கவிதை - காலும் அரையும்
Wednesday, March 20, 2013
Posted by கார்த்திக் சரவணன்
காலில் அரை
காது வரை என
காலம் செல்ல
காலில் அரை
கால் மணி நேரமே
என்றாகி
காலில் அரை
காலாய் வளர்ச்சியுற்று
காலே மிதமாகி
காலங்களைக் கடந்து
அரையே உருவானதே
அதுவே முழுதாய்
அதரம் கொண்டதே
அரையும் போதாமல்
காலைக் கேட்கிறதே
அழுகும் குடலும்
அலறும் சிறுநீரகமும்
அவனைக் சபிக்கிறதே
ஆபிஸ் போகும் நீ
ஆம்புலன்ஸில் ஆஸ்பத்திரி போக
அல்லது
மயக்கத்தில் மரணம் தழுவி
மண்ணுலகம் செல்ல
கொல்லும் குடியின்
கொடும்பாவி எரி
மனதில்
கல்லும் கரையும்
கனியின் வாய்மொழி கேட்டால்
முதலில்....
---------------
This entry was posted by school paiyan, and is filed under
கவிதை
.You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
அந்த மனநோயை உணர்ந்து எரிக்கப்பட வேண்டும்...
ReplyDeleteவரிகளுக்கு வாழ்த்துக்கள்...
என்று தணியுமோ இந்த மோகம் கவிதை சிறப்பு
ReplyDeleteகாலோ, அரையோ, கண்கள் பார்க்கும் பாதையில் செல்லும் கால்கள்.. கடையை நோக்கி..
ReplyDeleteகடைசில வேண்டாம்ணா சொல்றீங்க??
பரவாயில்ல எல்லாருக்கும் கவிதை புரிஞ்சி இருக்கு எண்ணத் தவிர... அம்புட்டு நல்லவனா நானு
ReplyDeleteஎங்கே செல்லும் இந்தப் பாதை....
ReplyDeleteமோகம் அழிந்தால் நல்லது தான்.
கொல்லும் குடியின்
ReplyDeleteகொடும்பாவி எரி மனதில்
மனதில் உறைத்தால் சரி ....
அழுகும் குடலும்
ReplyDeleteஅலறும் சிறுநீரகமும்
அவனைக் சபிக்கிறதே
அருமையான கற்பனை வளம் !
வாழ்த்துக்கள் மென்மேலும் உங்கள்
முயற்ச்சி வெல்லட்டும் .....
காலில்தான் ஆரம்பிக்கிறது.பின்னர் முழுதுமாய் ஆக்ரமித்துக்கொள்வது குடி என்பதாக நான் புரிந்துகொண்டேன். சரிதானா?
ReplyDeleteஎல்லாமே லேபில்கள் கவிதை அருமை
ReplyDeleteநானும் உங்களைப் போன்ற ஸ்கூல்பொண்ணு தானுங்க.
ReplyDeleteஎனக்கு உங்க கவிதையின் கரு புரியலை.
மன்னிச்சிடுங்க ஸ்கூல் பையன்.