Nihongo!
Monday, May 05, 2014
Posted by கார்த்திக் சரவணன்
தலைப்பைப் பார்த்துவிட்டு குழப்பத்தில் தலை கிறுகிறுத்து கீழே விழலாமா என யோசிக்கிறீங்களா? மேற்கொண்டு படியுங்கள்.
எனக்கு சிறு வயதிலிருந்தே பிற மொழிகள் கற்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. தமிழ் நன்றாகவும் ஆங்கிலம் ஓரளவும் தெரிந்திருந்து பத்தாம் வகுப்பு முடிந்தபோது ஒரு பக்கம் தட்டச்சும் மறுபுறம் இந்தியும் கற்றுக்கொண்டேன். டிப்ளமா சேர்ந்ததும் கூட இந்தி கற்றுக்கொள்வதை நிறுத்தவில்லை. பிராத்மிக் தேர்வு எழுதி எண்பத்திரண்டு மதிப்பெண்கள் எடுத்தேன், அடுத்த படியான மத்யமா படிக்க ஆரம்பித்தேன். மத்யமா ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே நிறுத்திவிட்டேன். காரணம் இருக்கிறது.
நான் படித்தது டிப்ளமா இன் கமெர்ஷியல் ப்ராக்டிஸ். சுருக்கமாக DCP. மூன்று வருடம் கோர்ஸ் - கிட்டத்தட்ட இளநிலை வணிகவியலுக்கு இணையான படிப்பு. பத்தாம் வகுப்பு முடித்ததும் சேர்ந்தேன், அதுவரை தமிழ் மீடியத்திலேயே படித்திருந்ததால் ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினேன். பின் சுதாரித்துக்கொண்டேன். இந்தப் படிப்பில் ஒரே ஒரு பாடம் மட்டும் Elective. Banking மற்றும் Shorthand. வகுப்பு ஆரம்பித்த முதல் நாள் யார் எந்தப் பாடம் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்ற கேள்விக்கு அனைவரும் Shorthand என எழுதிக் கொடுத்துவிட்டோம். Banking படிப்பதற்கு ஆளில்லாததால் அடுத்த நாளே அந்தப் பாடம் நடத்தும் புரபொசர் எங்களிடம் Shorthand மிகவும் கடினமானது, தினமும் இரண்டு மணி நேரங்கள் ஒதுக்கவேண்டும், மற்ற பாடங்களைப் படிக்கமுடியாது என்று ஏதேதோ கூறி எங்களை மூளைச்சலவை செய்து கிட்டத்தட்ட பாதிப்பேரை பாடம் மாற்ற வைத்துவிட்டார்.அப்படி மாறியவர்களில் நானும் ஒருவன். ஹூம், இப்படி பாடம் மாறாமல் shorthand படித்த மாணவ மாணவியருக்கு அந்த நாளிலிருந்து கொஞ்சம் தலைக்கனம் ஒருபடி ஏறிக்கொண்டது.
அவர்கள் எங்களிடம் பேசுகையில், "உங்களுக்கென்ன? படிச்சதை அப்படியே எழுதினா போதும், நாங்க அப்படியா?" என்று சொல்வார்கள். அதில் ஒரு ஏளனம் இருக்கும். அப்போது எனக்குள் உறங்கிக்கொண்டிருந்த ரோஷக்கார சரவணன் விழித்துக்கொள்ள நானும் படிக்கிறேண்டா shorthand என்று வெளியே தனியாகப் படித்தேன். காரணம் இவ்வளவுதான். டிப்ளமா முடிப்பதற்குள் intermediate வரை முடித்துவிட்டேன். அதன்பிறகு வேலைக்குச் சென்றுவிட்டதால் Higher-க்கு போதிய அளவுக்கு என்னால் பயிற்சி எடுக்க முடியவில்லை. அதனால் Higher எழுதியும் தேர்வாகவில்லை.
சரி, தலைப்புச் செய்திக்கு வருவோம். Nihon என்றால் ஜப்பான், go என்றால் மொழி, நிஹோங்கோ என்றால் ஜப்பான் மொழி என்று அர்த்தம். ஆம், நான் ஜப்பான் மொழி படிக்கிறேன். கடந்த இரண்டு வாரங்களாகத் தான். சீன அல்லது ஜப்பான் மொழி படிப்பதற்கு எனக்கு ஆர்வம் இருந்தது. ஆனால் எந்த வழிகாட்டியும் இல்லாமல் எப்படிப் படிப்பது என்று அதைப்பற்றி நினைத்ததில்லை. மேலும் அலுவலக வேலைகள், குடும்பம் என பல Commitments!. என்னுடைய ஆர்வத்தைக் கண்டறிந்து என்னை ஜப்பான் மொழி படிப்பதற்குத் தூண்டுகோலாக இருப்பவர் பதிவர் அபயா அருணா அவர்கள்.
என்னை உற்சாகப்படுத்தி தன்னம்பிக்கையூட்டி இந்த படிப்பில் சேர வைத்தவர், படிப்பதற்கு உதவுவதாகவும் சொல்லி எனக்குத் தெம்பூட்டியவர். தொலைபேசியில் அவ்வப்போது அழைத்து படிப்பு எப்படி இருக்கிறது எனக் கேட்டுக்கொள்கிறார். இவரது உதவி இல்லையென்றால் கண்டிப்பாக இந்தப் பாடத்தை எடுத்துப் படித்திருக்க மாட்டேன். இதுபோன்ற பல நல்ல விஷயங்களுக்கு உதவியாக இருக்கும் நம் இணைய உலகத்துக்கும் நன்றி சொல்லாமல் இருக்க முடியவில்லை.
அவரது உதவியுடனும் உங்களது ஆசியுடனும் படிக்கத் தொடங்குகிறேன்.
நன்றி.
This entry was posted by school paiyan, and is filed under
Nihongo,
அனுபவம்,
மொழி,
ஜப்பான்
.You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
நீங்கள் எங்கே ஜப்பானிய மொழி கற்றுக்கொள்கிறீர்கள்... சென்னையில் எனக்குத் தெரிந்து ஒருசில இடங்களில் மட்டும்தான் சிறப்பாக சொல்லித் தருவார்கள்...
ReplyDeleteஜப்பானிய மொழி பயில்வது மிகவும் கடினம். பேசுவதற்கு மட்டுமென்றால் ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்தில் கற்றுக்கொள்ளலாம். எழுதுவதற்கு குறைந்தபட்சம் மூன்று வருடங்களாவது தேவைப்படம்.
தோமா அறிகாத்தோ :)
பிரபா,
Deleteசென்னையில் ABK-AOTS என்ற institute-இல் பயில்கிறேன். எழுதப் படிக்கும் விதமாகத்த்தான் கற்றுக்கொள்கிறேன். N5 to N1 மூன்று வருடங்களுக்குள் முடித்துவிட வேண்டும் என்பதே இப்போதிய குறிக்கோள்!
தமிழர்கள் ஜப்பானிய மொழியை எளிதில் கற்றுக் கொள்வதாக அண்டை மாநில நண்பர்கள் கூறுவதுண்டு. காரணம் தமிழுக்கும், நிஹாங்கோ இலக்கணத்துக்கும் பெரும் ஒற்றுமை உண்டென்றும் தமிழ் வாக்கிய அமைப்பை அப்படியே சொல்லுக்கு சொல் மொழிபெயர்த்தாலும் வழுவின்றி இருக்கும் எனக் கேள்விப்பட்டுள்ளேன்.
Deleteஉண்மைதான் நண்பரே, தமிழில் கடினமான சொற்கள் அதிகம். அவற்றையெல்லாம் கற்றிருக்கும் நமக்கு எந்த மொழியையும் கற்கும் திறமை அதிகமே என்று வகுப்பில் ஆசிரியர் சொன்னார்.
Deletevazthukkal sir. japan mozi katru athai patri sila pathivukal ethirparkkirom sir.
ReplyDeleteஹா ஹா, அட... இப்படிக்கூட பதிவெழுதலாமே... வாழ்த்துக்கு மிக்க நன்றி மகேஷ்...
Deleteரோஷக்கார சரவணனை ஊக்கப்படுத்தி தொடரும் பதிவர் அபயா அருணா அவர்களுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி தனபாலன் அண்ணே...
Deleteஒரு பக்கம் ஷார்ட்ஹேண்ட், ஒரு பக்கம் ஹிந்தியா? ஸபையின் இடதுபக்கத்துக்கு ஷர்ர்ட்ஹேண்டும் வலது பக்கத்துக்கு ஹிந்தியும தெரியுமா... இல்ல....இடதுபக்கத்துக்கு ஹிந்தியும் வலதுகக்கத்துக்கு ஷார்ட்ஹேண்டும் தெரியுமா...? கன்ப்யூஷன்.
ReplyDeleteஅப்புறம்... புதிய மொழி கற்றுக் கொள்வதற்கு நல்வாழ்த்துகள். (நான் முதல்ல ஸ்ரீயின் மொழியக் கத்துக்கிட்டு அப்றம் உங்கட்ட ஜப்பானிய மொழி படிச்சுக்கறேன்.)
அழகான பகிர்விற்கு...
感謝
Kansha
ஹிந்தி கற்றுக்கொண்டு பல வருடங்கள் ஆனதால் மறந்துவிட்டது. இருந்தாலும் எழுதப் படிக்கத் தெரியும். ஸ்ரீயின் மொழியைப் புரிந்துகொள்ள அவளுடைய அம்மாவுக்கு மட்டுமே இப்போது சாத்தியம். வாழ்த்துக்கு வாத்தியாரே...
Deleteபல மொழிகளையும் கற்றுக் கொள்ளும் இந்த ஆர்வம் என்றென்றும்
ReplyDeleteதங்களுக்குத் துணை நிற்க எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றி பெற
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்புச் சகோதரா .
நன்றி சகோதரி...
Deleteதலைப்ப பார்த்ததும் எதோ உலக சினிமா விமர்சனம்ன்னு நினைச்சேன்...
ReplyDeleteநேற்றுதான் வாத்தியார் சொன்னார் நீங சப்பானிய மொழி படிக்கிறதா.. இப்படி படிச்சிட்டே இருந்தா ஸ்கூல் பையன் தான... அப்புறம் என்ன :-)
இந்த ஓட்ராயிங்க ஓட்ராயிங்கன்னு சொல்றீங்களே அது சத்தியமா என்ன இல்ல தான :-)
எனக்கு இப்போதைக்கு ஆங்கிலம் அப்புறம் ஹிந்தி கத்துக்கணும்னு ஆசை, தென் தென் இந்திய மொழிகள் அத்தனையையும் சரளமா பேச கத்துக்கணும்... குறைந்தபட்சம் ஆவிய விட நல்ல மலையாளம் பேசணும் :-)
உலக சினிமா விமர்சனம் எழுதும் அளவுக்கு நான் இன்னும் முன்னேறலை சீனு. ஒட்ராயிங்க ஒட்ராயிங்கன்னா ஓட்டிட்டுப் போகட்டும்.
Deleteஇன்னும் எத்தனை நாளைக்கு ஸ்கூல் பையனாகவே இருக்க உத்தேசம் ?
ReplyDeleteத ம 5
நானும் சீக்கிரம் காலேஜ் போகணும்னு பாக்கறேன், மறுபடியும் முதல்லருந்து ஆரம்பிக்கிறேன்....
Deleteநல்ல முயற்சி
ReplyDeleteநிச்சயமாக தங்கள் மூலம் ஜப்பான் மொழியிலுள்ள
சிறந்த படைப்புகளை தமிழில் தருவீர்கள் என்கிற
நம்பிக்கை இருக்கிறது
தொடர வாழ்த்துக்கள்
நன்றி ரமணி ஐயா...
Deletetha.ma 6
ReplyDeleteதமிழ்மண வாக்குக்கு மிக்க நன்றி ரமணி ஐயா...
Deleteநானும் டிப்ளமா இன் கமெர்ஷியல் ப்ராக்டிஸ் படிக்க ஆரம்பிச்சுப் பாதியிலே நிறுத்தும்படி ஆச்சு. கிட்டத்தட்ட பி.காம். படிப்புக்கு இணை. ஷார்ட்ஹான்ட், டைப்பிங் தனியாத் தான் படிச்சேன். தமிழ், ஆங்கிலம் தட்டச்சு, ஷார்ட்ஹான்ட் இதோடு கமெர்ஷியல் ப்ராக்டிஸில் எட்டு பேப்பர்கள். பாங்கிங் தான் கொஞ்சம் உண்மையிலேயே கஷ்டமா இருந்தது. :))))
ReplyDeleteஅட, நீங்களும் DCPயா? சில விஷயங்களை பொதுவில் பகிரும்போது தான் நிறைய தெரிந்துகொள்ள முடிகிறது.
Deleteஷார்ட்ஹான்ட் மிக எளிது. ஆனால் தினம் இரண்டு மணி நேரம் ஒதுக்கவேண்டும். பாங்கிங் வெறும் தியரிதான்.
அட??? போயிருக்கே! :)))))
ReplyDelete:)
Deleteஜப்பான் மொழியைச் சிறப்பாகக் கற்றுத் தேற வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி மேடம்...
Deleteஎனக்கும் இப்படி சில ஆர்வங்கள் உண்டு! ஆனால் அரை குறையாக அவை அடிக்கடி மரித்துப்போகும். புதிய மொழி கற்பதற்கு வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ் அண்ணா...
Deleteநானும் டைப் ரைட்டிங் லோயர் பாஸ்...ஷார்ட் கென்ட் படித்தேன் சும்மாவே என் எழுத்து கிறுக்கலாக இருக்கும் ஷார்ட் கென்ட் ரொம்ப கிறுக்கல் அதனால் பரிச்சை எழுத விடவில்லை ..உங்கள் பதிவு என் பழைய நினைவை அசைபோட வைத்து அண்ணேன் ...நன்றி
ReplyDeleteபழைய நினைவுகளை அசைபோடவைத்ததா! அந்த அண்ணே மட்டும் வேண்டாமே... மிக்க நன்றி...
Deleteவாழ்த்துக்கள் ஸ்பை.
ReplyDeleteமிக்க நன்றி சார்...
Deleteஒன்றிற்கும் மேற்பட்ட மொழிகள் அறிந்தவர்களுக்கு சிந்திக்கும் திறன் மற்றும் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும் என்று ஆய்வு கூறுகிறது, அதனால் தான் இளவயதிலேயே குழந்தைகளுக்கு தாய்மொழி தவிர்த்தும் பிற மொழி கற்றுக்கொடுப்பது சிறந்தது. ஜீ உலகில் கடினமான மொழி சைனீஸ், அதை பேச மட்டுமாவது கற்றுக்கொள்ள வேண்டும்.
ReplyDeleteகரெக்ட் நண்பா, உலகின் மிக கடினமான மொழி சீனமொழி என்று சொன்னார்கள். ஜப்பான் மூன்றாவது இடத்திலாம். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...
Deleteசரியான விஷயம்தான் அதான் ஸ்கூல்பையன் அப்படின்றத விட்டு வெளிய வரமாட்டீங்க போல! ஆனா வாழ்க்கைல நாம எல்லாருமே ஸ்கூல் பையன்கள்தான். தினமும் ஏதாவது ஒரு விஷயம் கற்றுக் கொண்டுஇதானே இருக்கின்றோம்! கற்றலுக்கு முடிவே இல்லை!நுங்கம்பாக்கத்தில் நல்ல ஒரு பயிலகம் இருக்கிறது!
ReplyDeleteதங்கள் ஜப்பானிய மொழி கற்றலுக்கு எங்கள் வாழ்த்துக்கள்! Subete no saiko
ஹா ஹா,, மிக்க நன்றி சார்...
Deleteசூப்பர்..எனக்கும் இந்த மாதிரி கற்று கொள்ள ஆசை. உங்கள் எண்ணம் நிறைவேறட்டும். ஜப்பான் மொழி ரொம்ப நாள் ஜெயா டிவியில் மதியம் கற்று தருவார்கள்.ஙேன்னு பார்த்ததுண்டு.என் பையன்கள் இருவரையும் ஹிந்தி தான் கற்று கொள்ள வேண்டும் என்று K.Vயில் படிக்க வைத்தேன். இரண்டும் ஹிந்தியில் பொழந்து கட்டுங்க.சமஸ்ஹிருதம் பெரியவன் படித்தான். அவனே ஜெர்மனி காலேஜில் படித்தான். சின்னவன் ஃப்ரெஞ்ச் +1,+2 காலேஜில் கற்று கொண்டான். அதில் சர்டிஃபிகேட் வாங்குகண்ணா கேட்க மாட்டேங்குதுங்க.நானும் மத்யமா வரை இரண்டையும் ஸ்கூல் அனுப்பிட்டு கத்து கொண்டேன். அந்த டீச்சர் கல்யாணம் ஆகி போனதில் ஹிந்தி என்னிடமிருந்து அதன் பிறகு தப்பித்து கொண்டது. பல்லாவரத்தில் இருப்பதால் இந்த மாதிரி க்ளாஸ்களுக்கு சிட்டி போய் வருவது மிக பெரிய வேலை என்பதால் கத்து கொள்ள முடியாமல் போய் விடுகிறது. all the best...
ReplyDeleteபுள்ளங்களுக்கு தமிழ் தெரியுமா? ஏன்னா நான் இங்க வெளி மாநிலத்தில் பையன கேவில படிக்க வைச்சிட்டு தமிழ் தெரியாமப்போகும் எதிர்காலத்தை நினைத்து கவலையா இருக்குது.
Deleteஉண்மைதான், இருவரிடமும் சர்டிபிகேட் வாங்கச் சொல்லுங்கள். திடீரென்று உங்களுக்கே ஒரு நாள் தேவைப்படும். நன்றி..
Deleteசதீஷ் செல்லதுரை,
Deleteஎங்க குழந்தைகளும் கேவி ஸ்கூல் தான். தமிழ் பேச மட்டும் தான் தெரியும், :( முழுக்க முழுக்க வடமாநில வாழ்க்கையில் தமிழ் கற்றுக் கொடுத்தும் அவர்களுக்கு மனதில் பதியவில்லை. எப்படியானும் முயன்று கற்றுக் கொடுத்துவிடுங்கள்.
அமுதா கிருஷ்ணா, பல்லாவரத்திலேயே தக்ஷிண் பாரத் ஹிந்தி பிரசார சபாமூலம் கற்றுக் கொடுப்பவர்கள் இருப்பாங்க. பாருங்க. ஆனால் அந்த ஹிந்திக்கும், கேந்திரிய வித்யாலயாவின் ஹிந்திக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஆகவே நீங்க மத்திய அரசின் பாடத்திட்டத்தில் உள்ள கோர்ஸ் எதிலானும் சேர்ந்து தபால் மூலம் ஹிந்தி கற்றுக்கொள்ளலாம். இந்த முறையில் ஆடியோ டேப்களும் உண்டு. அதோடு பாடம் சந்தேகம் எல்லாம் உங்க பிள்ளைகளிடம் கேட்டுக்கலாம். தக்ஷிண் பாரத் ஹிந்தி பிரசார சபாவில் நோட்ஸை வைத்துக் கொண்டே மனப்பாடம் பண்ணி எழுத வைக்கிறாங்க. உச்சரிப்பும் சரியாக இருக்காது.
ReplyDeleteநான் தனியாக டியூஷன் சென்று படித்ததால் தக்ஷின் பாரத் சபாவில் எப்படிக் கற்றுக்கொடுக்கிறார்கள் என்று தெரியாது.
Deleteதக்ஷிண் பாரத் சபாவின் அங்கீகாரம் பெற்ற ஹிந்தி ஆசிரியர்கள் தனியாக அவங்க அவங்க வீட்டிலேயோ அல்லது வேறு ஏதானும் இடங்களிலேயோ சொல்லிக் கொடுப்பாங்க ஸ்கூல் பையர். தக்ஷிண் பாரத் ஹிந்தி பிரசார சபாவின் அங்கீகாரம் இல்லாமல் அந்த ஆசிரியர் ப்ராத்மிக், மத்யமா, ராஷ்ட்ரபாஷா, ப்ரவேஷிகா, விஷாரத், ப்ரவீன் போன்ற அனைத்துப் பரிக்ஷைகளுக்கும் மாணாக்கர்களை அனுப்ப முடியாது. விஷாரத் உத்ரார்த முடிச்சாலே சபாவில் பதிவு செய்து கொண்டு ஆசிரியராகலாம். நான் இதுவும் படிச்சேன். மத்திய அரசால் நடத்தப்படும் போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா கோர்ஸும் முடிச்சேன். மத்திய அரசால் இப்போவும் நடத்தறாங்களானு தெரியலை.
Deleteஇனிய வாழ்த்துக்கள் ..கற்றலே இன்பம்...அதை அனுபவித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி எழில் மேடம்...
Deleteபடியுங்க,படியுங்க!கற்றுக் கொள்ள வயது தடையே இல்லை!!!
ReplyDeleteநன்றி அண்ணே...
DeleteWelldone!
ReplyDeleteがんばって ください
ஆ, இப்போவே டியூஷன் ஆரம்பிச்சிட்டீங்களா!
Deleteவாழ்த்துகள் ஸ்.பை.
ReplyDeleteஉங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள் ! " ஸ்கூல் பையன் " ... லேசா புன்னகைக்க வைக்கிற பெயர்... யோசிச்சி பார்த்தா... வாழ்க்கைங்கற ஸ்கூல்ல நாம எப்போதுமே பையங்க தானே ?!
ReplyDeleteஹா ஹா... கரெக்ட் தான் நண்பா.... வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி...
Deleteஎனக்கு என்னானா இனிமே ஜப்பானீஸ்ல திட்டுவிங்களோன்னு டர்ரா இருக்குது
ReplyDeleteஹிஹி.... ஐடியாவுக்கு மிக்க நன்றி...
Deleteஜப்பானில் கல்யாண ராமன் மாதிரி இனி ஜப்பானில் இஸ்கூல் பையரா ? ரசினி க்கு போல இமைக்கும் சப்பான் விசிறிகள் அதிகமாகிவிட்டார்களோ ?
ReplyDeleteவாழ்க்கை முழுதும் ஏதோ ஒரு
Vaalthukkal sir
ReplyDeleteகற்றுக்கொள்வதில் உங்களுக்கு இருக்கும் ஆர்வத்திற்கு பெரிய சல்யூட்!
ReplyDeleteநானும் சுருக்கெழுத்து கற்றுக் கொண்டவள் தான். நேரம் இருக்கும்போது எனது இந்தப் பதிவைப் படியுங்கள்.
http://wp.me/p244Wx-uQ
உங்கள் எல்லா முயற்சிகளும் சிறக்க வாழ்த்துகள்!