தாத்தா
Monday, January 27, 2014
Posted by கார்த்திக் சரவணன்
என் தாத்தாவை எனக்கு எப்போதிலிருந்து பரிச்சயம் என்று தெரியாது. ஆனால் அம்மா சொல்லுவார், நான் பிறந்ததும் முதல்முறையாக என் தாத்தாவின் கையில் தான் கொடுக்கப்பட்டேன் என்று. என்னைக் கையில் வாங்கியதும், "பேரப்புள்ள" என்று மகிழ்ந்து கொஞ்சியவர். அவருடைய மகிழ்ச்சிக்கு நான் தான் முதல் பேரக்குழந்தை என்பது கூட காரணமாக இருக்கலாம்.
தாத்தாவின் பெயர் ரெங்கநாதன். ஊரில் எல்லோரும் அவரை ரெங்கநாத xxxxxx என்று சாதியையும் சேர்த்து அழைப்பார்கள். சிறு வயதில் என்னை எங்காவது கூட்டிச்சென்றால் இது என் மகபுள்ள பேரன் என்று பெருமை பொங்கச் சொல்லுவார். என் அம்மா மட்டும்தான் அவருக்கு ஒரே பெண், மற்றும் மூன்று ஆண்கள் (எனது தாய்மாமன்கள்). என் அம்மாவை அவருக்கு மிகவும் பிடிக்கும் - ஒரே பெண் என்பதால் மட்டுமல்ல, அதிர்ஷ்டம் நிறைந்த பெண்ணாக அவர் கருதியதால். காரணம் என் அம்மா பிறந்த அன்று தான் அவருக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டது. அவரே சொல்லுவார், "வேலை முடிஞ்சு கிளம்பிக்கிட்டிருந்தேன், மேஸ்திரி வந்து மேனேஜர் உன்னைக் கூப்பிட்டார்னு சொன்னாரு, போய்ப் பாத்தா இன்னிலேருந்து உனக்கு வேலை பெர்மன்டு-னு சொன்னாரு. வீட்டுக்கு வந்தா ஆச்சிக்கு இடுப்பு வலின்னு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போய்ட்டாங்க. ஆஸ்பத்திரிக்குப் போனா, உங்கம்மா அழுதுக்கிட்டிருக்கா" என்பார்.
தாத்தா மிகவும் தைரியசாலி. பிரச்சனை என்றால் அடிதடிக்கு பயப்படமாட்டார். அதேபோல் அவருடைய வாதமும் சரியாக இருக்கும், யாராலும் மறுத்துக் கூறமுடியாது. ஒருமுறை ஸ்கூலில் வாத்தியார் ஒருவர் என் அம்மாவை அடித்துவிட வெகுண்டு எழுந்த என் தாத்தா அவரை ஓட ஓட விரட்டி அடித்தார். அவர் பெயர் குற்றாலம். பயந்து ஓடிய அவர் வகுப்பறையின் உள்ளே சென்று தாளிட்டுக்கொண்டார். பின் என் தாத்தாவை தலைமை ஆசிரியரும் சக ஆசிரியர்களும் சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.
வீட்டின் முற்றத்தில் கயிற்றுக்கட்டில் ஒன்றும் நீளமான பெஞ்ச் ஒன்றும் எப்போதும் இருக்கும். மாலை நேரங்களில் தாத்தா அவருடைய நண்பர்களுடன் அங்கு அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருப்பார். சில நேரங்களில் அரட்டை புதிய தொழில் தொடங்குவது, நிலம் வாங்குவது போன்ற முக்கிய முடிவு எடுக்கக்கூடிய அளவுக்குப் போய்விடும். அப்போது அவர், "ஏல, சம்முவலெச்சிமி" என்று என் அம்மாவை அழைத்து, "நான் கேக்கிறதுக்கு சரி வேண்டாம்னு மட்டும் பதில் சொன்னா போதும்" என்று சொல்லி அவர்கள் செய்த முக்கிய விவாதங்களையும் எடுத்திருக்கும் முடிவுகளையும் சொல்லி, "தாயீ என்ன சொல்லுத?" என்று குறி கேட்பார். என் அம்மாவோ விபரம் புரியாத வயதில் சரி என்றோ வேண்டாம் என்றோ மாற்றி மாற்றி சொல்லிவிடுவார். என் தாத்தா எடுக்கும் முடிவுகளும் அவ்வாறே இருக்கும்.
நான் இரண்டாம் வகுப்போ மூன்றாம் வகுப்போ படித்துக் கொண்டிருக்கும்போது தான் தாத்தா வீடு கட்டினார். அவர் நிலம் வாங்கியபோதே அந்த நிலத்துக்கு நேர் எதிரில் இருந்த நிறைய இடங்களில் கொஞ்சம் வாங்கச் சொன்னார். வாங்குவது என்று தீர்மானித்த பின்னர் ஒவ்வொரு இடத்தையும் பார்வையிட்டு, "இது அவன் இடம், நொரநாட்டியம் புடிச்சவன், இதுக்குப் பக்கத்து இடம் வேண்டாம், நாளைக்கு வீடு கட்டும்போது பிரச்சனை பண்ணுவான்" என்ற தொலைநோக்குப் பார்வையுடன் அவருடைய வீட்டுக்கு நேர் எதிரில் மூன்று நிலங்கள் தள்ளி வாத்தியார் பாலகிருஷ்ணனுடைய நிலத்தை ஒட்டிய நிலத்தை வாங்கித் தந்தார். ஸ்கூல் வாத்தியார் என்றால் படித்தவர் என்பதாலும் ஒருவகையில் அவர் எங்களுக்கு தூரத்து சொந்தம் என்பதாலும் அந்த இடமே வாங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
தாத்தா அடிக்கடி பயன்படுத்தும் கெட்ட வார்த்தை - கண்டார XXX - என்பதுதான். நண்பர்களுடனான சம்பாஷணைகளினூடே நான் அடிக்கடி அந்த வார்த்தையைக் கேட்டதுண்டு. ஒருமுறை நான் அவரிடம் அதற்கான அர்த்தத்தைக் கேட்க, அன்று முதல் அந்த வார்த்தையைப் பயன்படுத்துவதையே விட்டுவிட்டார். அவருக்கு இருக்கும் இன்னொரு கெட்ட பழக்கம் பீடி வலிப்பது. நாளொன்றுக்கு இரண்டு சிகரெட்டுகளும் இரண்டு பாக்கெட் பீடியும் வாங்கிவிடுவார். இரவு நேரத்தில் மட்டுமே வீட்டிலிருந்து பீடி வலிப்பார். மற்ற நேரங்களில் வெளியே தான்.
ஒருமுறை பள்ளியில் விடுகதைகள் சொல்லித் தந்தார்கள். வீட்டுக்கு வந்ததும் தாத்தாவிடம், "தாத்தா, நான் அஞ்சு விடுகதை கேப்பேன், சரியா பதில் சொல்லணும்" என்று கூறி அனைத்து விடுகதைகளையும் கேட்டேன். சரியாக பதில் சொன்னார். "பதிலுக்கு நான் ஒரே ஒரு விடுகதை கேப்பேன் சொல்லுதியா?" என்று என்னிடம் கேட்டார். "என்ன?" என்றேன். "கந்தன் கிணத்துல கயறு அந்து அந்து விழுகுது, அது என்ன?" என்றார். நான் பேந்தப் பேந்த விழிக்க, அம்மாவும் ஆச்சியும் ஒருபுறம் சிரிக்க, பதிலே சொல்லாமல் வெளியே கிளம்பிவிட்டார் தாத்தா.
நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது தாத்தாவுக்கு பணிநிறைவு வந்தது. அதன்பின் சும்மா இருக்கப் பிடிக்காமல் அடுத்த தெருவில் இருக்கும் பெரிய வீட்டில் வாச்மேன் வேலைக்குச் சென்றார். வேலையில் சேர்ந்து பத்து நாட்கள் கூட ஆகியிருக்காத நிலையில் திடீரென்று ஒருநாள் ரோட்டில் மயங்கி விழுந்தார். மருத்துவப் பரிசோதனைகளில் அவருக்கு சர்க்கரை வியாதி இருப்பது தெரியவந்தது. அதன்பின்னர் சில நாட்கள் பீடி வலிப்பதை நிறுத்திவிட்டு ஒழுங்காக மாத்திரைகளை உட்கொண்டு நடை பயிற்சி மேற்கொண்டார். அப்படி ஒருநாள் நடைபயிற்சியின்போது காலில் கல் ஒன்று தடுக்க, பெருவிரலில் சிறு புண் ஏற்பட்டது. அந்த சிறு புண்ணானது சர்க்கரை வியாதியின் உதவியோடு ஆற மறுத்து பெரிதாகத் தொடங்கியது. விளைவு - ஒருநாள் அறுவை சிகிச்சை செய்து அந்த விரலையே எடுக்கவேண்டியதாயிற்று.
நாளாக நாளாக அவருக்கு சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் அதிகமானது. அவர் படுத்திருக்கும் கயிற்றுக் கட்டிலருகே மண் நிரப்பிய தகர டப்பா ஒன்று குடிவந்தது. இரவு நேரங்களில் அவரது இருமல் சத்தம் அதிகமாக ஆரம்பித்தது. அறுவை சிகிச்சை செய்த புண்ணும் ஆற மறுத்தது. தன்னிச்சையாக அவர் தன் இயற்கை உபாதைகளைக் கழிக்கும் நிலையையும் மறந்திருந்தார். இது ரொம்ப நாளைக்குத் தாங்காது என்று உறவினர்களே பேசும் அளவுக்கு அவரது நிலைமை மோசமடைந்தது. ஒரு கட்டத்தில் அவர் தன் சுய நினைவை இழந்திருந்தார். அன்றொரு நாள் அவருக்கு ஆச்சியைத் தவிர யாரையும் நினைவிலில்லை. நான் பள்ளியிலிருந்து வந்தது என் தாய்மாமன்களில் ஒருவர் என்னை அழைத்து தாத்தாவிடம் பேசச்சொன்னார். நானும் தாத்தாவின் அருகே சென்று ஸ்டூலை இழுத்துப்போட்டு அமர்ந்தேன். உறங்கிக்கொண்டிருந்த அவரது தலையைக் கோதி கன்னத்தில் தட்டி, "தாத்தா, தாத்தா" என்று அழைத்தேன். விழித்துப்பார்த்த அவர் "யாரு?" என்றார். "நான் தான் தாத்தா, உங்க பேரன், சரவணன்" என்றேன். "பேரனா? தெரியலையே" என்று கூறி மீண்டும் கண்களை மூடிக்கொண்டார். பட்டென்று என் கண்களில் பொங்கிய கண்ணீர் பொலபொலவென கன்னங்களில் உருண்டோடியது.
திடீரென்று ஒரு நாள் அவருக்கு உடல்நிலை தேறியது. தானாக எழுந்து அமர்ந்து ஒவ்வொருவருவரிடமும் பேசத்தொடங்கினார். அனைவருக்கும் மகிழ்ச்சி. என்னைக் கேட்டிருப்பார் போலும், என் தாய்மாமன் ஓடிவந்து, "சரவணா, உன்னை தாத்தா தேடுதாங்கடா" என்று அழைக்க ஓடினேன். என்னைக் கண்டதும் தாத்தா "சரவணே, வா வா" என்றார். நான் அருகில் அமர்ந்து "எப்படி இருக்கீங்க தாத்தா?" என்றேன். "நல்லருக்கேண்டா, தாத்தா உன் மடியில படுத்துக்கவா?" என்று கூறி என் பதிலுக்குக்கூட காத்திராமல் படுத்துக்கொண்டார். திடீரென்று அவருக்கு ஒரு இருமல் வர, அவரது தலையைப் பிடித்துக்கொண்டு நெஞ்சில் தடவிக்கொடுத்தேன். இரண்டுமுறை இருமிய அவர் மொத்தமாக தன் இருமலை நிறுத்திக்கொண்டார். கண்கள் ஒரே இடத்தை வெறிக்க அசைவற்றுப் படுத்துக்கிடந்தார். நான் "தாத்தா, தாத்தா" என்றழைக்க என் தாய்மாமா வெளியே ஓடினார். ஓடியவர் இரண்டு நிமிடத்தில் நான்கு வீடுகள் தள்ளியிருக்கும் நர்ஸ் ஒருவரைக் அழைத்துவந்தார். அந்த நர்ஸ் ஸ்டெத்தஸ்கோப்பினால் சோதனை செய்துவிட்டு "போய்ட்டாரு" என்றார். என் அம்மாவும் ஆச்சியும் ஓவென்று அழத்தொடங்க தாத்தா இறந்துவிட்டார் என்று என் மனம் நம்பத் தொடங்கியது.
தாத்தா, என் தாத்தா நான் பிறந்த அன்று என்னை தன் கைகளால் வாங்கி என்னைக் கொஞ்சிய என் தாத்தா, என்னைத் தன் மடியில் படுக்கவைத்துப் பேசிக்கொண்டிருக்கும் என் தாத்தா, இப்போது என் மடியில் படுத்து உயிரை விட்டிருந்தார். "தாத்தா" என்று அவரது கன்னங்களைத் தட்டி அழைத்தேன். அவரது கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் உதிர, எனக்கு அழுகை பீறிட்டு வெடித்தது.
என் தாத்தாவின் பதினெட்டாவது நினைவு தினம் இன்று.

This entry was posted by school paiyan, and is filed under
அனுபவம்,
புனைவு
.You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
நெகிழ வைத்தது,. தாத்தாவுக்கு என் அஞ்சலிகள்..
ReplyDeleteஆரம்பித்த விதமும், தாத்தாவின் குணாதிசியங்கள் பற்றி சொன்ன விதமும், இறுதியில் கொண்டு சென்ற விதத்திலும் எழுத்துகள் மேருகேறியிருப்பதை உணர முடிகிறது..அடுத்த கட்டத்துக்கு போயிட்டீங்க சரவணன்..!! வாழ்த்துகள்!!
முதல் ஆளாய் வந்து பாராட்டியதற்கும் வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி ஆவி...
Delete///சிறு வயதில் என்னை எங்காவது கூட்டிச்சென்றால் இது என் மகபுள்ள பேரன் என்று பெருமை பொங்கச் சொல்லுவார்.///
ReplyDeleteஇப்ப மட்டும் அவர் இருந்து இருந்தால் அவர் கூட நீங்கள் சென்றிருந்தால் பார்ப்பவர்களிடம் எல்லாம் பெருமை பொங்க இது என் பேரபுள்ள பேஸ்புக் மற்றும் பிரபல பதிவர் உலகம் பூரா தெரிஞ்சவர் என்று சொல்லி இருப்பார்.....
பிரபல பதிவரா... அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்...
Deleteமனம் நெகிழ வைத்த பதிவு.
ReplyDeleteநிஜமாவே சில நினைவுகள் மறக்க முடிவதில்லை
25ம் தேதி என் தந்தையின் நினைவுநாள் .அன்ன தானம் செய்தேன்
எதோ பழைய ஞாபகத்தில் ஆழ்ந்து விட்டதால் அன்று எழுத மனம் வரவில்லை.
அன்னதானம் செய்வதன் மூலம் உங்களுக்கு புண்ணியம் தானே... நல்ல விஷயம்..
Deleteகலங்க வைத்தது...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணே..
Delete# "கந்தன் கிணத்துல கயறு அந்து அந்து விழுகுது, அது என்ன?" # இதுக்கு பதில் தெரிந்ததா ?
ReplyDeleteத ம 6
அப்போதே தெரிந்தது பகவான்ஜி.... வருகைக்கும் கருத்துக்கும் த.ம. வாக்குக்கும் மிக்க நன்றி....
Deleteமனசு நிறைய பாரமா இருக்கு மக்கா, அந்த கண்டாற ப்பஜ்ஹ் திட்டு எங்க ஊர்ல மிகவும் பிரபலம்...
ReplyDeleteதாத்தாவுக்கு அஞ்சலி.
நன்றி அண்ணே... நாமெல்லாம் ஒரே ஏரியா தானே...
Deleteபதிவின் இறுதி வரிகளில்.. கண்ணீர் அஞ்சலி செய்தேன்.. உங்கள் தாத்தாவிற்கும்.. நீங்கள் கிளறி ஞாபகப்படுத்திய என் தாத்தாவிற்கும்..
ReplyDeleteவணக்கம் நண்பரே.. தங்களது முதல் வருகை எனக்கு மகிழ்ச்சி... இந்தப்பதிவு தங்களது தாத்தாவையும் நினைவுபடுத்தியிருந்தால் அது எனக்கு மகிழ்ச்சியே....
Deleteமனதை உருக்கிய பதிவு கோகுல்.
ReplyDeleteஉருகிட்டீங்கன்னு தெரியுது... அதுக்காக பேரை மாத்தியா சொல்றது? என் பேரு சரவணன்... எங்க, நூறு தடவை சொல்லுங்க...
DeletePathivu nekiza vaiththuvittathu
ReplyDeleteநன்றி அக்கா....
Deleteதாத்தா பாட்டியின் மகிகை இந்த கால பிள்ளைகளுக்கு தெரிவில்லை பெரியர்வகளும் பேரப்பிள்ளைகளை அந்த கால முதியோர்கள் போல பார்ப்பது இல்லை என்பதும் என் கருத்து. இந்த பகிர்வை படித்ததும் கனத்துப்போனது நெஞ்சம்.
ReplyDeleteஇந்தக்காலத்தில் பிள்ளைகளுக்கே பெற்றோரின் அருமை தெரிவதில்லை... தாத்தா பாட்டியெல்லாம் ரொம்ப கஷ்டம்.... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி...
Deleteஹீ,ஹீ பாட்டியம்மா உங்க மகிமை இப்போ எங்க எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு
Deleteகந்தன் கிணற்றில் கயிறு்்் இடியாப்பம். விடை சரியா?
ReplyDeleteஹிஹி... நீங்க ரொம்ப வெகுளி அக்கா...
Deleteஇடியாப்பம் வெள்ளையா இருக்குமே....
Deleteஅருமை தம்பி.என் மூத்தவர்களையும் நினைவுப்படுத்திய உயிரோட்ட பகிர்வு.
ReplyDeleteநன்றி செல்வி அக்கா...
Deleteதாத்தா வாசம் பிடிக்க எனக்கு கொடுப்பனை இல்ல. உங்க பதிவை படிச்சதும் ஏக்கம் வந்துட்டுது
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா...
Deletenice, bt antha puthir ku ans sollalaye
ReplyDeleteகிணறு என்பது ஒரு பொருள்.. கயறு என்பது வேறு ஒரு பொருள்... சாப்பிடும்போது நினைக்காதீங்க...
Deleteமிகவும் நெகிழ்வாக இருக்கிறது........ அவரது ஆன்மா உங்களை வழிநடத்தட்டும்.
ReplyDeleteபதிவு நெகிழ வைத்ததில் மகிழ்ச்சி... மிக்க நன்றி சுரேஷ்...
Deleteதாத்தாக்கள் ( அம்மாவின் அப்பா, அப்பாவின் அப்பா) நினைவுகள் எனக்கும் உண்டு. நீங்கள் உங்கள் தாத்தாவைச் சொல்லியவிதம் எனக்கும் கண்ணீரை வரவழைத்தது.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா....
Deleteமிகவும் நெகிழ வைத்த ஒரு பதிவு. பொதுவாகவே அப்பாக்களுக்கு மகள் என்றால் ஒரு தனி பிரியம் தான். அதுவும் உங்கள் அம்மாவோ ஒரே மகள் என்பதால், உங்கள் தாத்தாவிற்கு, சற்றே கூடுதலாக இருந்திருக்கிறது. அதனால் தான் , தன்னுடைய உயிர் மகள் வயிற்றுப் பேரனின் மடியில் தான் போக வேண்டும் என்று எண்ணியிருப்பார் போல.
ReplyDelete//அப்பாக்களுக்கு மகள் என்றால் ஒரு தனி பிரியம் தான்// ரொம்ப கரெக்ட் சார், என் மகள் ஏதும் சேட்டை செய்தால் எனக்கு கோபம் வருவதில்லை, ஆனால் என் மகன் செய்தால் திட்டிவிடுகிறேன்... மகள் என்பவள் இன்னொரு அம்மா என்று என் எண்ணம்....
Deleteகண்கலங்க வைத்த பதிவு! தாத்தாக்கள் எப்போதுமே பேரன் பேத்திகளிடம் அதிக அன்பு வைத்திருப்பார்கள்! உங்கள் தாத்தாவைப்பற்றி ஆரம்பித்த விதமும் முடித்த விதமும் அருமை! சிறப்பான பகிர்வு! நன்றி!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteபதிவை படித்த போது மனதை நெகிழ வைத்தது...
வாழ்த்துக்கள்......
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரூபன்... ஏன் லேட்?
Deleteதமிழ்மண வாக்குக்கு மிக்க நன்றி...
ReplyDeleteஎனக்கு இந்த பதிவை படித்தது உங்கள் தாத்தா மேல் நீங்கள் வைத்த அன்புதான் தெரிகிறது. ஆனால் இதைபடித்ததும் என் கண்ணீல் எனக்கு இந்த பதிவை படித்தது உங்கள் தாத்தா மேல் நீங்கள் வைத்த அன்புதான் தெரிகிறது. ஆனால் இதைபடித்ததும் என் கண்ணீல் கண்ணீரெல்லாம் வரவில்லை ஆனா கருத்து சொன்னவ்ங்க அநேக பேர் கண்ணில் கண்ணிர் வந்தது என்று தெரிகிறது . இவ்வளவு மென்மையானவர்களா நம்ம பதிவர்கள் அல்லது ஒரு வேளை இப்படி பட்ட பதிவுகளுக்கு இப்படிதான் கருத்து போடனுமா அல்லது நாந்தான் இப்படி அசடா இருக்கேனா? உண்மையை யாரவது சொல்லுங்கப்பா?
ReplyDeleteஹிஹி.... அது அவங்க பீலிங்.... இது உங்க பீலிங்.... வேற என்ன சொல்ல.... நீங்க ரொம்ப வித்தியாசமான ஆளுங்க....
Deleteஎல்லாருமே நெகிழ்ச்சியான பதிவு என்று சொல்லிவிட்டார்கள், ஆனால் நெகிழ்ச்சியான பதிவை நெகிழ்ச்சியான பதிவு என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்ல முடியும்...
ReplyDeleteகிட்டத்தட்ட எனது தாத்தாவும் இதே போன்ற குணாதிசியங்கள் கொண்டவர் தான்.. நீங்கள் கூறிய சர்க்கரை வியாதி, இருப்பாள் வந்தால் துப்புவதற்கு மண் கலசம் சகலமும், நல்ல கருத்த மேனி, சில இடங்களில் அவரை நினைவு படுத்தியதாலொ என்னவோ கண்கள் லேசாக ஈரமானது உண்மை....
அவர் இறந்த போது கூட ஏதோ வெறுமையை உணர்ந்தேனே தவிர நான் இந்தளவிற்கு வருந்தியது இல்லை.... என் தாத்தாவை நினைக்க வைத்த உங்கள் (தாத்தா) எழுத்துக்களுக்கு நன்றி
ரொம்ப நெகிழ வச்சிட்டேனோ? வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சீனு....
Deleteநெகிழ வைத்த பதிவு சரவணன்.....
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட் அண்ணா....
Deleteநான் பிறப்பதற்கு முன்பே அம்மா வழியிலும், அப்பா வழியிலும் தாத்தா, பாட்டிக்கள் ‘பரமபதம்’ அடைந்து விட்டதால் அந்த உறவின் அருமை நன்றாகத் தெரியும். அந்த உறவின் இதம் சுத்தமாகத் தெரியாது. இரண்டையும் ஸ்.பை.யின் எழுத்து இன்று எனக்குத் தந்து விட்டது!
ReplyDeleteஅட, இன்னும் நிறைய எழுதலாம் வாத்தியாரே... அப்புறம் ஸ்கூல் பையன்னா சோகத்தை புழிவானேன்னு யாரும் வரமாட்டாங்க...
Deleteநெசிழ்ச்சியும் மகிழ்ச்சியும்..
ReplyDeleteநன்றி
தினேஷ்...
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தினேஷ்...
Deleteanna இது என் தாத்தாவை நியாபக படுத்தி விட்டது. இறுதி வரிகள் கண் கலங்கியது.
ReplyDeleteமுதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி abaith....
Deleteமனம் நெகிழ வைத்த பதிவு...
ReplyDeleteஇரு வழியிலும் தாத்தாக்களை பார்க்கும் கொடுப்பினை எனக்கு இல்லை..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி...
Deleteஸ்.பை,
ReplyDeleteபோஸ்ட் நல்லா வந்திருக்கு,... இன்னும் கொஞ்சம் பட்டி பார்த்திருந்தா செமயா வந்திருக்கோம்...
உதாரணத்திற்கு கடைசி வரியில் என் தாத்தாவின் பதினெட்டாவது நினைவு தினம் இன்று என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்... இன்று தாத்தாவின் நினைவு நாள் என்பது இந்த இடுகைக்கு தேவையில்லாத விஷயம்... இந்த இடுகையின் பிரதானம் தாத்தாவின் நினைவுகள்...
என்னைக் கேட்டால் - அசைவற்றுப் படுத்துக்கிடந்தார் என்ற வாக்கியத்தோடு முடித்துவிட்டு ஃபினிஷிங் டச் வைத்திருக்க வேண்டும்...
இதுபோன்ற பின்னூட்டத்தை எதிர்பார்த்திருந்தேன்..... கண்டிப்பாக செயல்படுத்துகிறேன்...
DeleteSuperb article. Nice words used.
ReplyDeleteAs i have not seen my both grandfathers i hv not enjoyed their affections, hence very appealing to me.
Well done
Ganesh
ம்ம்ம்.... உங்களைப் படிக்கவைக்கிறதுக்கு மிரட்ட வேண்டியதா இருக்கு.... முதல் வருகைக்கு மிக்க நன்றி கணேஷ்....
Deleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_30.html) சென்று பார்க்கவும்... நன்றி...
பார்த்தேன், மகிழ்ந்தேன், பின்னூட்டமிட்டேன்... மிக்க நன்றி dd அண்ணே..
DeleteHi,
ReplyDeletelooking at the size of the story , i felt lazy to read it in the beginning...but as i started it of, i just couldnt take my eyes of it.....its such a fantabulous article. Very nice..after reading this, all my past memories kept flashing in my mind..!. All the best.
Sivakumar A
நெகிழ்ச்சியாக இருந்தது. நன்று .
ReplyDeleteVery nice article. It has brought to the fore my good old memories of which am very fond of. We can never get back those simple but golden days. Hats off my dear for bringing this article in a
ReplyDeletenice way.
Madhukar
என்னுடய மடியில் ஒரு முதிய தலையை உணரவைத்தது பதிவு
ReplyDeleteரொம்ப நெகிழ்வான பதிவு தோழர் வாழ்த்துக்கள்
http://www.malartharu.org/
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-6-part-2.html) சென்று பார்க்கவும்... நன்றி...
ஆவிப்பா அழைத்த அன்று
ReplyDeleteஆங்கே தங்கள் முகம் கண்டு
அதன்பின்னே உங்கள்
உரையும் கேட்டு
உவந்தேன் .
தாத்தா எனத்
தலைப்பிட்டுத்
தம் முன்னோர்க்குத்
தலை வணங்கும்
தமிழ்ப் பண்பும் இன்று
கண்டேன்.
உங்கள் எண்ணங்களிலும் எழுத்திலும் சொல்லிலும்
அறம் இருக்கிறது. பொருள் இருக்கிறது. அதன் பால்
அனைவரையும் ஈர்க்கும் திறனும் இருக்கிறது.
அந்த ஸ்கூலில் நானும் இன்று முதல்
பையனாவேன் .
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in
உங்கள் பதிவை படிக்கும் வாய்ப்பு இப்போழுதுதான் கிடைத்தது. நான் வாசித்த முதல் பதிவே நெகிழ வைத்தது...
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : மஞ்சு பாஷிணி சம்பத் குமார் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கதம்ப உணர்வுகள்
வலைச்சர தள இணைப்பு : அன்பின் பூ - நான்காம் நாள்
Once Again...
ReplyDeleteVisit : http://blogintamil.blogspot.in/2014/02/blog-post_18.html