பிறந்த நாள் Surprise!
Wednesday, May 14, 2014
Posted by கார்த்திக் சரவணன்
அலுவலக நண்பர் ஒருவருக்கு பிறந்த நாள். இன்றல்ல, ஏப்ரல் 22ஆம் தேதி. நண்பர்களின் பிறந்த தினம் என்றால் அலுவலக கேண்டீன் அல்லது வராண்டாவில் வைத்து நெருங்கிய நண்பர்கள் மட்டும் புடைசூழ கேக் வெட்டுவது வழக்கம். வேறு யாருக்கும் சொல்லிக்கொள்வதில்லை. அன்றும் அதேபோல் தான் அரங்கேறியது. கடந்த மூன்று வருடங்களாக இதையே நாங்கள் செய்வதால் பிறந்தநாள் காண்பவருக்கு surprise என்பது இல்லாமலே போய்விட்டது. அதற்கு முன்னால் ஒரு விஷயம். எனது நெருங்கிய நட்பு வட்டத்தில் எனக்குத்தான் முதல் பிறந்த நாள். ஏப்ரல் பதினேழு, அடுத்ததாக ஏப்ரல் இருபத்திரண்டு, மே ஏழு, ஒன்பது மற்றும் இருபத்தேழு. என்னுடைய பிறந்த நாளை யாரும் கண்டுகொள்வதே இல்லை. காரணம் யாருக்கும் ஞாபகம் இருப்பதில்லை. புது வருடம் தொடங்கி முதல் பிறந்த நாள் என்னுடையது என்பதாலோ என்னவோ. நானும் என் பிறந்த நாளன்று அதிகம் propoganda செய்வதில்லை. அதிலும் எனக்கு விருப்பமும் இல்லை. இவர்களெல்லாம் நெருங்கிய நண்பர்களா என்று திட்டுகிறீர்களா? திட்டிக்கொள்ளுங்கள்.
இந்த வருடமும் எனது நண்பர்கள் வழக்கம்போல எனது பிறந்த நாளை மறந்திருந்தனர். பரவாயில்லை. ஏப்ரல் இருபத்திரெண்டாம் தேதி பிறந்த நாள் காணும் நண்பரை வழக்கம்போல் வெறும் கேக் வெட்டச் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. கேக் வெட்டப்போகிறோம் என்பதை அவர் எதிர்பார்த்திருப்பார். ஒரு surprise கொடுக்கலாம் என்றெண்ணி மற்ற நண்பர்கள் அனைவரும் கூடிப் பேசி நல்லதாக ஒரு டி-ஷர்ட் ஒன்றை எடுத்துக்கொடுத்தோம். பளபள பேப்பரில் அழகாக பேக் செய்து கொடுத்தோம். இதை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. வீட்டுக்குப் போய் பார்த்துவிட்டு ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக sms அனுப்பி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.
அடுத்ததாக மே ஏழாம் தேதி பிறந்த நாள் காணும் நண்பர். அவர் எங்களது உயரதிகாரிக்குச் செல்லப்பிள்ளை. ஆக, அவரது அறையிலேயே கேக் வெட்டி, அவரது கையாலேயே பரிசையும் கொடுக்கவைத்து அசத்திவிட்டோம். அதிமுக்கிய வேலையிலும் இதற்காக பத்து நிமிடம் ஒதுக்கிக்கொடுத்தார் எங்கள் மேலாளர். இதை எதையும் எதிர்பாராத அந்த பிறந்தநாள் குழந்தைக்கு வாயெல்லாம் பல்.
மே ஒன்பதாம் தேதி பிறந்த நாள் காணும் நண்பருக்கு என்ன சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என்று ஏற்கனவே தீர்மானித்திருந்தேன். அதை மற்ற நண்பர்களிடமும் சொல்லியிருந்தேன். அவர் ஒரு நாள் என்னிடம் ஒரு விஷயத்தை உளறியிருந்தார். அதாவது போன வருடம் அவரது பிறந்த நாள் வந்தபோது அவரது மனைவி (அப்போது திருமணம் ஆகியிருக்கவில்லை) ஏதோ ஸ்பெஷல் கொரியர் மூலம் பூங்கொத்து கொடுத்து அனுப்பியிருந்தார். காலை ஆறு மணிக்கே காலிங் பெல் அடித்த நபர் அதைக் கொடுத்துவிட்டு வாழ்த்து சொல்லியிருக்கிறார். அடுத்த இரண்டு நிமிடத்தில் அவரது மனைவியிடமிருந்து போன். சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும் என்று என்னிடம் அன்றே சொல்லி சிலாகித்திருந்தார். இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும், இந்த நண்பருக்கு என்ன சர்ப்ரைஸ் கொடுக்கப் போகிறோம் என்று.
காலை ஆறரை மணிக்கே நானும் தரமணியிலிருக்கும் நண்பர் ஒருவரும் இவரது வீட்டுக் கதவைத் தட்டினோம். அப்போதுதான் அனைவரும் எழுந்திருந்தனர். கையேடு பூங்கொத்தையும் கொடுத்து கேக்கையும் வெட்டினோம். முதல் நாள் இரவு பன்னிரண்டு மணிக்கு கேக் வெட்டியிருந்தார்கள். இது இரண்டாவது. சொன்னது போலவே மற்ற நண்பர்கள் அனைவரும் ஒவ்வொருவராய் போனில் வாழ்த்து சொல்ல, நண்பருக்கு குஷி. கூடுதல் சர்ப்ரைசாக அவரது அக்கா, தங்கை, அவர்களது குழந்தைகள் என ஒவ்வொருவராக ஆளுக்கொரு பரிசு தந்து அசத்தினர். கேக் சாப்பிட்டு, காபி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டோம்.
எப்போதும் அலுவலகத்துக்கு சாப்பாடு எடுத்துச் செல்வது வழக்கம். இன்று தரமணி நண்பருக்கும் சேர்த்து செய்யச்சொல்லியிருந்தேன். நங்கள் வீட்டுக்கு வரும்போது என் மனைவி அதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தாள். அந்த நண்பரை நீ வீட்டுக்குப்போய் சாப்பிட்டுக்கொள் என்றா சொல்ல முடியும்? அதனால் காலை உணவாக எங்கள் இருவருக்கும் சுடச்சுட தோசையும், மதிய சாப்பாடும் செய்துதரச் சொல்லியிருந்தேன்.
நாங்கள் அலுவலகத்துக் கிளம்புகையில் என் மனைவி என்னிடம் ஒன்றே ஒன்றை மட்டும் கேட்டாள். "நானும் எத்தனை வருஷமா கேட்டுக்கிட்டிருக்கேன், எனக்கும் சர்ப்ரைஸ்னா ரொம்பப் பிடிக்கும். எந்த பிறந்த நாளுக்காவது எனக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கீங்களா?" எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. சுதாரித்துக்கொண்டு சொன்னேன், "இந்த வருஷம் ஆகஸ்ட் மாசம் உன் பிறந்த நாள் வருதுல்ல, அப்போ சர்ப்ரைஸ் வரும். எதிர்பார்த்திரு".
This entry was posted by school paiyan, and is filed under
அனுபவம்
.You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
ஆகஸ்ட் மாசம் சர்ப்ரைஸ் வரும்னு சொல்லி ஒரு எக்ஸ்பெக்டேஷன் உண்டாக்கி விட்டுட்டு அப்புறம் அதெப்படி சர்ப்ரைஸ் ஆகும்.. வழக்கமான உங்க மௌனப் புன்னகையோட வெளியே போயிருந்தா சர்ப்ரைஸ் இருந்திருக்கும்.. என்ன சார் நல்ல சீனை கெடுத்துட்டீங்களே..
ReplyDeleteஆகஸ்ட்டுக்கு இன்னும் 90 நாள் இருக்கே... அதுக்குள்ள இப்ப பேசினதை மறந்துருவாங்கறது சைகாலஜி ஆவி. டோண்ட் வொர்ரி.
Delete//மௌனப் புன்னகையோட//
Deleteஎன்னை நல்லா நோட்டம் விட்ருக்கீறு வோய்....
மறக்க மாட்டாங்க வாத்தியாரே...
Deleteஆவி! நாங்களும் கிட்டத்தட்ட இதையே தான் சொல்லியிருக்கோம்! சர்ப்ரைஸ் இப்ப 'ஸ்'நு ஆகிப் போச்சு!
Deleteஎனக்கும் கூட என்னுடைய எந்தப் பிறந்த தினத்தையும் கொண்டாடியதாக நினைவில் இல்லை. அதே மாதிரி பரிசுகளும் வருவதில்லை என்பதால் எதிர்பார்ப்பில்லை. கடைசிப் பாரா மனதைத் தொட்டது ஸ்.பை. பல சந்தர்ப்பங்களில் இப்படித்தான் வெளியில் இருக்கும் அனைவரையும் கவனித்து நல்ல பெயர் எடுக்கும் நாம், வீட்டில் கப் வாங்கி அசடு வழிய நேரிடுகிறது. இந்த முறை அவங்களை அசத்திரலர்ம்.
ReplyDeleteஹா ஹா... ஆமாம் வாத்தியாரே!
Deleteஹா ஹா ஹா.. உங்க பதிவ படிக்க மாட்டாங்கன்ன்ற தைரியத்துல என்ன வேணா எழுதுவீங்களா.. இருங்க இருங்க சொல்லி கொடுக்கேன்..
ReplyDeleteஆமா ஆகஸ்ட்ல என்னிக்கு
ஆகஸ்ட் 9ம் தேதி சீனு!
Deleteகண்டிப்பா படிப்பாங்க சீனு... தெரிஞ்சே தான் எழுதியிருக்கேன்...
Deleteஹா ஹா... சீனுவை விட ஆறு வருஷம் ஏழு நாள் முன்னாடி வாத்தியாரே...
Deleteஆவியை வழி மொழிகிறேன்...இல்லன்னா பரிசு பிரம்மாண்டமா இருக்கணும்...
ReplyDeleteபிரம்மாண்டமாவா... அப்ப பிரபாவுக்கு ஒரு யானையை வாங்கி பரிசாக் கொடுத்துரலாமா தீ.வா.?
Deleteபிரம்மாண்டமாவா! யோவ் தீவிரவாதி, ஏதாவது சொல்லி ரொம்ப பெரிசா எதிர்பார்க்க வச்சிராதீங்க...
Deleteவாத்தியாரே, ஹா ஹா...
Deleteநீங்களே சர்ப்ரைஸ் தான்... தனியாக எதற்கு சர்prize...? ஹிஹி...
ReplyDeleteO tanjobi omedetho gozaimasu! In Japanese for birthday GREETING
ReplyDeleteநல்லவேளை... இங்கிலீசு டிரான்ஸ்லேஷன் குடுத்தீங்க அபயா அருணா... இல்லாங்காட்டி ஸ்.பை.ய நீங்க திட்டுறீங்களோன்னு நெனச்சிருப்போம்.
Deleteஉங்க மனைவி கொடுத்த பஞ்ச் பிரமாதம். தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள் உங்களுக்கு. முன் கூட்டிய வாழ்த்துகள் உங்கள் மனைவிக்கு.
ReplyDeleteஎனக்கு மூணு பிறந்த நாள் வரும். ஹிஹிஹி, பாஸ்போர்ட், எஸ்.எஸ்.எல்.சி. சர்டிஃபிகேட் படி ஒண்ணு. நக்ஷத்திரப் பிறந்த நாள் ஒண்ணு. ஆங்கிலப் பிறந்த தேதி சரியானது ஒண்ணு. முப்பெரும் விழாவாகக் கொண்டாடிடுவேன். :))))))
ReplyDeleteஎன் பெரிய மகனின் பிறந்தநாளுக்கு அவன் நண்பர்கள் இதுபோல சர்ப்ரைஸ் கொடுத்தார்கள். இளைய மகனின் நண்பர்கள் இன்னும் சர்ப்ரைஸ். இரவு 12 மணிக்குக் கதவைத் தட்டி அன்புத் தொல்லை கொடுத்தனர்!
ReplyDeleteஎனக்கு பிறந்த நாள் ஓன்று இருப்பதே திருமணம் ஆனப்பிறகே மனைவி வந்து கொண்டாடியப் பிறகே தெரியும்......அவர்கள் மகிழ்ச்சிக்காக நானும் மகிழ்வாய் கொண்டாடுகிறேன் நல்ல பதிவு...அனுபவம்
ReplyDeleteஆவியின் கருத்தே என்கருத்து! சொல்லி இருக்க, கூடாது உங்கள் துணைவி கேட்டது நல்ல கேள்வி!
நாங்களும் மறக்காம இருக்கோம், நீங்க என்ன சர்ப்ரைஸ் கொடுத்தீங்கன்னு தெரிஞ்சுக்க!
ReplyDeleteYengalai thitta sollitengale sirrrrrrrr.....paravaella....Post arumai ah iruku... Padika santhosama iruku......
ReplyDeleteஅதானே!!! ஊராருக்கு எல்லாம் சர்ப்ரைஸ் கொடுக்கத் தெரியுது, மனைவிக்கு கொடுக்கத் தெரியலையா. இதை நான் தங்கள் மனைவியின் அண்ணனாக இருந்து வன்மையாக கண்டிக்கிறேன்.
ReplyDeleteஹஹஹா
ReplyDeleteகடைசி சிலவரிகள் ரொம்பவே யோசிக்க வைத்தது! வெளியில் நிறைய பேருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் நாம் வீட்டில், அம்மா, அப்பா, மனைவி போன்றோருக்கு ஒரு சன்ரைஸாவது கொடுக்கலாம்! நிறைய யோசிக்க வைத்த பதிவு! நன்றி!
ReplyDeleteகண்டிப்பாக வீட்டில் உள்ளோருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கலாம்
ReplyDeleteநல்லா தெரியுமா!? ஆகஸ்ட்லதான் “அவங்க” பர்த்டே வருதுன்னு!!
ReplyDeleteகடைசி பத்தியினால் பதிவே ஒரு அருமையான சிறுகதை ஆகிவிட்டது.
ReplyDeleteஅடப்பாவி மனுஷா!வீட்டுக்குள்ள குப்ப கொட்டிட்டிருக்குற பொண்டாட்டிக்கு சர்ப்ரைஸ் குடுக்காம??????????
ReplyDeleteநகைச்சுவையாக ஆரம்பித்து நிறைய சிந்திக்கவைத்துவிட்டீர்கள் !
ReplyDeleteநமக்காக, இல்லையில்லை நமக்காகவே வாழ்பவர்களை அடிக்கடி மறந்துதான் விடுகிறோம் ! மறதி என்பதைவிட நம்முடன் வாழ்பவர்களை பொறுமையாக கவணித்துகொள்ளலாம் என்ற செல்ல உரிமையாகவும் கொள்ளலாம் !!
அதுசரி, " நானே உனக்கொரு சர்ப்ரைஸ்தானே " அப்படின்னு மடக்கியிருக்கலாம்ல... ( குடும்பத்துக்குள்ள குழப்பத்தை உண்டு பண்ண உக்காந்து யோசிப்பாய்ங்களோன்னு நீங்க நினைக்கறது காதுல விழுதண்ணே ! )
எனது புதிய கட்டுரை : நம்மால் முடியும் !
http://saamaaniyan.blogspot.fr/2014/05/blog-post.html
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
முடித்த விதம் அருமை ஸ்.பை.
ReplyDeleteஎன் கதை இன்னும் மோசம் - நமக்கு இந்த பிறந்த நாள், திருமண நாள் எல்லாமே நினைவில் இருப்பதில்லை. ஆதி தான் எல்லா நாட்களையும் நினைவூட்டுவார்..... :)
நல்ல பரிசாக வாங்கிக் கொடுத்துடுங்க....
கடைசி பாரா ட்விஸ்ட் சூப்பர்...
ReplyDeleteநல்ல விஷயம்..
http://www.malartharu.org/2014/02/eppadiyum-sollalm-era-edwin.html
கடைசில உங்க மனைவ் சொன்னாங்க பாருங்க அதுதாங்க இங்க பஞ்ச்! செம வழிசலோ?!!!!! ஆமா! அதென்னங்க! சர்ப்ரைஸ் கூட சொல்லிட்டீங்க?!! சொல்லாம வேறு ஏதாவது சொல்லி சமாளித்துவிட்டு....பின்னர் மறக்காமல் சர்ப்ரைஸ் கொடுக்க ப்ளான் செய்திருக்கலாமே தங்கள் மனைவிக்கு! த்ரில் போயிருக்குமோ அவங்களுக்கு?!!!
ReplyDeleteவாழ்த்துகள் நண்பா!
ReplyDeleteமோகனாவின், மோகினியாட்டம்.
ReplyDeleteவாழ்க பல்லாண்டு பையா....
Killergee
www.killergee.blogspot.com