கொஞ்சம் லேட்டா திரும்பிப் பார்க்கிறேன்
Tuesday, January 07, 2014
Posted by கார்த்திக் சரவணன்
திரும்பிப் பார்க்கிறேன்கிற பதிவு எழுதி நண்பர் ராஜபாட்டை ராஜாவும் ராஜி அக்காவும் என்னை கோர்த்து விட்டிருந்தாங்க. ஆனா பாருங்க, அதிகமான வேலை மற்றும் சோம்பல் காரணமா எழுத முடியாம போச்சு. வருஷமும் முடிஞ்சு போச்சு, இருந்தாலும் எழுதலைன்னா நண்பர்கள் கோவிச்சுப்பாங்க அப்படிங்கறதால இதோ, இந்தப்பதிவு.
புது வருஷம் 2013 அதிரடியாகத்தான் தொடங்கியது. 2012இல் ஊரில் வெடித்த ஒரு பிரச்சனை இன்னும் முழுமை அடையாமல் புகைந்துகொண்டிருக்க ஜனவரி பத்தாம் தேதி வாக்கில் மீண்டும் பெரிதாய் வெடித்தது. நானே களமிறங்கினால் தான் முடிக்க முடியும் என்பதால் குடும்பத்துடன் விமானத்தில் சென்று வந்தேன். இதற்குக் கொடுக்கப்பட்ட விலை சற்று அதிகம் என்றாலும் பிரச்சனையின் தீவிரத்துக்கு இது சரிதான் என்றே தோன்றுகிறது.
புத்தகச் சந்தையில் பல புத்தகங்களை வாங்கினேன். கொடுமை என்னவென்றால் ஓரிரு புத்தகங்கள் தவிர மற்றவை அனைத்தும் அலமாரியில் தூங்கிக்கொண்டிருக்கின்றன. இந்த வருடமும் புத்தகச் சந்தை தொடங்கப் போகிறது. வாரம் ஒரு புத்தகம் என்கிற ரீதியில் டார்கெட் வைத்துப் படிக்க வேண்டும்.
ஜோதிடத்தில் நம்பிக்கை இருந்தாலும் வாஸ்து போன்றவற்றில் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. நான் வசித்துவந்த வீட்டின் வாஸ்து சரியில்லை என்று ஒரு ஜோதிடர் சொல்ல, என் அம்மாவும் அதைப் பிடித்துக்கொண்டு வீடு தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம், வீட்டை மாத்து சரவணா என்று பாட்டு பாட ஆரம்பித்துவிட்டார்கள். அப்போதிருந்த வீட்டு ஓனர் வேறு வாடகையைக் கூட்டப்போவதாகச் சொல்ல, வீடு மாற்றுதல் உறுதியானது.
வீடு மாறுவதென்றால் மகனுக்கு ஸ்கூல் மாற்ற வேண்டும். முதலில் பல இடங்களில் ஸ்கூல் தேடி அலைந்து கடைசியில் அலுவலக நண்பர் தங்கியிருக்கும் உள்ளகரம் பகுதியில் உள்ள ஸ்கூலில் இடம் கிடைத்தது. ஸ்கூலில் இருந்து முக்கால் கிலோமீட்டர் தூரத்திலேயே வேறு ஒரு நண்பரின் வீடு வாடகைக்குக் கிடைக்க, இதோ ஒன்பது மாதமாக தினமும் மகனை ஸ்கூலில் விட்டுவிட்டு வேளச்சேரி சென்று அங்கிருந்து மின்சார ரயிலில் மயிலாப்பூர் என்று வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.
கடந்த வருடமும் மூன்று முறை திருப்பதி வெங்கடாசலபதி தரிசனம், அதுவும் திருப்பதியிலிருந்து திருமலா வரை பாத யாத்திரை. இந்த வருடமும் அது தொடருமா தெரியவில்லை. அடுத்ததாக பல வருடங்கள் கனவான சபரி மலை யாத்திரை இந்த வருடம் நிறைவேறியது. அது பற்றிய தனியாகப் பதிவு ஒன்று எழுதுகிறேன்.
பணப் பிரச்சனை
பணத்தைப் பொறுத்தவரை பழைய கடன்கள் பெருமளவு அடைபட்டிருக்கின்றன. புதிதாய் ஓரிரு கடன்கள் வாங்கப்பட்டிருக்கின்றன. இந்த வருடத்தின் இறுதிக்குள் இன்னும் குறைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. பார்க்கலாம்.
வலையுலகம்
வலையுலகைப் பொறுத்த வரையில் எனக்கு பதிவர்கள் அனைவரையும் முதன்முறை சந்திக்கும் வாய்ப்பு என்பதால் மிகவும் மகிழ்ச்சி. நடேசன் பூங்காவில் வாத்தியாரையும் சீனுவையும் சந்தித்தது முதல் பதிவர் சந்திப்புக்கான ஏற்பாடுகளுக்கு வாராந்திர கூட்டத்தில் கலந்துகொண்டது, அதன் பின்னர் பதிவர் திருவிழாவில் (யார் யார் என்று சொன்னால் பட்டியல் நீளும் என்பதாலும் சிலர் விட்டுப்போகும் அபாயம் உள்ளதாலும் பெயர்கள் குறிப்பிடவில்லை) பலரையும் சந்தித்தது என பல இனிமையான நினைவுகள்.
ஆகஸ்டு மாதத்தில் ஒரு பிரபல பதிவருடன் லேசான உரசல் ஏற்பட, அவரைப் புரியவைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ஒரு வழியாக பதிவர் திருவிழா முடிந்த அன்று மாலை அவர் எனக்கு சமாதானக்கொடி காட்ட பிரச்சனை முடிவுக்கு வந்தது.
இறுதியாகத் திரும்பிப் பார்க்கும்போது 2012இல் இருந்த அளவுக்கு தற்போது இல்லை. புதிய நண்பர்கள் கிடைத்துள்ளனர். புதிய வருடம் எப்படி இருக்கப்போகிறது என்று போகப்போகத் தெரியும்.
This entry was posted by school paiyan, and is filed under
2013,
அனுபவம்
.You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
வணக்கம்
ReplyDeleteஅருமையாக ஒவ்வொன்றையும் பற்றி சொல்லியுள்ளீர்கள்....வாழ்த்துக்கள்...
முடிந்தளவு கடனை குறைத்துக்கொள்ளுங்கள்...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
2014.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஹா ஹா ஹா நம்மால் எதுவும் சொல்ல இயலாது சார், ஒருவேளை இங்கு டிடி வரும்போது பார்த்து ரூபன் அவர்களிடம் சொன்னால் தான் உண்டு
Deleteவேறு வேலையே இல்லை போல...
Deleteசீனு நீங்களுமா...?
தங்களது வருகைக்கும் கருத்துக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ரூபன்....
Deleteஉதவும் மனப்பான்மை கொண்ட உங்களுடன் கூடவா உரசல் பண்ணுகிறார்கள் ஆச்சிரியமாக இருக்கிறது,
ReplyDeleteசிச்சுவேஷன் அந்த மாதிரி அமைஞ்சு போச்சு....
Deleteநான் வசித்துவந்த வீட்டின் வாஸ்து சரியில்லை என்று ஒரு ஜோதிடர் சொல்ல, என் அம்மாவும் அதைப் பிடித்துக்கொண்டு வீடு தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம், வீட்டை மாத்து சரவணா என்று பாட்டு பாட ஆரம்பித்துவிட்டார்கள்.
ReplyDelete:))))))))))))
josiyam yaraium vidalapa
தங்கச்சி, இந்த ஆங்கிலமிழ் படிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு தமிழோ ஆங்கிலமோ உபயோகிக்கவும்..
Deleteஇது பரவாயில்லை, நிறைய பேரை ஜோசியம் தான் வழி நடத்துது...... மொபைல்ல கமென்ட் போட்டீங்களா சகோதரி?
Delete@கோவை ஆவி :-)
Deleteசில விசயங்களை அருகில் இருந்து பார்த்ததால் அதன் வீரியம் புரியும்... இந்த ஆண்டு உங்களுக்கு வாழ்த்துக்கள்..
ReplyDeleteநீங்கள் கூறிய அதே வேகத்தில் தான் கடந்த வருட புத்தக சந்தையில் வாங்கிய புத்தகங்களை படித்துக் கொண்டுள்ளேன்
//இந்த ஆண்டு உங்களுக்கு வாழ்த்துக்கள்..//
Deleteபுரியலையே....
//நீங்கள் கூறிய அதே வேகத்தில் தான் கடந்த வருட புத்தக சந்தையில் வாங்கிய புத்தகங்களை படித்துக் கொண்டுள்ளேன்//
என்னைப்போல் ஒருவன்....
பஞ்சாயத்து பண்ண ஃப்ளைட்ல போனீங்களா!? இதெல்லாம் டூ மச்சா தெரியல!!
ReplyDeleteடூ மச் தான், அதுக்குக் கொடுத்த விலை ஒர்த்....
Deleteஅப்ப, பதிவர் சந்திப்பன்னிக்கு சாயந்தரம் மகா தியானமா!? எப்படியோ சண்டை முடிஞ்சு சமாதானமானால் சரிதான்!
ReplyDeleteஹஹஹா.. நீங்க ஒரு லேடி ஜேம்ஸ் பாண்ட் அக்கா..
Deleteஹிஹி.... சமாதானம் மட்டுமே, நோ மகா தியானம்...
Deleteஸ்கூல் பையன் நாட்டாமை ஆயிட்டார் ... எங்க ஊர் பக்கம் பஞ்சாயத்துன்னா கூப்பிட்டுற வேண்டியது தான் ...
ReplyDeleteஊர சுத்தி பதினெட்டு 'பட்டி' இருக்கோணும்.. நீங்க ஒத்த "பட்டி" இருந்தா எல்லாம் அவர் வரமாட்டார்..
Deleteஊருக்கு பஞ்சாயத்துன்னா பிளைட்ல தான் வருவேன், உங்க செலவில கூட்டிட்டுப் போறதுன்னா வரேன் அரசன்...
Deleteஅரசனை "பட்டி" என்று பகிரங்கமாகத் திட்டிய கோவை ஆவியை வன்மையாகக் கண்டிக்கிறேன்.... சங்கத்து உறுப்பினர்களே, பொங்கி எழுங்கள்....
Deleteஆவிண்ணே ஊருக்கு வருவிங்கள்ள அங்க எத்தனை பட்டி இருக்குன்னு கான்பிக்கிறேன் ...
Deleteசங்கத்து உறுப்பினர்களே, பொங்கி எழுங்கள்....// சங்கமே திட்டுனா யார்ணே பொங்குறது
Delete"//கொடுமை என்னவென்றால் ஓரிரு புத்தகங்கள் தவிர மற்றவை அனைத்தும் அலமாரியில் தூங்கிக்கொண்டிருக்கின்றன//" - என்ன கொடுமை சரவணா இது, நீங்கள் மகா தியானம் செய்வது மட்டுமல்லாமல், புத்தகங்களையும் மகா தியானம் செய்ய வைத்துவிட்டீர்களே!!!! இந்த பாவம் உங்களை சும்மா விடாது.
ReplyDeleteஇந்த வருடம் வாரம் ஒரு புத்தகமாவது படிக்கணும்னு நினைச்சிருக்கேன் சார்...
Deleteஅதிகமான வேலை மற்றும் சோம்பல் எனபது முகநூல் மூலம் எப்போதே தெரிந்து விட்டது...! இந்த ஆண்டு மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...
ReplyDeleteமுகநூலில் உலவுவதைக் குறைத்துக்கொள்கிறேன்... நன்றி அண்ணே...
Delete"//ஜோதிடத்தில் நம்பிக்கை இருந்தாலும் வாஸ்து போன்றவற்றில் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை//" - உங்களை மாதிரியான நண்பர்களுக்காத்தான் காத்துக்கொண்டிருக்கிறேன். சீக்கிரம் "சீன ஜோசியத்தைப்" பற்றி ஒரு பதிவு எழுதுகிறேன்.
ReplyDeleteசீன ஜோசியம்? எழுதுங்க எழுதுங்க.... அறிய ஆவல்....
Delete"அடுத்ததாக பல வருடங்கள் கனவான சபரி மலை யாத்திரை இந்த வருடம் நிறைவேறியது. அது பற்றிய தனியாகப் பதிவு ஒன்று எழுதுகிறேன்.//" - சீக்கிரம் எழுதுங்கள். உங்களுடைய அனுபவங்களை தெரிந்து கொள்கிறேன். எனக்கும் சபரி மாலைக்கு மாலை போடுவதாக ஒரு வேண்டுதல் இருக்கிறது.
ReplyDeleteசபரி மலை பயணம் பற்றிய பதிவு திங்களன்று வெளியாகும்....
Deleteஉங்களுக்கு பதிலா ராஜி எனக்கில்ல ஹோம்வொர்க் குடுத்தாங்க...:))) எப்படியோ நான் எப்பவோ முடிச்சு அவங்ககிட்ட கரெக்ஷனும் வாங்கிட்டேன்....:)))
ReplyDeleteஇந்த வருடம் இனிமையாக அமைய வாழ்த்துகள்...
ஓ, அப்படியா? வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரி...
Deleteவருடத்துக்கு மூன்று முறை திருப்பதியா? நான் கடைசியாக 2002 இல் போனது! ச.ம போனதேயில்லை!
ReplyDeleteஅடுத்த தடவை திருப்பதி போகும்போது கூப்பிடவா சார்? நல்ல அனுபவம் கிடைக்கும்....
Deleteபுத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteலேட்டா திரும்பிப் பாத்தாலும் லேட்டஸ்ட்டா திரும்பிப் பாத்திருக்கீங்க !
கச்சிதமான பதிவு.
வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மேடம்...
Deleteமலைக்கு போயிட்டு பஞ்சாமிர்தம் கூட கொடுக்கல ....
ReplyDeleteபத்திரமா வச்சிருந்து அடுத்த பதிவர் சந்திப்பில் கொடுப்பார் ன்னு நினைக்கிறேன்..
Deleteஉங்களுக்கும் சேர்த்து நானே சாப்பிட்டேன் ராஜா....
Deleteயோவ் ஆவி, !@#$%^&*())(*&^%$#@!
Deleteஎன் வேண்டுகோளை ஏற்று பதிவை எழுதியமைக்கு நன்றி
ReplyDeleteஇந்தப் புத்தாண்டை உங்க மூலமா தொடங்கியாச்சு... இந்த வருஷம் என்ன பிரச்சனை வந்தாலும் நீங்கதான் பொறுப்பு....
Delete2013 நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி! நானும் லேட்டா இன்னிக்குத்தான் போஸ்ட் போட்டிருக்கேன்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅப்படியா? வந்து பாக்கிறேன்.... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ் அண்ணா...
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete2014 கடைசி வரை 2013 நினைவுகளை அசை போடலாம் தவறில்லை.. ஒரு ஆண்டை விட அடுத்த ஆண்டு வளமாகவே அமையும்....வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்கள் வாக்கு பலிக்கட்டும்.... மிக்க நன்றி எழில் மேடம்....
Deleteஇந்த ஆண்டு மேலும் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள் சரவணன்.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வெங்கட் அண்ணா...
Deleteஆவி பறக்குது
ReplyDeleteஆவியின் கமெண்ட்களும் கலக்குது....
Deleteஅனைத்தும் அலமாரியில் தூங்கிக்கொண்டிருக்கின்றன.// எங்க கிட்டயும் கொடுங்க படிச்சிட்டு தறோம்
ReplyDeleteபழைய நினைவுகளை திரும்பிப் பார்த்து ;தவறு இருந்தால் அப்படியே திருத்தவும் செய்து விடுங்கள் நண்பரே...இந்த ஆண்டு தாங்கள் செய்ய இருக்கும் அத்தனை செயல்களும் சிறப்பாகவே நடந்தேற எனது வேண்டுதல்களுடன்,,,வாழ்த்துக்களும்...
ReplyDeleteநன்றி...
இந்த ஆண்டு மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
ReplyDelete