாமெல்லாம் அசரவே மாட்டோம்.
ReplyDeleteபுரியாத புதிர் இந்த ஜோடி தான்.
This comment has been removed by the author.
ReplyDeleteஒரு உன்னதமான காவியத்தை பார்த்தீங்க சரி, ஆனா இந்த படத்தோட 100வது நாள் விழாவை போய் பார்த்தீங்களா?
ReplyDelete