பத்து கேள்விகளுக்கு சீரியஸ் பதில்கள்
Wednesday, June 25, 2014
Posted by கார்த்திக் சரவணன்
இதுவரை இந்த தொடர்பதிவுக்கு மூன்றுபேர் அழைத்துவிட்டார்கள். திரு.சம்பந்தம் (சொக்கன் சுப்பிரமணியன்) அவர்கள், சாமானியன் மற்றும் நண்பர் தமிழ்வாசி பிரகாஷ். எழுதலாமா வேண்டாமா என்று என்று நினைத்திருந்த எனக்கு வெறும் பத்து கேள்விகள் தானே முயற்சி செய்வோம் என்று தொடங்கியதில் ஒரு சீரியஸ் பேட்டி கண்டது போலாகிவிட்டது. சீரியஸ் பேட்டி என்பதைவிட ஒரு சுய பரிசோதனை பதிவாகிவிட்டது. எல்லா கேள்விகளுக்கும் பதில்கள் சொந்த அனுபவங்களால் கொஞ்சம் சீரியசாகவே இருக்கும் என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.
1.உங்களுடைய 100-வது பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?
நான் பிறந்தநாள் கொண்டாடுவதை நிறுத்தி சில வருடங்கள் ஆகிவிட்டது. நிறுத்தி என்றால் மொத்தமாக நிறுத்தி என்று பொருள் கொள்ளவேண்டாம். கோவிலுக்குப் போவதுடன் சரி. புத்தாடை அணிவதோ கேக் வெட்டுவதோ கிடையாது. அலுவலகம் இருந்தால் சென்றுவிடுவேன். இருந்தாலும் அன்றைய தினம் ஒரு சின்ன குதூகலம் மனதினுள் இருந்துகொண்டே இருக்கும். நூறாவது பிறந்த நாள் கொஞ்சம் விசேஷம் என்பதால் மனைவி, மக்கள், பேரக்குழந்தைகளுடன் ஜாலியாகக் கொண்டாடவே விருப்பம்.
2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
இபோதைக்கு Excel Macros, VBA மற்றும் SQL. அலுவலக வேலைக்கு அவசியப்படுகிறது. பின் வரும் நாட்களில் என்னவெல்லாம் தேவைப்படுமோ எல்லாமே கற்றுக்கொள்வேன்.
3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
கொஞ்சம் கஷ்டமான கேள்வி. அதிகம் யோசித்துத்தான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. இன்றைய நவநாகரீக உலகில் எல்லாம் வேகம். ஓடிக்கொண்டே இருப்பதால் சிரிக்க மறந்துவிடுகிறேன். சிரித்ததையும் மறந்துவிடுகிறேன். ம்ம், கடைசியாக நேற்று அலுவலகத்தில் மதிய உணவு இடைவேளையின்போது டைனிங் ஹாலே அதிரும்படி சிரித்தேன்.
4. 24 மணி நேரம் பவர்கட். ஆனால் நீங்கள் செய்வது என்ன?
எங்காவது வெளியே போய்விடுவேன். என்ன இருந்தாலும் இல்லாவிட்டாலும் இருந்துவிடலாம். காற்று இல்லாமல் கம்ப்யூட்டர் இல்லாமல் இருக்கமுடியாது.
5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன?
இருவருமே விட்டுக்கொடுத்து போங்கள். உனக்காக இது செய்தேன், அது செய்தேன் என்று சொல்லிக்காட்டாதீர்கள். மற்றவர் முன் குறை சொல்லாதீர்கள்.
6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
முதலில் நம் கண் முன்னால் நடக்கும் எல்லா பிரச்சனைகளையும் தீர்ப்பேன். பின் காதுகளுக்கு வரும் பிரச்சனைகளை.
7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
முதலில் அம்மா, அப்பா. பின் மனைவி. ஒரு நண்பர் மற்றும் ஒரு நலம் விரும்பி. இத்தனை நாட்களாக இப்படித்தான் செய்கிறேன்.
8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
பொங்கல் தான். மிகப்பெரிய பிரச்சனை ஆக்கிவிடுவேன். இந்த விஷயத்தில் நான் இழந்தவர்கள் ஏராளம்.
9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
அந்த நிகழ்வை அவரால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் என்பதால் சில நாட்களுக்கு (அவருக்கு வாழ்வில் பிடிப்பு வரும்வரை) வெறும் ஆறுதல் மட்டுமே.
10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
கண்டிப்பாக நான் தனியாக இருந்தால் என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறேனோ அவை எதையுமே செய்யமாட்டேன். டிவி, பாட்டு, சாப்பாடு, தூக்கம் என்று பொழுதைக் கழிப்பேன்.
தொடர்பதிவுக்கு அழைத்த அனைவருக்கும் மிக்க நன்றி. இதே பத்து கேள்விகளைக் கேட்டு நானும் சிலரை அழைக்க ஆசைதான். ஆனால் நிறைய பேர் அழைக்கப்பட்டிருப்பதால் கொஞ்சம் குழப்பம். அதனால் யார் யாரெல்லாம் தொடரவேண்டும் என்று விரும்புகிறீர்களோ தொடருங்கள்.
-------------------
அடுத்து வருவது: நான்சி (சிறுகதை)
This entry was posted by school paiyan, and is filed under
தொடர்பதிவு
.You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
ReplyDeleteஇப்படி ஒரு சங்கதி நடக்குத்தா.. ஆமா நானும் பதிவர் தானே.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
உன்னைய நான் கூப்ட்டிருக்கேன். உடனே எழுதுலேய்...
Delete"நடக்குத்து" சீனு...
Deleteவாத்தியாரே, சீனுவுக்கு இதெல்லாம் ஜுஜுபி...
எல்லாம் சரி, ஏன் சிரிச்சீங்கன்னு சொன்னா, நாங்களும் சிரிப்போமில்ல!!
ReplyDeleteஎக்கா நீங்க வேற என்ன ஒரு தொடர் பதிவுக்கு கூப்டீங்க தானே.. அதுவும் மறந்து போச்சு .. # நைட் ஷிப்ட் எபெக்ட் :-)
Deleteபர்ர்ர்ர்வாயில்ல சார். நீங்கலாம் என்னை மாதிரியா!? தொடர்பதிவுக்கு கூப்பிட்ட உடனே எழுத!! ஐ நோ! மிகப்பிரபல பதிவர்லாம் அப்படித்தான் இருப்பாங்க.
Deleteஎக்கா இது கடவுள் கொடுக்கிற வரமா.. :-) எப்புடி.. நாங்கல்லாம் அப்பாவே அப்புடி :-)
Deleteஹா ஹா அக்கா கரெக்டா சொன்னீங்க...
Deleteயாரு ஆரம்பித்து வைத்த பதிவு.. யார் யார் எழுதி இருக்காங்க (தமிழ்வாசி தவிர்த்து)...
ReplyDeleteவித்தியாசமான தொடர் பதிவு..
வழக்கம் போல உங்க ஸ்டைல்ல (கொஞ்சமா) சொல்லிடீங்க...
ஒருவேள உங்கள நான் இன்டெர்வியு எடுத்து இருக்கணுமோ :-)
ஆரம்பிச்சு வச்சது நான் அதில் உங்க வாத்தியாரை பதிவு எழுத அழைப்பு விடுவித்தேன் அவரை பதிவிட்டால் உங்களை எல்லாம் கூப்பிடுவார் என நினைத்தேன். ஆனால் வாத்தியார்கிட்டேயே கேள்வியா கேட்கிற மதுரைத்தமிழா என்று கோச்சுகிட்டு வரவில்லை...
Deleteஇந்த தொடர் வைரஸ் போல மிக வேகமாக பரவி விட்டது
யோவ்... உன்ட்டல்லாம் கோவிச்சுக்க யாராலயாவது முடியுமாய்யா..? நெட் பிராப்ளமாகி பத்து நாளா என்னை சுத்தல்ல விட்டுட்டுது. அம்புட்டுதேங்... இப்ப சீனுப்பயல நான் மாட்டி விட்டுட்டேன்ல...
Deleteசீனு ஆவிக்கெல்லாம் இது சாதாரண மேட்டரு, பாருங்க இன்னும் பத்தே நிமிஷத்துல பதிவு ரெடி....
Deleteஇழந்தாலும் பொங்கல் தானா...? // E போதை - என்பதும் சரி தான்... // ஹிஹி...
ReplyDeleteஉங்க பின்னூட்டம் புரியலை டிடி, விம் பிளீஸ்...
Deleteபத்தாவது கேள்விக்கு கிட்டத்தட்ட உங்களைப் போலத்தான் நானும்.பெருசா பிளான்லாம் பண்ணுவேன். ஆனா, ஒண்ணுமே செய்ய மாட்டேன்.
ReplyDeleteநம்மளை மாதிரி ஆட்கள் எல்லாருமே இப்படித்தான்...
Deleteஎன்னுடைய அழைப்பையும் ஏற்று பதில் தந்தமைக்கு நன்றி. உங்கள் பாணியில் பதில்கள் அனைத்தும் எதார்த்தம்
ReplyDeleteஇதுவே ரொம்ப லேட் சார்....
Deleteசூப்பர்..
ReplyDeleteநன்றி நண்பா...
Deleteஉங்களை மாதிரி எல்லாம் என்னால் சீரியசாய் பதில் தர முடியவில்லேயே ஸ்பை ஜி !
ReplyDeleteத ம 6
ஜோக்காளி சீரியாசாய் பதில் சொன்னால் நல்லா இருக்காது... மிக்க நன்றி...
Deleteபதில்கள் அருமை..யதார்த்தம்.
ReplyDeleteநன்றி கிரேஸ் மேடம்...
Deleteஸ்கூல் பையா நீ பரிட்சையில் பாஸாயிட்ட....
ReplyDeleteஹா ஹா நன்றி மதுரைத்தமிழன்....
Deleteநான் தொடர உன்னை அழைக்கலாம்னு நினைச்சு எழுதிட்டு பாத்தா இங்க பதிவே இருக்குது. மத்தவங்க முந்திட்டாங்க. ஹும்... எல்லாப் பதில்களுக்கும் நல்லாவே பதில் சொல்லியிருக்க பிரதர்....
ReplyDeleteநன்றி வாத்தியாரே....
Deleteஎதற்காக சிரித்தீர்கள் என்று சொன்னால் நாங்களும் சிரிப்போம்ல ?
ReplyDeleteஉஷ்ஷ்ஷ்ஷ்... ரகசியம்....
DeleteDear Spy,
ReplyDeleteI felt that you have given the answers to these questions right from your heart. In fact, the answers are very much realistic without using any flowery language.
Kudos to you sir.
தங்கள் பின்னூட்டம் எனக்கு உற்சாகம் அளிக்கிறது சார்... அது சரி, உங்களுக்கும் நான் ஸ்பையா?
Deleteநன்றாக இருக்கிறது.
ReplyDeleteநானும் பாதி எழுதிட்டேன்.
அடுத்த வலையேற்றம் இது தான்
வேதா.இலங்காதிலகம்.
நன்றி மேடம், வந்து படிக்கிறேன்....
Deleteஅருமையான பதில்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி மேடம்.. உங்களை யாரும் அழைக்கவில்லையா?
Deleteதொடர
ReplyDeleteஅசத்தலான பதில்கள் வாழ்த்துக்கள் சகோதரா .எனக்கும் நீங்கள் நேற்று ஏன் அவ்வாறு வேலைத் தளமே அதிரும்படி சிரித்தீர்கள் என்ற உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவல் வந்து மனத்தைக் குடைகிறதே எங்கள் கேள்விக்குப் பதிலைச் சொல்லி விடுங்கள் சந்தேகம் பொல்லாதது எங்களுக்கு இப்பவே பதில் தெரிஞ்சே ஆகணும் சாமி :))))))))))
ReplyDeleteதனிப்பதிவே எழுதிவிடுகிறேன் சகோதரி.... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....
DeleteNice
ReplyDeleteஎன்ன தம்பி, இன்னும் ஸ்கூல் பயனாகவே பயந்து பயந்து பதில் சொல்லி இருக்கிறீர்களே! காலேஜுக்குப் போக எண்ணம் இல்லையா?
ReplyDeleteகடைசி வரைக்கும் ஸ்கூல் பையன் தான் சார்... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்...
Deleteம்ஹூம்....
ReplyDelete" இன்றைய நவநாகரீக உலகில் எல்லாம் வேகம். ஓடிக்கொண்டே இருப்பதால் சிரிக்க மறந்துவிடுகிறேன். சிரித்ததையும் மறந்துவிடுகிறேன். "
ReplyDeleteவேதனையான உண்மை !
" காற்று இல்லாமல் கம்ப்யூட்டர் இல்லாமல் இருக்கமுடியாது. "
இதுவும் கூட !
" அந்த நிகழ்வை அவரால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் என்பதால் சில நாட்களுக்கு (அவருக்கு வாழ்வில் பிடிப்பு வரும்வரை) வெறும் ஆறுதல் மட்டுமே. "
சத்தியமாய் மனதை தொட்டுவிட்டீர்கள் தோழரே !
எங்களின் அழைப்புக்கு மதிப்பளித்து பதலளித்ததற்கு நன்றி !
( அப்படியே நம்ம பேட்டியையும் படிச்சி புன்னூட்டமிடலாமே... )
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே... தங்களது தளத்திலும் பின்னூட்டமிட்டிருக்கிறேன்....
Deleteஸ்கூல் பையனின் நேர்மையான பதில்களை ரசித்தேன்.. வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி முரளி அண்ணா...
Deleteஅருமை ஸ்பை... 6 வதும். 9 வதும் மிகவும் அருமை நண்பரே
ReplyDeleteநல்ல பதில்கள் ஸ்பை.
ReplyDelete